சனி, 18 ஆகஸ்ட், 2012

நாம் பிணங்களாக இருக்கும் வரைகண்ணீரை துடைக்க வேண்டிய
மதங்கள்
ரத்தத்தை ஓட வைக்கின்றன.............................................................நரிகள்
சும்மா இருந்தாலும்
சூழ்ச்சியே செய்யும்


.............................................................


சில சமயம்
தர்மத்திற்கே
தர்ம சங்கடம

.............................................................
தலைகள் எண்ணப் படுவதுதான்
ஜனநாயகமாம்
சொல்கின்றன முண்டங்கள்


.............................................................

இல்லாதவர்களுக்கு
வளையாத சட்டம ;
இருப்பவர்களுக்கு
ஒடிந்தே விடுகிறது


.............................................................பகலிலும் நாங்கள
இருட்டிலே வாழ்கிறோம்
அந்த இருட்டிலும்
நாங்கள் பகல கனவுகளே காண்கிறோம்


.............................................................

மக்கள் முதிரும் போது
அரசாங்கம் உதிரும்
.............................................................


அகப்பட்டால் திருடன்
தப்பினால் பிரமுகர்

.............................................................திருடர்கள் சில இடங்களில்
மட்டும்
திருட்டுத்தனம்
எல்லா இடங்களிலும


.............................................................


குற்றவாளிகளிடம் சட்டம்
நெருங்குவதில்லை
நிரபராதிகள் சட்டத்திடம்
நெருங்க முடிவதில்லை


.............................................................

புள்ளிக்கு உள்ளேயும்
வட்டங்கள் உண்டு

.............................................................

இந்தியாவில்
எல்லாமே தலை கீழ்
வெளவாலைத் தவிர


.............................................................


தொண்டன் கெட்டால
தெருதான் கெடும
தலைவன் கெட்டால்
நாடே கெடும


.............................................................மேடையில் தலைவர்கள்
ஏறுவதற்கு முன்பே
கொள்கைகள் இறங்கி
விடுகின்றன
.............................................................


நாக்கு கூர்மையாக இருந்தால்
முதுகு அகலமாக வேண்டும


.............................................................தனி நபர்கள் விதைப்பதை
சமுதாயம் அறுவடை செய்யும்


.............................................................நாம் பிணங்களாக இருக்கும்
வரையில்
அவர்கள் கழுகுகளாகத் தான்
இருப்பார்கள்


.............................................................


மேற்கண்டவைவழக்குரைஞர் யு.கே.செங்கோட்டையன் அவர்களின்
தெருவாசகம்   என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது .
நன்றி ; யு.கே.செங்கோட்டையன் ,
படங்கள்   இணையம்  .நன்றி  .


 இதையும் பார்க்க தெருவாசகம்


.
Download As PDF

16 கருத்துகள் :

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான தொகுப்பு! வாசகங்கள் நெத்தியடி!

இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாயில் 18ஒ கிமீ செல்லும் ஸ்கூட்டர்
http://thalirssb.blogspot.in/2012/08/180.html
பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// இந்தியாவில்
எல்லாமே தலை கீழ்
வெளவாலைத் தவிர ///

பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி சார்... (tm 2)

சின்னப்பயல் சொன்னது…

புள்ளிக்கு உள்ளேயும்
வட்டங்கள் உண்டு

குறையொன்றுமில்லை. சொன்னது…

நான் ரசித்தவரிகள் கீழே

சில சமயம்
தர்மத்திற்கே
தர்ம சங்கடம

பெயரில்லா சொன்னது…

ம்... நடைமுறையை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்

கும்மாச்சி சொன்னது…

\\இல்லாதவர்களுக்கு
வளையாத சட்டம ;
இருப்பவர்களுக்கு
ஒடிந்தே விடுகிறது//

அருமை, பகிர்விற்கு நன்றி.

Rathnavel Natarajan சொன்னது…

Arumai.

MARI The Great சொன்னது…

அருமையான வரிகள்! தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றிகள்!

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிகச் சிறப்பான தொகுப்பு
பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி

Unknown சொன்னது…

எல்லாவித ஆட்சி முறையிலும் குறைகள் உண்டு! இருப்பதில் ஆபத்து குறைந்தது தற்போது உள்ள ஆட்சி முறை என்று நம்மை நாமே சமாதானப்படுத்தி கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!

stalin wesley சொன்னது…

நன்றாக உள்ளது

CS. Mohan Kumar சொன்னது…

அருமை யு.கே.செங்கோட்டையன் அவர்களுக்கு வாழ்த்துகள்

ஹேமா சொன்னது…

குறிப்பிட முடியவில்லை.எல்லாமே அர்த்தம் சொல்கிறது.வாழ்த்துகள் !

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ஏற்கனேவே வேறு சில தெருவாசகங்களை வெளியிட்டபோதும் படித்தேன்.தற்போது வெளியிட்டிருப்பதும் நன்றி.எழுதிய செங்கோட்டையன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.எங்களுக்கு அறிமுகப் படுத்திய தங்களுக்கும் பாராட்டுக்கள்.

கோகுல் சொன்னது…

இருவருக்கும் வாழ்த்துகளும்,பாராட்டுகளும்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - செங்கோட்டையனின் கவிதை அருமை - குறுங்கவிதைகளின் தொகுப்பா ? - பகிர்வினிற்கு நன்றி - இருவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "