வெள்ளி, 7 செப்டம்பர், 2012

சிவப்புகாசியும் ஆட்டுக்குட்டிகளும் ஆறாவதுஅறிவும் நானும் டோமிப்பயலும்

.1..

என் நண்பனின் ஊருக்கு  நான் விடுமுறைக்கு சென்றிருந்த பொழுது நடந்த ஒரு நிகழ்வு .

இது நடந்து 30 வருடம் ஆகுது .

அப்பல்லாம் கிராமத்துப்பக்கம் காலைக்கடனை முடிக்க வெளிக்காட்டுக்கு போரது தான் வழக்கம் .அவங்க ஊருல ரயில்வே பாதை போகுது .
அத ஒட்டி இருத்தது வெளிக்காடு. எனக்கு அவசரம் என்பதால் மட்ட
மதியம் போனேம் .நாங்க போன சமயம் ஆடுக மேஞ்சுக்கிட்டிருந்தது .
சற்றே  தயக்கத்துடன் நான் .மேய்ப்பனை பார்த்தேன் ,அப்ப ஆடுகள்  தண்டவாளங்களை கடக்க ஆரம்பித்தன
சற்று ஆறுதல்  மனத்தில் அந்தப்பக்கம் போய்விடுவார் என.
அந்தப்பக்கம்  போய்விட்டால் எங்களைப்பார்க்க முடியாது என்பதால் .

இரயில் வரும் சப்தம் .

மேய்ப்பவர் ஆடுகளை வேகப்படுத்த  வேகப்படுத்த
வந்துவிட்டது இரயில் .
இந்தப்பக்க ஆடுக ,அந்தப்பக்கம் போன ஆடுகளைப் பார்த்து  ,இரயிலை பொருட்படுத்தாம  கடக்க ....
இறக்கும் தனது சக ஜீவன்களைக் கண்டும்,
தண்டவாளங்களை கடக்க சென்று கொண்டிருத்தன ஆடுகள்.
மேய்ப்பான்  கடக்க இருந்த மீத ஆடுகளை முடிந்த வரை கூச்சலிட்டு தடுக்க .

அதற்குள் சில ஆடுகள் பலியாயின .

எனக்கு ஒன்றும் ஓடவில்லை . ஆடிவிட்டது ஆடி .அவரிடம் சென்றோம் .
மேய்பவரும் சிறிது வருத்தப்பட்டார்  .விபத்தில் தப்பிய  ஆடுகளை மனம் பதைக்க பதைக்க கட்டிப்பிடித்தேன் .அவைகள் இயல்பாக இருந்ததை உணர்ந்தேன் .எனக்கு  வியப்பாக  இருந்தது .

இது பற்றி நண்பனிடம் கேட்டேன் .

அவன் சொன்னான் இந்த மந்தை ஆடுகளே  இப்படித்தான் .தனக்கு முன் செல்வதைப்பார்த்து ஏன் ,எதுக்குனே தெரியாம பின்தொடரும் . அதுக்குனு அறிவை வளர்த்தாது .முன்னாடி போறதுக்கும் அது கிடையாது .
ஏதே வாழுதுக .தான் செத்தாலும் கவலைப்படாது , கூட இருக்கறதப்பத்தி கவலையும் படாது .
இன்னைக்கு செத்ததுக குறஞ்ச விலைக்கு போகும்,மத்தது அதிக விலைக்கு இன்னும் கொஞ்ச நா கழிச்சு போகும் ,அவ்வளவு தான்,குறஞ்ச விலைக்கு போகுதேங்கர கவலையத்தவுத்து  வேற கவலை மேக்கரவுனுக்குக்கூட கிடையாது என்றான் .

..2.....

பகுத்தறிவு - 6 வது அறிவு .

மனுசந்தான் 6 அறிவு படைத்தவனாம் . மத்ததெல்லாம் குறைவாம் .எனக்குத் தெரிந்த அனைவரிடமும் நான் கேட்ட ஒரே கேள்வி .6வது அறிவு பகுத்தறிவு
எனில் ,மிதமுள்ள 5 அறிவுகள் என்ன என்ன ?

99% நபர்களால் சரியாக கூறமுடியவில்லை .

4 தோறுது அவ்வளவே .

நீங்களும் கூறிப்பார்க்களாமே .

பெரும்பான்மையினருக்கு தெரியவில்லை
என்பதால் 5 அறிவுதானு இனி ஏத்துக்களாமே...3...


எங்க குட்டி செல்லப்பயல்  டோமிப்பயல் .
அவனுக்குனு ஒரு பாட்டு பாடுவேன் .
அது ..

"குண்டு ..குண்டு டோமி டா..
குட்டி .. குட்டி டோமி டா..
குட் ..குட் டோமி டா..
குடு குடுனு வருவான்டா .."

இப்படி பாடுனதும் எங்க குட்டிபயல் குடுகுடுனு ஓடிவந்து மடியில படுத்துக்குவான் .

ரொம்ப செல்லம் ...

அவனுக்கு நிறைய அறிவு .நல்லா எதையும் புருஞ்சுக்குவான் .
ஏதாவது தப்பு செஞ்சானா உடனை காலைத்தூக்கி மன்னிப்பு கேப்பான் .

மேல படத்தில பாருங்க தெரியுதா .

காவலுக்கு கெட்டிக்காரன் . சுறுசுறுப்பானவன் .
கொஞ்சுனா எப்படி ரசிப்பான் தெரியுமா . காலடியிலே கிடப்பான் .
அவனுக்கு வேண்டியது அன்பு .

அவன் கொடுப்பது

எசமா  விசுவாசம் ...

எசமா விசுவாசம் ...

எசமா  விசுவாசம் ...


அவன் தான் எனக்கு சகலமும் .

..4...


இப்ப நாமெல்லாம் இப்படித்தான் வளர்ந்து கொண்டு வரேமுனு நினைக்கிறேன் .

அய்யா பகுத்தறிவுப்பகலவரே ,பெரியாரே

6 அறிவுகள் என்னானு சொல்லாம

6 வது அறிவை பயன்படுத்தச்சொன்னா

நாங்க என்ன செய்ய ...

5 லேயே நிக்குரோம் .....5...

சிவகாசி  ஏன்  சிவப்புகாசியானது  ? .


.
Download As PDF

14 கருத்துகள் :

கும்மாச்சி சொன்னது…

ஆறாவது அறிவை தேடுவதற்கும் முன் ஐந்தாவது அறிவை தேட வைத்துவிட்டீர்கள், தேடுவோம்.

பகிர்விற்கு நன்றி.MARI The Great சொன்னது…

மந்தை ஆடுகள் கதை செம!

நம்மில் பலர் இன்னும் மந்தை ஆடுகளாகத்தான் இருக்கிறோம்! :((

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல கதை...

இப்படி நிறைய (மந்தை ஆடு) கூட்டங்கள் இருக்கின்றன...

(உணர்தல், சுவைத்தல் / ருசித்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல்)

(6) பகுத்தறிவு இருந்திருந்தால் சிவகாசி ஏன் சிவப்புகாசி ஆகப் போகிறது ? வேதனைப்படும் சம்பவம்...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நல்லதொரு பகிர்வு! மந்தை ஆடுகளில் தொடங்கி ஆறாவது அறிவை தேட வைத்துள்ளீர்கள்! நன்றி!
இன்று என் தளத்தில்
காசியும் ராமேஸ்வரமும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html

சசிகலா சொன்னது…

மிகச்சரியான உண்மையே நாம் மந்தை ஆடுகளாகத்தான் இருக்கிறோம். சிறந்த பகிர்வு.

Thozhirkalam Channel சொன்னது…

மனிதனுக்கு ஆறு அறிவு என்று சொல்கிறோம். ஐந்து புலன்களின் அறிவு ஐந்து என்றும் பகுத்தறிவு ஆறாம் அறிவு என்பதும் வழக்கு.

ADMIN சொன்னது…

அறிவைப் பற்றிச் சொல்லவெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பதிவில் இடம்பெற்ற விஷயங்கள் சிந்திக்க வைத்தது.. பரிதாப் பட வைத்தது... நன்றியுணர்வை தெரிவித்தது...அவ்வளவுதான்..!

பகிர்வுக்கு நன்றி ராஜசேகரன் சார்..!

cheena (சீனா) சொன்னது…

பின் தொடர்பதற்காக

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - நான் முன்னர் இட்ட மறுமொழி வெள்ளைக் காக்காய் தூக்கிச் சென்று விட்டது. ஆக் மறுபடியும் இன்னொரு மறுமொழி இங்கே.

ஆடுகள் கண் மூடித்தனமாகத் தண்டவாளத்தினைக் கடக்க, முன்னால் சென்று இறந்த ஆடுகளையும் கவனிக்காமல் கடக்க முயலும் போது இப்படித்தான் நடைபெறும்.


ஐம்புலன்களும் பகுத்தறிவும் சேர்ந்து ஆறறிவு.


டோமிப்பயல் சூட்டிகையான்வன் - நண்டுவினிடம் விசுவாசமாக இருப்பவன். நண்டு டோமி நட்பு நன்று.

சிவகாசி சிவப்பு காசியாக மாறியதற்குக் காரணம் - அரசின் கண்காணீப்பு மெத்தனமாக இருந்தது தான். தகவல் பரிமாற்றம் அரசுத் துறைகளிடம் போதாது. இன்னும் வேகம் வேண்டும்.

நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஆட்டுக்குட்டியின் செயல்பாடுகள்
மனிதனைப்போலத்தானே உள்ளது
அப்புறம் ஐந்தென்ன ஆறென்ன ?
மனம் கவர்ந்த பதிவுகள்
தொடர வாழ்த்துக்கள்

குட்டன்ஜி சொன்னது…

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்தான் ஐயா!
நல்ல பகிர்வு.
த.ம.9

Unknown சொன்னது…

கூட்டமாகத் திரியும் ஆடுகள்..தனியாக வளரும் நாய்! அறிவு அதிகரித்தால்..தனிமைதானா?

ஹேமா சொன்னது…

எல்லா அறிவுகளையும் முழுதாகப் பயன்படுத்துகிறோமா என்பதே சந்தேகம் !

CS. Mohan Kumar சொன்னது…

உங்க செல்லத்தை கேட்டதா சொல்லுங்க

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "