எல்லாவிதமான ஆதாரங்களும் கடவுளிடமிருந்து தான் வருகிறது என்று சொல்லுகின்றார்கள்;இது உண்மையானால் அவரிடமிருந்து தான் எல்லா வியாதிகளும் வருகின்றன.
எல்லாவிதமான நீதிகளும் கடவுளிடமிருந்து வருகின்றன என்று கூறுகிறார்கள்;அவர் தான் நீதீகளின் மூலம் என்றும் சொல்லுகிறார்கள் ;அப்படியானால்,அவ்வளவு மேன்மைதாங்கிய இட்த்திலிருந்து நமக்கு நீதி வருகையில் நமக்கு அரசாங்கமும் ,சட்டங்களும் எதற்கு ? .
பல கடவுள்களும்,பல மதங்களும் உலகத்தில் துன்பத்தைப் புகுத்தியுள்ளது .
மனிதர்கள் தங்கள் தவறுகளை புரிந்து கொள்ளாத நிலையிலேயே இருக்கின்றனர்.அவர்களின் தவறுகள் அவர்களுக்கே தெரிவதில்லை.தங்களின் தவறுகளை வெறுத்து ஒதுக்காமல் அவைகளை நேசித்து வருகின்றனர் .
தீமைகளுக்களுக்கொல்லாம் காரணம் ?.மனிதர்கள் .திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து,ஒழுக்கத்தை மலிவுபடுத்திவிட்டதுதான்.சாதாரணமாக இப்பொழுது ஜனங்கள் ஒருவனைப் பார்த்து 'அவன் ஒழுக்கமுள்ளவனா ' என்று கேட்கிறார்களில்லை ; 'அவன் புத்திசாலியா ? ' என்றுதான் கேட்கிறார்கள் .ஒரு புத்தகத்தைப் பார்த்து ' அது உபயோகமுள்ள புத்தகமா ? ' என்று கேட்கிறார்களில்லை. ' அது நன்றாக எழுதப்பட்டுள்ளதா ' என்று கேட்கிறார்கள்.இறுதியாக பார்க்கப்போனால் இந்த தத்துவ ஞானம் என்பது என்ன ?.இதனால் நாம் என்ன பாடம் கற்றுக்கொள்கிறோம்?.சாசுவதமான புகழை அளிக்கக்கூடிய பெருமை இதில் என்ன இருக்கிறது ?.எல்லாம் வெறும் ஏமாற்றம் தான் .தத்துவஞானிகள் என்று புகழப்படுகிறவர்கள் அனைவரும் ,கடைத்தெருவில் உட்கார்ந்து கொண்டு 'என்னிடம் வாருங்கள்; நான் உங்களை ஏமாற்றமாட்டேன் ;சரியான சாமான்களை ஒழுங்காக அளந்து உங்களுக்கு கொடுப்பேன் ' என்று கூவிகிற வியாரிகளைப் போன்டவர்களே.ஒருவர் சித்து பெரிதென்கிறார்;இன்னொருவர் ஜடம் பெரிதென்கிறார்.இப்படி பலரும் பலவிதமாகச்சொல்கிறார்கள்.இப்படிப்பட்டவர்களை உலகம் புகழ்கிறத்.இவர்களுடைய உபதேசங்களைச் சாசுவதமாக்கி வைக்க அச்சடிக்கிற முறையும் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது.
- - - ஜான் ஜாக் ரூசோ
Download As PDF
Tweet |
|
12 கருத்துகள் :
இந்த கருத்துக்களை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. எங்கோ இடிக்கிறது..
வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளி வைத்தியர் குடுக்கும் மருந்தை சரியாக பயன்படுத்தாமல் நோய் அதிகரித்தால், அதற்கு வைத்தியசாலையோ பொறுப்பாழியாக முடியாது. மதமும் ஒரே இறைவனும் நல்லதையே போதிக்கின்றன. மனிதன் அதை ஏற்றுக் கொள்ளாமல் செய்யும் தவறுகளுக்கு மதமோ, கடவுளோ பொருப்பாக முடியாது..
இஸ்லாம் சொல்கிறது, இந்த உலகம் ஒரு சோதனை கூடமே.... எனவே, எதுவும் சாத்தியம்... நீதி மரணத்தின் பின் வரும் மறு வாழிவிலேயே!!!!
இதுவும் ஒருவகை தொழில்..
மனிதர்கள் தங்கள் தவறுகளை புரிந்து கொள்ளாத நிலையிலேயே இருக்கின்றனர்.//
தவறு என்று தெரிந்தும் அதனை செய்வதில் ஒரு வித இன்பம் தேடுகின்றனர்.
அன்பின் நண்டு - எங்கோ இடிக்கிறது - உடன் படவும் முடியவில்லை - எதிர்க்கவும் இயலவில்லை - ஆழ்ந்து சிந்தித்துப் பதில் மறுமொழி இட வேண்டும் - பார்க்கலாம் - நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா
\\தத்துவஞானிகள் என்று புகழப்படுகிறவர்கள் அனைவரும் ,கடைத்தெருவில் உட்கார்ந்து கொண்டு 'என்னிடம் வாருங்கள்; நான் உங்களை ஏமாற்றமாட்டேன் ;சரியான சாமான்களை ஒழுங்காக அளந்து உங்களுக்கு கொடுப்பேன் ' என்று கூவிகிற வியாரிகளைப் போன்டவர்களே.\\மத்தவங்க கடை விரிச்சு வச்சிருக்கிறது ஒரு பக்கம் கிடக்கட்டும் வக்கீல் ஐயா, நீங்க விரிச்சி வச்சிருக்கும் கடையில, "உங்களை ஏமாற்றமாட்டேன் ;சரியான சாமான்களை ஒழுங்காக அளந்து உங்களுக்கு கொடுப்பேன்" என்று கூவிகிட்டு நீங்களும் தான் எல்லோரையும் போல
இருக்கீங்க, அவங்களை நம்ப வேண்டாம் என்று சொல்லும் உங்களை எதை வைத்து நம்புவது?
நீங்கள் வசிக்கும் ஈரோட்டில் தோன்றியது திராவிடர் கழகம், கடவுள் என்று எதுவும் இல்லை என்ற சொன்ன ஈ.வே.ரா. வாழ் தோற்றுவிக்கப் பட்டது. அதன் தற்போதைய தலைவர், வீரமணி. அவருக்கப்புறம் அவரது மகனே தி.க. தலைவர் ஆக வேண்டும் என்று ஏற்ப்பாடு பண்ணி வைத்திருக்கிறாரே, ஏன் தலைமைப் பொறுப்பேற்று நடத்த தகுதியானவர்கள் வேறு யாருமே இல்லையா? இல்லை தி.க .வில் உறுப்பினர்களே வெறும் இரண்டு பேர்தானா? இதை நீங்கள் என்றாவது வீரமணியைப் பார்த்து கேட்டதுண்டா?
நீங்கள் நாத்தீகர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள், இந்தக் கொள்கையில் நீங்கள் எந்த அளவுக்கு பிடிப்புள்ளவர் என்று சொல்ல முடியுமா? அதாவது, நீங்கள் நாத்தீகக் கொள்கையில் பூரண நம்பிக்கை வந்த பின்பு, பெரியார் உட்பட எந்த தலைவரின் பிறந்த நாளுக்கும் அவர்கள் படத்துக்கும்/சிலைக்கும் மாலை போட்டு, தேங்காய் பழம் வைத்து கர்ப்பூரம் காட்டாதவரா? எந்த தலைவரின்நினைவு நாளன்றும் அவர்கள் சமாதிக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தாதவரா? நீங்கள், நான் இன்ன மொழி பேசுவதில் பெருமைப் படுகிறேன் என்று சொல்லிக் கொள்ளாதவரா? நான் தமிழன் என்று மார் தட்டிக் கொள்ளாதவரா? உங்கள் வீட்டில் யார் செத்தாலும் கலங்காதவரா? முடிந்தால் பதில் சொல்லவும்.
\\இது உண்மையானால் அவரிடமிருந்து தான் எல்லா வியாதிகளும் வருகின்றன.\\ கடவுளே இல்லை என்று சொல்லிவிட்டால் வியாதியே வராதா?
\\அவ்வளவு மேன்மைதாங்கிய இட்த்திலிருந்து நமக்கு நீதி வருகையில் நமக்கு அரசாங்கமும் ,சட்டங்களும் எதற்கு ? .\\ வேற எதுக்கு 1.76 லட்சம் கோடி கொள்ளையடிப்பதற்குத தான். அல்லது, அப்பாவி மக்கள் குடியிருப்புகளை மிரட்டி தன் பெயருக்கு எழுதி வாங்கத்தான். வக்கீலையா, உங்க வாதத் திறமையாள இந்த நாட்டு சட்டத்தை ஏமாற்ற முடியும், கோர்டில் புளுகு மூட்டைகளை விற்க முடியும், ஆனா அதுக்கு மேல ஆண்டவன் சட்டம் தீர்ப்புன்னு ஒன்னு இருக்கு, நீங்க செய்துள்ள வேலைக்குத் தகுந்த தீர்ப்பை அவன் வழங்குவான், அங்க உங்க கிரிமினல் லாயர் திறமை உதவாது. ஹா....ஹா...ஹா...
\\பல கடவுள்களும்,பல மதங்களும் உலகத்தில் துன்பத்தைப் புகுத்தியுள்ளது .\\ கடவுள் இல்லைன்னு சொன்னா இன்பம் புகுந்திடுமா? இந்தியாவில் மக்கள் கஷ்டப் படுவது, அரசியல்வாதி திருடனுங்க என்பது லட்சம் கோடி ஊபாயை கொண்டு போய் சுவிஸ் வங்கியில் வச்சதால, கடவுள இவங்களைப் போடச் சொன்னார்? இந்த அயோக்கியப் பயல்களால் ஏற்ப்பட்ட கஷ்டத்தை போக்க கோவில், சர்ச் என்று மக்கள் போறாங்க, அதுலயும் மண்ணை வாரிப் போடுறீங்களே?
\\ மனிதர்கள் தங்கள் தவறுகளை புரிந்து கொள்ளாத நிலையிலேயே இருக்கின்றனர்.அவர்களின் தவறுகள் அவர்களுக்கே தெரிவதில்லை.தங்களின் தவறுகளை வெறுத்து ஒதுக்காமல் அவைகளை நேசித்து வருகின்றனர் .\\ தி.க. வின் சொத்துக்களுக்காக தனது மகனைத் தலைவனாக்கத் துணிந்திருப்பது வீரமணி செய்த முதல் தவறு. அடுத்து, கருணா, ஜெ ரெண்டு பேரில் யார் ஆட்சிக்கும் வந்தாலும், அவர்களது தவறைச் சுட்டிக் காட்டாமல் சொம்படிக்கிராறு, முதலில் இவரைத் திருந்தச் சொல்லுங்கள், அப்புறம் மத்தவங்க தவறைத் திருத்தலாம்.
\\திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து,ஒழுக்கத்தை மலிவுபடுத்திவிட்டதுதான்.\\ தி.க. வில் எத்தனையோ திறமைசாலிகள் இருந்தும், தனது மகனை அரியணை ஏற்றத் துடிக்கும் வீரமணியின் ஒழுக்கக் கேட்டை தட்டிக் கேளுங்கள், ஆளும் வர்க்கத்திற்குச் சொம்படிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள், உங்கள் முதுகு சுத்தமானதுக்கப்புரம், அடுத்தவன் முதுகைப் பற்றி கவலைப் படுங்கள்.
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "