ஆரம்பத்திலிருந்து டெல்லி வட்டார அரசியலை கவனிந்து வந்தால் அதன் பின் புற தப்பிக்கும் ஒரு சாமர்த்தியக்கார அரசியல் நன்கு புரியும்.
மக்களின் உணர்வினை காங்கிரஸ் கண்டுகொள்ளாமல் தனக்கு ஓட்டுப்போட்ட டெல்லி மக்களை ஏமாற்றிவிட்டது.
தாங்கள் யாருக்கு எதிராக வாக்களித்தார்களோ அவர்களை தாங்கள் ஆதரித்த கட்சி ஆதரிப்பதை எந்த சாமானியனும் மன்னிப்பதில்லை.
அடுத்து வேடிக்கை என்னவென்றால் ஆம்ஆத்மி கட்சி மக்களிடம் கருத்து கேட்கிறதாம்.
தேர்தலின் போது இதைத்தானே கேட்டீர்கள்.ஓட்டுனா என்னங்க ?.
இப்ப ஆம்ஆத்மி கட்சி மக்களிடம் கருத்து கேட்கும் விசயத்துக்கு வருவோம்.
இதில் ஆம்ஆத்மி அரசு அமைக்கலாம் என மக்கள் கூறிவிட்டால் , மக்களுக்குத்தான் பிரச்சனை.
எப்படி எனில் ,நீங்க தானே சொன்னீங்க ஆட்சி அமைக்க அதனால அமைச்சோம் ,இப்ப குறை செல்றிங்க என தங்களின் மீதான தவறுகளை ஓட்டளித்த மக்களின் மீது சுமத்தி தப்பித்துக் கொள்ளும் .
அடுத்து சரி,வேண்டாம் என மக்கள் கூறிவிட்டாலும் ,மக்களுக்குத்தான் பிரச்சனை.
எப்படி எனில் ,நீங்க தானே சொன்னீங்க ஆட்சி அமைக்கவேண்டாமுனு ,அதனால ஆட்சி அமைக்கல,மறுதேர்தலுக்கும் நாங்கள் காரணம் இல்லை ஓட்டளித்த மக்கள் நீங்க தான்.அதனால இந்த தடவை எங்களுக்கே வாக்களித்து எங்களை பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுங்கள்.மக்களின் வரிப்பணத்தை வேஸ்ட் செய்யா கூடாது என இதற்கும் காரணம் ஓட்டளித்த மக்களே என தனக்கு ஓட்டளித்த மக்களின் தலையில் பலியை சுமத்தி ஆம்ஆத்மி தப்பித்துக் கொள்ளும் .
எப்படி பார்த்தாலும் ஆம் ஆத்மி ஓட்டுப்போட்ட சாமானிய மக்களின் மீது பலியை போடும் சாதுரிய டெல்லி அரசியலை நடத்துவதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.இது எந்த அளவிற்கு சரி என்பது போகப்போகத் தான் தெரியும்.
இப்ப டெல்லி மக்கள் என்னதான் செய்ய என்ற நிலையில் உள்ளனர்.
என்ன செய்ய என என்னைக்கேட்டால்,
நான் ஆட்டத்துக்க வல்லப்பா.எனக்கு நிறைய வேளை இருக்கு.
டெல்லியில் பா.ஜ ஆட்சிக்கு வரக்கூடது என்பதற்காகத்தான் இவர்கள் இத்தனை நாடகம் ஆடுகின்றனர் என டெல்லி மக்கள் இப்ப தெளிவாக புரிந்து உள்ளனர்.அதன் பலன் பின்புதான் தெரியும்.
மக்கள் அறிவில் சாமானியர்கள் அல்ல .
படம் ; நன்றி கூகுள்.
Tweet |
|
3 கருத்துகள் :
விளக்கம் நன்று...
ஏதோ ஒரு எதிர்ப்பு +எதிர்பார்ப்பென்று ஓட்டளித்த டெல்லிமக்கள் பாடுதான் திண்டாட்டம் இப்போது.
ஆம் ஆத்மி டெல்லி மக்களிடம் (காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் நிலையில்) தாங்கள் ஆட்சி அமைக்கலாமா என்று கருத்துக் கணிப்பு எடுத்து அதன் அடிப்படையில் முடிவு அமையும் என்று சொல்லியிருப்பது டெல்லி மக்கள் நிஜமாகவே பலிகடாக்கள்தானோ?!!நடப்பது எதுவும் சரியாக உள்ளது போல் தெரியவில்லை!
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "