//தமிழக மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில், கரையான் புற்றெடுக்கக்
கருநாகம் குடிபுகுந்த கதையாகி விட்டது. தமிழ் அரசர்கள் கோயிலாக்காக விட்ட
தானங்களை, நிலங்களை தீட்சதப் பார்ப்பனர்கள் கபளீகரம் செய்து விட்டனர்.
இந்தப்
பார்ப்பனர்கள் கைலாசத்திலிருந்து நேரே இறங்கி வந்தவர்களாம். மூவாயிரம்
பார்ப்பனர்களில் தலைமை எண்ணும்போது ஒரு தலை குறைந்ததாம் அந்த ஒரு ஆசாமி
நான்தான் என்று சிவனே சொன்னதாகக் கதையளந்து வைத்துள்ளனர்.
தில்லைவாழ்
அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று பரமசிவன் சுந்தரமூர்த்தி
நாயனாருக்கு அடி எடுத்துக் கொடுக்க திருத்தொண்டத் தொகையை சுந்தரர்
பாடினாராம். தில்லையில் வாழும் பார்ப்பனர்களின் அடியார்களுக்கும் அடியாராம்
சிவபெருமான்!
வானம் முட்டும் கோபுரங்கள் கட்டியவர் யார்? அதன்
உச்சிக்கெல்லாம் தங்க மூலாம் பூசியவர் யார்? தில்லை நடராசருக்குத்
தங்கக்கூரை வேய்ந்து தந்தவர் யார்? சத்திரம், சாவடி கட்டியவர் யார்?
அன்றாடம் ஆறுகால பூஜைக்கு உதவி வருபவர் யார்? எல்லாம் நாம் தானே? நாம்
போட்டுக் கொடுத்த செல்வம் தானே இவை யாவும்? ஒரு பார்ப்பானாவது, ஒரு
செல்லாக் காசாவது கோவில், குளம், தானம் தருமம் இவற்றிற்குக்
கொடுத்திருப்பானா? அப்படியிருக்க இவ்வளவு செய்தும் நாம் ஏன்
சூத்திரர்களாயிருக்க வேண்டும்? அவர்கள் மட்டும் ஒன்றும் செய்யாமலேயே நம்மை
ஏமாற்றி உண்டு, பிராமணர்களாக வாழ வேண்டும்.
இந்தக் கோவிலே அந்த கோவில் பக்தர்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டுமே தவிர,
அது சில பித்தர் களுக்கு சொந்தமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்காது -
இருக்கக் கூடாது // .
என்பது ஒரு சாரார் வாதம் .
//மதச் சிறு பிரிவினரின் கோயில் (Religious Denomination) என்றும் இந்திய
அரசமைப்புச் சட்டக்கூறு 26 இன்படி, மதச் சிறுபிரிவினரின் உரிமைகளைப்
பறிக்கக்கூடாது என்றும் நிருவாக அலுவலரின் நியமனம் தீட்சிதர்களின்
மதச்சார்பான செயல்களில் குறுக்கீடு செய்வதாகும்// என்பது தீட்சிதர்களின்
தரப்பு
இது இப்படி இருக்க,
எனக்கு தெரிந்து ,
சிதம்பரம் என்பது கோவிலின் பெயர் .
ஊரின் பெயர் தில்லை.
சைவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்கும்.
பாடல் பெற்ற தலம்.
சேக்கிழார் பெருமானுக்குத் திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துத்தந்து, அரங்கேற்றச் செய்யப்பட்ட தலம்.
மாணிக்கவாசகர் ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெரும்பதி .
இந்தக் கோவிலின் சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லை.
சிதம்பரம் கோவிலில் முக்கியமானது சிதம்பர ரகசியம்.
நடராஜர் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் .
இவ்வாறு சில மற்றும் சில உண்மையான வரலாறு ,அவ்வளவே.
இது இருக்கட்டும் ,
இப்பொழுது சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தின் வழி பொதுவில் மக்களுக்கு நடராஜர் சொல்லும் செய்தி...
அரசியல்வாதிகளே,
நாடு மக்களுக்கு எப்படி சொந்தமோ அப்படி கோவில் மக்களுக்கு சொந்தம் .
அதனை தீட்சிதர்கள் நிர்வகித்து வந்தனர்,வருகின்றனர்,
எப்படி என்றால் சமய மக்களின் ஆதரவில்.
ஆனால் அரசியல்வாதிகளே உங்களைப்போல் நாட்டு மக்களிடம் என்ன என்ன பொய் சொல்லி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தீர்களே,அது போல் தீட்சிதர்கள் வரவில்லை.
நீங்கள் உங்களை நம்பிய மக்களுக்கும் ,இனத்திற்கும் துரோகம் செய்துவிட்டு எப்படி இன்னும் இன,மொழி காவலராக வேடம் போட்டு,
மக்களின் வாக்கையும்,அவர்களால் கிடைத்த வசதிகளையும்,அதனால் அடித்த பணத்தையும் வைத்துக்கொண்டு தன் பிள்ளை, தன் பெண்டு என மகிழ்ச்சியாக இருக்கின்றீர்களே ,அது போல இங்கு யாரும் இல்லை.
உங்களைப்போல் மக்களின் பணத்தை பல ஆயிரம் கோடி
ஏமாற்றி உண்டு கொழுத்தவர்கள் இங்கு யாரும் இல்லை.
நீங்கள் இங்கு யாரையும் காக்கவும் இல்லை,காக்கப்போவதும் இல்லை.
உங்கள் குடும்பத்தை தவிர்த்து நீங்கள் மற்ற யாருக்கும் காப்பாளரும் இல்லை.
என் மீது பக்தியும் இல்லை.எனது பக்தனும் இல்லை.
நிர்வாகம் சரியல்ல அதனால் வெளியேற சொல்லும் நீங்கள்,
உங்களை நம்பியவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு ,
இத்தனை நாள் தமிழர்களை சுரண்டி பிழைத்து,
இன்னும் அரசியலையும்,பொது வாழ்கையையும் ஒட்டிக்கொண்டு இருக்கின்றீரே.
உருப்படியா ஏதாவது செய்துள்ளாயா ...சொல் ...?.
அப்படி இருக்க ஏப்பா ... இத்தனை ஆர்ப்பாட்டம் ?.
என்னங்கையா உங்க தர்மம்.
முதலில்
தூய கரத்துடன் ,
தூய மனத்துடன்
பொது வாழ்க்கையை இனி உங்களால நடத்த முடியுமா ?.
முடியாது
அதனால
சுரண்டியதை வைத்து புள்ள குட்டி பேத்தி என இருங்க.
நன்றி : கூகுள் -படம் மற்றும் இணைய பக்கங்கள்.
Download As PDF