ஞாயிறு, 19 ஜனவரி, 2014

கடவுள் வசிக்கும் வீட்டின் வரைபடம்.









அப்பத்தாவின் சமாதி
எங்கள் வயல் வெளியில்தான்
இருந்தது !
இப்போது
இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின்
அடியில்
இருக்கிறது
அந்த வயலின் சமாதி!




 @@@@@@@@@@



ரகசியங்களை
சேகரம் செய்கிறது
இரவு.
அதிகாலை
அவைகளை
சூரியனிடம்
சொல்லி விட்டு செல்கிறது.
நான்
அண்ணாந்து பார்க்காமலே
நடக்கப் பழகுகிறேன்
அந்தரங்கங்களின் கனத்துடன்.



@@@@@@@@@@







நண்பர் வழக்கறிஞர் ராஜீ சிவசுப்பிரமணியம் அவர்களின் கடவுள் வசிக்கும் வீட்டின் வரைபடம் கவிதைகள் தொகுப்பில் இருந்து  இரண்டு கவிதைகள் பார்வைக்கு.
வெளியீடு :அமுதாலயா,2,சிவஞானம் சாலை,சென்னை-17.விலை : ரூ.40 .


படம்: நன்றி இணையம்.
                                                                                                                                              
Download As PDF

8 கருத்துகள் :

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
தகவலுக்கு நன்றி...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இரண்டும் நன்று... நூல் அறிமுகத்திற்கு நன்றி...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - கடவுள் வசிக்கும் வீட்டின் வரைபடம் தொகுப்பில் இருந்து எடுத்த இரு கவிதக்ளூம் அருமை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown சொன்னது…

வக்கீலின் கவிதையை வக்கீல் ரசித்ததை நாங்களும் ரசித்தோம் !
+1

ADMIN சொன்னது…

கவிதைகள் அருமை. இரு கவிதைகளுமே யதார்த்த வாழ்வின் வெளிப்பாட்டை உணர்த்துகிறது. குறிப்பாக முதல் கவிதையில் அப்பத்தாவின் சமாதி, மற்றும் வயல்வெளியின் சமாதி.. இவரின் கற்பனைத் திறனை மட்டுமல்ல..வாழ்வியலோடு ஒன்றிணைந்து வெளிப்படும் உணர்வுகளையும் காண முடிகிறது..

கவிதை வடித்தவருக்கும், பகிர்ந்த உங்களுக்கும் என்னுடைய நன்றி, வாழ்த்துக்கள்..!

G.M Balasubramaniam சொன்னது…

கவிதைத் தொலிப்பொல் இருந்த இரு கவிதைகள் அருமை. கவிதைத் தொகுப்பு மட்டும் தான் வாசிப்பீரோ.?நானும் ஒரு சிறுகதைத் தொகுப்பு எழுதி புத்தகமாக வந்திருக்கிறது மணுமேகலைப் பிரசுர வெளியீடு ”வாழ்வின் விளிம்பில்” படித்துக் கருத்துச்சொல்ல வேண்டுகிறேன்

அ.பாண்டியன் சொன்னது…

வணக்கம் சகோதரர்
அருமையான தலைப்பைக் கொண்ட நூலிலிருந்து அருமையான கவிதைகளைக் காண தந்தமைக்கு நன்றி. தங்கள் ரசனை பதிவில் பலிச்சிடுகிறது. தொடர வாழ்த்துகள்..

”தளிர் சுரேஷ்” சொன்னது…

முதல்கவிதை மிகவும் அருமை! பகிர்வுக்கு நன்றி!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "