செவ்வாய், 22 ஏப்ரல், 2014

வாலி வதம் - சரியா , தவறா ?.இது நான் எழுதிவரும் ரகுராமன் கதைகேளுங்களில் ஒரு சிறு பகுதியாகும்.
ரகு ராமன் கதை கேளுங்கள் -இது  இராமனையும்,இராம காதையை ஆராய்ந்து,எந்தவித சார்பும்,முன் முடிபும் இல்லாமல்.இராமனைப்பற்றிய எனது பயணத்தில் நான் கண்டடைந்த முடிவை எழுதுகின்றேன். இது இராமனைப்பற்றிய ஒரு புதிய பார்வை,ஒரு புதிய பரிணாமம்.அவ்வளவே.

@@@@@@@@@@@@@@@
   
இனி ....

வாலி வதம் - சரியா , தவறா ?.


வாலிவதத்தில், இராமன் நடந்து கொண்டது சரியா? அல்லது தவறா?

இராமன் வாலியை மறைந்திருந்து ஏன் வதம் செய்தான் ?.

ஒரு படைப்பாளி தானது  நாயகனுக்கு எதிரான ஒரு பகுதியை ஏன்  படைத்தான் ?.

இதற்காக விடை சில மட்டும் ....

@@@@@@@@@@@


அண்ணா, இந்த கானகம் நமக்கு தேவையான அம்புகளை தரும் என நினைக்கின்றேன்.

ஆமாம் நானும் அதையே தான் சிந்தித்தேன். .....

இவ்வாறு  பேசிக்கொண்டிருந்தவர்களை கண்டு  இரண்டு  நபர்கள் மராமரங்ளை கடந்து  தலைதெரிக்க ஓடினார்கள்.
மிக வேகமாக அதிக தொலைவு ஓடியதால் சோர்ந்தவர்களில் முதலாவதாதவன்  நில் அனுமா,நில் என்றான்.
உடனே நின்றான் முதலாவதாதவனை கடந்து ஓடிய இரண்டாவதாதவனான அனுமன்.ஏன் சுக்ரீவா ,ஏன் என்றான்.
அவர்கள் நம்மை துரத்தவேயில்லையே நாம் ஏன் ஓடவேண்டும் அனுமா என்றான் சுக்ரீவன்
.நீ சொன்னாய்  அதான் நான் ஓடினேன் ......

ஓடிய அனுமனும்,சுக்ரீவனும் மீண்டும் தாங்கள் கானகத்தில் கண்ட இரண்டு நபர்களையும் காண தீர்மானிந்து மீண்டும் கானகத்திற்கு வந்தனர்.அங்கு அவர்கள் கண்ட காட்சி ஏழு மராமரங்கள் நேராக பிளக்கப்பட்டும்   இருந்தது.....

அனுமன் சுக்ரீவானைப்பார்த்து,
சுக்ரீவா, இவர்கள் புதியவர்கள்,மிகவும் திறமையானவர்கள்,நல்லவர்களாக தெரிகிறது,ஏதற்கு வந்தார்கள் என்று அறிவோம் வா என்றான்....

_______________

இராமன் கதை கேட்டு சுக்ரீவனும்,அனுமனும் உதவ நாங்கள் தயார் என்கின்றார்கள் .
அதற்குப்பின் சுக்ரீவன் தங்களின் கதையை கூற இராமன் தானும் அறநெறிப்படி தாங்களுக்கு உதவுவதாக வாக்களிக்கின்றான்.

அறநெறிப்படி என்றால் என்ன என்பதனை இராமன் விளக்குகிறான்...

_______________

வாலியும் சுக்ரீவனும்  கடும்போரில் ஈடுபடுகின்றனர்...

இராமன் அம்பு எய்கிறான்.அம்பு பட்டதும் வாலி நிலைதடுமாறுகிறான் ...

வாலி இது தர்மமல்ல,நீயாயமல்ல,வீரனுக்கு அழகல்ல என்று கூறி மீண்டும் போர்புக இராமனின்  அம்புகள் வாலியை வதம் செய்கின்றது .

இராமன் சொன்ன அறநெறி என்ன ?.அடுத்த பதிவில்.


இதையும் படித்துப்பாருங்கள் ....


  அசுவமேத யாகம் செய்யலாம் வாருங்கள்அடுத்து வருவது

இந்தியா  எது ?. பாரதம் எது ? .

இராமன்  - உண்மையா  இல்லை கதாபாத்திரமா  ? .

இராமன் காட்டிற்கு செல்வதற்கு கூனி மட்டும் தான் காரணமா ?. ...

.
படம் ; நன்றி இணையம்.
மீள்வு ...
Download As PDF

6 கருத்துகள் :

Unknown சொன்னது…

காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு !

பொன் மாலை பொழுது சொன்னது…

// வாலியிடம் ஒரு வரம் உண்டு. அவனை எதிர்த்து போர் செய்பவர்களின் பலம் முழுவதும் வாளியிடமே வந்துசேர்ந்துவிடும்.அவனை எதிர்பவர்கள் தோல்வியடைவார்கள் என்ற ஒரு வரம் பெற்றவன். அதனால்தான் ராமன் வாலியை நேருக்கு நேர் நின்று சண்டையிடாமல்,மறைந்திருந்து அவன் முதுகில் அம்பால் தாகி அவனை வீழ்த்துகிறான்// என்று படித்ததுண்டு.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - வாலி வதம் சரியா தவறா - பதிவு நன்று - இராமன் சொன்ன அற நெறி - அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

உங்கள் கோணத்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரி தான்...

உங்களின் கருத்து....? ஆவலுடன்...

அருணா செல்வம் சொன்னது…

உங்கள் அறநெறியின் விளக்கம் காண ஆவலுடன் காத்திருக்கின்றேன் நண்டு....

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "