வெள்ளி, 18 ஏப்ரல், 2014

நரேந்திரமோடி தமிழ்மண்ணின் மைந்தர்.


  
நான் ஏன் நரேந்திரமோடியை ஆதரிக்கிறேன் எனில்
அவர் தமிழ்மண்ணின் மைந்தர்  என்பதாலும்,
ஒரு மண்ணின் மைந்தரால் தான் மண்ணின் உணர்வை புரிந்துகொள்வதோடு,
அந்த மக்களுக்கும்,மொழிக்கும் நன்மைகள்  செய்யமுடியும் என்பதாலும்.

மோடி எப்படி தமிழ் மண்ணின் மைந்தராவார் எனில் நாம் நம் நாகரிக வரலாற்றை  பார்க்கவேண்டும்.

உண்மையில், நாம் ஒவ்வொருவரும் வெட்கப்படக்கூடிய விசயம் ஒன்று உண்டெனில்,அது நாம் நமது நாகரிகத்தை நாமே ஒத்துக்கொள்ளாமலும் , அதனைப்பற்றி எந்த வித அக்கறையும் இல்லாமலும்,மேலும்,அதனை நாமே நிராகரித்தும் வருவது தான் .

'அ ' வை கண்டுபிடித்த எனது மூதாதை இவர் தான் என என்னால் அடையாளத்துடன் உலகின் முன் நிறுத்த முடியாவிட்டாலும் .
என்னால் ஆற்றங்கரைகளில் அழிந்துபோன எமது அண்மை தொன்மையை காணமுடிந்தது. அது தான் சிந்து சமவெளி நாகரீகம் .அது நமது நாகரீகம் . அங்கு வாழ்ந்தவர்கள் நமக்கு இன்றைய ஜீன்களை கொடுத்தவர்கள் .
அதனை அறியாமல் ,உணராமல் ,போற்றாமல் வாழ்தல் முறையா ?


மேலும்,இன்று வரை சிந்து சமவெளி நாகரீகம் ,தமிழர்களுக்கு ஒரு வரலாற்றுப் பாடம் என்றளவே இருப்பது தான் அதைவிட மிகவும் வேதனையளிக்கும் விசயமாக உள்ளது. அதனைக்கண்டு வெட்கித்தலைகுனிகின்றேன்.

சரி மோடி எப்படி  தமிழ்மண்ணின் மைந்தர் எனில் சிந்து சமவெளி நாகரீகம் தமிழர் நாகரீகம்,இந்திய நாகரீகம்.
சிந்து சமவெளி நாகரீக படுகையில் பிறந்த மோடி தமிழர் தானே.
இதை விவாதத்திற்காக மறுக்கலாம்.ஆனால்,உண்மை இது தான்.

நரேந்திரமோடி தமிழ்மண்ணின் மைந்தர்.
ஒரு மண்ணின் மைந்தரால் தான் மண்ணின்  இன உணர்வை புரிந்துகொள்வதோடு.அந்த இன மக்களுக்கும்,மொழிக்கும் நன்மைகள்  செய்யமுடியும்.அவரின் தமிழக பரப்புரையினிற்று,இந்த மண்ணின் மீதான அவரின் பாசத்தை உணரலாம்.
மகாத்மா காந்திக்கும் இத்தகைய பாசம் இருந்தது. 

எனவே, தான்  நான்  நரேந்திரமோடியை ஆதரிக்கிறேன் .படங்கள் உதவி நன்றி  harappa.com
Download As PDF

14 கருத்துகள் :

J.Jeyaseelan சொன்னது…

அப்படி என்றால் இந்தியாவில் பிறந்த எல்லாருமே இம்மண்ணின் மைந்தர் தான் நண்பரே. ஏன் அவருக்கு மட்டும் ஓட்டு போடுகிறீர்கள், எல்லோருக்குமே போட்டுவிடவேண்டியது தானே!!!!!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

யாதும் ஊரே யாவரும் கேளிர்
என முன்னமே உலகுக்கு
உணர்த்திய இனம் தமிழினம்

Yaathoramani.blogspot.com சொன்னது…

இன்னும் கொஞ்சம் நல்ல காரணமாக
சொல்லி இருக்கலாமோ ?
காரணத்திற்கா பஞ்சம் ?

Shan Nalliah / GANDHIYIST சொன்னது…

Great...!!!

சென்னை பித்தன் சொன்னது…

ஏதோ ஒரு காரணத்துக்காக ஆதரித்தால் சரி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒரு காரணம் - அவரவர் விருப்பம்...

அம்பாளடியாள் சொன்னது…

தங்களின் எண்ணம் ஏற்புடையதாயின் நிட்சயம் நரேந்திரமோடி அவர்களே வெற்றி பெறுவார் .வாழ்த்துக்கள் சகோதரா .மிக்க நன்றி சிறப்பான பகிர்வுக்கு .

viyasan சொன்னது…

மோடி மட்டுமல்ல, ஒபாமா கூடத் தான் தமிழன். ஏனென்றால், தமிழர்களும் Negroids தானாம், அத்துடன் ஆதி மனிதன் ஆபிரிக்காவில் தான் தோன்றினான். அதனால் ஒபாமாவின் முன்னோர்களும் தமிழர்களே. அதனால் தான் அமெரிக்காவிலுள்ள ஈழத்தமிழர்கள் கூட 'Tamils for Obama" என்ற அமைப்பை நடத்துகிறார்கள். :-)

Saha, Chennai சொன்னது…

//நரேந்திரமோடி தமிழ்மண்ணின் மைந்தர். //

ஆமா, இந்த விஷயம் அவருக்கு தெரியுமா? முடிஞ்சவரைக்கும் தெரியாம பாத்துக்கங்க, அப்புறம் எதுனா சொல்லிட போறார்!?!

//மகாத்மா காந்திக்கும் இத்தகைய பாசம் இருந்தது. //

அதனாலதான் அவரை போட்டு தள்ளீடான்களா ?

சிகரம் பாரதி சொன்னது…

அட.. அட... உங்க பதிவு புல்லரிக்க வைக்குது. நம்ம பக்கமும் கொஞ்சம் வாறது.... கந்தசாமியும் சுந்தரமும் - 02 http://newsigaram.blogspot.com/2014/04/kandasaamiyum-sundaramum-02.html

Shanmugam Rajamanickam சொன்னது…

நரேந்திர மோடியை ஆதரிப்பதற்கு இன்னும் மேம்பட்ட காரணங்களை சொல்லி இருக்கலாம்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நல்லாவே யோசிக்கிறீங்க!

Unknown சொன்னது…

தொப்புள் கொடிஉறவு என்றும் சொல்லி இருக்கலாமே ?
த ம 7

Unknown சொன்னது…

நான் ஒரு இந்து என்று சொல்பவர் எவரையுமே தமிழகம் என்றும் ஏற்றுக் கொள்ளாது. நான் பாரதீய இந்து லீக் கட்சியைச் சேர்ந்தவன் என்றால் மட்டுமே தமிழகத்திற்குள் நுழைய அனுமதிப்போம்.

திராவிடப் பகுத்தறிவாளன்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "