வியாழன், 16 ஜனவரி, 2020

வித்தியாசமான விளையாட்டு .























இனி சாவிகள்  பிறக்கப்போவதில









என் பிரியமானவர்க
.
.

.



.

.

.
.





புகைப்பட மழலை






.











தேவகுமாரனை  நோக்கி .












.


.





டைரிகள்










.







கனவுகளை என்ன செய்ய ?
















தவளைகள் உறங்கா மாரிக்காலம்











.
























லிவிங் டுகதர்




















தண்டவாளம் கடக்கும் கண்கள்















.











.



















அவளின் இதயத்தில்





.
.






.













அம்மா இரவு



 .





























.









எதிர்மறை எண்ணங்கள் .









எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.

வளைந்து வளைந்து
பாதை சென்றாலும்
பாதை பாதையினின்று
வளைந்து சென்றதில்லை .

வளமான பாதையில்
சுழல நினைத்தாலும்
சுழலும் பாதையில் சுகம்கண்டதால்
வளமான வாழ்விற்கு வக்கில்லை.

எப்பொழுதும் எல்லோர்க்கும்
எப்பொழுதும்  வாய்ப்பதில்லை
எப்பொழுதென்பது  எப்பொழுது என்றாலும்
எப்பொழுதென்பது  எப்போதும் இங்கில்லை.

சோக ரேகை
மனதினில் தோன்ற
சோம்பல் ரேகை
முகத்தில் தொலைவதில்லை .

மறக்கும் எண்ணம்
நினைவினில் தோன்ற
நினைக்கும் எண்ணம்
மறப்பதை தொலைப்பதில்லை.

எதற்காகவோ வாழ்வு என்றாலும்
எதற்காக வென்பதே
நமக்காகும் போது
நமக்கா வென்பது ஏதும் இங்கில்லை.

இல்லை யென்பது
இங்கில்லை யென்றாலும்
இல்லை இல்லாமல்
இங்கொன்றும் இல்லை .

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறை யென்றாலும்
எதிர்மறை எண்ணங்கள்
எண்ணாமல் முடிவதில்லை.

எப்படி யென்றாலும்,

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.












.





.















புலிகளாவோம் .



.


புழுக்கை புல்லுயிரியாய்
நூற்றாண்டு நூற்றாண்டாய்
நாமனைவரும்
சாதியால்
மதத்தால்
மந்தை மந்தையாய்
புல்லுருவி
ஏய்ப்பான்களின்
மேய்ப்பு ஆடுகளாய்.

புலிகள்
பசித்தாலும்
புல்லைத்தின்னாதாம்
புற்களை மட்டு்ம்
புசித்து வந்ததால்
புரியவில்லை
இதுவரை.

புல்லைத் தவிர்ப்போம்
புலிகளாவோம்
இனி
மந்தை மந்தையாய்
புழுக்கை ஆடுகளாய்
அல்ல
பகுத்தறிவு புலிகளாக
ஒன்று சேர்வோம்
ஓரினமாக.


.



.










வணக்கத்திற்குரிய  எட்டர்பிளஸ் காதலியே .














நீ   விழி  த்  திருக்கும்
ஒவ்வொரு கணமும்
என் இமைகள்
உனக்காக
சாமரம் வீச



நீ  உ  றங்கும்
ஒவ்வொரு கணமும்
என் விழிகள்
உந்தன் கனவே நானாக

கனா  காண

உ றங்காமல் துடிக்கிறதே
என் கண்கள்
என்ன  செய்தாய்
வணக்கத்திற்குரிய
என்  எட்டர்பிளஸ்
காதலியே

நீ
என்   செய்தாய்

.

.
.




நெஞ்சு கனக்குதம்மா





நெஞ்சு கனக்குதம்மா
நின
தமிழ் நாட்டில் இங்க

கொஞ்சச்சோறு
மிச்சம்  வச்சாலும்
கொண்டு போகுது மனசு அங்க

வெந்த சோறு கிடைக்குதா ?
வெறு வயிரா தூங்குதா ?

பட்டாசு வெடிக்கயிலே
பதறவில்லை என் மனசு
சுட்ட உடலுக்கு சூடு தான் உரைக்குமா ?

நான் இங்க நல்லாயிருக்கேன் ?
நம்ம டோமி அங்க நல்லாயிருக்கா ?

காத்துல தூது விட்ட
இக்கவித  கிடைச்சா

பதில் கூறும்மா
உடனே
பதில் கூறு

நான்
இங்க  காத்திருக்கேன்
உன் இருப்ப
உசிரா வச்சு .










கோழை மனிதர்களே








நாங்கள்
விதைக்கப்பட்டுள்ளோம்
என்றெண்ணி
அறுவடைக்கு
காத்திருக்கும்
கோழை மனிதர்களே
நினைவில் கொள்ளுங்கள்
நாங்கள்
பிரதிபலிக்கப்பட்டுள்ளோம்
இனி
விடியல்
உங்களுக்கில்லை










.


ஏட்டப்பர்களே  வாருங்கள்








ஒற்றைக்கோணலாய்
ஒற்றைப்பார்வை
பார்க்கும்
ஏட்டப்பர்களே
வாருங்கள்

உலகு
பலப்பலவாக
பல கோணங்களில்
பலப்பலவாக
பார்க்கிறது

நாமும்
உலகை
பல பலவாக
பல கோணத்தில்
பளபளப் ஆக
பார்ப்போம் .



.


பலப்பல -மிகவும் பழைய





.




என் இன அவலம் அழ





.

ஓவியன்
நான்
வரையமுடியா
வேதனைகள் அவை.



கவிஞன்
நான்
எழுதமுடியா
வலிகள் அவை.



பாடகன்
நான்
பாடமுடியா
கண்ணீர் நதிகள் அவை.



எனக்கொரு இசைக்கருவி
கண்டுபிடித்து தாருங்கள்
மீட்பு குறிப்புடன்
பாணனாகி
என் இன அவலம் அழ.










.









கவிதையென்கிறார்கள்  கவலையாய் போய்விடுகிறது





நான் எழுதும்
வார்த்தைகளை
கவிதையென்கிறார்கள்
கவலையாய் போய்விடுகிறது .

அடிபட்டு அடிபட்டு
சிதலமடைந்து
குக்கிப்போனதை
வார்த்தைகளில்
வெடித்து சிதறுகிறேன்
புதுப்பிக்க
உயிர்ப்பிக்க
இருப்பினும்
கவிதையென்கிறார்கள்
கவலையாய் போய்விடுகிறது .

உயிர்ப்பு
கவிதையாய்
மடிகிறதே
என
கவலையாய் போய்விடுகிறது .








.











நீ ஏன் கவிதை எழுதுகின்றாய் ?






நீ ஏன்
கவிதை எழுதுகின்றாய் ?

நீ ஏன்
கவிதை எழுதுகின்றாய் ?

வீழ்த்த துடிக்கும்
வீணர்களின்
வாயடைக்க

ஊறு செய்யும்
மரப்பதரை
உணர்ச்சியூட்ட

காயம்பட்ட
கண்ணிமைகளுக்கு
களிம்பாக

உதிர்ந்த
உயர் வித்துகளுக்கு
உரமாக

குருதியில் துடிக்கும்
இனமானத்திற்கு
தோள் கொடுக்க

வீழா இனம்
மீளாத்துயர்
துடைத்தெரிய

நான்
எழுதுகின்றேன்  கவிதை

நான்
எழுதுகின்றேன்  கவிதை

இது நமக்கான
மொழியன்று
நம் மொழி

இது நமக்கான
இனமன்று
நம் இனம்

இது நமக்கான
எழுத்தன்று
நம் எழுத்து

என
எழுச்சி யூட்ட

நான்
கவிதை எழுதுகின்றேன்

நான்
கவிதை எழுதுகின்றேன்








.








உயிர் வாழ்தல்






நெருப்புக்கோழியாய்
நகர்ந்துசெல்கிறது
வாழ்வு
ஆதங்கப்பட்டு அவசரப்பட்டு
இருந்தாலும்
அப்படி அப்படியே...
இதைச்சொல்லி
அதைச்சொல்லி
எதைஎதையோ சொல்லி
நேரத்திற்கு நேரம்
நேரம் தந்து
கூட்டல் கழித்தலாகி
மிண்டும்
கழித்தல் கூட்டலாகி
பிரியமான
விசாரணைகூட
பீதியை பிரண்டியடித்து ...
ஒரு வாய்
ஒரு வயிறு
என்றாலும்
என்றாலும் ...
உயிர்வாழ
ஏதோ ஒன்று
தேவை.






.





மலர் படுக்கை





விரிந்த காரணத்திற்காக
எங்கும் சிதைக்கப்படும்
வதைபடும் வாழ்க்கையிலும்
எப்படி முடிகிறது
இவற்றால்
அழகாக
மணமாக
இருப்பிடம்
மறந்த பிரஞ்ஞையில்
சிரித்தபடி
மண்மீது
மலர்
படுக்கையாக.






.

.









இடைவெளிப்பயணம்







.




ஒன்றி லிருந்து

ஒன்றிற்கு தாவும்

நிதர்சன நேரம்

கடக்கும்

ஒழிந்த

மவுன தூரத்தில்

திசைமாறிப்போகும்

வெளிப்பாடு

எங்கும் தெரியாமல்

தட்டுத்தடுமாறி

மீண்டும் மீண்டும்

தோன்றும்

நிலைமாற்றத்தில்

ஒன்றும் தெரியாமல்

சமன்பாட்டிற் கடங்கா

வடிவம் உருவம்

மாறி மாறி

முதலும் முடிவும்

முடிவிலியாய்

என்

இடைவெளிப்பயணம்
















.


கூடு விட்டு கூடு  பாய







கூடுவிட்டு
கூடுபாயத்தெரியாத
எந்தை
கூடுவிட்டு
கூடுபாய்ந்ததால்
கூடுவிட்டு
கூடுபாய்ந்து
பிறந்தவன் நான்
கூடுவிட்டு
கூடுபாயத்தெரியாதவனாய்















என் சுவாசக்காற்றே.








நீ
என்
சுவாசக்காற்று

நான்
நாணல்
அல்ல
மூங்கில்

மூங்கிலின்
சுட்ட இடத்தை
சுரமாக்கும்
காற்று

வார்த்தை
விட்ட இடத்தில்
சுரமாகும்
இதயத்தின் வலி

நீ
கேட்க
என் தேவதையே














ஓடிய செருக்கு.



புவி யிடம்
வளர்ந்த மரத்தடியில்
பாட்டாளி ஒருவன் அயர்ந்திருந்தான்

அவனைத் துரத்தும் சுதந்திரத்தில்
அகங்காரமாய் பார்த்து
அதிகாரமாய்
இங்கே வேலை
என்ன வென்றான் ? இவன்

இந்நிழல் வேண்டும்
எனக்கென்றான் அவன்
இவ்விடம்
எனக்கு சொந்தமென்றான் இவன்

நான் இட்ட உழைப்பு
மரமாச்சு
நீ சொல்லும் இடமோ
நிழலாச்சு
என் மரம் எனக்கு
சொந்தமாச்சு
உனது அதிகாரம் உனக்கு
பதவியாச்சு

என
எழுந்தான்
பறந்தான்
மரத்துடனே

ஓடியது
செருக்கெல்லாம்
அவன் பின்னே .






.





.

ரோஜா வனம்






வான் தொடும் உயரத்தில்
வளைத்து நெளித்து
அழகாக
கட்டப்பட்டது

அக் கோட்டை

வருடங்கள் பத்து ஆனதாம்
வலுவாக கட்ட

அக் கோட்டைக்கு

வலுவினை சோதித்த
வடிவனும்
வலுவின் காலம்
ஆயிரம் என்றானாம்

"ரோஜா வனம்" என பெயரிட்டு


சிறு அழகிய
செடி ஒன்று
வாழ முளைத்தது
அதன் மீது
சுதந்திரமாய்

வருத்தப்பட்டது நீரின்றி

இறப்பைக் கண்டு பயந்த அது
வலுவிழந்த வேர் கொண்டு
இறங்கி வந்தது
மேலிருந்து
நீர் குடிக்க

மெது மெதுவாய்

நீரை
இறங்கி ருசிப்பதற்குள்
வேரின்
வேறின் வீரியத்தால்
இடிந்து போனதாம்
அக்கோட்டை

ஒரு நூறில்






.






( வேறின் - வேறு ஒன்றின்  )



.














அன்னியம்





.


வேகமாக

புன்முறுவலிடும்

கடக்கும் முகம்

கடந்த என்னை

சவுக்கியமா

அம்மா அப்பா

கல்யாணம் குழந்தைகள்  தொழில்

என்ன ஏது என

பரிமாறிக்கொண்டது

சில கேள்விகளை

சில நிமிடங்களில்

அவசர நிமித்தத்தில்

பாசப் பிணைப்புடன் .

பத்து வருடத்திற்கு முன்

இருபது வருடம்

பக்கத்து வீட்டிலிருந்து

எந்த கணமும்

புன்முறுவல் பூக்காத

மனிதர் .







.













எப்பொழுது மாறுவேன்




.



அவர்களிடம் அவர்களாய்

இவர்களிடம் இவர்களாய்

அதுகளிடம் அதுகளாய்

எல்லோரிடமும் எல்லாமாய்

மாறிமாறி யானது

நான்...

நானாய்

எப்பொழுது மாறுவேன்

பச்சோந்தியாகா ?.


.













போல் போல்









திங்கள்
திங்கள் போல்

செவ்வாய்
செவ்வாய் போல்

புதன்
புதன்  போல்

வியாழன்
வியாழன் போல்

வெள்ளி
வெள்ளி போல்

சனி
சனி  போல்

ஞாயிறு
ஞாயிறு போல்

அத்தனை  போல்களும்
அதனதன் போல்

ஒரு போலும் இல்லை
என்னது போல் .







.






தாண்டும் நிழல்கள் .








.

நா
மோகத்தில்

சுகப்படும்

தரையில்
சாய்ந்த
கலசமா
ய் ஆடிபகலில் பொறுக்கிய
கருமை யனைத்தையும்
தலையில் கொட்டி
மாயும்
காலடிகளாய் ஓடும்பித்தன்
என தாண்டும்
நிழல்கள் .





.






.


நட்சத்திரத்திரம்







.
ஒற்றை நட்சத்திரமாய்
ஓராயிரம் ராவுகள்
கழிந்த பின்
ஒவ் வொரு
பின்னக் கூட்டலிலும்
சேகாரமான சோகங்கள்
உள்ளொளி பெற்று
பீச்சி யடித்த
பிண்டங்களினாலான உலகில்
ஊர்ந்து செல்லும் பட்டாம்பூச்சிக்கு
வண்ணம் கொடுத்தது
ஒரு நட்சத்திரத்திரம்
ஓர் இரவில்
உன்னால் .

.

.










சுழிய  சூனியம்.







சுழிய
மாய வெளியில்
சுற்றித்திரிந்து
வானவில்லில்
கருமை காண புறப்பட்ட
கவுதாரியின் இச்சை
ஊர்ந்து ஊர்ந்து
ராவுகளின்
ஏகாந்த வெளியில்
உந்தன்
பிம்பம் பிம்பமாய்
சுற்றிப்பார்க்கும்
எங்கும்எங்குமான
என்
சூனியம்
.

.


.









அவளின் இதயத்தில்...






.

.
நான்  கடந்ததொலைவை
எவனோ  எடுத்து

எனக்கிட்ட  கட்டளை
யாருக்கோ  சென்று

எனக்காக அளந்த அளவில்
எவனோ   உடைதைத்து

எனக்கான மீன்
யார் வலையிலோ சிக்கி

இருந்தாலும்

எனக்குப்பிடித்த ரோஜா
அவளின் இதயத்தில்

.
.


.








என் கவிதை









.

கொக்கலிடும் குறலில்
சுவர்க்கோழியின் உருவம்
தெரிந்தது போன்று
வெழக்கமாத்துக்குச்சியின்
அடர்வில்
பீய்த்துக்கொண்டோடும்
நீச்சி போல
ஏதோ ஓர் உரு
ஏதோ ஓர் கருவை
நச்சரித்து
செல்லறித்துப்போன
சொற்களினூடே
உப்பிப்பெருகி
இணைந்த காரணம்
யோசிக்கின்ற
பல வரிகளின் ஊடாக
செல்கிறது
என் கவிதை .
.

.






சிற்பங்களை  என்ன செய்ய





.
.
.



வர்ணப்பூச்சில்
வாழப்பிழைக்காத
என்னிடம்
என்ன செய்ய
என்
அன்பானவர்களே
.

.

.
.






























.








































.



















.








Download As PDF

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "