ஈரோட்டில் நடக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் மொழி ,இன ,நலம் விருப்பிகள் நடத்தும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திற்கும் ,மாநாட்டிற்கும் நான் சாதாரண பார்வையாளனாய் சென்று பார்ப்பது வழக்கம்.ஒவ்வொரு உணர்வாளர்கள் என்பவர்களும் தாங்கள் தமிழுக்காகவோ, அதன் உயர்வுக்காகவோ இல்லை என்பதனை பேச ஆரம்பித்த அடுத்த நிமிடத்திலே வெளிப்படுத்தி விடுவதுடன் தமிழின் பெயரால் தவறாமல் தமிழர்களை மடையர்களாக்குவதோடு தாங்களை மட்டும் உன்னதமானவர்களாக காட்டிக்கொண்டு புரட்சியாளர் வரிசையில் அமரத்துடித்து ,வீர வசனம் பேசி நடித்துச்செல்வதை கண்டு ஒவ்வொரு தடவையும் நான் மிகவும் ஏமாற்றப்பட்டே திரும்பியுள்ளேன்.அப்பொழுது நான் நினைத்துப்பார்க்கும் நாடு அமெரிக்கா .
(இதில் வேடிக்கை என்னவெனில் இன்றுள்ள பல வீர வசன தமிழ் தலைவர்களுக்கு நாடு, அரசு,மக்களாட்சி,கட்சி,இயக்கம் என்றால் என்னவென்றே தெரியாத ஒன்றாக இருப்பதுவும் ,இருந்தாலும் இவர்கள் தலைவர்களாக உள்ளதும் தான் .ஆனால்,அவர்களுக்கு கற்பிதம் என்ற வார்த்தை மட்டும் நன்றாக உச்சரிக்கத்தெரியும் ,இது தவிர்த்து வேறு எதுவும் இல்லை என்பது உள்ளங்கை நெல்லி .)
வீர வசனம் பேசி தமிழர்களை சாகடிக்கும் பேச்சுத்தமிழர்களே கேளுங்கள் ...
நான் உலக அரசியல் அமைப்புச்சட்டங்களை ஆழ்ந்து படித்துவந்த பொழுது என்னை மிகவும் வசீகரித்தது அமேரிக்காவின் அரசியல் அமைப்புச்சட்டம் .
மிகவும் எழுமையான ஆனால் மிகமிக அழுத்தமான சரத்துக்களை தன்னுள் கொண்டுள்ளதை படித்து தெளிந்த பொழுது மிகவும் வியந்தேன் .ஏனெனில், அதை மிகவும் ஊன்றிப்படித்த பொழுது தான் தெரிந்து கொண்டேன் .தாங்களின் தலைவனை தனது மக்கள் எப்படிப்பட்டவராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதனை உள்ளீடாக கொண்டிருக்கும் பல விசயங்களை.அதில் ஒன்று மக்களாட்சிதலைவன் என்பவன் மயக்கிப்பேசும் தன்மையுடையவனாக ,மேடையில் முழங்கும் அட்டக்கத்தி வீரனாக இருக்கக்கூடாது என்பது.(இங்கு மக்களாட்சி என்ற பதம் நோக்கத்தக்கது.) மேடையில் வீர வசனம் பேசும் வீணர்களுக்கு இங்கு இடமில்லை ,மக்களுக்கு நல்லது செய்பவன் வீர வசனம் பேச மாட்டான் .அப்படி பேசுகிறவன் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கமாட்டான் என்பதை மக்களின் எண்ணத்தில் அது விதைத்துள்ளதை அறிந்ததால் மிகவும் மதித்தேன் .அதனால் தான் அமெரிக்கா நல்லரசாக தனது மக்களுக்கு உள்ளதை நினைத்து பூரித்தேன் .அதனால் தான் அடிக்கடி நான் அமேரிக்காவை நினைத்துப்பார்க்கின்றேன் .
இனிய தமிழ் நெஞ்சங்களே,
இனி
வீர வசனங்களை தியோட்டர்கள் மட்டுமே கேட்கட்டும்.
நாம் நாட்டைப்பார்ப்போம் .
. Download As PDF
Tweet |
|
13 கருத்துகள் :
என்பது உள்ளங்கை நெல்லி .)
அந்த ’நெல்லிக்கனி’யும் யாரோ ஓசியில் கொடுத்ததாக இருக்கும்
ம்...:))
இப்படி இருக்க, இங்கு இருக்கும் கூட்டம் அத்தனையும் கட்சி வேறுபாடு இல்லாமல் இந்திய அரசியல் சட்ட அமைப்பை தலையில் வைத்து ஆடாத ஆட்டம் ஆடுவதேன்?
நன்றாகச் சொன்னீர்கள் ராஜ சேகர். டாஸ்மாக்கின் மூலம் பெரும் பணம் வந்தாலும் அதில் பெரும் பகுதி இலவசங்களுக்கே செல்கிறது. அதை விடுத்து மின் திட்டங்கள், நீர்த் தேக்கங்கள், சாலை வசதிகள், விவசாய பொருட்களைப் பாதுகாக்க குளிர் பதன கிடங்குகள், ப்ஸ் மற்றும் ரயில் போன்ற பொது போக்கு வரத்து மேம்பாடு பொண்றவைகளுக்கு செலவிட்டால் மட்டுமே நாடு முன்னேறும்.
முதலில் தலைவர்களுக்கு நாடு முன்னேற்றம் என்றால் என்ன என்று தெரிய வேண்டும். மக்களின் தேவை டீ.வி பெட்டி அல்ல, அதற்கு செலவிடப்படுப் படும் ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொண்டு தமிழ் நாடு முழுவதும் அருமையான சாலை வசதிகள் செய்து விடலாம். இது ஒரு உதாரணம் மட்டுமே.
வீரவசனங்கள் பேசினால்தான் தமிழனாய் அடையாளம் தெரியும் !
//
வீர வசனங்களை தியோட்டர்கள் மட்டுமே கேட்கட்டும்.
நாம் நாட்டைப்பார்ப்போம்
//
எங்க கேக்குறாங்க
1967 ல் வந்த ஆட்சி மாற்றம் இன்று வரை மாற வில்லையே - இனி மாறுமா என்ன ?
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை------ இருப்பானாமே..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..
//இனிய தமிழ் நெஞ்சங்களே,
இனி
வீர வசனங்களை தியோட்டர்கள் மட்டுமே கேட்கட்டும்.
நாம் நாட்டைப்பார்ப்போம்///
இதுபோன்று நடந்தால் நன்றாக இருக்கும் ஆனால் நடக்குமா????
மாணவன் said...
//இனிய தமிழ் நெஞ்சங்களே,
இனி
வீர வசனங்களை தியோட்டர்கள் மட்டுமே கேட்கட்டும்.
நாம் நாட்டைப்பார்ப்போம்///
இதுபோன்று நடந்தால் நன்றாக இருக்கும் ஆனால் நடக்குமா????
ரிப்பீட்டு
தமிழா தமிழனாய் இரு. ஏமாந்தது போதும். எதையும் எதிர்த்து போராட தயராய் இரு..
social awarness post sir
நல்லது சொல்லுறிங்க உங்க தகவலை கேட்பார்களா?
உங்களுக்கு என் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "