புதன், 6 அக்டோபர், 2010

ரகு ராமன் கதை கேளுங்கள் -குரு

வாழ்க்கையில் நமக்கு பாடம் நடத்துபவர்கள்,நம்மைச்சுற்றியிருக்கும் நபர்களே.இது தான் உண்மை.இதை யாரும் மறுக்கமுடியாது .
இதில் அதிகம் நல்லவர்களால் சூழப்பட்டவர்களில் அதிகமானவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்.

நான் எப்படிப்பட்டவன் என்று என்னைக்கேட்டால் எனக்கு அது தெரியாது. ஏனெனில், அதை என்னை சுற்றியிருக்கும் நபர்களே தீர்மானித்து பேசிவருவதால் எனக்குள் பல கேள்விகளை நானே என்னுள் கேட்டுக்கொண்டு தான் வருகிறேன் இன்றுவரை.
இருந்தாலும் எனக்கு மனிதம் மட்டுமே முக்கியமாகப்படுவதால் நான் அனைவரையும் விருப்புவெறுப்பற்று சகமனிதர்களாகவே பார்க்கின்றேன், பழகுகின்றேன்.

எனக்கு ,
அறிவு என்றால் எப்படி நல்லறிவு மட்டுமே இருக்கமுடியுமோ
அது மாதிரி மனிதர்கள் என்றால் நல்லவர்கள் மட்டுமே .
அப்ப கெட்டவங்க இருக்காங்கலானு என்னிடம் கேள்வி கேட்டால். அனுபவத்தில் நீங்கள் அப்படி உணரவில்லையெனில் ஏன் கேள்வி ஞானத்தால் மட்டுமே பதில் அறிந்துகொள்ள விரும்பி ,இல்லாத ஒன்றை கேட்கின்றீர்கள்,அதனை உணர முற்படுகின்றீர்கள் என்பது தான் எனது பதிலாக இருக்கும் .
ஏனெனில் ,இப்படிப்பட்ட கேள்விகள் தான் மனிதனைமூடத்தனத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் இட்டுச்சென்று கடைசியில் சிந்தனை செய்யமுடியாத படி அது தான் சிந்தனை என்ற மாயையில் அவனை அமிழ்த்தி விடுகிறது .

வாழ்வில் அனைவருக்கும் தேடல் இருக்கும் .
அதற்குக்காரணம் வளர்ச்சி அவ்வளவே .
வளர்ச்சியை தவிர்த்து  தேடல் என்ற வார்த்தையை மட்டுமே இங்கு அனைவரும் யோசிக்கின்றார்கள் .அதை மட்டுமே தேடுகிறார்கள் .அது தான் சிக்கலே .
தேடலில் வளர்ச்சியைப் பார்க்கவேண்டுமே தவிர தேடலில் தேடலை தேடக்கூடாது.
தேடலில் தேடினால் கிடைப்பது தேடல் மட்டுமே .
தேடலில் வளர்ச்சியை தொட்டவன் உயர்கிறான் .
அது அடுத்த தேடலுக்கு அவனை அழைத்து செல்கிறது .
அப்படியில்லாத மற்றவர்கள் வேடிக்கைப்பதுமையாக தேடிக்கொண்டே இருப்பர் தேடலில் தேடலை தேடிக்கொண்டே.

தேடலில் கேள்வி என்பது தலையானது .
அத்தகைய கேள்விகள் வளர்ச்சியை நோக்கியதாக இருக்கவேண்டும். வெற்றுச்சிந்தனையாக இருக்கக்கூடாது .
உனது தேடல் சரியானதாக இருந்தால் உனது சிந்தனையும் வளரும். இல்லையெனில் நீ உனது சிந்தனையுடன் குப்பையாவாய் .

என்ன செய்தால் இப்படி குப்பையாக போகாமல் நம்மை வடிவமைக்க முடியும் ? என்ற கேள்வியுடன் நான் எனது தேடலுடன் உலன்றுகொண்டிருந்த பொழுது தான்,ஒரு இனிய நகர்வில் அவரைச் சந்தித்தேன் .
மிக அற்புதமான இந்த வாழ்க்கையில் தேடலின் அர்த்தத்தை உணருவேன் என்று நான் நினைத்துக்கூடப்பார்க்கவில்லை அவரை சந்திக்கும் தருணம் வரை.
அவரை சந்தித்த பின் தான் தேடலின் அர்த்தமே எனக்கு  விளங்கிற்று .

வாழ்க்கை என்றால் இது தான் ,
வாழ்க்கையின் அர்த்தம் இது தான் ,
தேடல் என்றால் இது தான்
என மிக அழகாக உணர்த்திய
அவர் தான் ....







தொடரும் ...












. Download As PDF

17 கருத்துகள் :

ஜோதிஜி சொன்னது…

தொடக்க வரிகள் மிக சிறப்பாக வந்துள்ளது. தொடர வேண்டும்...........

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

தேடலில் வளர்ச்சியை தொட்டவன் உயர்கிறான் .
அது அடுத்த தேடலுக்கு அவனை அழைத்து செல்கிறது .

-------------------

சரியே.


வாழ்க்கை என்றால் இது தான் ,
வாழ்க்கையின் அர்த்தம் இது தான் ,
தேடல் என்றால் இது தான்
என மிக அழகாக உணர்த்திய
அவர் தான் ....

ஆர்வத்தோடு காத்திருக்கோம்..

( காந்தியோ.?.. பெரியாரோ?.. )

Unknown சொன்னது…

////வாழ்க்கையில் நமக்கு பாடம் நடத்துபவர்கள்,நம்மைச்சுற்றியிருக்கும் நபர்களே.இது தான் உண்மை.இதை யாரும் மறுக்கமுடியாது .
இதில் அதிகம் நல்லவர்களால் சூழப்பட்டவர்களில் அதிகமானவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்.///இது உண்மை அருமையான வரிகள்.
///வாழ்க்கை என்றால் இது தான் ,
வாழ்க்கையின் அர்த்தம் இது தான் ,
தேடல் என்றால் இது தான்
என மிக அழகாக உணர்த்திய
அவர் தான் ...///
யார் அவர்?

Chitra சொன்னது…

வாழ்க்கையின் தேடல்களின் அர்த்தத்தை புரிந்து கொண்ட விதத்தை நீங்கள் எழுதி இருக்கும் விதம் அருமையாக இருக்கிறது. நல்ல எழுத்து நடையும் மிளிர்கிறது. பாராட்டுக்கள்!

nis சொன்னது…

நல்லா இருக்கு

பெயரில்லா சொன்னது…

இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

சௌந்தர் சொன்னது…

உனது தேடல் சரியானதாக இருந்தால் உனது சிந்தனையும் வளரும். இல்லையெனில் நீ உனது சிந்தனையுடன் குப்பையாவாய் .////

மிக சரியா சொன்னிங்க... நல்ல வரும் போது தொடரும் என்று போட்டு விட்டீர்களே, விரைவில் தொடருங்கள்

ஹேமா சொன்னது…

தேடல் பற்றிச் சொன்ன விஷயங்கள் யோசிக்க வைக்கிறது.உண்மையும்கூட.வாழ்வில் தேடுதல் இல்லாவிட்டால் வாழ்வு ரசனையற்றுக் கிடக்குமோ !

பவள சங்கரி சொன்னது…

தேடல் இல்லாவிட்டால் வாழ்க்கையில் ஏது சுவாரசியம்.........அப்படீன்னா தேடல் மட்டும் தான் வாழ்க்கையா..... இருக்கலாமோ? நல்லதோ, தீயதோ எதுவாக இருந்தாலும் அது தேடல்தானே? தொடருங்கள், சிந்திப்போம்.....

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நிச்சயமாக தேடல்தான் வளர்ச்சியின் முதல்படி. அழகாக சொல்லியிருக்கீங்க..

goma சொன்னது…

தேடுதலே வாழ்க்கையென நினைத்து ,தேடுதலிலேயே,வாழ்க்கையைத் தொலைத்து, மறுபடியும் வாழ்க்கையைத் தேடித் தேடி ,
தேடுதலே வாழ்க்கையென
வாழ்க்கையை, வாழ்கிறான்,
தேடுகிறான்.

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் சொன்னது…

ம் அருமை

Unknown சொன்னது…

தேடல் ஒன்றே மனிதனை மனிதம் பேச சொல்லும் ... தேடல் இருந்தவனே புத்தனானான்...

Jeyamaran சொன்னது…

Migavum arumai anna..............

*/தேடலில் தேடினால் கிடைப்பது தேடல் மட்டுமே ./*

Ithula ithuthan toppu.............

தாராபுரத்தான் சொன்னது…

தேடுங்கள்..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

அருமையான தொடக்கம் - தேடலில் வெற்றி பெற வேண்டும் - தேடியது கிடைக்க வேண்டும் - அதற்கு நட்பும், உறவும் - சுற்றி இருக்கும் மனிதர்களும் உதவுவார்கள். தேடலில் கேள்விகளும் மறு கேள்விகளும் - ஆக்க பூர்வமான சிந்தனைகளுடன் கூடிய விவாதங்களும் , இறுதியில் தெளிவான ஒரு சிந்தனையும் நிச்சயம் வரும்.

நல்ல சிந்தனையில் எழுதப்பட்ட இடுகை
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி

ஜோதிஜி @

பயணமும் எண்ணங்களும் @

நந்தா ஆண்டாள்மகன் @

Chitra @

nis (Ravana) @

சௌந்தர் @

ஹேமா @

நித்திலம்-சிப்பிக்குள் முத்து @

அமைதிச்சாரல் @

goma @

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் @

கே.ஆர்.பி.செந்தில் @

Jeyamaran @

தாராபுரத்தான் @

cheena (சீனா)

அவர்களே

மிக்க நன்றி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "