புதன், 28 ஆகஸ்ட், 2013

குற்றவாளிகள் தேர்தலில் நிற்பது சரியா ?

.



குற்றவாளிகள்  தேர்தலில் நிற்பது சரியா ? ஏன் நிற்கக்கூடாது ?.


இதில் கவனிக்கப்படவேண்டியது அரசியலமைப்பை சிதைக்கும் அளவிற்கு
அவர்களின் குற்றங்கள் இருக்கிறதா என்பதுவே .

அவர்களின் குற்றங்கள் அரசியலமைப்பை சிதைக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது.

மேலும் ,
இவர் குற்றவாளி .இவர் சமூக அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவர் ,
தேவையில்லாதவர் ,எனவே ,இவரை தேர்ந்தெடுக்கக்கூடாது என்று  மக்களிடையே தேர்தல் ஆணையம் தான் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் .

அது அவர்களின் கடமை.

அதைத்தவிர்த்து

குற்றப்பிண்ணனியை காரணம் காட்டி மக்களுக்கு செய்யவேண்டிய கடமையினின்று தேர்தல் ஆணையம்
தப்பித்துக்கொள்ள பார்க்கிறது.

இறுதி வேட்பாளர் பட்டியல்  அறிவிக்கப்பட்ட உடன் யார்,யாருக்கு ஓட்டுப்போடக்கூடாது என்று பத்திரிக்கைகள் ,தொலைகாட்சிகள் மற்றும் துண்டுப்பிரசுரம் மூலம்  குற்றப்பிண்ணனி உடையவர் தேர்தலில் வேட்பாளர்களாக கலம் இறங்கிய உடனே விழிப்புணர்வை மக்களிடையே போதிக்கவேண்டும் ,கூற வேண்டும். இது அவர்களின் கடமை.

இவர் இத்தகைய குற்றப்பிண்ணனி உடையவர் என்பதனை
வாக்குச்சீட்டிலும் ,வாக்குச்சாவடியிலும் தெரியும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும் .மேலும் ஏன் ஓட்டுப்போடக்கூடாது என்றும் தெளிவாகவே தெரிவித்தால் எந்தக்கட்சியும் குற்றப்பிண்ணனியுள்ளவர்களை
தேர்தலில் நிறுத்தாது ,தவிர்க்கும் .



குற்றப்பிண்ணனியுள்ளவர்களை  தேர்ந்தெடுப்பதும் தவறு .
குற்றப்பிண்ணனியுள்ளவர்களை தேர்ந்தெடுக்க வைப்பதும் தவறு .






.
Download As PDF

9 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - சரியான சிந்தனை - பதிவு அருமை - தேர்தல் ஆணையம் தான் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். குற்றப் பிண்ணணி உடையவர்களை வேட்பாளர்களாக ஏற்கக் கூடாது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிந்தனை அருமை....

ananthako சொன்னது…

தலை தப்புமா? ௧௩௫ குற்றவாளிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள். ஜனநாயகம்? பணநாயகம்?கூலிப்படை வளர்கிறது. எத்தனை கொலைகள்.

சிந்தனை அருமை!உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனம் நொந்து விடும் அறிக்கைகள்.

மக்களிடம் தேவை விழிப்புணர்வு. ananthako.blogspot

G.M Balasubramaniam சொன்னது…


குற்றவாளிகள் என்பது உறுதியாகி விட்டால் அவர்கள் தேர்தலில் நிற்பதையே தடை செய்ய வேண்டும்.மற்றபடி குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப் படுபவர்கள் , ருசுவாகாதவரை, தேர்தலில் நிற்கத் தடையேதும் இருக்கக் கூடாது. குற்றப் பின்னணி உடையவர்களை மக்கள்தான் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். . நம் நாட்டில் குற்றவாளிகள் என்று ருசு ஆவதற்குள் அவர்கள் இரண்டு மூன்று தேர்தல்களில் நின்று பலனை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இந்த தைரியம் நமது தேர்தல் ஆணையத்திற்கு உண்டா என்பது சிந்திக்க வேண்டிய விசயம்! சிறப்பான பதிவு! நன்றி!

Unknown சொன்னது…

ஊழால் தண்டனை அடைந்த அரசியல்வாதிகளை காட்டுங்கள் பிறகு பார்க்கலாம் !

மகேந்திரன் சொன்னது…

வழிமொழிகிறேன் தங்களின் சிந்தனையை.....

ADMIN சொன்னது…

***குற்றப்பிண்ணனியுள்ளவர்களை தேர்ந்தெடுப்பதும் தவறு .
குற்றப்பிண்ணனியுள்ளவர்களை தேர்ந்தெடுக்க வைப்பதும் தவறு .
****

உண்மைதான்....

குற்றங்கள் பெருகாமல் தடுக்க இந்த முறை உதவும்..

Unknown சொன்னது…

தேர்தலில் முன்னணி வகிப்போர் பெரும்பாலும் குற்றப்பின்னணி உள்ளோரே !
நல்லோரை காண்பதரிது தேர்தல் களத்தில்..இந்த நிலை என்று மாறுமோ ?

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "