ஞாயிறு, 22 டிசம்பர், 2013

''ராம ராஜ்யம் '' நல்லதா ,கெட்டதா ? இராமன் எப்படிப்பட்டவன் ?

 

இராமரின் ''ராம ராஜ்யம் ''தான் காந்தியின் விருப்பம் .
அத்தகைய இராமரின் இராமாயணங்கள்  அவனின் பட்டாபிசேகம் வரையிலானவைகள் பற்றி மட்டுமே மிக அதிகம் பேசுகின்றன.பேசப்படவும் செய்கின்றன.

ஆனால் ,''ராம ராஜ்யம் '' இராமன் இராமர் ஆனதிலிருந்து ஆரம்பிக்கிறது  .


இராமரின்  ''ராம ராஜ்யம் '' பற்றி  விசயங்கள் இங்கு அனேகருக்கு போய் சேரவில்லை.அதனால் தான் ''ராம ராஜ்யம் '' பற்றி பேசுவோர் மீது மத ரீதியிலான சாயம்  பூசப்பட்டு விடுகிறது.அதற்கு காந்தியும் விலக்கல்ல.
காந்திக்கே அப்படினா ?.நம்மை போன்றவர்களுக்கு...



இராமன் அடைந்த இடத்திற்கு  இராமர் கொண்டு செல்லப்பட வில்லை. 
காரணம்,மக்கள்  இலக்கியத்தில் மிக அதீத நாட்டம் கொண்டவர்களாக இருந்ததாலும்.
அரசியலில் பங்கெடுக்காமல் '' இராமன் ஆண்டால் என்ன ,இராவணன் ஆண்டால் என்ன ''என்று முதுமொழி ஏற்படும் அளவிற்கு தாங்கள் அதனின்று ஒதுங்கி வந்ததாலுமே ஆகும்.அது இன்றுவரை தொடர்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற இராமர் எவ்வாறு உதவினார்  என்று எண்ணிப்பார்த்தோம் என்றால் அது மிகவும் விசித்திரமான படிப்பினையை நமக்கு தருகிறது.இது பற்றி இங்கு யாரும்  பேசுவதில்லை.தங்களின் கதைகளையே கதைக்கின்றனர்,சுய விலாசத்திற்காக.

''ராம ராஜ்ய'' த்தில் தான் உண்மையான இந்திய ஆன்மா உள்ளது.இது மறுக்க முடியாத  உண்மை.அதனால் தான் காந்தியாரும்  ''ராம ராஜ்யம் '' அமைய வேண்டும் ,அது தான் நமக்கு நல்லது என்ற நிலைப்பாட்டுடன் இருந்தார்.

மகாபாரதம் போன்று பல புராண கதைகளும் இதிகாசங்களும் இருக்க  கம்பன் என் இராம காதையை தேர்ந்தெடுத்தான் என்ற கேள்வி என்னுள் எழுந்தபோது , கிடைத்த பதில் தான் இராமன் எப்படிப்பட்டவன் ? என்பதற்கான பதில்.சுருக்கம செல்லனும்னா இராமன் மிகநல்லவன் அதைவிட இராமர் மிகவும் உயர்ந்தவர்.அதுபோலவே  ''ராம ராஜ்யம் '' .


தொடரும்...

படங்கள் உதவி ; நன்றி கூகுள் .
Download As PDF

புதன், 18 டிசம்பர், 2013

ஆம் ஆத்மியின் ஓட்டுப்போட்ட சாமானிய மக்களின் மீது பலியை போடும் சாதுரிய டெல்லி அரசியல் .



ஆரம்பத்திலிருந்து டெல்லி வட்டார அரசியலை கவனிந்து வந்தால் அதன் பின் புற தப்பிக்கும் ஒரு சாமர்த்தியக்கார அரசியல் நன்கு புரியும்.

மக்களின் உணர்வினை காங்கிரஸ் கண்டுகொள்ளாமல் தனக்கு ஓட்டுப்போட்ட டெல்லி மக்களை ஏமாற்றிவிட்டது.

தாங்கள் யாருக்கு எதிராக வாக்களித்தார்களோ அவர்களை தாங்கள் ஆதரித்த கட்சி ஆதரிப்பதை  எந்த சாமானியனும் மன்னிப்பதில்லை.

அடுத்து  வேடிக்கை என்னவென்றால் ஆம்ஆத்மி கட்சி மக்களிடம் கருத்து கேட்கிறதாம்.

தேர்தலின் போது இதைத்தானே கேட்டீர்கள்.ஓட்டுனா என்னங்க ?.



இப்ப ஆம்ஆத்மி கட்சி மக்களிடம் கருத்து கேட்கும் விசயத்துக்கு வருவோம்.


இதில்  ஆம்ஆத்மி அரசு அமைக்கலாம் என மக்கள் கூறிவிட்டால் , மக்களுக்குத்தான் பிரச்சனை.
எப்படி எனில் ,நீங்க தானே சொன்னீங்க ஆட்சி அமைக்க அதனால அமைச்சோம் ,இப்ப குறை செல்றிங்க என தங்களின் மீதான தவறுகளை ஓட்டளித்த மக்களின் மீது சுமத்தி  தப்பித்துக் கொள்ளும் .

அடுத்து சரி,வேண்டாம் என மக்கள் கூறிவிட்டாலும் ,மக்களுக்குத்தான் பிரச்சனை.

எப்படி எனில் ,நீங்க தானே சொன்னீங்க ஆட்சி அமைக்கவேண்டாமுனு ,அதனால ஆட்சி அமைக்கல,மறுதேர்தலுக்கும் நாங்கள் காரணம் இல்லை ஓட்டளித்த மக்கள் நீங்க தான்.அதனால இந்த தடவை எங்களுக்கே வாக்களித்து எங்களை பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுங்கள்.மக்களின் வரிப்பணத்தை வேஸ்ட் செய்யா கூடாது என இதற்கும் காரணம் ஓட்டளித்த மக்களே என தனக்கு ஓட்டளித்த மக்களின் தலையில் பலியை சுமத்தி ஆம்ஆத்மி  தப்பித்துக் கொள்ளும் .

எப்படி பார்த்தாலும் ஆம் ஆத்மி ஓட்டுப்போட்ட சாமானிய மக்களின் மீது பலியை போடும்  சாதுரிய  டெல்லி அரசியலை நடத்துவதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.இது எந்த அளவிற்கு சரி என்பது போகப்போகத் தான் தெரியும்.


இப்ப டெல்லி மக்கள் என்னதான் செய்ய என்ற நிலையில் உள்ளனர்.

என்ன செய்ய என என்னைக்கேட்டால்,
நான் ஆட்டத்துக்க வல்லப்பா.எனக்கு நிறைய வேளை இருக்கு.

டெல்லியில் பா.ஜ ஆட்சிக்கு வரக்கூடது என்பதற்காகத்தான்  இவர்கள் இத்தனை நாடகம்  ஆடுகின்றனர் என டெல்லி மக்கள் இப்ப தெளிவாக புரிந்து உள்ளனர்.அதன் பலன் பின்புதான் தெரியும்.



மக்கள் அறிவில் சாமானியர்கள் அல்ல .







படம் ; நன்றி கூகுள்.
Download As PDF