நந்தவனத்தில் ஓர் ஆண்டி ...தமிழன் போண்டி ....
தமிழன் போண்டி ....நீ ஆடு பாண்டி ...
ஜிண்ஜக்கா...ஜிண்ஜக்கா ..ஜிக்கா
ஜிங்...
ஜிண்ஜக்கா...ஜிண்ஜக்கா ..ஜிண்ஜாக்கா....
ஜிக்கா
ஜிண்ஜக்கா...ஜிண்ஜக்கா ..ஜிக்கா
நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி .....
நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி ....
ம்.....
கொண்டுவந் தானொரு தோண்டி...
அதை ...
மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...
ம்... ம்...ம் ... ம்: நொரண்டு
நண்டு : என்ன நொரண்டு ஒரே பாட்டா இருக்கு.
நொரண்டு : ஜிண்ஜக்கா...ஜிண்ஜக்கா ..ஜிண்ஜா.
ஜிங்...
ஜிண்ஜக்கா...ஜிண்ஜக்கா ..ஜிண்ஜாக்கா....ஜிண்ஜக்கா
நண்டு : என்னப்பா ? .என்னாச்சு ?.
நொரண்டு : அட இந்தப்பாட்டு தெரியாதா உனக்கு.
இது காடு வழியோ,கடுவெளியோ ,என்னமோ ஒரு சித்தர் பாடல் .
எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நண்டு : ஓ.
நொரண்டு : இதுக்கு அர்த்தம் தெரியுமா ?.
நண்டு : செல்லுப்பா ,என்ன ?.
நொரண்டு : நந்தவனத்தில இருந்த ஆண்டி ஒருத்தன் ,பிச்சை எடுக்க , குயவனை நச்சு நச்சுனு நச்சி , பிச்சை பாத்திரத்த ( தோண்டி ) ஒன்னு , வாங்கிவந்தத்தனாம் .புது தோண்டி கிடைச்ச சந்தோசத்தில ,கூத்தாடி கூத்தாடி,போட்டு உடைச்சுட்டானாம்.அதிகம் ஆடுன அம்புட்டுத்தான் , இதன் தத்துவம் .
நண்டு : நீ ஜிண்ஜக்கா இப்ப போட்ட மாதிரி.
நொரண்டு : ஏய் என்னப்பா ,எனக்கே வா ? .
நண்டு : இது சித்து .
நொரண்டு : அப்படினா ?.
நண்டு : சித்து ,நேரடியாக தரும் பொருளை விட மறைமுகமாக தரும் பொருள் மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.அது தான் சரியானது.
நொரண்டு :அப்படினா சித்து சுத்துனு சொல்ர.
நண்டு : ஆம். அப்படித்தான்.
நொரண்டு : சித்து தெரியுது ,சுத்து என்ன ?.
நண்டு : பல உண்டு.
நொரண்டு : என்ன பலதா.
நண்டு : ஆமாம்.
நொரண்டு :சரி சிலத சொல்லு.
நண்டு : முதல ,எனக்கு தெரிஞ்சத சொல்ரேன்.
நொரண்டு :ம்...
நண்டு : நந்தவனத்தில் ஓர் ஆண்டி- நந்தவனத்தில் இருக்கும் ஆண்டியை ஏன் பாடனுங்கரது என் முதல் கேள்வி ?.
நொரண்டு :சரிதான் .ஆமாம்,ஏன் சுடுகாடு,கோயில் இப்படியான இடத்தில இருக்கிற ஆண்டிகளை பாடாம, ஏன் நந்தவனத்தில் உள்ள ஆண்டிய வைத்து பாடினார் ?.
நண்டு :பாடல் படி ,குயவனை வேண்டினால் ,தோண்டி கிடைக்கும் ,ஒரு தோண்டி போனால் என்ன ?.அடுத்து வேண்டவேண்டியது தானே அடுத்த நாலாறு மாதம்?.
நொரண்டு :ம்.
நண்டு : தோண்டி கிடைத்ததற்கு கூத்தாடியதும் ,உடைந்ததற்கு வருத்தப்பட்டதும் ஆண்டிகளின் இயல்பில்லையே ?.
நொரண்டு : ஆமாம்,ஆண்டிகளில் இயல்பில்லை தான் .
நண்டு : ஆண்டிகள் மகிழ்ச்சி,துக்கம் எதுவும் இல்லாதவர்கள்.
நொரண்டு :ஆமா இல்ல ! ?.
நண்டு : ''பிச்சையென் றொன்றுங்கே ளாதே '' என பாடி தோண்டி மேல் பற்று வைக்க காரணம்.
நொரண்டு :ஓ
நண்டு : இது தமிழின் நிலையையும்,மக்களின் நடவடிக்கையையும் நகைப்பதோடு ,தமிழ் அரசுகளை ஏளனம் செய்தும் ,தமிழ் அரசுகள் தமிழுக்கு செய்யும் துரோகத்தை ,தமிழக மக்களின் கூத்தாடிகளின் மீதான பேதை நிலையை சுட்டிக்காட்டியும் செல்வதை உணர்ந்தேன்.
நொரண்டு :எப்படி சொல்ர.
நண்டு : ஒரு சின்ன சோதனை.
நொரண்டு : சொல்லு செஞ்சரலாம்.
நண்டு : எந்த காலத்துக்கு இந்த பாடலை பொருத்திப்பார்க்களாம்.
நொரண்டு :எப்படி பொருந்தும்.
நண்டு : ம்.ஒரு சிறு விளக்கம் மட்டும் தரேன்.நீ பொருத்தி பார்.அப்புறம் தெரியும் ,சித்தர்களின் சித்துக்கள்.
நொரண்டு :சரி சொல்லு ...முயற்...சிக்..கிறேன்.
நண்டு :நன்று.
இப்பாடலில்,
நந்தவனம் என்பது அனைத்து விதத்திலும் செழுமையாக இருந்த தமிழ் தேசத்தை குறிக்கிறது.
நொரண்டு : சரி .
நண்டு : ஆண்டி என்பவர் தமிழ் ஆதையை குறிக்கிறது .
நொரண்டு : சரி .
நண்டு: குயவன் என்பவர் இங்கு வாழ்ந்த திருவள்ளுவர், தொல்காப்பியர்,சித்தர்கள் போன்ற தமிழ் மூதாதைகளை குறிக்கிறது.
நொரண்டு : சரி .
நண்டு : தோண்டி என்பது இங்கு அள்ள அள்ள குறையாது ,புதுப்புது கருத்துக்களை உற்பத்தி செய்து வரும் மெருகேற்றப்பட்ட இலக்கியமும் , அதன்பால் வளமான இலக்கணத்தையும் கொண்ட தமிழ் மொழியை குறிக்கிறது .
நொரண்டு : சரியாக சொல்லப்போனால்.
நண்டு : வழக்கு மொழியினின்று மேன்மையாக்கப்பட்ட தமிழ் மொழியை குறிக்கிறது .
நொரண்டு : சரி .
நண்டு : மெத்த கூத்தாடி மற்றும் கூத்தாடி என்பது ஆண்ட மற்றும் ஆளத்தெரியாத கூத்தாடி நபர்களையும் மற்றும் கூத்தாடி நபர்களையும் , அவர்கள் மக்களிடம் எப்படி நடிப்பது என்பதனை சரியாக தெரிந்து நடிப்பதையும்,கூத்தாடிகளிடம் நாட்டை ஒப்படைத்து தமிழர்கள் வேடிக்கை பார்ப்பதையும்.கூத்தாடிகள் அவர்களின் கூத்தை மட்டுமே ஆடு ஆடு என ஆடி .... ம் ...என்ன சொல்ல ....சமீப காலத்திற்கு பொருத்திப்பார்.
நொரண்டு : சரி .
நண்டு :சரி சொல்லிக்கிட்டு இருக்காத .பொருத்திப்பார்.
நொரண்டு :நீயே சொல்லப்ப,எனக்கு புரியல.
நண்டு :செழுமைப்படுத்தி நமக்கு நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற நமது தமிழ் மொழியை தமிழகத்தை ஆண்ட,ஆளும் கூத்தாடி அரசுகள் மேலும் செழுமைப்படுத்தாமல் தமிழுக்கு துரோகம் செய்து தமிழையும், தமிழர்களையும் நடுக்காட்டில் விட்டுவிட்டனர் .
நொரண்டு ஆமாம் சரி தான் சொன்ன . நீ எப்படி இந்த முடிவுக்கு வந்த?.
நண்டு : திருவள்ளுவர்,தொல்காப்பியர்,சித்தர்கள் இவர்கள் போன்றவர்கள் எல்லாம் அரசர்கள் அல்ல.
நொரண்டு : அரசர்களால் போற்றப்பட்டவர்களும் அல்ல.
நண்டு :அது ஒரு பார்வை.ஆனால்,தூரத்து பார்வை.
நொரண்டு :ம்...
நண்டு :தனிப்பட்ட தமிழர்களால் தான் தமிழ் என்றும் வளர்ந்து வந்துள்ளது என்பது வரலாறு.
நொரண்டு : இப்ப கூடவா.
நண்டு : எப்பவும் ,
இப்ப கூட சமீப காலத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பத்திரிக்கைகள் , சிறு பத்திரிக்கைகள் செய்த சேவைகள் சில மிகவும் சிறப்பாக இருந்து வந்தது. இவைகள் தனிநபரால் இயக்கப்படுபவைகள்.
ஆனால் ,அப்படிப்பட்ட ஒரு சேவையைக்கூட அரசு செய்யவில்லைனு தான் சொல்லனும்.
நொரண்டு :ம்.
நண்டு :துரோகங்களை சொல்லனும்னா ,சொல்லிக்கிட்டே போகலாம்.
நொரண்டு : ஓ
நண்டு : ஆனால்,தமிழன் ஒன்றே ,ஒன்றை புரிந்துகொண்டு நடக்கவேண்டும் .
நொரண்டு : எதப்பா.
நண்டு : அதையும் சித்தரே சொல்ரார்.
நொரண்டு :என்னானு ?
நண்டு :
"நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு"
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு"
நொரண்டு : ஓ...சரி தான் .ஆனா 'பரமனை நத்தியே' னா ?.
நண்டு : இதுவும் சித்தின் சுத்து தான் .
சித்தர் பாடலில் மறைத்துள்ள இரகசியம்
இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.
Tweet |
|
2 கருத்துகள் :
பொருத்தம் செம...!
சிறப்பான கருத்துக்கள்! நன்றி!
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "