சனி, 17 நவம்பர், 2018

கடவுளின் சாம்ராஜ்யமும் அபாகஸும் .





சில்சிலுக்கும் அந்த
மலைப்பாதையை தொடுவதற்கும் கன கம்பீரமான ஜொலி ஜொலிக்கும் குதிரை வீரர்கள் வருவதற்கும்
மிகச் சரியாக இருந்தது .

சந்திக்கும் இடத்தின் ரம்மியம்  சந்திப்பின் சந்திக்கும் காரணத்தை மிருதுவாக்கியது.
இல்லாது போனால் இன்றைய இந்தியா மேலும் பல இருண்ட காலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும்.

இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த நிமிடமே இந்தியா கருத்தியல் ரீதியாகவும் ,வரலாற்று ரீதியாகவும் பல உன்னத பங்களிப்புடனும்,பண்பாட்டு ரீதியில்,தனது பழக்க வழக்கங்களில் பல மாற்றங்களுடன் தனது பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டது என்பதுவ வரலாற்று உண்மை

வரலாற்றில் இப்படியான நிகழ்வுகள் அரிதிலும்,அரிதாகவே நிகழ்கிறது.
ஆனால்,அவைகளினால் மானுட சமுதாயம் பல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் அடைகிறது.

இப்படித்தான் என்று இருந்தது ,
இப்படியல்ல என்பதனின்று ,
ஓ...இப்படித்தானா என வியப்புடன் பயணிக்க வைக்கும் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கி மாற்றியமைத்த நிகழ்வுகளுக்கு ஆரம்பம் சில அசாதாரண சூழல்கள்.

அவைகள்  சில கணங்கள் தாமதித்திருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கும் என்ற தவிப்பு நிலையில் ஏற்படும் அற்புதமான சந்திப்புகள் .

அவைகளில் சந்தித்த நபர்களையே,பின்னெரு நாளில் அதனை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிக உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்று உலழ வைத்து விடும்.

ஆனால்,எல்லா சந்திப்புக்களும் இத்தகைய சாத்தியக்கூறுகள் உண்டா என்றால்.உண்டு என்பதுவே உண்மை.
ஆனால்,அதன் பின்னணியில் சுயநலங்கள் இருக்கும் பட்சத்தில் அனைத்தும் சூனியமாய் போய் சூழலே வருமையாய் விடும் .

சந்திப்புகள் தகுதியான சூழலில் ஏற்படவேண்டும்.சூழல் பொது நலத்தினை முன்னிருத்தியதாக இருக்கவேண்டும்.
சூழலை உருவாக்க சந்திப்புகள் நிகழ்ந்தால்,சந்திப்பை கேலிக்குறியதாக்கும் சூழல் ஏற்படும் என்பது மற்றொரு உண்மை.

மாப்பெரிய  துணைக்கண்டத்தில் சூழலில் ஏற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்களில் மிகவும் முதன்மையானதே மேற்படியான சந்திப்பு.

இந்த சந்திப்பிற்குப்பிறகு தான் இன்றைய இந்தியா தனது வரலாற்றை பதிக்க புதுப்பிக்க ஆரம்பித்தது .

ஆம் ,அதற்கு முன் இந்திய துணைக்கண்டம் தனது அனைத்தையும் கற்பனா சக்தியில் சேகாரம் செய்து கடத்திக்கொண்டு வந்தது, கடுமையான இழப்புகளுடன் .
இழப்புகளினுடே  முதன்மை கொள்கை மாறாமல் பாதுகாக்கப்பட்டவைகளை அறிந்தால் அவைகள் அதி ஏராளம், அவைைகள் சொல்பவைகள் அதி அற்புதம்.

அன்றைய சூழலில் அதனைப்பற்றிய கருத்து சற்று குறைபாடுடைய அறிவுடையதாக இருந்த காரணத்தினால் பல மோதல்கள் வெடித்து,அவைகள் மனிதர்களை பலவாறாக பிரித்து,உண்மையை அறியமுடியாத உயரத்திற்கு தற்சார்பு சுயநல அகங்கார மானுடமாக எதையும் பிரித்துப்பார்க்கும் பிரிவு பட்ட பிளவுபட்டவனாக,நடமாடி வருவதோடு காட்டுமிராண்டியை விட கேவலமான நடத்தையுடையவனாகவும்,கேவலமான செயல்களில் ஈடுபடுபவனாகவும் பார்க்கப்பட்டு வரப்படுகிறது.

எது எப்படியிருப்பினும் இந்தியா மற்றவரின்  மாற்று
எண்ணத்திற்கு மாற்றான ஒரு பதிலா, உலகம் முழுவதும் தனது வேர்களை மிக ஆழமாக பல்வேறு காலகட்டத்தில் பரப்ப வழிவகுத்து  சென்றுள்ளது மேற்படி சந்திப்பு.
இன்று பல நாடுகள் தங்களின் கருத்தென்று மார்தட்டிக்கொண்டிருக்கின்ற அனைத்திற்கும் மிகவும் அச்சாரமாக இருக்க  அனுபவமாகவும்,வாழ்வாகவும்  காரணமாக இருந்தது இந்த சந்திப்பு என்றால் மிகையன்று.

ஆனால்,இந்த சந்திப்பில்  சந்தித்த இருவரும் இதனை அறிந்துகொள்ளும் வன்மை உடையவர்கள் தான் என்றாலும்,
அவர்களை வேறு  வேற்று முகமாக அறிமுகம் செய்து வைத்தது காலம். இதற்கு பெயர் தான் வரலாறு.

நாம் இவர்களின் சந்திப்பை இன்று நமது அறிவின் வீச்சில் அறிவதன் மூலமே இவர்களின் சந்திப்பில் மறைக்கப்பட்ட முகம் மலரத்தொடங்கும் . 

இவ்வாறு  நாம் நமது கலாச்சார,பண்பாட்டு,தொண்மை விழுமியங்களை அறியப்படாத வரை , நாம் உண்மையில் அனைத்தையும் நமது என்று கூறிக்கொள்ளும் அருகதையற்றவர்களாகின்றோம்.

உண்மையில் இவர்களின் சந்திப்பும்,அதனால் ஏற்பட்ட இந்திய வரலாற்று மாற்றங்களும் மிகவும் ஆச்சரியப்படக்கூடியதே .

குதிரையில் வந்த இருவரில் ஒருவர் அபாகஸ் ,அவர் சந்தித்த பெருந்தகை ....       







தொடரும் ....





....

Download As PDF

வெள்ளி, 16 நவம்பர், 2018

பொது வெளியின் இன்றைய நிலை



ஒவ்வொருவரும்
தனது கனவு வெளியை 
திறந்து வைத்து  ...

அவரவர் 
கனவு வெறியை  மொய்க்க
மற்றவர்களை அழைக்கின்றனர்.

அதனில்
தனது கனவு வெளியை மொய்ப்பவர்களை
விட்டில் பூச்சிகளாக்கி 
மாய்க்க பெரு முயற்சி செய்கின்றனர் 
களவு வெறியுடன் .

அதில்
பூச்சிகளானவர்களை  மதிக்கின்றனர்,
மற்றவரை கொந்தளிக்கின்றனர்.

அந்த
கனவு வெளியில்
களவு வெறி மட்டுமே  மிஞ்ச
கடந்து செல்கின்றனர் 
கல கலப்புடன்
பல சலிப்புடன் .


இணையவாசிகளும் சரி
இலக்கியவாதிகளும் சரி
இயக்கவாதிகளும் சரி
இதைத்தான் செய்கிறார்கள்.
இதுதான்  இன்றைய  பொது நிலை .







.


Download As PDF