புதன், 7 டிசம்பர், 2016

எங்கள் தலைவனை கண்டுபிடித்து தாருங்கள் கண்டுபிடித்து தாருங்கள்






கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
அவர்கள் அரசனை,
எங்கள் தலைவனை
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்
காடுகளும், மலைகளும்
எங்கள் இருப்பிடமாக
வனாந்திரம்
எங்கள் வசத்தில் இருந்தபோது
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்.
கடுமையான போட்டிக்கு இடையே
அவரவர் உணவை அவரவர் தேடி
சூரிய ஒளிக்குள் சுழன்று கொண்டு
உலகம் முழுவதும் ஓரினமாக
தேடும் உணவை பகிர்ந்து கொண்டு
சேகாரம் செய்யா சேர்ந்தினமாக
உணவுத் தேடலே வாழ்வுரிமையாக
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்
அவர்களுடைய அரசன்
எங்களின் தலைவனாகும் வரை.
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
காட்டு வழியே ஓடி கடல் கடந்து
மிளகு விளையும் தேசம் நோக்கி சென்ற
அவர்களின் அரசனை
எங்களுடைய தலைவனை
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள் ....







மேலும் படிக்க இங்கே செல்க ...


Download As PDF