திங்கள், 12 செப்டம்பர், 2011

உலகிற்கு உடனடி தேவை





நொரண்டு :    வணக்கம் நண்டு .

நண்டு :  வாங்க நொரண்டு .

நொரண்டு :   தமிழ்மணத்தில இந்த வார நட்சத்திரம் .

நண்டு :ஆமாம் .2வது தடவை.
அதற்கு நான் தமிழ்மண நிர்வாகத்திற்கு 
என் முதற்கண் நன்றிகளையும்,
வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நொரண்டு :    நல்லது ...நல்லது ... நானும் ...

நண்டு :... ஜனநாயக நாடுகளில் ஏற்பட்டு்ள்ள பொருளாதாரச் சிக்கல்களுக்கு காரணம் என்ன ?

நொரண்டு :    என்னைக்கேட்டால் ...தற்போதுள்ள பொருளாதாரக் கொள்கைகளும்,கோட்பாடுகளும் காலாவதியாகிவிட்டது என்பதுவே . முற்றிலும் செயலிழந்துவிட்ட பொருளாதாரக் கொள்கைகளையும், கோட்பாடடு்களையும் வைத்துக்கொண்டு ஒப்பேத்தப்பார்க்கின்றோம். இன்றைய காலகட்டத்திற்கு உகந்த ஒரு சரியான பொருளாதாரக் கொள்கையும், கோட்பாடும் இல்லை என்பதுவே உண்மை. ஏன் ..அது பற்றிய சிறு விழிப்புணர்வு துளி கூட நம்மிடம் இல்லாமல் இருப்பதுதான் மிகவும் கவலையாக உள்ளது . அதனால் தான் உலகில் பல நாடுகள் பல்வேறு
இன்னல்களையும் ,சிக்கல்களையும் ,மிகப்பெரிய பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றது .இது வருந்தத்தக்க ஒன்றாகும் . இன்றுள்ள பொருளாதாரக் கொள்கைகள், கோட்பாடுகள் அனைத்தையும் குப்பையில் போட்டு விட்டு புதிய பொருளாதாரக்கோட்பாட்டை ஏற்படுத்தி அதன் வழியில் புதிய
பொருளாதாரக்கொள்கைகள் வகுத்து அதன்படி செயல்படலே உலகிற்கு நன்மை பயக்கும் .

நண்டு : அப்படியெனில் ...

நொரண்டு :    தோல்வியடைந்த எதுவும் புதிய பயணத்திற்கு அடித்தளமிட முடியாது . பாதைபோல் தெரியும் , பயணிக்க முடியாது .இங்கு தோல்வியடைந்ததை பழுதடைந்ததாக நினைத்து அதையே ஏதேதோ செய்து முன் செல்வதுபோல் செல்வதால் மீண்டும் , மீண்டும் தோல்வியடைந்தே
வீழ்கிறேம் .உலக பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்றால் , ஏதோ இருப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தி சரிசெய்ய நினைப்பது தவறு . அபத்தமானது . மீண்டும் , மீண்டும் தோல்வியே பரிசாக கிடைக்கும் . உண்மையில் உலக பொருளாதார ஏற்றத்திற்கு புதிய பொருளாதாரக் கொள்கைகளும்,கோட்பாடுமே தற்பொழுது உடனடியான தேவையாக உள்ளது .

நண்டு : .... புதிய பொருளாதாரக்கோட்பாட்டையும் ,அதன் வழி ஏற்படும்  புதிய பொருளாதாரக் கொள்கையையும் ,அதனால் உலகில் மனிதகுலத்திற்கு ஏற்படும் உயர்வையும் ....புதிய பொருளாதார உலகையும் .. நினைத்து ... ஆமா நீ இது பத்தி ஏற்கனவே எழுதியிருக்க தானே

நொரண்டு :  ஆமாம் 2009 ல ,கிட்டத்தட்ட 3 வருசம் ஆகிப்போச்சு, அப்பவே ஆரம்பமாகிவிட்டது வீழ்ச்சி .

நண்டு :  ஏன் இது பத்தி நீ தொடர்ந்து எழுதவில்லை ?


நொரண்டு :  வீழ்ச்சியின் உச்சத்தைப்பார்க்கவும் ,மற்றும் அதனால் ஏற்படும்  எழுச்சிக்காகவும்  காத்திருந்தேன்.ஆனால்,அதற்கான சந்தர்ப்பம் இன்னும் வரவில்லை.


நண்டு :ஓ ..அப்பவே மாற்றம் வந்திருந்தா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்.

நொரண்டு :    ஆமாம் ... யாரும் இப்பவும் இது பற்றி யோசிப்பது கூட கிடையாது

நண்டு :புதிய பொருளாதார கொள்கையை பத்தி சொல்லு.

நொரண்டு :   முதலில் மக்களுக்கு விழிப்புணர்வு இது பத்தி வரனும்.

நண்டு :என்ன விழிப்புணர்வு.

நொரண்டு :   தற்போதுள்ள சொத்தை பொருளாதாரம் பற்றியும்,அதன் காலாவதியாகிவிட்ட தன்மை பற்றியும்.அதனை தூக்கியெறியவேண்டிய அவசியம் பற்றியும்.


நண்டு :ஏன் ?

நொரண்டு :  அப்பத்தான் புதியதை ஏற்றுக்கொள்ளவும் ,அதன்படி நடக்கவும்,   அதன் பயனை அனுபவிக்கவும் ,அதன் உயரத்தை அடையவும் முடியும்.

நண்டு :  இது சாத்தியமா ?
நொரண்டு :   சாத்தியமா ,இல்லையா என்பதல்ல கேள்வி. இங்கு இருக்கமுடியுமா ,முடியாதா என்ற நிலை வரும்பொழுது எல்லாம் தலைகீழாக மாறிவிடும் .அவ்வளவே .

நண்டு :  சரி என்ன சொல்ல வருகின்றாய் ?

நொரண்டு :   உலகிற்கு உடனடி தேவை -புதிய பொருளாதாரக் கொள்கைகளும், கோட்பாடும் என்பதுவே எனது கருத்து ,இது எனது கருத்து மட்டுமல்ல , உண்மையும் கூட .



 
தொடரும் ..

நண்டு : என்னப்பா தொடரும்னூ போட்டுட்ட 


நொரண்டு :   இது அவ்வளவு உடனே புரியர விசயம் இல்லை  அதான் .



நண்டு : ஓ...சரி தான் ...ஆனா நீ  எப்ப இதப்பத்தி சொல்லுவ ?


நொரண்டு :  சொல்ரேன் , சொல்ரேன் ,எல்லோருக்கும் எளிமையா புரியர மாதிரி  , அதுக்கு முன்னாடி சில புரிதல்களை முதலில புரியவைக்கவேண்டியுள்ளது. அத செஞ்சுட்டு அப்புறம் கட்டாயம் சொல்ரோன் .இப்போதைக்கு வரேன் .வணக்கம் .




.
Download As PDF

35 கருத்துகள் :

நிரூபன் சொன்னது…

மீண்டும் நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி

நிரூபன் சொன்னது…

உலக மக்களின் வாழ்விற்குத் தேவையான பொருளாதாரக் கொள்கை பற்றிய அருமையான அலசலைத் தந்திருக்கிறீங்க.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

செம சான்ஸ்.. வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள்...Reverie

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இரண்டாவது முறை நட்சத்திர மதிப்புடன் திகழ்வதற்கு வாழ்த்துக்கள் நண்பரே.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பாதைபோல் தெரியும் , பயணிக்க முடியாது .

உண்மைதான்

தங்கள் ஒவ்வொரு இடுகைகளிலும் தீவிரமான சமூகத் தேடலைப் பார்க்கிறேன்.

இந்த தீப்பொறி யாவருக்கும் பற்றிக்கொள்ளவேண்டும்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

உலகிற்கு உடனடி தேவை -புதிய பொருளாதாரக் கொள்கைகளும், கோட்பாடும் என்பதுவே எனது கருத்து.

உண்மைதான் நண்பரே.

ஒரு சமூகம் அன்றைய பணியை
அன்றைய கருவி கொண்டு செய்யவேண்டும்

நேற்றைய கருவி கொண்டு அன்றைய பணியை செய்யும் சமூகத்தின் நாளைய வாழ்வு..?

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

சசிகுமார் சொன்னது…

என்னப்பா இது ரெண்டாவது முறையும் தேர்வு செய்வாங்களா வாழ்த்துக்கள் சார் தொடருங்க

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - இரண்டாவது முறையாக தமிழ் மண நட்சத்திரமாகச் சொலிப்பதற்கு நல்வாழ்த்துகள் கலந்த பாராட்டுகள். தொடர்க - நட்புடன் சீனா

காந்தி பனங்கூர் சொன்னது…

இரண்டாவது முறையாக தமிழ்மண நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள் சகோ.

உலக பொருளாதார கொள்கையில் மாற்றம் வேண்டும் என்பதை அழகிய உரையாடலுடன் கூறிய விதம் அருமை.

மதன்மணி சொன்னது…

நொரண்டு : என்னைக்கேட்டால் ...தற்போதுள்ள பொருளாதாரக் கொள்கைகளும்,கோட்பாடுகளும் காலாவதியாகிவிட்டது என்பதுவே . முற்றிலும் செயலிழந்துவிட்ட பொருளாதாரக் கொள்கைகளையும், கோட்பாடடு்களையும் வைத்துக்கொண்டு
----------------
தங்களுடைய இடுகையில் எழுத்துப்பிழை -----பார்க்கவும் உண்மையான கருத்துக்களில் தடுமாறும் எழுத்துக்களே தரமானவை தங்களுடைய இடுகை

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் சார் மற்றொருமுறை தமிழ்மணம் நட்சத்திரம்..

நல்ல கருத்து சார், ஆனா புது கொள்கைகள் உருவாக்கவும் செயல்படுத்தவும் நிறைய நேரம் பிடிக்குமே, அதுக்கான செலவும் அதிகம் ஆகுமே!!??

குறையொன்றுமில்லை. சொன்னது…

வாழ்த்துக்கள்

goma சொன்னது…

வாழ்த்துக்கள்

காட்டான் சொன்னது…

வாழ்த்துக்கள் மாப்பிள நானும் தமிழ் மணத்தில் ஓட்டு போட்டுட்டேங்க.. 

M.R சொன்னது…

இரண்டாம் முறையாக நட்ச்சத்திரமாக திகழ்வதர்க்கு வாழ்த்துக்கள் நண்பரே.

தாங்கள் சொல்ல வந்த கருத்தும் அருமை நண்பரே

M.R சொன்னது…

tamil manam

indli

tamil 10
votted

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உலகிற்கு உடனடி தேவை -புதிய பொருளாதாரக் கொள்கைகளும், கோட்பாடும் என்பதுவே எனது கருத்து ,இது எனது கருத்து மட்டுமல்ல , உண்மையும் கூட .//

உடனடி தேவையும் கூட, நல்ல அலசல் மக்கா...!!!

மகேந்திரன் சொன்னது…

இனிய வாழ்த்துக்கள் நண்பரே.



உடனடித்தேவை புதிய பொருளாதாரக்கொள்கை

வரவேற்கிறேன்.

மணிகண்டபிரபு சொன்னது…

எனக்கு பொருளாதார கொள்கைகள் பத்தி அவ்வளவா தெரியாதுங்க சார், உங்க கிட்ட இருந்து கத்துக்குறேன்.....

Rathnavel Natarajan சொன்னது…

வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

நட்சத்திர ஜொலிப்புக்கு வாழ்த்துக்கள்! இனிதே தொடரட்டும் உமது பதிவுலக சேவை!

சௌந்தர் சொன்னது…

நட்சத்திரபதிவருக்கு வாழ்த்துக்கள் மீண்டும் கலக்குங்க...

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

மீண்டும் தமிழ்மண நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு என்மனமார்ந்த வாழ்த்துகள். கலக்குங்க நண்பா.

சென்னை பித்தன் சொன்னது…

மீண்டும் தமிழ்மண நட்சத்திரப் பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்.

Sulaxy சொன்னது…

அருமையான பதிவு வாழ்த்துக்கள் http://illamai.blogspot.com

Mohamed Faaique சொன்னது…

வாழ்த்துக்கள்..

”புதிய பொருளாதார கொள்கை”
இதை யார் இருவாக்குவது? யார் உருவாக்கினாலும் பக்க சார்பாகத்தான் இருக்கப் போகிறது. யாரோ ஒருவர் பாதிக்கப் படத்தானே போகிறார்கள்?
புதிதாக தேவையில்லை என்று சொல்லவில்லை. யாரால் பூனைக்கு மணி கட்ட முடியுமென கேட்கிறேன்..

Unknown சொன்னது…

முன் காண முடியாத நட்சத்திரப் பதிவரை
இன்று கண்
முன் காண முடிந்தது வாழ்த்துக்கள்!

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே
என்பதே இலக்கணம்
உடனடி தேவை என்ற கருத்து
உலகத்துக்குச் செய்யும் சேவை
புலவர் சா இராமாநுசம்

ஜோதிஜி சொன்னது…

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "


சிறப்பான வாழ்த்துகள்.

மாய உலகம் சொன்னது…

மீண்டும் நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு மனதார வாழ்த்துக்கள் சகோதரரே

மாய உலகம் சொன்னது…

பொருளாதார கோட்பாடு சம்பந்தமான நல்ல விவாதம் தெரிந்தகொள்ளமுடிகிறது...வாழ்த்துக்களுடன் நன்றி

Avargal Unmaigal சொன்னது…

நண்பரே இரண்டாவது முறையாக தமிழ்மண நட்சத்திரமாகச் பிரகாசிப்பதற்கு நல்வாழ்த்துகள்

sarujan சொன்னது…

வாழ்த்துக்கள்

Franklin சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே.
புதிய பொருளாதாரக் கொள்கையின் தேவைகளை அற்புதமாக படைத்துள்ளீர்கள்.
தொடரட்டும் நின் பணி.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "