செவ்வாய், 13 செப்டம்பர், 2011

ஆயுதப்போராட்டம் x அறவழி அகிம்சைப் போராட்டம் -எது வெல்லும்?- எது சிறந்தது ? .

இன்றைய மனிதர்களான நாம் நமது முந்தையவர்களைவிட எவ்வளவோ நாகரிகத்திலும் பண்பாட்டிலும் முன்னேறிவிட்ட நாகரிக மனிதன் என கூறிக்கொள்கிறோம்.ஆனால், அத்தகைய நகர்வில் நாம் எவ்வளவு தூரம் நமது முன்னவர்களை விட நாம் முன்னேறி இருக்கிறோம் என சிந்தித்தால் , நாம் நான்-களாகவே இங்கு அதிகப்படியானோர் இருக்கிறோம், பின்னோக்கியே,நாம் -ஆகாமல் என்பது தான் உண்மையாக இருக்கிறது.

இன்றைய மனிதர்களான நாம் நமது முந்தையவர்களைவிட எவ்வளவோ நாகரிகத்திலும் பண்பாட்டிலும் முன்னேறிவிட்ட நாகரிக மனிதன் என கூறிக்கொள்கிறோம்.ஆனால், அத்தகைய நகர்வில் நாம் எவ்வளவு தூரம் நமது முன்னவர்களை விட நாம் முன்னேறி இருக்கிறோம் என சிந்தித்தால் , நாம் நான்-களாகவே இங்கு அதிகப்படியானோர் இருக்கிறோம், பின்னோக்கியே,நாம் -ஆகாமல் என்பது தான் உண்மையாக இருக்கிறது.

இப்படியான சூழலில் போராடும் நிலைக்கு தள்ளப்படும் நாமாகாத நான்களின் கூட்டம், உணர்ச்சி வசப்பட்டே இயங்கும்.அப்பொழுது அவர்கள் தங்களுக்கு உணர்ச்சிவசப்படும் தலைமையையே விரும்பும்.தங்களை முறுக்கேறிக் கொண்டே இருக்கவேண்டும் தங்களின் தலைமை.அது தான் ஆளுமை என நினைக்கும்.

எளிதில் உணர்ச்சி வசப்படும் மக்கள் ஒன்றுகூடினால் இங்கு உணர்ச்சியின் வெளிப்பாடு தான் இருக்குமே தவிர ,வேறு ஒன்றும் நிகழாது .சில அரிதினும் அரிதான சமயங்களில் அவைகள் வெற்றி பெற்றாலும்,100 க்கு 99 சதவிதம் தோல்வியையே சந்திக்கும் .மீதி 1 சதவீதமும் பின்னர் இதனுடன் இணைந்து முடியும்.இத்தகைய போராட்டங்களினால் அதிகம் பாதிக்கப்படுவது முதலில் அப்பாவி மக்கள் அடுத்து அவர்கள் .

போராட்டம் என்றாலே அழிவை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்துடனே  நகர்வதும்,அதில் தான் தீர்வு கிடைக்கும் என நினைப்பதும் காட்டுமிராண்டி நிலையாகும்.இதனை உணராமல் வெறிகொண்டு திரியும் கும்பலைத்தான் நாம் இன்று பார்க்கின்றோம்.

சரி ,அதற்காக போராடவே வேண்டாம் என்கின்றாயா?.எனக்கேட்டால் .
போராட்டம் என்பதே இங்கு ஒரு விவாதப்பொருளாக இருக்கிறது என்பதனை கூறிக்கொள்ளவிரும்புகிறேன்.எது எப்படி இருப்பினும் போராட்டம்என்பதற்கு
பல வரைமுறைகள்,பல அர்த்தங்கள் உண்டு. ஆயுதம் எடுத்து போராடும் காட்டுமிராண்டித்தனமான போராட்டம் மட்டுமே போராட்டம் என்றால்
அது முட்டாள் தனமான வாதமாகும் ,போராட்டம் என்ற வார்த்தையையே கொச்சைப்படுத்தும் ஆகும்.அதோடு இதற்கு முன் போராடியவர்கள் அனைவரையும் அவமானப்படுத்துவதும் ஆகும்.

இன்று ஆயுதம் ஏந்தி போராடிவருபவர்களிடம் உங்களின் பின்னடைவிற்கு காரணம் எது என கேட்டால் அவர்கள் கூறும் காரணங்களில் முதன்மையானதாக இருப்பது எங்களிடம் போராட அதிநவின ஆயுதங்கள் இல்லை என்பதாகத்தான் இருக்கும்.
நான் ஒன்று கேட்கிறேன் நீங்கள் பயன்படுத்தும் ஆயுதத்தையே அதிநவினமாக இருக்க விரும்பும் நீங்கள் ஏன் அதி நவினமான போராட்ட யுத்தியான அகிம்சைவழியிலான போராட்டத்தை கையெடுக்க மறுக்கின்றீர்கள் .


நாகரிகமடைந்த மனிதனால் தான் நவின போராட்டம் சாத்தியமாகும், அகிம்சைவழியிலான அறவழிப்போராட்டம் இந்த நூற்றாண்டு மட்டுமல்ல அடுத்துவரும் நூற்றாண்டுகளிலும் அதி நவின மனிதனின் வெற்றிப் போராட்டமான இருக்கும் என்பது திண்ணம் .

எப்படி அகிம்சைவழியிலான அறவழிப்போராட்டம் ஆயுதப்போராட்டத்தை விட உன்னதமானது,சிறந்தது,வலிமையானது,வெற்றிபெறக்கூடியது என்பதனை பார்ப்போம்.1.அறவழி அகிம்சைப்போராட்டம் : நிரந்தரமானது

ஆயுதப் போராட்டம் :தற்காலிகமானது .


2.அறவழி அகிம்சைப்போராட்டம் : போராட மனேதைரியம் மட்டுமே தேவை ,பிற எதுவும் தேவையில்லை

ஆயுதப் போராட்டம் :போராட ஆயுதம்,பணம்,படை,சக்தி என தேவை மற்றவைகளும் தேவை .


3.அறவழி அகிம்சைப்போராட்டம் : எளிமையானவர்களும,ஏழைகளும் , ஏன் அனைவரும் மேற்கொள்ளலாம்.

ஆயுதப் போராட்டம் :பொருளாதார பின்புலம் வேண்டும்.


4.அறவழி அகிம்சைப்போராட்டம் : பகைமைக்கு எதிரானது .

ஆயுதப் போராட்டம் :பகைவருக்கு எதிரானது .


5.அறவழி அகிம்சைப்போராட்டம் : விளைவு தன்னை மட்டுமே பாதிக்கும்.

ஆயுதப் போராட்டம் : விளைவு இரு தரப்பினரையும் பாதிக்கும் .


6.அறவழி அகிம்சைப்போராட்டம் :  நினைத்தமாத்திரத்தில்,நின்ற இடத்தில் யாரும் உடனே செய்யமுடியும்

ஆயுதப் போராட்டம் : திட்டமிடவேண்டும்.


7.அறவழி அகிம்சைப்போராட்டம் : தனி நபரும்,தனி நபருக்காகவும் செய்யலாம்.

ஆயுதப் போராட்டம் : குழு கும்பல் வேண்டும் .


8.அறவழி அகிம்சைப்போராட்டம் :  உலகமயமானது .

ஆயுதப் போராட்டம் :தனிப்பட்ட பகுதியைச் சார்ந்தது .


9.அறவழி அகிம்சைப்போராட்டம் : சமாதானத்தையும் சமத்துவத்தையும் கற்பிக்கும்.

ஆயுதப் போராட்டம் : சர்வதிகாரத்தை கற்பிக்கும்.


10.அறவழி அகிம்சைப்போராட்டம் : வெளிப்படையானது .

ஆயுதப் போராட்டம் :ரகசியமானது (ரகசியம் என்பது என்றும் உண்மைக்கு எதிரானது).


11.அறவழி அகிம்சைப்போராட்டம் :  தன் மீதான விளைவுகளுக்கு அஞ்சாதது .

ஆயுதப் போராட்டம் :தன் மீதான விளைவுகளுக்கு அஞ்சுவது .


12.அறவழி அகிம்சைப்போராட்டம் :  அறிவு சார்ந்தது .

ஆயுதப் போராட்டம் :உணர்ச்சி சார்ந்தது .


13.அறவழி அகிம்சைப்போராட்டம் : நவினமானது .

ஆயுதப் போராட்டம் : மன்னர்காலத்தது .


14.அறவழி அகிம்சைப்போராட்டம் :  வீரன் மட்டுமே மேற்கொள்ள முடியும் .

ஆயுதப் போராட்டம் :கோழைகள் கூட செய்யலாம் .


15.அறவழி அகிம்சைப்போராட்டம் : அன்பை போதிப்பது .

ஆயுதப் போராட்டம் :ஆளுமையை போதிப்பது .


16.அறவழி அகிம்சைப்போராட்டம் : மனித உயிர்களை மதிப்பது .

ஆயுதப் போராட்டம் : மனித உயிர்களைப்பற்றிய மதிக்கத்தெரியும் மாண்பற்றது .


17.அறவழி அகிம்சைப்போராட்டம் : எதிர்ப்புக்கு எதிரானது.

ஆயுதப் போராட்டம் :எதிரிக்கு எதிரானது .


18.அறவழி அகிம்சைப்போராட்டம் :  எதிர்ப்பை இணங்கச்செய்யும் .

ஆயுதப் போராட்டம் :எதிரியை அழிக்க  செய்யும் .


19.அறவழி அகிம்சைப்போராட்டம் :  முடிவில் எதிரி அன்பன் ஆவான்.

ஆயுதப் போராட்டம் :யார் என்ன ஆவார்கள்  என்பது முடிவினை பொறுத்தது.


20.அறவழி அகிம்சைப்போராட்டம் :  முன்னுதாரணமாக மலரும்.புது ஆரம்பத்தை தோற்றுவிக்கும்.

ஆயுதப் போராட்டம் : இது முடிவை நோக்கி நகரும் .


21.அறவழி அகிம்சைப்போராட்டம் : போராட்ட முடிவில் அன்பும் வெற்றியும் மேலேங்கும்.

ஆயுதப் போராட்டம் :வன்மமும்,வெறியும் மீதமாகும் .


22.அறவழி அகிம்சைப்போராட்டம் : சமரசத்திற்கும் சமாதானத்திற்குமான இடம் .

ஆயுதப் போராட்டம் :அதற்கு சாத்தியக்கூறே கிடையாது .


23.அறவழி அகிம்சைப்போராட்டம் : யாரும் எதையும் இழப்பதில்லை .இழப்பு என்ன பேச்சுக்கே இடமில்லை.

ஆயுதப் போராட்டம் : ஈடு செய்யமுடியாத உயிரிழப்புகளும் சொத்திழப்புகளும் சோகங்களும் மீதமாகி வாழ்வு சூனியமாக தொக்கி நிற்கும்  .


24.அறவழி அகிம்சைப்போராட்டம் : அனைவரும் இங்கு பிரதானம் .

ஆயுதப் போராட்டம் : தலைமையையும் தலைவருமே பிரதானம் .


25.அறவழி அகிம்சைப்போராட்டம் :  ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்காது .

ஆயுதப் போராட்டம் :பல கொலைகள் நடந்தேறும் ,கொலைகளுக்கு பல வியாக்கியனங்கள் கூறி நியாயப்படுத்தும்


26.அறவழி அகிம்சைப்போராட்டம் : இங்கு தண்டனை என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆயுதப் போராட்டம் : இங்கு கொடுரமான தண்டனைகள் உண்டு.
உச்சபட்ச தண்டனை மரணதண்டனை தான்.


27.அறவழி அகிம்சைப்போராட்டம் : இங்கு எதற்கும் பயமின்றி சுதந்திரமான நிலையில் இயங்கமுடியும்.

ஆயுதப் போராட்டம் :யாரையும் நம்பாத நிலையிலே இயங்கக்கூடியது .


28.அறவழி அகிம்சைப்போராட்டம் : காட்டிக்கொடுத்தல்,காலைவாருதல் எதுவும் இங்கு இல்லை .

ஆயுதப் போராட்டம் : காட்டிக்கொடுத்தல்,காலைவாருதல் எல்லாம் உண்டு .


29.அறவழி அகிம்சைப்போராட்டம் :  துரோகிகள் என்று யாரும் உருவாவதில்லை ,யாருக்கும் துரோகிப்பட்டமும் இங்கு கொடுக்கப்படுவதில்லை.

ஆயுதப் போராட்டம் : துரோகிகள் உருவாகும் இடம்.துரோகிப்பட்டம் இங்கு பிரதானம் .


30.அறவழி அகிம்சைப்போராட்டம் :  மரண தண்டனைக்கு எதிரானவர்களின் போராட்டம் .

ஆயுதப் போராட்டம் : மரண தண்டனையை ஆதரிப்பவர்களின் போராட்டம்.


அதனால் அறவழி அகிம்சைப் போராட்டமே உன்னதமானது உயர்வானது சிறந்தது .அறவழி அகிம்சைப் போராட்டத்தினால் மட்டுமே உறுதியான இறுதியான வெற்றியை கொடுக்கமுடியும் .


இனி ஆயுதம் எடுத்து போராடும் காட்டுமிராண்டித்தனமான முட்டாள் தனமான யுத்தியை விடுத்து நவின நாகரிக போராட்டமான அகிம்சா வழியிலான நவநாகரிக மனித நேய போராட்டத்தை கையெடுப்பதே மனித நல்லறிவாகும்.


நாம் அறவழி அகிம்சைப்போராட்டத்தையே ஆதரிப்போம் ,கையெடுப்போம்.
மனித மாண்பை போற்றுவோம். 
மனித கொலைகளை எதிர்ப்போம் .
மனித உயிர்களை காப்போம் .
மனிதனாக வாழ்வோம்.
.
Download As PDF

27 கருத்துகள் :

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

காந்தீய வழியே பெஸ்ட்

Unknown சொன்னது…

நண்பா உங்கள் பகிர்வுக்கு நன்றி....இந்த கால கட்டத்தில இரண்டும் கலந்த போராட்டமே நன்மை பயக்கும் என்பது என் தாழ்மையான கருத்து!..இது எப்படி என்பதை தான்(!) இன்னும் முயற்சி நிலையிலேயே வைத்திருக்கிறோம்!

RAMA RAVI (RAMVI) சொன்னது…

நன்றி திரு. ராஜசேகரன்,தங்கள் பதிவு பற்றிய தகவல் கொடுத்தமைக்கு.

போராட்டம் பற்றிய அருமையான பகிர்வு.அறவழி போராட்டத்தையும்,ஆயுத போராட்டத்தையும் நீங்கள் ஒப்பீடு செய்திருப்பது மிகப்பிரமாதம்.

அகிம்சையாலேயே சுதந்திரம் பெற்ற நாம்,நம் தேவைகளை அகிம்சாவழியிலேயே பெறுவது சிறந்தது.
மிகச்சிறப்பான பதிவு ஐயா. வாழ்த்துக்கள்.

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

2.அறவழி அகிம்சைப்போராட்டம் : போராட மனேதைரியம் மட்டுமே தேவை ,பிற எதுவும் தேவையில்லை//எல்லாமே அருமையான ஒப்பீடுகள்..

சில நேரம் தவிர்க்க முடியா நிலையில் தற்காத்துக்கொள்ள மட்டுமே ஆயுதம் எடுக்கலாம்.. Self - defense மற்றபடி நீங்கள் சொல்வதே எம் நிலையும்..

நன்று வாழ்த்துகள்..

Robin சொன்னது…

நல்ல பதிவு!

Yaathoramani.blogspot.com சொன்னது…

போராட்டத்தின் இரண்டு எதிர் முனைகளை எடுத்துக் கொண்டு
அதை மிக விரிவாக ஒப்பிட்டு எதனால் இது சிறந்தது என
தர்க்க ரீதியாக சொல்லிச் செல்லும் விதம் அருமை
வாழ்த்துக்கள் த.ம 3

கும்மாச்சி சொன்னது…

அறவழி அஹிம்சை போராட்டம்தான் சிறந்தது ஸார். ஆனால் சிலசமயம் எதிர்க்கும் அரசின் அராஜகத்தையும் கருத்தில் கொள்ளவேண்டியிருக்கிறதே?

நல்ல பதிவு பாஸ்.

Unknown சொன்னது…

நன்றுரைத்தீர்! வன்முறைப் போராட்ட அபிமானிகளுக்கு, இந்த பதிவு சமர்ப்பணம்!

Unknown சொன்னது…

நல்ல அலசல் சார்,

ஆனா நான் கும்மாச்சி அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன்.

எந்த நாடும் தங்களை எதிர்ப்பவர்களை அகிம்சை முறையில் எதிர்கொள்வதில்லை ஆயுதம் வழி போராட்டம் மட்டுமே. இது தானே இலங்கையில் நடந்தது, இப்போதும் காஷ்மீரில் நடப்பதும் இது தானே ?

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணாச்சி,
ஆயுதப் போராட்டம், அறவழிப் போராட்டம் பற்றிய விரிவான அலசல்.

ஒப்பீட்டு அலசலும், விளக்கப் பகிர்விற்கும் நன்றி

M.R சொன்னது…

அருமையான விளக்கம் ,எது சிறந்தது தேர்வு செய் ,என எதற்கெடுத்தாலும் ஆயுதம் எடுக்கும் நபர்களுக்கு அருமையான விளக்கம் .

அதே போல் நாம் போய் நான் வந்ததால் ஈகோ வந்து யார் ஆளுமை செய்வது என்ற விவாதம் ,போர் .

அனைத்திலும் வாக்களித்தேன்

Unknown சொன்னது…

நாம் அறவழி அகிம்சைப்போராட்டத்தையே ஆதரிப்போம் ,கையெடுப்போம்

இதுதான் சரியான முடிவு
என் முடிவும் இதுவே!
இரண்டு ஓட்டாவது போட வேண்டும்
உரிமை இல்லையே!

புலவர் சா இராமாநுசம்

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

மனித மாண்பை போற்றுவோம்.
மனித கொலைகளை எதிர்ப்போம் .
மனித உயிர்களை காப்போம் .
மனிதனாக வாழ்வோம்.

காலத்துக்கு ஏற்ற இடுகை நண்பரே.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அறவழிப் போராட்டமே நிலையான வெற்றிக்கு வழிவகுப்பது..

அதனைத் தாங்கள் எடுத்துப் பகுத்து உரைத்த விதம் பாராட்டுதலுக்குரியது.

கொற்றவன் KOTRAVAN சொன்னது…

உலகில் எந்த நாடும் [இந்தியா உட்பட] தன் விடுதலையை போர் கருவி அற்ற போராட்டத்தின் ஊடாக அடையவில்லை .போர் கருவி அற்ற போராட்டம் மட்டும் அறவழி போராட்டம் அன்று , அறம் சார்ந்து நடத்தப்படும் போர் கருவி போராட்டமும் அறப்போராட்டமே .நாம் எந்த போராட்ட முறையை கடைபிடிக்கப்போகிறோம் என்பதை நம்முடைய எதிரிகளே முடிவுப் பண்ணுகின்றனர்

சசிகுமார் சொன்னது…

அருமையான கருத்துக்கள் சார்

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

வலிப்போக்கன் சொன்னது…

நல்லது,.புமாஇமுவெளியிட்ட காந்தியும் துரோக வரலாறும் என்ற வெளியீட்டில் அறவழி அகிம்சை போராட்டத்தில் காட்டிகொடுத்தல்,காலை வாருதல் எல்லாம் உள்ளதே!நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.படித்து பாருங்களேன்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

காந்தீய வழியே சிறந்தது.

நிவாஸ் சொன்னது…

உண்மையில் ஆக்கப்பூர்வமான பதிவு. உங்கள் சிந்தனையும் ஆய்வும் மிக அருமை. ஆனால் எனக்கு ஒரே ஒரு கேள்விதான், அகிம்சை வழி என்னும் அற்ப்புத போராட்டத்தை கண்டறிந்து முதன்மை எடுத்துக் காட்டாய் திகழும் இந்தியாவிற்கு ஏன் இவ்வளவு வலிமையான ராணுவம்? மனிதர்களுக்குத்தான் அறவழிப் போராட்டமும் அதன் அருமையும் தெரியும், மிருகங்களுக்கு அல்ல. மிருகங்கள் என்றால் கட்டுமிருகங்களை நான் கேவலப் படுத்தவில்லை, மனித உருவில் இருக்கும் மிருகங்களைத்தான் கூறினேன். மிருகங்கள் என்னை மன்னிக்கட்டும்.

பெயரில்லா சொன்னது…

அஹிம்சை போராட்டம்தான் சிறந்தது... Reverie

தேவன் மாயம் சொன்னது…

நாகரிகமடைந்த மனிதனால் தான் நவின போராட்டம் சாத்தியமாகும், அகிம்சைவழியிலான அறவழிப்போராட்டம் இந்த நூற்றாண்டு மட்டுமல்ல அடுத்துவரும் நூற்றாண்டுகளிலும் அதி நவின மனிதனின் வெற்றிப் போராட்டமான இருக்கும் என்பது திண்ணம் .//
நல்ல கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் !

Mahan.Thamesh சொன்னது…

வணக்கம் அண்ணா . அகிம்சை , ஆயுத போராட்ட ஒப்பீடு பதிவு . விரிவான விளக்கமும் / பகிர்வுக்கு நன்றி அண்ணா

கோகுல் சொன்னது…

மனிதனாகவே வாழ்வோம்!பகிர்வுக்கு நன்றி!

Unknown சொன்னது…

ரெத்தமின்றி யுத்தம் செய்
சத்தம் இன்றி முத்தம் வை
காயம் இன்றி காதல் செய்

ரெத்தமின்றி யுத்தம் செய்
கண்ணீர் இன்றி சமாதனம் கிடைக்கும்அருமையான கருத்துக்களை கொண்ட நல்ல பதிவு, சார்.

ADMIN சொன்னது…

அகம்சை என்றும் ஆபத்தில்லாதது. அழகானதும் கூட.

Ramki சொன்னது…

அருமையான கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள் .வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "