வெள்ளி, 1 ஜனவரி, 2010

வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் .

.

நொரண்டு :வள்ளுவர் என ஒருத்தர் இருந்தாரா ?

நண்டு: பெயரில் என்ன இருக்கின்றது .

நொரண்டு :திருக்குறள் என்ற பெயரில் தான் எழுதினாரா ?

நண்டு: பெயரில் என்ன இருக்கின்றது .

நொரண்டு :1330 குறள் தான் எழுதினாரா ?

நண்டு:கூடவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம் .

நொரண்டு :அப்படினா ...

நண்டு:இடைச்செருகல்கள் பல ...

நொரண்டு :புரியவில்லை .

நண்டு:பாரதியில் கூட இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கு தெரியுமா ?

நொரண்டு :பாரதியவிடு ...வள்ளுவருக்கு வா .

நண்டு:நிறைய இடைச்செருகல்கள் ..

நொரண்டு :எதனால் ?

நண்டு: வள்ளுவர் தனது அருமையான கருத்துக்களை எளிமையாக கூறிய மிகச்சிறந்த ஒரு
சிந்தனையாளர் .

மேலும்

'உலகின் முதல் சிந்தனையாளரும் '

இவரே.


நொரண்டு :ஓ.!!!!

நண்டு: அவரின் கருத்துக்கள்
அவரின் காலத்திலும் ,
பின்னிட்டும்
சமுதாய ஏற்றத்திற்கு
ஆதாரமாக இருப்பதாலும் , எக்காலத்திலும் எவருக்கும் ஏற்புடையதாக இருப்பதாலும் ,
குறைவில்லாத
தெளிந்த சிந்தனையுடன்
காலத்தால்
அனைத்தையும் விஞ்சி இருப்பதாலும். மூத்த குடியின்
தரமான
தரணிபோற்றும்
கருத்தாக இருந்ததாலும் .
தமிழில் இருந்ததாலும் .

நொரண்டு :இடைச்செருகல் செய்தது யார் ?

நண்டு: முதலாம் வேற்றரசுக்காலத்தினரும் ,தமிழரசு எழுச்சிககாலத்தினரும் மற்றும் அதற்குப்
பிந்தையோரும் .

நொரண்டு :சரியாகச்சொல்லவும்.

நண்டு:கி.பி.250 லிருந்து .

நொரண்டு :அப்படியெனில் வள்ளுவர் காலம் .

நண்டு:தொல்காப்பியத்திற்கும்
முந்தியது .

நொரண்டு : ஓ...ஓ.....

நண்டு:திருக்குறளை அதன் மூலத்தினின்று ஆய்ந்தால் .
சிந்துவை காணலாம் .

நொரண்டு :எப்படி ?

நண்டு:அதிகாரம் 75 ஐ படிக்க

நொரண்டு :
கல்தோன்றா மண் தோன்றா முத்த குடி யாருக்கு தேவையோ அவர்கள் பாத்துக்கட்டும்.
நீ இடைச்செருகல் செய்தது யார் ? என கூறு .

நண்டு: சரி ,
வள்ளுவரை மதவாதியாக ஆக்க மதவாதிகள் .

நொரண்டு : ஏன்
இவரே எதாவது ஒரு மத அடிப்படைவாதியாக இருந்திருக்கலாம் இல்லையா .

நண்டு:சரியான பார்வைதான் ,
ஆனால்
எந்த மதத்தை அவர் பின்பற்றியிருப்பார் என்பதற்காகத்தான்
இடைச்செருகல் செய்தது .

நொரண்டு :அவர்
எதை பின்பற்றியிருப்பார் என
நீ நினைக்கின்றாய் ?.

நண்டு:சிந்துவிற்கு முந்தைய
தமிழன் பின்பற்றிய வாழ்க்கைமுறையை .

நொரண்டு :நீ சிந்துவிற்கு போகாதே . இடைச்செருகல் செய்தது யார் ? .

நண்டு: தொகுத்தவர்கள் ...

நொரண்டு :தொகுத்தவர்களா , மதவாதியாக ஆக்க மதவாதிகளா ? குழப்பாதே .

நண்டு: தொகுத்த மதவாதிகள் .

நொரண்டு : யார் ?

நண்டு: யார் ?

நொரண்டு : அது தான் யார் ?

நண்டு: பல மதத்தவரின் இடைச்செருகல்கள்
இருந்தாலும் .
கடைசியாக
நம் கையில் கிடைத்திருப்பது
இந்து மதத்தினரின்
இடைச்செருகல்கள்
அதிகம் கொண்ட
திருக்குறள் .

நொரண்டு :எப்படி சொல்கின்றாய் ?

நண்டு:தமிழ் இலக்கிய வர்ரலாற்றை படி

நொரண்டு :சுருக்கமா சொல்லுப்பா . எங்களுக்கு அதப்பத்தியெல்லாம் தெரியவேண்டியது
அவசியமில்லை

நண்டு: அப்படினா இது புரியாது .

நொரண்டு : அதெல்லாம் முடியாது .
நீ சொல் .

நண்டு: சரி .
சமய வெறியாட்டங்கள நேரங்கிடச்சா தெரிஞ்சுக்க .
இப்ப
குறள் 543 ,
குறள் 556 மற்றும் குறள் 560
ஆகிய 3 மட்டும் படி .
அவைகள் இடைச்செருகல்கள் .

.... மேலும் இடைச்செருகல்கள் தொடரும் ...


.


.

.

Download As PDF

13 கருத்துகள் :

சிவாஜி சொன்னது…

நல்ல உரையாடல் நடை. நல்ல சிந்தனையும் கூட.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,
பின்னுட்டத்திற்கும் ,
நன்றி
சிவாஜி அவர்களே

கும்க்கி சொன்னது…

இந்த சந்தேகம் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது தோழர்..

ஆதாரங்களுடன் விளக்குவீர்கள் என நம்புகிறேன்.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

கட்டாயமாக .
கண்டிப்பாக .
இது எனது கடமையும் கூட .
ஆழமான ஆய்வு என்பதால்
காலதாமதம் ஆகலாம் .
ஆனால் ,
செய்தே ஆகவேண்டிய
பணி .
கண்டிப்பாக செய்வேன் .

தங்களின்
வருகைக்கும் ,
பின்னுட்டத்திற்கும் ,
நன்றி
கும்க்கி
அவர்களே

கள்ளபிரான் சொன்னது…

இடைச்செருகல்கள் மட்டுமல்ல; இடையழித்தல்களும் நிகழ்ந்திருக்கக்கூடும்.

பாரதி படைப்புகளில் இடையழித்தல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவரது குடிப்பத்தாரே அவற்றைச்செய்தனர்.

‘செல்லம்மாக்கு’ எழுதிய காதல் கவிதைகளை, செல்லம்மாவின் அண்ண்ன் அப்பாத்துரை, ‘கண்ணம்மாவுக்கு’ என்று திருத்தியதாக பாரதியின் புதல்வி, சகுந்தலா சொல்லியிருக்கிறார்.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஆம்
கள்ளபிரான்

தங்களின்
வருகைக்கும் ,
பின்னுட்டத்திற்கும் ,
நன்றி

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

அருமையான உரையாடல் எஸ்ரா, இது போன்ற ஒரு விமர்சனம் ஏற்கனவே வந்துள்ளது.....

திருவள்ளுவர் அருக கடவுளை பின்பற்றியவர் என்று ஒரு பதிவை படித்தாக ஞாபகம்...

தொடருங்கள்....ஆக்கப் பூர்வமாக விவாதிப்போம்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

//இது போன்ற ஒரு விமர்சனம் ஏற்கனவே வந்துள்ளது.....//
அது பற்றிய விவரங்கள் தந்தால்
பயனுள்ளதாக இருக்கும்

//திருவள்ளுவர் அருக கடவுளை பின்பற்றியவர் என்று ஒரு பதிவை படித்தாக ஞாபகம்...//
மிகவும் பயனுள்ள தகவல்
பதிவு எது என்று கூறினால்
நலமே .

தங்களின்
வருகைக்கும் ,
பின்னுட்டத்திற்கும் ,
நன்றி
ஆரூரன் விசுவநாதன்
அவர்களே

கள்ளபிரான் சொன்னது…

Yes, the Jains of Tamilnadu claim Valluvar as a Jain Muni and his name was Konda konda achaarya. By that name, they have built a temple for him centuries ago, in North Arcot Dist.,where regular worship has been going on. Recently, one Siathambi wrote a blog post condemning the Jains for that claim and saying V was a staunch saiva siththaanthi. SriVaishnavaas of TN have a stronger claim for V to be a worshipper of Mahavishnu for which they cite many kurals.

I, for one, second the claim of Jains, for, the ancient Jains are known to compose books of maxims (neethi nuul) whereas the ancient Hindus wrote plain religious scriptures or mythological stories, or books to explicate the vedas, upanishads, or the ithikaasic episodes only.

The mystery goes on and on with varied claims from varied quarters, but it still remains unraveled, just as the mystery shrouds the exact identity of the Black Lady of Shakespeare's Sonnet Sequence addressed to an English Prince.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஆம் ,
நீங்கள் சொல்வது சரிதான் ,
அதிகமாக இது போன்று
நிறைய
காலம் காலமாக
நிகழ்ந்து வந்துள்ளது .
தங்களின் உயர்ந்த மதிப்புமிக்க தகவலுக்கு நன்றி .
மேலும் தகவல்கள் கிடைத்தால் மகிழ்வேன் .

தங்களின்
வருகைக்கும் ,
பின்னுட்டத்திற்கும் ,
மிக்க மகிழ்ச்சி

நன்றி
கள்ளபிரான்
அவர்களே .

சுப.நற்குணன் சொன்னது…

மாறுபட்ட கோணத்தில் எழுதுகிறீர்கள் அன்பரே.

நன்றாக உள்ளது. நல்ல முயற்சி.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும்
பின்னூட்டத்திற்கும்
நன்றி .
சுப.நற்குணன்
அவர்களே .

D.R.Ashok சொன்னது…

//குறள் 543 ,
குறள் 556 மற்றும் குறள் 560
ஆகிய 3 மட்டும் படி .
அவைகள் இடைச்செருகல்கள்//

உள்ள வந்தவொடனே குண்ட தூக்கி போடறீங்க.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "