சனி, 9 ஏப்ரல், 2011

ஐயா அன்னா ஹசாரேயிடம் ஒரு பணிவான வேண்டுகோள் .மதிப்பிற்குரிய பதிவுலக நண்பர்களே ,சட்டசபைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் .வாக்கு நம் உரிமை ,வாக்களிப்பது நம் கடமை . எனினும் நமது உரிமைகளும் கடமைகளும் அத்தோடு நின்றுவிடுவதில்லை அதையும் தாண்டி நமது உரிமையும்,கடமையும் சரியாக நிலைநிறுத்தப்படவேண்டும் .இதுவும் நமது கடமையாகும்.அதற்காக நாம் பாடுபடவேண்டும் .அதற்கு நாம் நம் உரிமைகளையும்,கடமைகளையும் ஊழலற்றமுறையில் நேர்மையாக நிறைவேற்றவேண்டும்.
நாம் மட்டும் அவ்வாறு இருத்தால் போதாது நம்மை சுற்றியுள்ளவர்களும் நம்மைப்போன்றே இருந்தால் தான் நமது உரிமையும்,கடமையும் மிகச்சரியானதாக அமைவதோடு நிலைநிறுத்தப்பட்டதாகவும் இருக்கும் .ஆதலால்,நாம் நம்மைப்போன்றே நம்மை சுற்றியுள்ளவர்களிடமும் இவ்விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டியது நமது தலையான கடைமையாக மேற்கொள்ளவேண்டிய சூழலில் இன்று நாம் உள்ளோம் .அதனால் இதற்கு ஆதரவாக நாம் இன்று ஊழலுக்கு எதிராக போராடிவரும் அன்னா ஹசாரேயின் குரலினை வேண்டுதல் சரியாக இருக்கும் என நம்புகிறேன் .ஆதலால் பதிவுலக நண்பர்களே கீழ்கண்ட எனது கோரிக்கையை ஐயா அன்னா ஹசாரேயிடம் நான் வைக்கிறேன் .தாங்களும் இதனை மேற்கொள்விர்கள் என நம்புகிறேன் .


ஐயா அன்னா ஹசாரேயிடம் முன்வைக்கும் கோரிக்கை :

Most Respected Anna Hazare Sir,
We pledge our wholehearted support and assistance to your agitation. It is a source of happiness to all of us that we achieved success in our fight for the creation of Lok Pal.
Presently, in the interests of our Nation as a whole, I have only one request to be placed before you. This is most important and essential for the welfare of our Nation.

It is election time now. Political parties are all out to spend huge sums of money
- to give it as bribe to the voters - to ensure that they win the elections and occupy the seats of power and authority. It is at this critical juncture that we need your presence most. Our request is simply this:
Please visit Thamizh Nadu now and conduct a campaign against this  vulgar and corrosive corruption of the election process - low, demeaning, disgusting and degrading practice of the political parties corrupting the voters to vote in their favour for money as quid pro quo.
It is now more than at any other time that we need you to visit Thamizh Nadu
to conduct a massive campaign against corruption .
We hope and trust that you
would accept our request and initiate the Crusade against corruption here in
Thamizh Nadu.. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்  மேலே ஆங்கிலத்தில்  உள்ளதை copy செய்து இங்கே சென்று தங்களைப்பற்றிய விவரங்களை  தந்து Comments, suggestions, queries, complaints : என்ற இடத்தில் தாங்கள் copy செய்ததை paste செய்து submit செய்யுங்கள் அவ்வளவே.


ஊழலுக்கு எதிராக ஒன்றுசேருவோம் .

.
Download As PDF

12 கருத்துகள் :

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

நல்லதொரு முயற்சி நண்டு..

நாம் அன்னா ஹசாரேவுக்காக காத்திருக்காமல் , நாம் ஒவ்வொருவரும் துணிவாக அன்னா ஹசாரேவாக மாற முயலுவோம்..


இப்பதான் என் பதிவையும் போட்டேன்..

http://punnagaithesam.blogspot.com/2011/04/blog-post_09.html

அன்னா ஹசாரேவுக்கு நன்றி/மரியாதை செலுத்த நான் என்ன செய்யணும்?

( விளம்பரத்துக்கல்ல. தகவலுக்கு மட்டுமே.. ஓட்டோ பின்னூட்டமோ தவிருங்கள் அனைவரும் )

பொன் மாலை பொழுது சொன்னது…

பிரமாதம் ராஜ சேகர்.
நான் இதே யோசனையில் இருந்தேன் நீங்கள் அதனை செயலில் செய்துள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி.
நான் அனுப்பிவிட்டேன்.
இந்த சந்தர்பம் மிக அரிது, இன்றியமையாதது, இதுதான் மிகச்சரியான தருணமும் கூட.
பகிர்வுக்கு நன்றி.

சசிகுமார் சொன்னது…

சார் அனுப்பி விட்டேன் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி. உடனே அவர்களின் நன்றி மெயிலும் அனுப்பி விட்டார்கள். நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் இந்த தமிழ் நாட்டில் மாற்றம் வரும்.

குட்டி சொன்னது…

உங்களின் வாயிலாக அவரிடம் எனது கோரிக்கையை சென்று சேருவதற்கு உதவியமைக்கு வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
செ.குட்டி.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சூப்பர் மக்கா அட்டகாசமான முயற்ச்சி வாழ்த்துகள்.....
நான் அனுப்பிட்டேன்....

Menaga Sathia சொன்னது…

Just signed..thx u sir!!

Nagasubramanian சொன்னது…

நல்லதொரு முயற்சி. தேர்தல் களத்தில் குதித்துள்ள இரு கழக கட்சிகளும் இலவச வாக்குறுதிகளை சரமாரியாக தந்துள்ளன. ஆனால் அதில் இலவசக் கல்வி, வேலை வாய்ப்பு அதிகரிப்பு குறித்த முக்கிய பிரச்சனைகள் இல்லவே இல்லை. நம் காலம் கடந்து கொண்டிருக்கிறது. இந்த இரு முக்கிய அம்சங்கள் குறித்து நாம் சிந்திக்க வேண்டிய நேரம் ஏற்கனவே கடந்து விட்டது. பரவா இல்லை. சிந்திக்க வேண்டிய மற்றுமொரு நாள் உண்டு. அது "இன்று".

MANI சொன்னது…

இன்று தான் எனது பதிவில் திரு.அன்னா ஹசேரே அவர்களைப் பற்றி எழுதியிருந்தேன்.
http://mani-mycollection.blogspot.com/2011/04/blog-post.html

தாங்களின் பதிவை பார்த்தவுடன் உடனே அவரது தளத்திற்கு சென்று தங்களின் உதவியால் எனது கருத்துகளை அனுப்பிவிட்டேன் மிக்க நன்றி.

ceekee சொன்னது…

Caste your Vote for this also.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - சிந்தனை அருமை - செயல் நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Jawahar சொன்னது…

நல்ல வேண்டுகோள்.... பாராட்டுக்கள். ஆனால் இம்முறை தேர்தல் ஆணையத்தின் பகீரதப் பிரயர்த்தனம் காரணமாக எல்லாம் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.....

Unknown சொன்னது…

வாழ்த்துக்களும் நன்றிகளும்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "