திங்கள், 4 ஏப்ரல், 2011

தேர்தலும் ஆணையமும் அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியும் .





தமிழக சட்டசபைக்கான தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் அரங்கில் அதிலும் குறிப்பாக அரசியல் வாதிகளின் பேச்சுக்களில் பக்குவமற்ற ,முதிர்ச்சியில்லாத வார்த்தைகளில்  முண்ணனி வகிப்பது  அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி என்பது . 

உண்மையில் அப்படிப்பட்ட நிலை நிலவுகிறதா  ? ..

முதலில் ,தேர்தல் அறிவித்தவுடன் எதற்காக தேர்தல் நடக்கின்றதோ அந்த அமைப்பில் உள்ளவர்கள் அனைவரும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ,தேர்தல் நியாயமாகவும் ,சுதந்திரமாகவும் நடக்க வழிவிடவேண்டும் .அது தான் சரி,இதைத்தான்  உண்மையான ஜனநாயகவாதிகள்,நேர்மையானவர்கள் செய்வர் .அதைவிடுத்து பதவியில் அமர்ந்துகொண்டு தேர்தலைச்சந்திப்பதும்,அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியை புகுத்திவிட்டுள்ளது என ஒரு நேர்மையான அமைப்பைப்பார்த்து கூறுவதும் மிகவும் அபத்தமான ஒன்றாகும். இதைவிட அரசியல் அசிங்கம் வேறு ஒன்றுமில்லை.ஊழலையும் ,விலைவாசி உயர்வையும் மறைக்க பேசும் இப்பேச்சுகளால்  அரசியல் ஆதாயம் தேட நினைப்பதை  மக்கள் நன்கு உணர்வர் .

தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க ஆணையம் எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதனை எண்ணிப்பார்த்தால் மிகவும் வருத்தமான உள்ளது. எவ்வளவு ஊழலும் ,அயோக்கியத்தனமும் அரசியல் வாதிகளால் நடத்தப்பட்டு வருகிறது என்பதனையும்,இதற்கு காரணமான அரசியல் வாதிகள் யார் என்பதனையும் எளிதில் இனங்கணமுடிகிறது .

எவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கவேண்டியுள்ளது ஒரு ஜனநாயக நாட்டில் நேர்மையாக தேர்தல் நடக்க ,பணநாயகத்தை ஒழித்து ஜனநாயகத்தை காக்க என நினைத்துப்பார்த்தால் மிகவும் வேதனையாக உள்ளது .லஞ்சத்தை ஒழிக்க எவ்வளவு முயற்சிகளை ஆணையம் எடுத்துவருகிறது என்பதையும் அதற்கு முட்டுக்கட்டை போடும் நபர்கள் யார் என்பதையும் ஆய்ந்தால் ,யார் இதற்கொல்லாம் காரணம் என்பதனை எளிதில் அறிந்துகொள்ளாலாம்.

மிகவும் சிறப்பாக தேர்தல்ஆணையம் செயல்படுவது மிக்கமகிழ்ச்சியான இருப்பதுடன் .போற்றக்கூடிய வகையிலும் உள்ளது .
இதற்காக தேர்தல்ஆணையத்திற்கு ஒரு ராயல் சல்யூட் .

இப்பொழுதும் ... இனி எப்பொழுதும்... லஞ்சத்தை துரத்துவோம் .ஜனநாயகம் காப்போம் .






.


Download As PDF

15 கருத்துகள் :

Chitra சொன்னது…

இப்பொழுதும் ... இனி எப்பொழுதும்... லஞ்சத்தை துரத்துவோம் .ஜனநாயகம் காப்போம் .



...TRUE!!!

ராஜ நடராஜன் சொன்னது…

//முதலில் ,தேர்தல் அறிவித்தவுடன் எதற்காக தேர்தல் நடக்கின்றதோ அந்த அமைப்பில் உள்ளவர்கள் அனைவரும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ,தேர்தல் நியாயமாகவும் ,சுதந்திரமாகவும் நடக்க வழிவிடவேண்டும் .அது தான் சரி,இதைத்தான் உண்மையான ஜனநாயகவாதிகள்,நேர்மையானவர்கள் செய்வர் .//

இந்த அணுகுமுறை நன்றாக இருக்குதே!

ராஜ நடராஜன் சொன்னது…

//மிகவும் சிறப்பாக தேர்தல்ஆணையம் செயல்படுவது மிக்கமகிழ்ச்சியான இருப்பதுடன் .போற்றக்கூடிய வகையிலும் உள்ளது .
இதற்காக தேர்தல்ஆணையத்திற்கு ஒரு ராயல் சல்யூட் . //

இந்த தேர்தல் ஊழல் தேவையென்ற கொள்கைக்கும்,ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணைய்த்துக்குமான பலப்பரிட்சை.

தேர்தல் ஆணையத்தை ஆதரிப்போம்....

ராஜ நடராஜன் சொன்னது…

//இப்பொழுதும் ... இனி எப்பொழுதும்... லஞ்சத்தை துரத்துவோம் .ஜனநாயகம் காப்போம் .//

ராஜாக்கள் காலத்து அரச முத்திரை மாதிரி இது பதிவு முத்திரை:)

சசிகுமார் சொன்னது…

இந்த தேர்தலில் தான் தேர்தல் ஆணையத்தின் முழு அதிகாரம் என்ன என்பது பாமர மக்களுக்கும் புரிய வைத்து உள்ளது. இவ்வளவு அதிகாரங்களை வைத்துகொண்டா இவ்வளவு நாள் சும்மா இருந்தீர்கள் என அனைவரின் மனதிலும் ஒரு கேளிவியை எழுப்பி உள்ளது இந்த தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள். உண்மையில் சொல்ல போனால் தமிழகத்தில் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவது என்பது மிக சவாலான காரியமே.எப்படியும் பணம் கொடுத்தாவது ஜெயித்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டியவர்களின் வயிற்றில் புலியை கரைக்கிறது இந்த தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு. தேர்தல் எண்ணிக்கை முடியும் வரை இதே கண்டிப்போடு தேர்தல் ஆணையம் இருந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ரைட்டுங்கோ.....

பெயரில்லா சொன்னது…

என்ன படம் அது..?

பெயரில்லா சொன்னது…

எவ்வளவு முயற்சிகளை ஆணையம் எடுத்துவருகிறது என்பதையும் அதற்கு முட்டுக்கட்டை போடும் நபர்கள் யார் என்பதையும் ஆய்ந்தால் ,யார் இதற்கொல்லாம் காரணம் என்பதனை எளிதில் அறிந்துகொள்ளாலாம்//
அதான் உள்ளங்கை நெல்லிக்கனி ஆச்சே

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - சிந்தனை அருமை - உண்மையில் தேர்தல் ஆணையம் எவ்வளவு தான் விதி முறைகளை உண்டு பண்ணி - கடுமையாகக் கண்காணித்தாலும் - தேர்தல் நேர்மையாக 100 விழுக்காடு நடைபெறாது. கடந்த தேர்தலை ஒப்பு நோக்கினால் இம்முறை விழுக்காடு கூடி இருக்கலாம். வாழ்க வளமுடன் நண்டு - நட்புடன் சீனா

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வந்துட்டாருய்யா நம்மாளு.. இனி அரசியல் பதிவுகள் களை கட்டும்

இளங்கோ சொன்னது…

//இதற்காக தேர்தல்ஆணையத்திற்கு ஒரு ராயல் சல்யூட் . //
Yes.

ஆனந்தி.. சொன்னது…

/தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க ஆணையம் எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதனை எண்ணிப்பார்த்தால் மிகவும் வருத்தமான உள்ளது. எவ்வளவு ஊழலும் ,அயோக்கியத்தனமும் அரசியல் வாதிகளால் நடத்தப்பட்டு வருகிறது என்பதனையும்,இதற்கு காரணமான அரசியல் வாதிகள் யார் என்பதனையும் எளிதில் இனங்கணமுடிகிறது .//
அனைவரும் அறிவோம் அண்ணா...:)))))))))))))))))

எனது கவிதைகள்... சொன்னது…

ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் சார்!


உண்மைவிரும்பி.
மும்பை

KARTHIK சொன்னது…

பல நேர்மையான அதிகாரிகள் இந்த தேர்தல் மக்களுக்கு காட்டிருக்குங்க
தேர்தல் கமிசனுக்கு ஒரு சல்யூட் :-))

ceekee சொன்னது…

Aug 15, 1947
--------------
Velllaikaranidamirunthu
Kaimaariyathu
Kaivilangu Saavigal
Kollaikaranidum !

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "