செவ்வாய், 7 ஜூன், 2011

இதைப்படிச்சுட்டு ,அடே சாமியார் பயலுகலா ஓடுங்கடா


இப்பொல்லாம் சாமியார்பயலுகளுக்கு ஊழல் ஒரு பேஷனா போச்சு .அயோச்சியப்பயனுவ எல்லாம் ஊழல்,ஊழல்கரான் எதிர்ப்புனு குதிக்கரான் .கருப்புப்பணங்கரான். அட பாருடா சாமியார் ராம் தேவ் கருப்புப்பணத்திற்கு எதிராக போராடுரான் .அவனுக்கு என்ன யோக்கியதை உண்டு ?.அரசியல்வாதியைப் போல் ராம்தேவ் ஏன் போராட்டத்தில் இறங்க வேண்டும்?  ஏற்கெனவே இருக்கும் சட்டங்களே ஊழிலை ஒழிக்கப் போதுமானது.ஆயிரக்கணக்கானவர்களைக் கூட்டி வைத்து திடீரென்று உண்ணாவிரதம் இருந்தது எந்த வகையில் நேர்மையானது - சரியானது?.சட்டத்தைமீறி உண்ணாவிரதம் இருந்தவரை அப் புறப்படுத்த காவல்துறை முயன்றது எப்படி குற்றமாகும்? .ஊழலை ஒழிக்கப் புறப்பட்டவர்கள் முதலில் தங்களுக்கு இவ்வளவுப் பெரிய அளவில் சொத்து எங்கிருந்து வந்தது என்பதற்கான விளக்கத்தை சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் தெரிவிக்க வேண்டாமா?.இந்த விசயத்தில் ஏன் மதவாதிகளுக்கு ஆதர பேசர ?.இப்ப உன் முகம் தெரிஞ்சிருச்சு என இன்று என்னை சந்தித்த எனது  பகுத்தறிவாளர் என தன்னை கூறிக்கொள்ளும் நண்பரிடமிருந்து நான் சிறிதும் எதிர் பார்க்கவில்லை .அவருக்கு  ஒரு தோழர் தோள் கொடுக்க,நான்   ஊழலை ஒழிக்க உண்மையில் யார் போராடியிருக்க வேண்டும் ? என சிந்தியுங்கள் என்ற கேள்வியுடன் அவர்களிடமிருந்து விடைபெற்றேன் .

உண்மையில் ஊழலை ஒழிக்க  யார் போராடியிருக்க வேண்டும் ? சிந்தித்தால் தெரியும் இந்த போலிகளின் வண்டவாளங்கள்.

இன்றைய பத்திரிக்கை செய்தி . என்னவென்றால் பிரிட்டனில்  செல்வந்தர்கள் மட்டுமல்ல டாக்ஸி டிரைவர்களும் ,சிப்ஸ் கடை வச்சிருக்கரவர்களும் வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனராம் .
இதிலிருந்து என்ன தெரியுது ?.பணத்த பதுக்கிறதுல பேதம் இல்லைனு.

கருப்புப்பணம்,ஊழல் எல்லாம் உலகம் முழுதும் உள்ள பிரச்சனை.அதனை உலகலாவிய கண்ணேட்டத்துடன் எல்ல இடங்களிலும் ஒழிய தீர்வை யோசிக்கவேண்டும் .அதனை விடுத்து அவன் போராடுரான்,இவன் போராடுரான் என்னு சும்மா வெட்டிப்பேச்சு பேசக்கூடாது.

இருந்தாலும் ,இந்திய பகுத்தறிவு வாதத்தில்  ஊழல் வராது .
இந்திய கம்யூசத்தில் கருப்புப்பணம் அடங்காது .

ஏன்னா ?.

ஊழலில் கடவுள் இல்லை .
கருப்புப்பணத்தில் சுரண்டல் இல்லை.

ஊழலிலும்,கருப்பு பணத்திலும் மதமோ,இனமோ எதுவும்  இல்லை .அதனால் இதனை எதிர்த்து போராடுபவர்களிடமும் மதமோ,இனமோ எதுவும் பார்க்க வேண்டியதில்லை.


அடடா மறந்தே போச்சு .இதைப்படிச்சுட்டு ,அடே சாமியார் பயலுகலா ஓடுங்கடா இனி ஊழலையும்,கருப்புப்பணத்தையும் பாத்துக்க நாங்க இருக்கோம் ,நீங்க போய் பஜனை பண்ணுங்கடா என்ற கோசத்துடன்  இதோ எங்க சொத்து கணக்கு என பகுத்தறிவாதிகளும்,காம்ரேட்டுகளும்,கா.க.கி.கா.தா.க.மா.க.தி.க.களும் போராட்டத்தில் குதிக்க வீதிக்கு ஓடிவந்தா... அதற்கு நான் பொறுப்பல்ல.







.
Download As PDF

11 கருத்துகள் :

நிரூபன் சொன்னது…

ஊழல் பற்றிய சரியான பார்வையினையும்,
பாபாராம் போல அரசியல் வாதிகளும் போராட்டத்தில் குதித்தால் மக்களின் நிலமை என்னவாகும் என்பதனையும் பகிர்ந்துள்ளீர்கள்..

கடைசிப் பந்தி..ஹி.....ஹி....

பெயரில்லா சொன்னது…

///ஊழலில் கடவுள் இல்லை .
கருப்புப்பணத்தில் சுரண்டல் இல்லை.

ஊழலிலும்,கருப்பு பணத்திலும் மதமோ,இனமோ எதுவும் இல்லை .அதனால் இதனை எதிர்த்து போராடுபவர்களிடமும் மதமோ,இனமோ எதுவும் பார்க்க வேண்டியதில்லை.//நீங்கள் சொல்வது சரி தான் பாஸ் ..

ஹேமா சொன்னது…

பணம் சுரண்ட மதம் தேவையில்லை....ம் !

பெயரில்லா சொன்னது…

ஊழலுக்கு எதிராக மக்கள் போராடமல் மவுனித்தி இருப்பதால்.. சாமியார்கள் எல்லாம் கோதாவில் இறங்கி விட்டார்கள் ...

இந்த சாமியார் ஸ்காட்லாந்தில் ஒரு குட்டித் தீவே வாங்கி விட்டுள்ளாராம் ? அந்தப் பணத்தைப் பற்றி ஒரு விரிவானத் தகவலையும் காணோம் ... என்ன செய்ய ?

மதவாதிகளுக்கு மக்கள் தேவை .. அவர்கள் சொல்வதை நம்பி தலையாட்டவும், வாக்குப் போடவும்.. எல்லாத்துக்கும் மேலாக காணிக்கைப் போடவும் ... !!!

நல்லப் பதிவு பாஸ் !!! நீங்க சொன்ன விதம் அருமையாக இருக்கு !

THOPPITHOPPI சொன்னது…

வேதனையான விஷயம் சாதரணாமா நடக்குது நம் நாட்டில்

சசிகுமார் சொன்னது…

யாரை தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

எல்லாரும் பிரபலமடைய முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள்...

ஷர்புதீன் சொன்னது…

//எல்லாரும் பிரபலமடைய முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள்...//

அப்ப சுஜாதா சொன்னது உண்மைதானா ? ( 15 நிமிட பரபரப்பு )

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

நரி வேஷம் கலையுதே இப்ப..
ஆயுதம் தாங்கி போராட்டமாம்.. RSS இன் அடுத்த யுத்தம் ஆரம்பம்..

ராம்தேவ் ன் சொத்து கணக்கு கேட்டதுமே , கணினி ஹேக்கிங் ஆரம்பிச்சாச்சு..

பார்ப்போம் இவர் நாடகத்தை.

கவி அழகன் சொன்னது…

ஊழலில் கடவுள் இல்லை .
கருப்புப்பணத்தில் சுரண்டல் இல்லை

வேதனையான விஷயம்

kankaatchi.blogspot.com சொன்னது…

ஆன்மிகம் முதலில்லாமல்
கொழுத்த லாபம் தரும் ஆபத்தில்லாத தொழில்

புளுகுகளை அவிழ்த்துவிட்டால் போதும்
சில புளுகர்களை பக்கத்தில் வைத்துகொண்டு
இப்புவியில் கோடி கோடியாய் குவித்திடலாம்

மக்களை வாய் ஜாலத்தால் ஏமாற்றி
கொழுத்திடும் அரசியல்வாதிகளின் ஆதரவும்
சேர்ந்துவிட்டால் போதும்
அவர்களே கடவுளாவார்
அதற்க்கு அப்பாவி மக்களனைவரும்
ஆடுபோல் பலியாவார்

ஏது சொல்ல இவர்களைப்பற்றி
எத்தனை முறை உரைத்தாலும்
ஏறாது இதுவும் இவர்கள் காதுகளுக்கு

பாவம் சூது வாது அறியாத மக்கள்
இந்த ஆன்மீக வாதிகளும் தம்மைபோல்தான்
இருப்பார்கள் என்று நம்பி மோசம் போகின்றார்
அவர்களை படித்தவன்தான் நல்வழிபடுத்த வேண்டும்
ஆனால் நடப்பதென்ன ?
அவனுமஅல்லவோ
அயோக்கியர்களுடன்
கூட்டு சேர்ந்துவிட்டானே
என்ன செய்ய ?

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "