ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

அணு மின் நிலையங்கள் ஆபத்தானவையா ? -ஒரு பார்வை.





கூடங்குளம் அணு உலை பற்றியும் ,அதற்கு எதிரான மக்களின் போராட்டம் பற்றியும் அவ்வப்போது பதிவிட்டு பதிவுலகிற்கு உண்மை நிலையை கொண்டுசேர்த்தவரும், தற்பொழுது 8வது நாளாக அறவழி உண்ணாவிரத மக்கள் போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்தி போராடி வருபவருமான சகோ கூடல் பாலா அவர்களுக்கு எனது முதற்கண் வந்தனங்கள் .



அணுவிஞ்ஞானிகள் எந்த நாளில் Nuclear fission யை பரிசோதித்து பார்த்தனரோ அன்றிலிருந்தே அவர்களின் விஞ்ஞானஅறிவு
மனித உயிர்களை ருசி பார்க்க ஆரம்பித்துவிட்டது .

அணு குண்டினால் ஏற்பட்ட அழிவைப்பார்த்த அணு விஞ்ஞானிகள்,
ஆக்க சக்திக்கும் பயன்படுத்தலாம் அணுவை அழிவு சக்திக்கும் பயன்படுத்தலாம் என ஆக்க சக்தியின் முன்னவராக அணு உலைகளையும் அழிவு சக்தியின் முன்னவராக அணுகுண்டையும் குறிப்பிட்டு , தங்களின் கண்டுபிடிப்பு மனித குலத்திற்கு பயன்படவே என்றும் , அதனை அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்தக்கூடாது,ஆக்க சக்திக்கே பயன்படுத்தவேண்டும் என்றும்கூவி...நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஏனெனில் , அணு விஞ்ஞானிகளான தங்களை மனித குல விரோதிகளாக வரலாறு சித்தரித்துவிடுமே என்ற அச்சத்தில் .ஆனால், அணு உலைகளினால் கடந்த காலங்களில் ஏற்பட்ட மனித இழப்புகளைப் பார்த்து  அவர்கள் தங்களின் ஆக்க சக்தி என்ற பொய்யுரை வெட்டவெளிச்சமாகிவிட்டது கண்டு  மௌனமாகி விட்டனர் .


அணு சக்தியை சரியாக முறையாக பாதுகாப்பாக பயன்படுத்தும் அறிவு இன்னும் வளரவே இல்லை என்பதுவே உண்மையிலும் உண்மை.
அதற்கான ஆய்வில் முயற்சியில் ஈடுபடாமல்,கண்டுபிடித்ததை உடனே பயன் படுத்திப் பார்க்கும் ஆசையில் ,ஆபத்தைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் ,மனித உயிர்களின் மதிப்புதெரியாது, உணராது. அமெரிக்காவின் த்ரீ மைல் ஐலண்ட் , ரஷ்யாவின் செர்னோபில் மற்றும்  ஜப்பான்...இவ்வாறு தொடர்ந்து  மனித இழப்புகளை அணுவிஞ்ஞானம் செய்துவருமானால் எதிர்காலத்தில் மக்களின் எழுற்சியினால் அறிவியலில் இருந்து அணுவிஞ்ஞானம் தூக்கியெறியப் பட்டு விடும்  என்பதோடு அணு விஞ்ஞானிகள் அனைவரும் மனிதகுல சத்ருக்களாக  வரலாற்றில் அறியப்படுவர் என்பதே திண்ணம் .



இன்று 8 வது நாளாக கூடங்குளத்தை அடுத்துள்ள இடிந்தகரையில்
127 நமது உறவுகள் நமது எதிர்கால நலனை முன்னிட்டு 
உண்ணாவிரதப் போராட்டத்தினை  மேற்கொண்டு வருகின்றார்கள்.

இப்போதுள்ள மின்பற்றாக்குறையான நேரத்தில்,அணுஉலை அவசியம் தானே ,அதனால் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட போராட்டம் தேவை தானா
என கேட்கும் சுய நலமிகளின் சுயநலம் மிக்க கேள்வி மிகவும் முட்டாள் தனமான  ஒன்றாகும்.அணு உலையியால் வெறும் 4% மின் தேவைகள் தான் பூர்த்தி செய்யப்படுகிறது இந்தியாவில் . ஜப்பானில் அணு உலைகள் 34% மின்தேவையை பூர்த்துசெய்துவந்தது என்பதனையும்,தற்பொழுது அணுஉலைகள் பல முடப்பட்டுவிட்டது என்பதனையும், அதனால் ஜப்பான் இன்று இருளில் மூழ்கிப் போய்விடவும் இல்லை என்பதனையும் முதலில் அறியவும். ஜெர்மனியில் 7 உலைகள் மூடப்பட்டு விட்டன.

இப்போது இவ்வளவு பெரிய போராட்டத்திற்கான காரணத்தை காண,

நமது அரசுக்கே, ஜப்பான் விபத்துக்குப்பின் தான் கடலோர அணு உலைகளால் பெரிய ஆபத்துகள் 100 % சாத்தியம் என்பதே தெரியவந்துள்ளது என்பதுவே உண்மை.அதுபோலத்தான் கூடங்குலத்திலுள்ள பெரும்பான்மையான மக்களுக்கும் அணு உலைபற்றிய விழிப்புணர்வு இப்போது தான் வந்துள்ளது.அதனால் தான்  இப்பொழுது போராடுகின்றனர் அவ்வளவே.

மேலும்,இது சம்பந்தமான பல அமைப்புகள் இதற்கு முன் போராடிக்கொண்டும் வந்துள்ளன .

மேலும்,இது முழுக்க முழுக்கஅணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் மட்டுமே ஆகும்.இதில் அரசியல் எதுவும் இல்லை.

அதோடு அவர்கள் தமிழக எதிர்கால நலனை முன்னிட்டே போராடுகின்றனர் .

அறவழியில் இத்தனை மக்கள் போராடுவது மிகவும் மதிக்கக்கூடிய ஒன்றாகும் .

அவர்களின் போராட்டம் மிகவும் நியாயமானதும் ஆகும்.
மேலும் கட்டாயம் இது வெற்றிபெற்றே ஆகவேண்டும்  .
இது அணு உலைக்கு எதிராக போராட்டங்களில் உலகிற்கு முன்னுதாரணமான போராட்டமும் ஆகும்.

அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போம்.
வெற்றிபெற ஒன்றிணைவோம்.



நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு

நண்டு @நொரண்டு












Download As PDF

36 கருத்துகள் :

Admin சொன்னது…

அணுஉலையின் ஆபத்தை பற்றியும், அது இல்லாமல் போனால் நமக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்பதையும் விளக்கமாக எழுதியதற்கு நன்றி நண்பரே!

அரசியல் சாயம் பூசாமல் அனைவரும் ஒன்றிணைந்து இதனை தடுத்து நிறுத்த வேண்டும். ஆளும் வர்க்கத்தினரும் இதனை அரசியலாக பார்க்காமல் இருந்தால் நல்லது.

குறையொன்றுமில்லை. சொன்னது…

அவர்களின் போராட்டம் மிகவும் நியாயமானதும் ஆகும்.
மேலும் கட்டாயம் இது வெற்றிபெற்றே ஆகவேண்டும் .
இது அணு உலைக்கு எதிராக போராட்டங்களில் உலகிற்கு முன்னுதாரணமான போராட்டமும் ஆகும்.



அவர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும்

சம்பத்குமார் சொன்னது…

அரசாழ்வோரே..
சுதந்திர காற்றை சுவாசிக்க..
அகிம்சைக் கொடியேற்றிவிட்டு
உயிர்களின் சுவாசத்தை
பறிக்கப் போகும்
அணு உலைக் கொடியேற்ற துடிப்பது ஏன்?

அரசியல் சாயம் ஏதுமின்றி போராட்டம் வெற்றி பெற நாமும் ஆதரவளிப்போம்

நன்றியுடன்
சம்பத்குமார்

மகேந்திரன் சொன்னது…

அழகாக விரிவுரை தந்துள்ளீர்கள்...
போராட்டத்துக்கு துணை நிற்போம்...
வெற்றி பெறுவோம்....

Vijayan Durai சொன்னது…

//இப்போதுள்ள மின்பற்றாக்குறையான நேரத்தில்,அணுஉலை அவசியம் தானே?? //
இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது ,
தெளிவான சிந்தனை, தெளிவு பெற்றேன்..  வாய்மை வெல்லும்.

கோகுல் சொன்னது…

அணுவிஞ்ஞானிகள் எந்த நாளில் Nuclear fission யை பரிசோதித்து பார்த்தனரோ அன்றிலிருந்தே அவர்களின் விஞ்ஞானஅறிவு மனித உயிர்களை ருசிபார்க்க ஆரம்பித்துவிட்டது .//

அந்த ருசிக்கு மேலும் யாரும் இரையாகாமலிருக்க இணைவோம்!
தெளிவாக எடுத்துரைதுள்ளீர்கள்!நன்றி!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இது அணு உலைக்கு எதிராக போராட்டங்களில் உலகிற்கு முன்னுதாரணமான போராட்டமும் ஆகும்.


உண்மைதான் நண்பரே..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போம்.
வெற்றிபெற ஒன்றிணைவோம்.

குரல் கொடுப்போம்.

வலையுலகின் ஆளுமையை வெளிப்படுத்துவோம்.

ம.தி.சுதா சொன்னது…

படிச்சவங்களுக்கு பாதிப்ப தெரியுது..
ஆணவம் பிடிசசவங்களுக்கு தெரியலியே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

மாய உலகம் சொன்னது…

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_18.html

Ranjith சொன்னது…

நல்ல பதிவு

கவி அழகன் சொன்னது…

வெற்றிபெற ஒன்றிணைவோம்.

துபாய் ராஜா சொன்னது…

//அணு சக்தியை சரியாக முறையாக பாதுகாப்பாக பயன்படுத்தும் அறிவு இன்னும் வளரவே இல்லை என்பதுவே உண்மையிலும் உண்மை.//

// இப்போதுள்ள மின்பற்றாக்குறையான நேரத்தில்,அணுஉலை அவசியம் தானே ,அதனால் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட போராட்டம் தேவை தானா என கேட்கும் சுய நலமிகளின் சுயநலம் மிக்க கேள்வி மிகவும் முட்டாள் தனமான ஒன்றாகும். அணு உலையியால் வெறும் 4% மின் தேவைகள் தான் பூர்த்தி செய்யப்படுகிறது . ஜப்பானில் அணு உலைகள் 34% மின்தேவையை பூர்த்துசெய்துவந்தது என்பதனையும்,தற்பொழுது அணுஉலைகள் பல முடப்பட்டுவிட்டது என்பதனையும், அதனால் ஜப்பான் இன்று இருளில் மூழ்கிப் போய்விடவும் இல்லை என்பதனையும் முதலில் அறியவும். ஜெர்மனியில் 7 உலைகள் மூடப்பட்டு விட்டன.//

அனைவரும் அறிய வேண்டிய,அறியாதவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

kobiraj சொன்னது…

''அவர்களின் போராட்டம் மிகவும் நியாயமானதும் ஆகும்.
மேலும் கட்டாயம் இது வெற்றிபெற்றே ஆகவேண்டும் .
இது அணு உலைக்கு எதிராக போராட்டங்களில் உலகிற்கு முன்னுதாரணமான போராட்டமும் ஆகும்.'
'வெற்றிபெற ஒன்றிணைவோம்.
ஓட்டு போட்டாச்சு

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பேஸ்புக், டுவிட்டர், பஸ் எல்லாத்திலும் உங்கள் பதிவை பகிர்ந்து விட்டேன் மக்கா....

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல பதிவு

Yaathoramani.blogspot.com சொன்னது…

அணு உலை ஆபத்து குறித்து
மிகத் தெளிவான விரிவான பதிவைத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி த.ம 10

வின்சென்ட். சொன்னது…

இன்றைய சுழல்நிலைக்கு தேவையான பதிவு. இது பற்றிய எனது பதிவுகளைக் காண:
http://maravalam.blogspot.com/2011/04/1.html
http://maravalam.blogspot.com/2011/04/2.html
http://maravalam.blogspot.com/2011/04/3.html

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி.

Sivaranjani சொன்னது…

Ths is the right post at the right time.. Everyone must get aware of this.. and me too get awared..

Unknown சொன்னது…

பல்வேறு விபரமான தகவல்களை தந்து புரியவைத்த பதிவு.நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கூடல் பாலா பதிவர் மனதில் என்றும் நிலைத்துவிட்டார்..

அவர்கள் போராட்டம் விரைவில் வெற்றிப்பெற வேண்டுகிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தாங்கள் இந்தவாரம் தமிழ்மண நட்சத்திரத்தில் இடம் பெற்று உள்ளீர்கள்....


நான் இந்த வாரம் சொந்த வேலைகளால் பதிவுலகம் வரமுடியாமல் இருந்தேன்....

அதனால்தான் யாருடைய பதிவுகளுக்கு என்னால் வரமுடியாமல் இருந்தது..

வாழ்த்துக்கள்...

சென்னை பித்தன் சொன்னது…

நன்று.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

ஆக்கத்திர்க்காக கூட அணு சக்தியை பயன் படுத்துவதில் உள்ள பாதிப்புகளை கூறியுள்ளீர்கள்.அணுசக்தி விஞ்ஞானிகளை பற்றி அழகாக விளக்கி யுள்ளீர்கள்.நல்ல தகவல் பதிவு. பகிர்வுக்கு நன்றி.

Unknown சொன்னது…

நல்ல பதிவு நன்றி நண்பா

Riyas சொன்னது…

நல்ல அலசல்,, நன்றி

சசிகுமார் சொன்னது…

அணு உலைகளின் ஆபத்தை எளிமையாக சொல்லி இருக்கீங்க

M.R சொன்னது…

அழகாக சொல்லி இருக்கீங்க நண்பா .

அணு சக்தியை சரியாக முறையாக பாதுகாப்பாக பயன்படுத்தும் அறிவு இன்னும் வளரவே இல்லை என்பதுவே உண்மையிலும் உண்மை.

உண்மை .பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை .

மாய உலகம் சொன்னது…

அரசியல் சாயம் பூசாமல் அனைவரும் ஒன்றிணைந்து இதனை தடுத்து நிறுத்த வேண்டும். ஆளும் வர்க்கத்தினரும் இதனை அரசியலாக பார்க்காமல் இருந்தால் நல்லது.

J.P Josephine Baba சொன்னது…

https://www.facebook.com/media/set/?set=a.212551635438610.69270.100000513256966&type=1# அணு உலை பற்றிய என் பதிவையும் கண்டு செல்ல அழைக்கின்றேன்.

காந்தி பனங்கூர் சொன்னது…

போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போம்.
வெற்றிபெற ஒன்றிணைவோம். போராட்டம் வெற்றிபெறுமென நம்புவோம்.

நிவாஸ் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நிவாஸ் சொன்னது…

அவை இல்லாமல் போனால் பணம் மட்டுமே நட்டம்

ஆனால் பாதிப்பு ஏதேனும் உருவானால் இழக்கப்போவது உயிர்களையும் எதிர்கால தமிழ் சந்ததிகளையுதான்

வேண்டாம் இந்த விசைப் பரீட்சை


அணுஉலைகள் என்பது

தலை அரித்தால் கொள்ளிக்கட்டையை கொண்டு சொரிவது போலாகும்

அருமையான பதிவு

அணுவுலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்

Unknown சொன்னது…

இன்று என்னுடைய பதிவு

வெற்றியை நோக்கி.... உண்ணாவிரதம் நாள் 9

பெயரில்லா சொன்னது…

போராட்டத்துக்கு துணை நிற்போம்...
வெற்றி பெறுவோம்....

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "