வெள்ளி, 23 செப்டம்பர், 2011

6,40,000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில் நாம் ஏன் உதவக்கூடாது ?

மனிதாபிமானம் கொண்ட நல்லிதயம் கொண்டீரே ,
நாம்  இன்னும் இந்த பூமியில் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோமா ?.
நாம் இருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் நாம் நமது மனிதாபிமான உதவிகளை செய்யாமல் இருக்கலாமா ? .

உடனே உதவிகள் செய்வோம் .... 

.........






















 
சோமாலியாவில் 6,40.000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்: சோமாலிய மக்களுக்கு நாம்  ஏன் உதவக்கூடாது ?
ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் 640.000 பிள்ளைகளை பட்டினி மரணத்தின் விளிம்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டதாக ஐ.நா அவசர அறிவப்பு விடுத்துள்ளது.
சோமாலியாவின் தெற்குப் பகுதியில் பட்டினி காரணமாக ஐந்து வயதுக்குட்டபட்ட சுமார் 29.000 பிள்ளைகள் கடந்த 90 தினங்களில் மரணித்துள்ளார்கள். பட்டினி வேகம் தொற்று நோய்போல பரவிக்கொண்டிருக்கிறது.

சோமாலியாவில் மட்டும் அடுத்த சில மாதங்களில் 640.000 பிள்ளைகள் பட்டினி மரணத்தை நெருங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏழுமாதமுள்ள சிறுமி ஒருத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவருடைய நிறை வெறும் 3.4 கிலோ மட்டுமே. ஐ.நாவின் வேண்டுகோள் பலமாக இருந்தாலும் அதற்கு உலகின் வளமுள்ள நாடுகள் பெரிதாக அக்கறை காட்டவில்லை.
ஆபிரிக்க கண்டத்தில் மிகவும் வறுமைப்பட்ட நாடாகவும் உலகிலேயே மிகவும் ஆபத்து மிக்க நாடுகளில் ஒன்றாகவும் இருப்பது சோமாலியா ஆகும். 1991ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தால் அப்போது ஆண்டு அவந்த அரசு கவிழ்ந்ததோடு பல விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஆரம்பமாகியது. பின்னர் அவ்வியக்கங்கள் அனைத்தும் தீவிரவாத அமைப்புகளாக மாறி இன ரீதியான அல்லது மதப் பிரிவின் ஆயுதக்குழுக்களாக மாறியது. இதனால் கொலைக்களமாக மாறியது சோமாலியா. அந் நாட்டில் உள்ள வறுமைக்கோட்டிற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் சென்று சரண்டைந்தனர். தமிழர்களைப் போல சோமாலியர்களும் தமது சொந்த நாட்டில் இருக்க முடியாது பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
தற்போது சோமாலியாவில் இருக்கும் அரசானது மூன்றில் 1 பங்கு நிலத்தைக்கூட தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். உலக நாடுகள் அனைத்தும் சோமாலியாவை (Fஆஈள் ஸ்TஆTஏ) அதாவது தோல்வியடைந்த நாடு என்று பொருட்பட அழைப்பார்கள். போராளிகள் ஒருபக்கம், தீவிரவாதிகள் ஒருபக்கம் மற்றும் அரசாங்கம் ஒருபக்கம் என இருக்கும் நிலையில் அங்கே உள்ள மனிதர்கள் நிலை படுமோசமாக இருக்கிறது. சத்தான உணவுகள் இன்றி மக்கள் இறப்பது என்றால் அது சோமாலியாவாகத் தான் இருக்கமுடியும். அளவுக்கு அதிகமான வெப்பம், மழை வீழ்ச்சி குறைவு எந்தப் பயிரையும் பயிரிட முடியாத நிலை என்பன போக 100 அடிக்கு வெட்டினால் கூட தண்ணீர் கிடைப்பது இல்லையாம். இப்படியும் ஒரு பூமியா ? என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
இங்கே இருக்கும் ஆடு மாடுகள் தொடக்கம் மனித இனம் வரை சொல்முடியாத துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். பிறந்த நாள் முதல் இதுவரை ஒரு பிஸ்கட் துண்டைக் கூடக் கடித்துப்பார்க்காமல் இறந்த குழந்தைகள் இங்கே தான் இருக்கிறார்கள். சாக்கிளேட் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகளும் இங்கே தான் இருக்கிறார்கள். சமீபத்தில் ரூய்டர்ஸ் செய்திச் சேவையானது வெளியிட்ட படங்கள் உலகை அதிரவைத்துள்ளது. பட்டினியால் செத்த குழந்தை இன்னும் சாகக்கிடக்கும் குழந்தை மற்றும் போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள். ஈழத் நடந்த போரில் பல ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்தார்கள் நாம் மறுக்கவில்லை. ஈழத்து நிலங்கள் பொன் விளையும் பூமி அங்கே நீர் இருந்தது விவசாயம் இருந்தது. கடற்கரைகள் இருந்தன. ஆனால் சோமாலியாவில் ஒன்றுமே இல்லை. இதுதான் வித்தியாசம்.
உணவு இல்லை என்றால் கடிப்பதற்கு ஒரு கொய்யாக் காய் இல்லை மாம்பழம் அதுவும் இல்லாவிட்டால் ஒரு பப்பாப்பழமாவது எமது ஊரில் கிடைக்கும். ஆனால் சோமாலியாவில் பஞ்சு மட்டும் தான் மரமாக இருக்கிறது. சிலவேளைகளில் தினை கிடைக்கும். அதிலும் கஞ்சிவைத்தே உண்ண முடியும். இப்படியான நிலையில் வாழும் அம்மக்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, அங்கே இருக்கும் குழந்தைகளுக்காவது புலம் பெயர் வாழ் தமிழர்கள் உதவவேண்டும். தம்மாலான உலர் உணவுகளை வழங்கி பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு 1 நேரச் சாப்பாடாவது கிடைக்கச் செய்யவேண்டும். சர்வதேச சூழலில் பணம் படைத்த மேற்குலக நாடுகள் சோமாலியாவை கண்டும் காணாததுபோல உள்ளனர். அங்கே எண்ணை வளம் இருந்திருந்தால் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு போய் நின்றிருக்கும் மேற்குலகம். ஆனால் அங்கே ஒன்றுமே இல்லையே..
உலகில் பரந்துவாழும் தமிழர்கள் கஷ்டம் என்றால், பட்டினி என்றால் இல்லை மரணபயம் என்றால் என்ன என நன்கு உணர்ந்தவர்கள். அதனால் அவர்கள் மனம் வைத்தால் இதனை ஒரு சிறிய உதவியாகச் செய்யலாம். தமது பிள்ளைகளுக்கு உணவுகளை வாங்கும்போது சோமாலிய பிள்ளைகளுக்கு ஒரு உலர் உணவை வாங்கி அதனை அங்கே அனுப்பிவைக்கலாம். இதனை தாய் தந்தையர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் சேர்ந்து செய்யவேண்டும். தமிழீழ பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து சோமாலியப் பிள்ளைகளுக்கு உணவுகளை அனுப்பிவைத்தால் சர்வதேச அளவில் தமிழ் சிறுவர்களின் நடவடிக்கை பாராட்டப்படும். தமிழர்களின் இரக்க குணத்தை உலகறியச் செய்ய , நாமும் ஒரு சோமாலியக் குழந்தைக்கு உணவு கொடுப்போம்.

http://www.google.com/hostednews/ap/article/ALeqM5hK9hiMpCZp6GAiO8HBQAxT_O1Jmw?docId=93b79e4575dd43b2a71486e26d474a20
http://www.wtsp.com/news/national/article/204731/81/29000-children-dead-from-famine-in-Somalia
http://www.unfoundation.org/
http://www.unicefusa.org/

http://www.salem-news.com/articles/august092011/help-somalia-cf.php
உதவி செய்ய விரும்புவோர் சர்வதேச அமைப்புகளின் ஊடாக தொடர்பு கொள்ளலாம்
Somali refugees need your help now!
End Famine in Somalia - Somalia Famine: Millions are hungry!
Somalia Emergency - Food and shelter urgently needed!
United Nation High commission for Refugees (UNHCR)
International Committee of the Red Cross (ICRC)
Somalia's Children Caught in the Crossfire














 

























நன்றி :முத்தமிழ்
சென்னை
 

















































































































































































































































Download As PDF

25 கருத்துகள் :

Mohamed Faaique சொன்னது…

இவ்வளவு விஞ்ஞ்சானமும் தொழினுட்பமும் முன்நீரிய காலத்தில் ஒரு நாடு மக்களின் இப்படி அவல நிலையை பார்த்துக் கொண்டிருப்பது அவமானமே!! நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் ..

கோகுல் சொன்னது…

புகைப்படங்களைப்பார்தாலே கல்லுக்குள்ளும் ஈரம சுரக்கும்!
நிச்சயம் தமிழர்களின் இரக்க உணர்வை உலகறியச்செய்வோம்!

தனிமரம் சொன்னது…

சர்வதேச உதவி நிறுவனங்கள் செல்வந்த நாடுகள் நிச்சயம் உதவ முன்வரவேண்டும்! ஊர் கூடி தேர் இழத்தால் அழிவைத் தடுக்கலாம்!

நிரூபன் சொன்னது…

வேதனையான விடயம்,
உலகின் மனிதாபிமான அமைப்புக்கள் கண் திறந்தால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.

பெயரில்லா சொன்னது…

இன்னும் எவ்வளவு காலம் தான் அவர்கள் சபிக்கப்பட்டவர்களாய் இருப்பார்களோ தெரியாது...
அவர்களைப்போல் இன்னும் எவ்வளவோ...

நான் நம்பும் ஒரு நிறுவனம்...

http://foodforthepoor.org/

ரெவெரி

மாய உலகம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மாய உலகம் சொன்னது…

நிச்சயம் நமது மனிதநேயத்தை இரக்க உணர்வை உலகறியச்செய்வோம்! நன்றி சகோ

எனது வலைப்பூவில் இந்த பதிவின் லிங்கை உடனே குறிப்பிட்டு விடுகிறேன்... நன்றி

Unknown சொன்னது…

நண்பரே முயற்சிக்கிறேன்....எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் துடைக்கப்பட வேண்டிய விஷயம்!

M.R சொன்னது…

படங்களை பார்க்கும் பொழுதே மணம் இப்பிடி
வேதனை படுகிறதே நேரில் பார்க்கும்பொழுது ...

வதனையாக உள்ளது நண்பரே

M.R சொன்னது…

இந்த விஷயம் அனைவரையும் சென்று சேர

தமிழ் மணம் ,இன்ட்லி வாக்களித்தேன் .

ceekee சொன்னது…

The World watched in deafening silence and complete inaction the unimaginably horrible, gruesome and mercilessly brutal slaughtering of innocent people including women - even pregnant women and women with suckling babies, patients and injured taking treatment in hospitals, school-going children, soldiers who chose to give up arms and surrender, sick, aged and ordinary people in thousands in broad daylight. Not long ago, that highly planned, meticulously and rigorously executed racist butchering - that willful and wanton genocide took place in the "democratic republic" of Srilanka and the "developed" and "cultured" West and international organizations such as UN chose to remain passive and mute spectators ...

And now it is poverty and death in Africa.
Will we fare any better ?

vidivelli சொன்னது…

நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி சகோ.
நலமா?
மனதை பிழிகிறது படங்கள்.
உயிர்கள் செத்துக்கொண்டிருக்கும் போதே பார்க்காத ஐ.நா என்ன செய்யும் கேள்விதான்.நல்ல சேவை, மனிதாபிமானமுடன் பதிவு செய்திருக்கிறீங்க.

சசிகுமார் சொன்னது…

பார்க்கும் போதே கண்கள் கலங்குகிறது நண்பரே உலகின் ஒரு பக்கம் இது போல இருந்தால் இன்னொரு பக்கம் நம் நாட்டு அரசாங்கம் உணவு பொருட்களை மக்க வைத்து கடலில் கொட்டுகிறது. பாவம் இது போன்ற மக்களுக்கு கொடுத்தால் அவர்களின் உயிரையாவது காப்பாற்றலாம்.

காந்தி பனங்கூர் சொன்னது…

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களிக்கு உதவ எம்மால் முடிந்ததை கண்டிப்பாக செய்தாக வேண்டும்.

சர்வதேச அமைப்புகளை தொடர்புகொண்டு அவர்களிடம் உதவுவது என்பது இயலாத காரியம் என நினைக்கிறேன். அதனால் உள்ளூர் அமைப்புகள் எதாவது வழி நடத்தி சென்றால் நம் மக்கள் உதவி செய்ய வசதியாக இருக்கும்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

படங்கள் பார்க்கும் போதே மனசு கலங்குதே, நம்மாலும் முடிந்ததைச்செய்வோம்.

பால கணேஷ் சொன்னது…

படங்கள் இதயத்தை கனக்க வைத்தன. நாம் நம்மால் முடிந்ததைச் செய்வோம்!

பெயரில்லா சொன்னது…

இம்மாதிரியான படங்களை
அடிக்கடி காண நேரிடுகிறது ...
ஒவ்வொரு முறை
மனதை நெருடத்தான் செய்கிறது..
ஆதரவு கரம் நீட்ட அனைவரையும்
அழைத்ததற்கு நன்றி.....
நன்றி சகோ ............

சக்தி கல்வி மையம் சொன்னது…

நண்பர் சசியின் கருத்தையே நானும் வழி மொழிகிறேன்..

Unknown சொன்னது…

விஞ்ஞான வளர்ச்சியின் மறுபக்கம் ஏன் இத்தனை கொடியதாக இருக்கிறது? ஒரு புறம் உணவுப் பொருட்கள் வீணாகின்றன! மறுபுறம் பட்டினிச்சாவுகள்! வளர்ந்த நாடுகள் உடனடியாகத் தலையிட்டு,சண்டையிடும் ஓநாய்களைக் களைந்து, அம்மக்களைக் காப்பாற்ற வேண்டியத் த்ருணமிது! ஐ.நா வின் கட்டுப்பாட்டில் அந்நாடு கொண்டு வரப்பட வேண்டும்!

மகேந்திரன் சொன்னது…

நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் ..

Unknown சொன்னது…

கண்கள் குளமாக கண்டேன் படங்களய்யா
தொண்டு உளங்கொண்டோ உடன்
தொடங்கிடிலோ் குழு வொன்றே
கண்டுஉதவிடவே கருதுகின்றார் செய்வார்கள்
நன்று பதிவையய்யா நன்றி ஆமயய்யா

புலவர் சா இராமாநுசம்

Unknown சொன்னது…

கல்லையும் கரைய வைக்கும் உண்மை - நெகிழ்வான பதிவு.
நேசக் கரம் நீட்டுவோம்.

கும்மாச்சி சொன்னது…

மிக நெகிழ்வான பதிவு. நம்மால் இயன்றதை செய்வோம்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

படங்கள் பார்த்து பயந்து போனேன்
சாப்பிடுகையில் நினைவு வர
மன்ம் மிகச் சங்கடப்படுகிறது
விளக்கப் பதிவும் அருமை

Yaathoramani.blogspot.com சொன்னது…

த.ம 23

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "