பொதுவாகவே நாம் எதையும் விளையாட்டாகவே பார்த்துப் பழக்கப்பட்டு விட்டோம் .அதுபோலவே நாம் எந்த விளையாட்டையும் விளையாட்டாகவே பார்த்துப் பழக்கப்பட்டும் விட்டோம். ஆனால்,அனேக நவீன விளையாட்டுகள் விளையாட்டாக இருப்பதில்லை என்பதுவே உண்மையிலும் உண்மை .
இதை சிலவற்றை கண்டு தெளிந்தேன்.
இன்று இங்கு ஒவ்வொரு நவீன விளையாட்டும் தன்னுள்
சில நச்சு தீயையும்,தீவிரத்தையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது.
சமீபமாக அனேக இளைஞர்களும்,குழந்தைகளும் கணினி விளையாட்டை அதிகமாக விரும்பி விளையாடி வருகின்றனர் . அத்தகைய கணினி விளையாட்டில் எவ்வளவு நஞ்சை கலக்கமுடியுமோ அவ்வளவு நஞ்சை கணினி விளையாட்டு தயாரிப்பாளர்கள் தங்களின் பணம் பண்ணும் சுயநலத்திற்காக கலப்பதுடன் பிறரை கொஞ்சைப்படுத்துவதும் மிகவும் தாராளமாகவே நடந்துவருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாக இருக்கிறது.
அப்படியான ஒரு நவீன விளையாட்டை சமீபமாக நான் பார்த்தேன் .
அதில்
சிங்கள சிப்பாய்களை கதாநாயகர்களாகவும்,
தமிழ்ப் போராளிகளைத் தீவிரவாதிகளாகவும் காட்டியது
UbiSoft என்ற நிறுவனம்.
2010 கடைசியில்
Ghost Recon 4 -Ghost Recon: Predator என அறிமுகப்படுத்திய விளையாட்டில்.
அப்பொழுது உதித்தது தான் நவீன விளையாட்டு விளையாட்டுக்களல்ல என்பது .
இந்த காணொளியை பாருங்கள்.
மேற்கண்ட நவீனவிளையாட்டைப்பற்றிய விபரங்கள் வெளிவந்த உடனே சில முயற்சிகள் எடுக்கப்பட்டன.
ஆனால்,பதிவுலகமும் சரி ,மற்ற ஊடகங்களும் சரி இதன் ஆழத்தை சரிவர புரிந்துகொள்ளாதபடியால் முயற்சிகள் முழுமையடையவில்லை.
நாம் எதையும் புரிந்துகொள்வதில் சற்றுப்பின் தங்கித்தான் போயுள்ளோம் .
பொரும்பான்மையான விசயங்களை நாம் தெரிந்துகொள்வதேயில்லை.
தெரிந்துகொண்டாலும் கண்டுகொள்ளவதும் இல்லை,கவலைப்படுவதும் இல்லை.
இத்தகைய விளையாட்டுகள் தான் இன்றைய இளைய சமுதாயத்தை சீரழிக்கின்றன.தவறான புரிதலையும் பாதையையும் ஆழ்மனத்தில் ஊன்றிவிடுகின்றன.அவைகள் தான் பின்னாளில் பகைமையாக வளர்கின்றன.
பொய்மையையும் ,வன்மத்தையும்,வெறியையும் ,பகைமையையும்
பிஞ்சு உள்ளங்களில் நஞ்சாகவிதைக்கும் இத்தகைய விளையாட்டுகள் தடைசெய்யப்படவேண்டும்.
இனி நாம் நமது குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும்
இத்தகைய நஞ்சான விளையாட்டுக்கள் விளையாட்டாகக்கூட சென்று சேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
அது தான் நாம் நமது சமூதாயத்திற்குச்செய்யும் நன்மைபயக்கும் செயலாகும்.
Tweet |
|
27 கருத்துகள் :
அந்த விளையாட்டை தடை செய்ய என்ன பண்ணலாம் ?
என்று என் வலையில்
உங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..
ஆமாம், பிஞ்சு வயதில் என்ன கற்றுக்கொள்கிரார்களோ அது தான் அவர்களின் எதிர்காலத்தில் பிரதிபலிக்கும். விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள்.
ஆமாங்க சின்னக்குழந்தைகள் கூட துப்பாக்கி வச்சு மத்தவங்களைச்சுடும் விளையாட்டுதான் விரும்புராங்க. இதை பெரியவங்க தடுத்தே ஆகனும்.
இவ்வளவு நாளும் ஆப்கானிய, இராக்கிய போராளிகளை தீவிரவாதிகளாக காட்டியது, அது யார் கண்ணிலும் படவில்லை. இப்பொழுது தமிழர்கள் செய்தால் எதுவும் தப்பில்லை என்பதால் கவலைப் படுகிறோம்
நீங்கள் சொன்ன கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இதை போன்ற விளையாட்டுக்களை தாடை செய்தல் நலமே!!
சிறுவர்வர்கள் அடுத்தவர்களை சுடத் தான் விரும்புகிறார்கள்
இனி நாம் நமது குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும்
இத்தகைய நஞ்சான விளையாட்டுக்கள் விளையாட்டாகக்கூட சென்று சேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
அது தான் நாம் நமது சமூதாயத்திற்குச்செய்யும் நன்மைபயக்கும் செயலாகும்.
அருமையான கருத்தை சொல்லியிருக்கீங்க நண்பரே
சூப்பர் சார் நல்ல கருத்துக்கள்...
அன்பின் நண்டு - மழலைகள் கண்ணில் படாமல் இருக்கச் செய்வோம் - வேறு என்ன செய்ய முடியும் .....நட்புடன் சீனா
Dear Faaique,
//இவ்வளவு நாளும் ஆப்கானிய, இராக்கிய போராளிகளை தீவிரவாதிகளாக காட்டியது, அது யார் கண்ணிலும் படவில்லை//
தமிழர்கள் தங்களை ஆப்கனில்/இராக்கில் இருந்து வந்தவர்களாக கருதுவதில்லை!!. மற்ற படி மத வெறியர்களுக்கும் போராளிகளும் வேறுபாடு உண்டு.
கணினி விளையாட்டுக்கள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.5 வயதில் துவங்கிய கணினி விளையாட்டு 9வது படிக்கும் தெரிந்த ஒரு பையன் கணினியுடன் விளையாடுவது தவிர யாருடனும் எந்த ஒட்டுறவும் இல்லாமலே வளர்ந்தான்.பெற்றோர்களும் வளர்ந்தால் மாறிவிடுவான் என்ற நம்பிக்கையில் கண்டு கொள்வதாக இல்லை.இந்த வருடம் பெயில் ஆகி பள்ளியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று பிரின்சிபால் சொல்லும் போதே அவர்களுக்கு உறைத்தது.இந்தியாவில் விட்டால் திருந்துவான் என்று பூனே பக்கம் போர்டிங் பள்ளியில் சேர்த்தார்கள்.அங்கே கட்டுப்பாடான வாழ்க்கையும் பிடிக்காமல் அழுது பெற்றோர்களை தொந்தரவு செய்து திரும்ப குவைத் வந்து விட்டான்.இப்பொழுது வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.இதுல விசேசம் என்னன்னா பையனோட துப்பாக்கி சிடி பரிமாற்ற பெயிலாகிப் போன நண்பர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள்:)
தடுக்கப்பட வேண்டியது தான் நண்பா...எப்படி?
கொடுமையான விசயம் பாஸ்,
கேட்க யாருமே இல்லை என்ற ரீதியில் இவ்வாறு செய்கிறார்கள்.
இதனை எவ்வாறு தடுக்கலாம்?
பணம் பண்ணும் வேலை ...
நல்ல பதிவு.
நல்ல கருத்துக்கள்.
வர்ற கோவத்துக்கு...
விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள்.
இந்த நிறுவனத்துக்கு எதிராக உலக தமிழர் ஒன்று திரழ வேண்டும்
இந்தக் காணோளிகளைத் தயாரிப்பவர்கள்
மன நோய் பிடித்தவர்களாகவும்
பணவெறி பிடித்தவர்களாகவும் இருப்பார்கள்
நாம்தான் குழ்ந்தைகளுக்கு இது போன்ற
காணோளிகளின் விபரீதம் குறித்து புரியவைக்கவேண்டும்
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 10
தவிர்க்கப்படவேண்டியதே இவ்வாரான வீடியோக்கள்
இத்தகைய விளையாட்டுகளுக்கு இளைய சமுதாயம் அடிமையாகிப் போவதுதான் இன்றைய அவலம்.
I know Ubisoft intruduced this game, terrorism in SL. It has been couple of years, not many tamils aware of it. We are tamils, too busy with our own feud. what else to say. very sad.
\\நாம் எதையும் புரிந்துகொள்வதில் சற்றுப்பின் தங்கித்தான் போயுள்ளோம்//
உண்மைதான்.
தமிழ்மணம் இந்த வார நட்சத்திரம் ஆகியதற்கு வாழ்த்துகள்.
பொய்மையையும் ,வன்மத்தையும்,வெறியையும் ,பகைமையையும்
பிஞ்சு உள்ளங்களில் நஞ்சாகவிதைக்கும் இத்தகைய விளையாட்டுகள் தடைசெய்யப்படவேண்டும்.//
சூப்பர் கருத்து சார்... உண்மையில் தடை செய்யப்பட வேண்டிய ஒன்றே...
விழிப்புணர்வு பதிவு... வாழ்த்துக்கள்....Reverie
விழிப்புணர்வுப் பதிவு நிச்சயம் இப்படியான விளையாட்டுக்கள் தடை செய்யனும்!
பொதுவாக குழந்தைகளுக்கான வீடியோ/கணிணி விளையாட்டுகள் கருத்தாக்கம் சார்ந்து தரம் அற்றதே.
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "