புதன், 4 செப்டம்பர், 2013

கீதை ... எது உண்மை ? .


பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்களா?

பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையிலே எங்கே சொல்லப்பட்டுள்ளது என்று சில அரை குறைகள் உளறுகின்றன. எதைச் சொன்னாலும், எழுதினாலும் ஆதாரத்துடன் செய்வதுதான் திராவிடர் கழகத்துக்காரர்களின் அணுகுமுறை. 
இதுவரை தெரிந்திராதவர் களுக்கு, அறிந்திராதவர்களுக்கு இதோ ஆதாரம் கீதை (அத்தியாயம் 9 - சுலோகம் 32).
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள்
மாம் ஹி பார்த்த வ்யாபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு: பாப - யோனய:
ஸத்ரியோ வைச்யாஸ் - ததா சூத்ராஸ் - தேளு பி யாந்தி பராங்கதிம்
                  --------------------------------"விடுதலை” 3-9-2013&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः ।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ॥९- ३२॥

மாம் ஹி பார்த² வ்யபாஸ்²ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய: |
ஸ்த்ரியோ வைஸ்²யாஸ்ததா² ஸூ²த்³ராஸ்தேऽபி யாந்தி பராம் க³திம் || 9- 32||

ஹி பார்த² = ஏனெனில் பார்த்தா
ஸ்த்ரிய: வைஸ்²யா: ஸூ²த்³ரா: = பெண்களாயினும் எந்த வர்ணத்தவராயினும்
ததா² = அதே போல
பாபயோநய: = பாவிகளானாலும்
யே அபி ஸ்யு: = எவர்களாக இருந்தாலும்
தே அபி மாம் வ்யபாஸ்²ரித்ய = அவர்களும் என்னை தஞ்சமடைந்து
பராம் க³திம் யாந்தி = மேலான கதியை அடைகிறார்கள்

பாவிகளென்னைப் பணிவாராயினும்,
மாதரேனும், வைசியரேனும்,
சூத்திரரும் பரகதி பெறுவார்.பார்க்க 
ஒன்பதாம் அத்தியாயம்
 http://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-9 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


ஒன்னுமே புரியல  ...எது உண்மை. 


 தெரிந்தவர்கள் பகுத்தறிந்து சொல்லுங்கள்  .
.Download As PDF

7 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆதாரம் நன்று...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிலது புரியாமல் இருப்பதும் நன்று...

நம்பள்கி சொன்னது…

மனுதர்மத்தின் இன்னொரு பிரதியான பகவத் கீதை பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை இப்பொழுது பார்ப்போம். பகவத் கீதையின் 9ஆவது அத்தியாயத்தில் சுலோகம் 32 இப்படிச் சொல்கிறது.

மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு பாப யோனய
ஸ்திரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபி யாந்திபராம் கதிம்

அதாவது பெண்களும் சூத்திரர்களும் வைசிகர்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்களாம். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பகவத் கீதைகளில் “பாவ யோனி” என்பதை “கீழான பிறப்பு”, “இழி பிறப்பு” என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் நேரடியாகவே “born out of the womb of sin” என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

பகவத் கீதையின் பார்வையிலும் பெண் என்பவள் இழி பிறப்புத்தான். அவள் ஒரு பார்ப்பன வீட்டில் பிறந்திருந்தாலும், அது செல்லுபடியாகாது. கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான உரிமைகள் பெண்களுக்கும் மறுக்கப்பட்டுள்ளன.

முற்பிறப்பில் செய்த பாவத்தின் பயனாகத்தான் ஒருவன் பெண்ணாகவோ சூத்திரனாகவோ பிறக்கிறான் என்றுதான் இந்து மத வேதங்கள் சொல்கின்றன. அந்த வகையில் சூத்திரர்களை இழிவுபடுத்துகின்ற வேதங்கள், சாத்திரங்கள், மந்திரங்கள் போன்றவை பெண்களையும் இழிவுபடுத்துவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

பெண்களை கீழ்பிறப்பு என்று இழிவுபடுத்துகின்ற இந்து மதம் பெண்களுக்கு கல்வியையும் தடைசெய்தது. ஒரு பெண் மந்திரங்களோ, வேதங்களோ, சாத்திரங்களோ எதுவும் கற்கக் கூடாது என்று பெண்ணுக்கு கல்வியை மறுத்தது. வேத, சாத்திரங்களின் படி ஆணிற்கு மட்டும்தான் கல்வி உண்டு. சொத்து உண்டு. பெண்ணிற்கு எதுவும் இல்லை.
______________________
கண்ணியமிக்க வாசகர்கள் கவனத்திற்கு! இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி - உண்மையை ஊரறியச் செய்யுங்கள். இந்த இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.

ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். தப்பிக்க முயற்சிப்பான்.

"மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.


மேலும் படிக்க:
http://thathachariyar.blogspot.com/2011/02/blog-post_07.html

? சொன்னது…

பெண்களை கேவலப்படுத்துவதில் எந்த மதவாதிகளுக்கும் திராவிட பகுத்தறிவுவாதிகள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல! http://oosssai.blogspot.com/2010/10/blog-post_09.html

மேலும் திராவிட பகுத்தறிவுகள் தமிழையே திரித்து ஒன்றுக்கு வேறாக பொருள் சொல்லும் புண்ணியவான்கள்.

"மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.

இந்த திருஞானசம்மந்தர் பாடலில் கற்பழிக்க சான்ஸ் கேட்கிறார் என பொருள் எழுதியவர்கள் நம்மூர் பகுத்தறிவாளர்கள்.மேற்கண்ட தேவாரப் பாடலைப் பற்றி விடுதலை எழுதுகிறது .... "மதுரையில் கோவில் கொண்ட எம்பெருமானே! பவுத்தர், சமணர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள்புரிவாயாக! என்பது தான் பக்தி வளர்த்த தமிழா? எது தமிழுக்கு நோயோ அதையேதான் பெருமையாகக் கூறும் பார்ப்பனர்களின் போக்கிரித்தனத்தைக் கவனிக்கவும்".

பாடலின் உண்மையான பொருள் அறிந்த போது அதிர்ச்சிதான் ஏற்பட்டது, அது -
இப்பூலகத்திலும் விண்ணுலகத்திலும் மற்றும் எல்லா இடங்களிலும் உறுதியாய் விளங்கி மேவும் ஆலவாயில் வீற்றிருக்கின்ற ஈசனே ! சாக்கியரும் சமணரும் வாதம் புரியும் தன்மையின் அவர்தம் கல்வி நிலையைத் தகுதியற்றதாகும் தன்மையில் அழிதல் செய்வதற்குத் திருவுள்ளம் யாது ! உரைத்தருள்வீராக.
(தெண்ணவர்- புத்த சமணரை காட்டும் இழிவுக்குறி. கற்பு- கல்வியறிவு அல்லது உறுதிநிலை - கல் எனும் வேர்ச்சொல்லிருந்து தோன்றியது கற்பாம்!)

தமிழுக்கே தாளம் போடும் இவர்கள் வடமொழி பாடலுக்கு அர்த்தம் சொல்லுவதை நம்புவது அவரவர் பகுத்தறிவை பொருத்த விடயம்! :)

சக்தி கல்வி மையம் சொன்னது…

சரியான ஆதாரமா?

ADMIN சொன்னது…

கீதையிலேயே இப்படியா..???!!

checkntest0 சொன்னது…

பகவத் கீதை(Gita)in tamil mp3 free download

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "