திங்கள், 9 ஜூன், 2014

பின் நாக்கு சித்தரும் நானும் .
சொத்து வந்து சேர்ந்த தால்
சித்து வந்து  சூழ்ந்த தோ

சித்து வந்து  சேர்ந்த தால்
சொத்து வந்து சூழ்ந்த தோ

சொத்த சொத்து சொத்தை சொத்து
சுத்த சுத்தில் இல்லையே

சித்து பார்க்க சித்து பார்க்க
சொத்தை சொத்து இல்லையே

சொத்தை போயி சித்து போயி
சுத்தி மீளும் மானிடா

சொத்துமில்லை சித்துமில்லை

சிர  சுத்தியாகி போய்விடு
கிரி  சித்தமாகி போய்விடு.

 சித்து 1...
......

சித்து என்பது மிகவும் கவனமாக பர்க்கவேண்டிய ஒன்று.
சித்தர்கள் பற்றியும் அவர்களின் தன்மைகள் பற்றியும் ,சித்து பற்றியும் மக்கள் இன்றுவரை தவறான பார்வையையே வைத்துள்ளனர் என்பது எனது கருத்து மட்டுமல்ல ,உண்மையும் கூட.

கடந்த செவ்வாய் சென்னிமலை கோவிலுக்கு சென்றிருந்தேன்.
இரவு 8,9 மணி இருக்கும்.அன்னதானம் நடந்து கொண்டிருந்தது.
சாப்பிட்ட அனைவரும் செல்வந்தர்கள் .
குழந்தைகளும்,முதியோரும் உணவின்றி இங்கு அனேகஆசிரமத்தில் அனேகர் உள்ளனர்.அவர்களுக்கு உணவளிக்கலாமே .
சரி இது அவரவர் விருப்பம்.மேலே உள்ள சித்து 1...எனது ஆக்கம்.

ஓவியம்  எனது  தூரிகை தீண்டலில் சென்னிமலை .


சித்தர்கள் பற்றியும் அவர்களின் இரகசியம் பற்றியும் இனி பார்ப்போம்....
Download As PDF

7 கருத்துகள் :

Unknown சொன்னது…

குழம்பிப் போயிருக்கேன்!தொடர்ந்து எழுதுங்கள்;தெளிவடைகிறேன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கைவண்ணம் சூப்பர்...!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

படம் அருமை

அம்பாளடியாள் சொன்னது…

மிகவும் ரசித்தேன் சிறப்பன இப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா! மிகவும் அழகான சித்து! படமும் நன்றாக உள்ளது! நண்பரே! சித்தர்கள் உண்மையே! நல்ல பகிர்வு!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - பதிவு நன்று - படமும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா


டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

வார்த்தை சித்து விளையாட்டு அருமை

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "