வளர்ந்த மரத்தடியில்
பாட்டாளி ஒருவன் அயர்ந்திருந்தான்
அவனைத் துரத்தும் சுதந்திரத்தில்
அகங்காரமாய் பார்த்து
அதிகாரமாய்
இங்கே வேலை
என்ன வென்றான் ? இவன்
இந்நிழல் வேண்டும்
எனக்கென்றான் அவன்
இவ்விடம்
எனக்கு சொந்தமென்றான் இவன்
நான் இட்ட உழைப்பு
மரமாச்சு
நீ சொல்லும் இடமோ
நிழலாச்சு
என் மரம் எனக்கு
சொந்தமாச்சு
உனது அதிகாரம் உனக்கு
பதவியாச்சு
என
எழுந்தான்
பறந்தான்
மரத்துடனே
ஓடியது
செருக்கெல்லாம்
அவன் பின்னே .
.
. Download As PDF
Tweet |
|
20 கருத்துகள் :
நல்லக் கவிதை.....
கவிதை அருமை.
அன்பின் நண்டு
சிந்தனை அருமை - மரத்தின் சொந்தக்காரன் மர நிழலில் அமர்ந்திருந்தால் - நிழல் விழும் இடத்தின் சொந்தக்காரன் வந்து சண்டையிடுதல் நல்ல செயலல்ல - மரத்தின் உடைமையாளன் கிளம்ப - மரமும் அவன் பின்ன்னே சென்றதாம் - ஆகா ஆகா - அருமை அருமை.
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா
மரம் நிழல் பற்றி நல்ல கவிதை
மரத்துக்கூட மனசாட்சி இருக்கிறது என்று தெரிகிறது....
*/நான் இட்ட உழைப்பு
மரமாச்சு
நீ சொல்லும் இடமோ
நிழலாச்சு
என் மரம் எனக்கு
சொந்தமாச்சு
உனது அதிகாரம் உனக்கு
பதவியாச்சு /*
Arumai anna.............
மரத்திற்குக்கூட உயிரும் உணர்வும் இருக்கிறதோ? ஆமாம், ஆமாம் இசையக்கேட்டு பூ பூக்கும்போது, சொந்தம் கொண்டாடுவதும் சாத்தியம் தானே?
super sir
அருமை
ஓடியது
செருக்கெல்லாம்
அவன் பின்னே .
......அருமையான கவிதை.
புத்தி சொல்கிறது கவிதை !
பிரமாதம்
உனது அதிகாரம் உனக்கு
பதவியாச்சு
------------
இதில் தானே பாட்டாளி அவதிப்படுகிறான்
அருமை
அருமையான சாடல்...
மன உணர்வுகளை உணர்த்துகிறது.....
கவிதையும் நடையும் அருமை.
அசத்தல் ...
இங்கு யாருக்கும் எதுவும் சொந்தமில்லை ..
தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
கிளியனூர் இஸ்மத் @
Starjan ( ஸ்டார்ஜன் ) @
cheena (சீனா) @
சௌந்தர் @
goma @
Jeyamaran @
நித்திலம்-சிப்பிக்குள் முத்து @
ரோகிணிசிவா @
அருண் பிரசாத் @
T.V.ராதாகிருஷ்ணன் @
Chitra @
ஹேமா @
வானம்பாடிகள் @
பயணமும் எண்ணங்களும் @
பிரியமுடன் பிரபு @
க.பாலாசி @
Kousalya @
விடுதலைவீரா @
புதிய மனிதா.. @
கே.ஆர்.பி.செந்தில்
அவர்களே
மிக்க நன்றி .
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "