ஜூன் 30ம்தேதிக்கு பிறகு அதாவது நாளையிலிருந்து 25 பைசா செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதற்கு காரணமாக சொன்னவற்றில் முதன்மையானது 25 பைசா, 50 பைசாவுக்கு நாட்டில் எந்தப் பொருளுமே கிடைக்காது என்ற நிலை உருவாகிவிட்டது என்பது .ஆனால் இந்த நிலை உருவாக்க்காரணம் யார் ? அரசு தானே .அப்படியிருக்க என்னவோ அரசுக்கு மிக்க மக்களின் மீது கரிசனம் வந்த மாதிரி அறிக்கைவிடுவது கேலிக்குறியதாக உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக சில்லறை நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது என்பதுவே உண்மை .விலைவாசி குறைந்தால் சில்லறை நாணயங்களின் புழக்கம் அதிகம் ஆகும் என்பதுவே இதன் உள்ளீடான உண்மை .
கார்ப்ரேட் நிறுவனங்களில் கார்டு போட்டு பொருள் வாங்கும் மக்களை இது பாதிக்காது .ஆனால்,சாமானியனை இது பாதிக்கும் ,அதோடு இது அவனை சுரண்டுவதும் ஆகும்.
நாம அன்றாடம் 25 பைசாவிற்கு பேருந்து நடத்துனரின் நடத்தை தவறு இனி இருக்காது என்ற நிம்மதியில் பயணித்தால் உங்களின் பயணத்தில் 2% த்தை சுரண்டுவதை உங்களின் அறியாமையாலே அனுமதிக்கின்றீர்கள் என்பதுவே உண்மை. ஆம் ,இனி 2.25 ரூபாயில் பயணம் செய்யவேண்டிய தொலைவை 2.50 கொடுத்து பயணிக்கவேண்டும்.
மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும்.
இனி ரூபாய் 4.01 அடக்கவிலையுள்ள ஒரு மாத்திரையை தனியாக வாங்கும்பொழுது ரூபாய் 4.50 கொடுத்து வாங்கவேண்டும்.
தபால் கார்டுகள் இனி காலாவதிதான் .அதோடு மட்டுமல்லாமல் இனி 75 பைசா ஆபீஸ் கவர் 1 ரூபாய்க்கு வாங்கவேண்டும். 3 பைசா AD கார்டு இனி 50 பைசாவிற்கு வாங்கவேண்டும் .
இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளவை சில எளிய உதாரணங்கள் மட்டுமே, முழுமையானவையல்ல.
இப்ப 25 பைசா என்பது பிரச்சனையில்லாத்தது மாதிரி தெரியலாம் .ஆனால் உண்மையில் இது 49 பைசா பிரச்சனை .1பைசாவில் தயாரித்த ஒரு பொருளை 50 பைசாவிற்கு விற்று 49 பைசா லாபம் காணலாம் .இதில் கவனிக்கவேண்டியது அடிப்படை அலகுகளில் சிறு உயர்வு முதலாளித்துவத்துக்கே ஆதாயம் என்பதே .
நுண் பொருளாதாரத்தை நோக்க இது எளிதில் புலப்படும்.
1000 ரூபாய் ,500 ரூபாய் ஒழிப்பு எப்படி கருப்புபணத்தை வெளிக்கொணர்ந்து மட்டுப்படுத்துகிறதோ அதே போலத்தான் சிறு தொகைகள் ஒழிப்பு ஏழ்மையை மேலும் மேலும் அதிகரித்து ,வறுமைக்கோட்டை மிகுபடுத்தும்.
அதோடு இதை ஒட்டி விலைவாசிகள் அமைவதால் விலைவாசிகள் நுண் அளவில் மாற்றம் பெற்று முதலாளிகளுக்கு லாபத்தை கொடுக்கும் .
முதலில் விலைவாசியை கட்டுப்படுத்துங்கப்பா .இப்படி ஏழை மக்களிடம் உள்ள சில்லறைகளை புடுங்கி பணக்காரர்களை காப்பாத்தாதீங்க .
சுவிஸ் வங்கி மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுமார் 100 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது அதனை கொண்டுவாங்கப்பா 1 பைசாவின் தேவை எத்தகையதுனு அப்ப புரியும் . என்ன ...? அதவிட்டுட்டு ஏழைகளின் வயித்தில அடிக்காதீங்கப்பா.
.
Tweet |
|