வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

தண்டவாளம் கடக்கும் கண்கள்


 சென்னை பதிவர்  திருவிழாவிற்கு  தொடர்வண்டியில் பயணிக்க  இருப்பது  எனக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது .இன்று இரவு நானும் ,நண்பர் சிபியும் தொடர்வண்டியில் பயணப்படவுள்ள நிலையில், நான்  சென்னைக்கு தொடர்வண்டியில்  பயணிப்பது  இது என் வாழ்வில் 2 வது முறை ஆகும்,என்பதனையும் நினைவுகூர்கின்றேன்,என்னிடமே. அதுவும் 16 வருடங்கள் கழித்துதான இப்பயணத்தை.

முதல் முறை  சென்றது வழக்கறிஞராக என்னை பதிவு செய்ய .
தற்பொழுது என் அன்பை  உங்களிடம் பதிய .

தொடர்வண்டியை நான் பார்வையாளனாக பார்த்து வந்த காலத்தில் நான் எழுதிய கவிதை தான் தண்டவாளம் கடக்கும் கண்கள் .உங்களின்  பார்வைக்கும் .


.

தண்டவாளம் கடக்கும் கண்கள் - கவிதை .


தினம் தினம்
வருகி்றது
தினம் தினம்
செல்கி்றது
யாரும் யாரையும்
தவறுவதில்லை
ஒருவரை ஒருவர்
கடக்க .
தெரிந்தோ
தெரியாமலோ
கையில்  ஃப்ரஷுடன்
படியில் அமர்ந்து
பேப்பர் படித்து
எதையோ தேடி
சன்னல் பார்த்து
கையத்து
சிரித்து
கைகளை நீட்டிய
முகங்கள்
முகங்களாக
அப்பிக்கொள்கிறது
மனக்குகையில்
கடந்து போகையில்.
ஏனே
இரயிலில் போக
முடியவில்லை
இன்றுவரை
என்றாவது ஒருநாள்
என்ற நினைவுடன்
அனுதினம்
தண்டவாளம்
கடக்கும் கண்கள் .

.


.



.
.
Download As PDF

13 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள் சார்...

நேரில் சந்திப்போம்... (TM 2)

சின்னப்பயல் சொன்னது…

ரயிலில் போக நினைத்த தண்டவாளத்தின் க(வி)தை..:-))

கும்மாச்சி சொன்னது…

கவிதை அருமை, பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

நானும் வெகு காலம் ஏக்கத்துடன்
புகைவண்டியை பார்த்துக்கொண்டிருந்த
நினைவுகளை கிளறிப்போகிறது இப்பதிவு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

CS. Mohan Kumar சொன்னது…

அடேங்கப்பா ! 16 ஆண்டுகள் கழித்து சென்னை வருகிறீர்களா? இந்த வருகை இனிமையாய் அமைய வாழ்த்துகள்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

16 ஆண்டுகளுக்கு பிறகா...

அன்போடு அழைக்கிறோம்..

Unknown சொன்னது…

இன்றைய அனுபவத்தில்..அதுவும் சென்னியாரோடு..! நிறைய கவிதைகள் வரக்கூடும்!

MARI The Great சொன்னது…

நல்ல கவிதை ராஜா சார், பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!

சக்தி கல்வி மையம் சொன்னது…

அட...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அற்புதக் கவிதை! பகிர்வுக்கு நன்றி!

இன்று என் தளத்தில்
சித்துண்ணி கதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html

N.H. Narasimma Prasad சொன்னது…

அருமையான ரயில் கவிதை. பகிர்வுக்கு நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சென்னை வந்ததற்கு நன்றி பாஸ்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - கவிதை அருமை - ஏக்கம் புரிகிறது - பயணம் செய்ய புகை வண்டி ஏற்றது தானே ! ஏன் செய்ய மறுக்கிறீர்கள் - தண்டவாளத்தில் அது செல்லும் அழகினை இரசித்தால் மட்டும் போதுமா ? அதில் பயணம் செய்து மகிழ வேண்டாமா ? பலர் சென்னைக்கு வருவதே 16 ஆண்டுகட்குப் பிறகு தான் என நினைக்கிறார்களே - அதுசரியல்ல - புகை வண்டியில் பயணம் செய்வது 16 ஆண்டுகட்குப் பிறகு என்பதே சரி. என்ன நான் எண்ணுவது சரியா ? நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "