புதன், 4 ஜனவரி, 2017

டைரிகள்.




பக்கங்கள்
நாட்களாக
நாட்கள்
எண்களாக
நிரப்பப்பட்டு


பல
நிறங்களில்
வடிவங்களில்
நேர்த்திகளில்

பலப்பலரின்
கைகளில்
பலப்பல
காரணங்களுக்காக

வருடா வருடம்
வருடங்களைத் தாங்கி

வாழ்க்கை
கறைகளாக
பயணிக்கின்றன
டைரிகள்.



எல்லோரும்
டைரிகள்
எழுதுவதில்லை
எல்லா
டைரிகளும்
எழுதப்படுவதும் இல்லை
ஆனால்
எல்லோரும்
டைரிகளை விரும்புகின்றனர்


எழுதும்
பக்கங்களைவிட
எழுதாத
பக்கங்களே
டைரியில்
மிகுதி

எழுதிய
டைரிகளைவிட
எழுதாத
டைரிகளே
மிக அதிகம்

டைரியில்
புதைந்த வாழ்வுகளும்
டைரியாக
புதைந்த வாழ்வுகளும்
உண்டு

ஒவ்வொரு டைரியின்
வாழ்வும்
முடிகிறது
ஒரு வருடத்தில்
எழுதப்பட்டோ
எழுதப்படாமலோ

எப்படியிருந்தாலும்

குதூகலமாகவே
ஆரம்பிக்கிறது
ஒவ்வொரு
டைரியின்
வாழ்வும்
மனிதனை  போல்
தனக்கு முன்பு  இருந்ததன்
வாழ்வு
எவ்வாறு முடிக்கப்பட்டது
என
அறியா
அறியாமையுடன்.










.






.

படங்களை அளித்த கூகுள் மற்றும் இணையங்களுக்கு நன்றி.
மீள்வு
Download As PDF

14 கருத்துகள் :

KILLERGEE Devakottai சொன்னது…

யதார்தமான உண்மை நண்பரே

ஸ்ரீராம். சொன்னது…

உன் மனதை என்னுடன் பகிர்ந்து கொள் என்று அழைக்கும் டைரியிடம் ரகசியம் பகிரத் தயக்கம் மற்றும் எளிமையான பொய்களுடனே பழகுகிறான் மனிதன்!!!

Chandravathanaa சொன்னது…

ஒவ்வொரு டைரியின்
வாழ்வும்
முடிகிறது
ஒரு வருடத்தில்
எழுதப்பட்டோ
எழுதப்படாமலோ...

Unknown சொன்னது…

மிகவும் நன்று

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு கவிதை. பாராட்டுகள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அறியா அறியாமையை அறிந்து ரசித்தேன்.

Mohana Sundaram சொன்னது…

டைரியிடம் ரகசியம் பகிரத் தயக்கம்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான கவிதை!!!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

டைரியை பற்றிய டைரி சூப்பர்! பாராட்டுக்கள்!

G.M Balasubramaniam சொன்னது…

ஹும்......!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
வாழ்வியல் யதார்த்தம்

வலிப்போக்கன் சொன்னது…

அனைத்துமே...உண்மை....

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

மிக அருமை ஐயா! ஒவ்வொரு வரியும் நூற்றுக்கு நூறு உண்மை!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "