ஞாயிறு, 29 ஜனவரி, 2017

இங்கு எரிமலைகள் மட்டும் வெடிப்பதில்லை.

நீங்கள் பார்க்கும் 

இந்த ஓவியம் நான் வரைந்தது.

ஓவியத்தின் தலைப்பு  YIN TU  

இதை பார்த்த பலர் பலவிதமான பார்வைகளை பகிர்ந்தும் ,
YIN TU என்ற பெயருக்கான காரணத்தையும் 
என் மூலம் அறிய முயன்றபொழுதெல்லாம் 
நான் அவர்களை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் என கூறிவந்தேன்.

நேற்று எனது நண்பன் கேட்டுக்கொண்டதற்கிணங்க 
இது பற்றிய எனது மௌனம் கலைந்தேன் . 
YIN TU  வை வரைந்த போது  நான் எழுதிய சிற்பாக்கள் .

.
.

.
என் ரோஜாத் தோட்டம்
மலரும் மணக்கும்
நானில்லாவிட்டாலும்
.

.
.

சுத்தம் செய்யப்படும்
எவ்விடமும்
பழையதின் சலசலப்பு

.
.

.


YIN TU  என்றால் ? ...

உலக வரலாற்றில் மறைக்கப்பட்ட விசயங்கள்,மறக்கப்பட்ட விசயங்களில் இதுவும் ஒன்று .

இங்கு வரலாறு முழுவதும் எழுதப்பட்ட ஒன்றாகவே
இருக்கிறது.( அ.பொ : எழுதப்பட்ட - எழுத்தத்தெரிந்தவர்களால் படிக்கத்தெரிந்தவர்களுக்காக ஆக்கப்பட்டது ) .
உண்மையான வரலாறு இனி வரும் .
அதற்கான சூழல் உருவாகிவருகிறது.

YIN TU  என்பது எழுதப்பட்ட வரலாற்றில் எழுதப்படாத பக்கங்களில் எழுப்பப்பட்ட சில உண்மைகளில் இருந்து பெறப்பட்ட வார்த்தை. 

இவ்வார்த்தையின் அர்த்தம் ' மகான்களின் பூமி '.
அதாவது ' நல்லவர்களின் பூமி ' .' உயர்தோரின் இருப்பிடம் '

இது எங்குள்ளது என்றதற்கு 
இவ்வார்த்தையை உச்சரித்தவர்கள் சுட்டிக்காட்டிய இடம் நமது தாயகம்.இவ்வாறு நமது நாட்டை அழைத்ததன் காரணத்தினால், 
நமது மா நிலத்தை மிக அருமையான வார்த்தையினால் உச்சரித்த மாந்தர்கள் மறந்துவிட்ட மறை விடயங்களினின்றும் ,அதன் உண்மைத்தன்மையினாலும் ,சமிப வரலாற்று நிகழ்வுகளானாலும் பீய்த்துக்கொண்டு வெளிவருகின்றது.நமது மாந்தரின வரலாறு.


உண்மையில் அன்பானவர்களால் நிறைந்திருந்த நமது நாடு காலத்தின்  சுவடுகளால் நசுக்கப்பட்டு ,இன்று பாதங்களை விட பார்வையே முக்கியம் என்ற உன்னத நிலைக்கு உந்தப்பட்டு வரலாற்றை முடுக்கவேண்டிய நிலையில் பாய்ந்து பறந்துகொண்டிருக்கிறது.

சில சிற்பாக்கள்

.

.


வரலாறும் 
உண்மையும் .
இங்கு எரிமலைகள் மட்டும் வெடிப்பதில்லை..

.இறந்தது
வீழும் .
கல்லறை மலர்கள்..


.


ஓவியங்களும் உண்மை சொல்லும்.


.
Download As PDF

7 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ங்கு வரலாறு முழுவதும் எழுதப்பட்ட ஒன்றாகவே
இருக்கிறது.( அ.பொ : எழுதப்பட்ட - எழுத்தத்தெரிந்தவர்களால் படிக்கத்தெரிந்தவர்களுக்காக ஆக்கப்பட்டது ) .

உண்மைதான் நண்பரே
வரலாறு என்னும் பெயரில் தமிழினம் பற்றிய பலப்பல செய்திகள்
மறைக்கப்பட்டு விட்டன
மறக்கடிக்கப் பட்டுவிட்டன

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் சிந்தனையே தனி... ரசித்தேன்...

KILLERGEE Devakottai சொன்னது…

மாறுபட்ட பதிவு மிகவும ரசித்தேன் தோழரே... ஓவியம் உள்பட.

ஸ்ரீராம். சொன்னது…

சிந்தனையைத்தூண்டுகிறது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பதிவு.

சோலச்சி சொன்னது…

தங்களின் கருத்தை வரவேற்கிறேன் தோழர். உண்மை நிகழ்வுகள் பல மறைக்ப்பட்டு விட்டன. அண்ணல் அம்பேத்கார் அவர்கள் தனது ஆசிரியர் பெயரையே தனது பெயராக வைத்துக்கொண்டார் என்பதே தற்போது இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. காரணம் அண்ணல் அம்பேத்கார் அவர்கள் தனது பெயர் காரணம் பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பதே உண்மை. பெயர்க்காரணம் பொய்யாக எழுதப்பட்டது என்பதே உண்மை. உண்மையை வெளிக்கொணர்வோம் தோழர்

சோலச்சி சொன்னது…

தங்களின் கருத்தை வரவேற்கிறேன் தோழர். உண்மை நிகழ்வுகள் பல மறைக்ப்பட்டு விட்டன. அண்ணல் அம்பேத்கார் அவர்கள் தனது ஆசிரியர் பெயரையே தனது பெயராக வைத்துக்கொண்டார் என்பதே தற்போது இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. காரணம் அண்ணல் அம்பேத்கார் அவர்கள் தனது பெயர் காரணம் பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பதே உண்மை. பெயர்க்காரணம் பொய்யாக எழுதப்பட்டது என்பதே உண்மை. உண்மையை வெளிக்கொணர்வோம் தோழர்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "