// உனது ஆதிக்க சக்திக்கு கட்டுப்பட்டு வாழ
எனக்கு சிறிதும் விருப்பமில்லை. அதோடு என்னை ,எனது இயல்புக்கு மாறாக மாற்றிய உன்னையும் சும்மா விட மனமும் இல்லை . அதனால் தான் எனது இயல்பை வெளிப்படுத்தினேன் .
இதில் தவறென்ன இருக்கிறது.சில நிமிடங்கள் வாழ்ந்தாலும் நான் நானாகவே வாழ விரும்புகிறேன் , அதனால் ...//
கடுமையான விடம் கொண்ட தேள் ஒன்று
பெருமழையினால்
எதிரேயுள்ள ஆற்றை கடந்து வாழ எண்ணியது.
அதனால் ஆற்றை கடக்க இருந்த ஆமை ஒன்றை தன்னை ஏற்றி ஆற்றைத்தாண்டி அழைத்து செல்ல வேண்டியது .
அதற்கு 'மாட்டேன்...நீ என் முதுகில் சவாரி செய்யும்போது என்னை கொட்டி விடுவாய்.அப்படி நிகழ்ந்தால் நான் இறந்துபோவேன்' என்றது ஆமை.
அதற்கு தேள்,'உன்னை நான் கொட்டினால் நீ இறப்பாய் ,அதனால் நீரீல் மூழ்கிப்போவாய் அப்போது நானும் முழுகி இறந்துவிடுவேன் அல்லவா' என்றது.
ஆமை தேளை ஏற்றி ஆற்றை கடக்க ஆரம்பித்தது.
பாதி தொலைவில் தேள் ஆமையை கொட்டியது.
ஆமை,ஏன் கொட்டினாய்,இது எந்த விதத்தில் சரி என கேட்டது .
அதற்கு தேள், 'நீ கேட்பது தான் எனக்கு புரியவில்லை.
எனது குணம் கொட்டுவது.அதை மாற்றச்சொன்னது உனது ஆதிக்க மனோபாவம்.நானும் உனது ஆதிக்க வார்த்தைக்கு கட்டுப்பட்டு
வாழும் ஆசையில் இந்த ஆற்றை உன் நிபந்தனையில் கடக்க சம்மதித்தேன் .
பிறகு தான் யோசித்தேன் .
உண்மையில் என்னால் ஆற்றை கடக்கமுடியாது தான் .நான் தனியாக யாரின் துணையுமின்றி ஆற்றை கடக்க முயற்சித்திருந்தாலும் ஆற்றில் மூழ்கி இறந்து தான் போயிருப்பேன் .கடக்காமல் இருந்திருந்தாலும் பெருமழையால் இறந்து தான் போயிருப்பேன் .ஆனால்,நான் இறந்து விடுவேன் என்பதற்காக உனது ஆதிக்க சக்திக்கு கட்டுப்பட்டு வாழ எனக்கு சிறிதும் விருப்பமில்லை. அதோடு என்னை ,எனது இயல்புக்கு மாறாக மாற்றிய உன்னையும் சும்மா விட மனமும் இல்லை . அதனால் தான் எனது இயல்பை வெளிப்படுத்தினேன் .இதில் தவறென்ன இருக்கிறது.சில நிமிடங்கள் வாழ்ந்தாலும் நான் நானாகவே வாழ விரும்புகிறேன் , அதனால் கொட்டினேன் 'என்றது .
நான் செய்தது உதவியில்லையா என்றது ஆமை .
நான் எதற்காக பயணம் செய்கின்றேன் என கேட்காமல் ,ஆற்றின் ஆபத்தையும்,அக்கரையின் தன்மையையும் கூறாது.என்னால் ஆபத்தில்லை என்ற உத்திரவாதத்தை மட்டுமே பெற்று அழைத்துச்சென்ற நீ,இதை எப்படி உதவியென்கிறாய் ,நீயும் ஆற்றை கடக்கத்தானே இருந்தாய் என்றது தேள் .
அப்பொழுது வந்த பெருவெள்ளம் இருவரையும் மூழ்கடித்தது .
இப்படித்தான் பாவப்பட்ட ஆமை இறக்கின்றன.
இப்படித்தான் பாவப்பட்ட ஆமைகள் இறப்பதாக நீதி.
.
Tweet |
|
7 கருத்துகள் :
ஆகா...!
இந்தப் பதிவு "நீங்களா...?" என்று அதிர வைத்தது....!!!
வித்தியாசமாக இருக்கிறது. சுவாரசியமாக இருக்கிறது.
வித்தியாசமாக இருக்கிறது. சுவாரசியமாக இருக்கிறது.
நல்ல கதை. நன்றி.
ஆகா
அருமை
உண்மை
வாழ்வியல் உண்மைகள் அடங்கிய கதை அருமை தோழரே...
பிறவிக் குணம். மாறாத இயல்பு. ஆமாம், அது நல்லதா, கெட்டதா?!
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "