திங்கள், 25 டிசம்பர், 2017

தமிழ் சமுதாயம் ஏமாற்றப்படுகிறதா ?

வந்தாரை வாழவைப்பவன் தமிழன்...

தமிழன்
 தன்னை  நம்புகின்றவரை,
 தன்னால் நம்பப்படுபவனை
ஏற்றம்காண வைப்பவன்,
வந்த அவரை வாழ வைப்பவன் .
வந்தாரை வாழவைப்பவன்தமிழன் என்பதன் உட்கிடை மறை இது.

இதில் ஏளனமும் உண்டு, ஏமாற்றமும் உண்டு, அதன் குறியீடும் உண்டு.

இப்படியாக
வந்த தொரைகளை
 வாழவைத்த  நம்பிக்கையின்
பலனாய் கிடைத்த  படிப்பினையை
 தனது சந்ததிகளுக்கு கடத்துவான்.

இதைத் தான்
 இதுவரை
தனது மூதாதைகளுக்கு ஏற்பட்ட

மிக ப்பெரிய பெரிய சூழ்ச்சிகள்
அதனால் ஏற்பட
மிக ப்பெரிய பெரிய
வீழ்ச்சிகளால்

செய்வதை அறிந்தே

 மீட்பானை எதிர்நோக்கி

செய்து வருகிறான்.


இதனை நம்பித்தான் 
இவன் நம்பவைக்கப்படுகிறான்இன்று வரை .

வந்த அவர்களால் வாழப்பட்டு
இவன் தாழப்படுகிறான்.

தமிழன்
கடந்து போகட்டும்
என
கடந்து கொண்டிருக்கின்றான்.

இனி
தமிழ் சமுதாயத்தை
 ஏமாற்றி விட்டோம் என்ற மமதையில்
மிதந்து உழலும் வக்கிரர்களை
வரலாற்றில் 
சுவடுதெரியாமல் போக வைப்பதோடு, 
அவரும், அவர் சார்தோரும்
 புழுவென துடித்து, 
புளுங்கி புளுங்கி 
மறைய
ஒன்றுபடுவோம்
வாரீர் 


....

இனி
ஏமாற விட மாட்டோம்
என சூளுரை ஏற்போம்.
Download As PDF

4 கருத்துகள் :

KILLERGEE Devakottai சொன்னது…

உங்களது சூளுரை நான் என்றும் முதல்வனாக இருப்பேன் நண்பரே...

தமிழன் இனியாவது விழிக்க வேண்டும்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தமிழின் விழிப்புணர்வு பெறவேண்டும்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தமிழன் விழிப்புணர்வு பெறவேண்டும்

Yarlpavanan சொன்னது…

தமிழினம் விழித்தெழ வேண்டும்!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "