



இப்ப எப்படியெல்லாம் வாழ்ரோம்னு நினைச்சா மனசு மிகவும் வருத்தமா இருக்குங்க .இன்னும் அரசுகள் வெத்து வேட்டுகளை விட்டுக்கிட்டேயும் ,நாமும் இலவசமா கிடச்சவரைக்கும் லாபமுனு தான் பாக்கரோமே தவிர நமக்கு மறுக்கப்பட்டு ,மறைக்கப்பட்டுவிட்ட விசயங்களை நினைக்கறது இல்லைங்க .தவறுகளை எழுத்தலதான் பாக்க பழகியிருக்கோமே தவிர கருத்திலும் நிகழ்வுகளிலும் பாக்கனும்கர அறிவ இழந்து விட்டோமுனே தோனுதுங்க.
வேலைக்குப்போக பஸ்டாப்பில நின்னா . கால் கடுகடுத்தப்பின்பு புட்போடு பயணம் .எவ்வளவு நேரம் இதுக்கே வாழ்க்கையில செலவாகுது நினைக்கவே அப்பாடா .இதிலயிருந்து தப்பிச்சுக்கலாங்கரவங்களுக்கோ டிராபிக் டு டிராபிக் டு டிராபிக் இதிலயிருந்து தப்பிச்சுக்க முடியல.
சரி ,அலஞ்சு திரிஞ்சு வீட்டுக்கு வந்தா கரண்டு இல்லைங்க அதுக்கு சரியா விலைய நாம சரியான நேரத்தில கொடுத்தாலும் கரண்டு இல்லை .கொடுக்காட்டி உடனே பீச பூடுங்கராங்க .அப்படிப்பட்ட நல்ல கண்ணியமான துறை ஏன் ஒழுங்க விநியோகம் மட்டும் செய்யமாட்டேங்கராங்கனூ தான் இது வரை யாரும் பதில் தெரியாம வாழ்ரோம் .
சரி தாகம் நீக்க தண்ணி குடிக்கலாம்னா அதுவும் காசு போட்டு வாங்குனாத்தாங்க உயிரா நடமாட முடியும் .இல்லைனா நாம நாமே கொஞ்சம் கொஞ்சம தகவமைக்கப்பட்டு வேறு உயிரியாக்கூட மாறும் சாத்தியக்கூறுகள் உண்டுங்க .நல்ல நீரைக்கூட கொடுக்காத நாடு என்ன ஜனநாயக நாடே தெரியலங்க .
சுத்தமான காத்தப்பத்தி அட இத கேட்கவே வேண்டாம் ...ஏன்னா இது பத்தி யாருக்கும் கவலையில்ல .ஏன்ன அந்த அளவிற்கு இங்கு யாருக்கும் அறிவில்லை .சுத்தமான காத்தா ,அத அரசு எப்படியா தரமுடியும்,முடிடாள் தனமா இருக்கு இவன் சொல்றதுனு சொல்ற அறிவுஜிவி தான் இங்கு எல்லோரும் .அப்படி இருந்ததால் தான் இன்னைக்கு நம முன்னாடி நின்று நம்மை அவமானப்படுத்திக்கொண்டிருக்கும் போபால் சம்பவங்க .இச்சம்பவத்திற்கு முக்கியனா குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தவில்லை .யார் அந்த முக்கியமான குற்றவாளினா அரசு தான் அது.அரசு தப்பிச்ச தோட இல்லாம இழப்பீடாவது உடனே கொடுத்தாங்கனா அதுவும் இல்லை .
எது எதுக்கொல்லாம் சட்டம் கொண்டுவராங்க .விரைவா கேச முடிக்கனும்னு மேடைக்கு மேடை அமைச்சருங்க பேசராங்க ,ஆனா என்ன லட்சணத்தில இருக்கறாங்கனு இப்ப பாத்தாவே தெரியுதுல.
இந்த லட்சணத்தில எங்களுக்கு என்ன கொடுத்தும் என்ன பயன் .மூளை பாதிச்சு ,உடல் உருமாறி ....
முதல்லா அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைக்க திட்டம் போடுங்கப்பா விரைவா .அப்புறம் பன்னாட்டு கம்பேனிக பக்கம் போய் காசு பாக்கலாம் .
அதுல வேடிக்க என்னானா எல்லா கட்சிகளும் இதுல ஒரே நிலைப்பாட்டுல தான் இருக்கு .மக்கள் மண்ணாங்கட்டிகள் என்று .
.
.
. Download As PDF
Tweet |
|
24 கருத்துகள் :
செம ஹாட்
உண்மைதான் நண்பரே..
உண்மை போபால் விடயத்தில் பதிவர்கள் கூட கம்மியாய் தான் குரல் கொடுக்கிறார்கள் . இதில் இருந்து என்ன தெரிகிறது , மும்பை விடயத்தில் பதிவர்கள் கோபப்படுகிறார்கள் ,
நியாயமாய் இந்த வழக்கிலும் கோபப்படனுமே ????? அனைத்து மக்களும் முதலாளியின் குரலாய் இருக்கும் பொழுது , நீங்கள் இந்த பதிவை எழுதுகிறீர்கள், மிக்க மகிழ்ச்சி , ஆனால் தீர்ப்பில்சோகம்
ஆன்மீகம், அரசியல், விளையாட்டு, கல்வி என எல்லாமே பணம் ஈட்டும் வழிமுறைகளாகிப் போய்விட்டன..
அதனால் மனிதனும் பணம் ஈட்டும இயந்திரமாகிப்போனான்..
/அதுல வேடிக்க என்னானா எல்லா கட்சிகளும் இதுல ஒரே நிலைப்பாட்டுல தான் இருக்கு .மக்கள் மண்ணாங்கட்டிகள் என்று ./
இதுதான் உண்மை
righttu...
ம்.
மிக்க மகிழ்ச்சி
goma அவர்களே
மிக்க மகிழ்ச்சி
ஆம்,
முனைவர்.இரா.குணசீலன் அவர்களே
மிக்க மகிழ்ச்சி
மிக்க மகிழ்ச்சி
வெண்ணிற இரவுகள்....! அவர்களே
மிக்க மகிழ்ச்சி
நண்பர்களை இதனையும் வாசிக்க வேண்டுகிறேன் ...
http://vennirairavugal.blogspot.com/2010/06/blog-post_07.html
மிக்க மகிழ்ச்சி
வானம்பாடிகள் அவர்களே
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
D.R.Ashok அவர்களே
மிக்க நன்றி
kalakkareenga boss, may marathil may mara pookal -nandri
மிக்க மகிழ்ச்சி
ரோகிணிசிவா அவர்களே
மிக்க நன்றி
அறச்சீற்றம் தனி மனிதனில் இருந்து துவங்குகிறது
உண்மைதான் நாம் முட்டாள்கள் தான்
எதையும் தட்டிக் கேட்க நமக்கு வக்கு இல்ல
ஆம் ,
வேண்டியதாக இருக்கிறது
NESAMITHRAN அவர்களே
மிக்க நன்றி
ம் ...
இப்படி சொல்லிக்கொண்டு போவதில் என்ன பயன்
jillthanni அவர்களே
மிக்க நன்றி
//வாழ்ரோம் //
Living in Rome? spelling paarthukkungappa, athuvum thalaippula
//தவறுகளை எழுத்தலதான் பாக்க பழகியிருக்கோமே தவிர கருத்திலும் நிகழ்வுகளிலும் பாக்கனும்கர அறிவ இழந்து விட்டோமுனே தோனுதுங்க.//
அதுக்காக
ILA(@)இளா அவர்களே
மிக்க நன்றி
ஒவ்வொன்னா ஞாபக ப்படுத்தி வயசான காலத்திலே டென்சன்னை வரவைக்கறீங்க..
என்ன சொல்ல ...
இங்கு எதுவும் சரியில்லைங்களையே ஐயா .
சொல்லித்தானே ஆகவேண்டியுள்ளது
தாராபுரத்தான் அவர்களே
மிக்க நன்றி
//அறிவ இழந்து விட்டோமுனே//
ஆமாங்க அறிவை இழந்துட்டேன், மன்னிக்கவும். நீங்க எழுதுற எழுத்துல கருத்தைத்தான் பார்க்கனும்னு சொல்றீங்க.
இங்கு நான் சொல்வது என் எழுத்தில் மட்டுமல்ல எல்லா எழுத்துக்களிலும் தவறுகளை எழுத்தலதான் பாக்க பழகியிருக்கோமே தவிர அந்த எழுத்துக்குப்பின் உள்ள கருத்திலும் அதற்குக் காரணமான நிகழ்வுகளிலும் இருக்கின்ற விசயத்தை ,அனுபவத்த ,வலிகளை ,இழப்புகளை பாக்கனும்கர அறிவ இழந்து விட்டோம்னு செல்ரேன் ."எழுத்துக்கள்" இங்கு குறியீடா பயன்படுத்தப்பட்டுள்ளன.சட்டம் அதில் ஒன்று .இங்கு பிழையின்றி வாசிக்கப்பழக்கப்படுத்தப்பட்டுளளோம் .ஆனால் பிழையுடன் வாழ்கின்றோம் .
அவ்வளவே .
ILA(@)இளா அவர்களே .
இதையும் பாருங்க
http://senkodi.wordpress.com/2010/06/09/bhopal-disaster/
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "