ஞாயிறு, 20 ஜூன், 2010

செம்மொழி மாநாடும் அழியும் தமிழனின் அடையாளமும் . அரசியல் நூல் .நேற்று என் நண்பர்களுடன் நடந்த மிகப்பெரிய விவாதத்திற்குப் பிறகு
எனக்கும் அப்படித்தான் தோன்றியது .
என்னிலை விளக்கமாக
நான் யாரையும் ஆதரிப்பதும் இல்லை ,எதிர்ப்பதும் இல்லை.
என் பணி அதுவும் அல்ல.எனக்கு அது அவசியமும் இல்லை.
எனக்கு நானே பார்த்து திருந்துவது மற்றும் கத்துக்கொள்வது.
முடிந்தாவரை அதனை பகிர்ந்து கொள்வது .
எனது அனைத்தும் தமிழ்.அதனால் தமிழே அனைத்தும் எனக்கு.அவ்வளவே .

ஒற்றுமையில்லாமல் இங்குள்ள யாவரும் ஒரே மக்களே. ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி உறவை மறுக்கவா போகின்றோம் .
இப்படியே சென்றுகொண்டிருந்தால் இதன் முலம் அதிக சேதாரம் அடைவது நமது மொழி ,நமது மொழி, நமது மொழி மட்டுமே.

வரலாற்று ரீதியில் நாம் மொழியின் மீது எத்தனை ஆண்டுகள் ஆளுமை செலுத்துகின்றேம் என்பது தான் இங்கு மிகவும் முக்கியம் . என்னைப்பொறுத்தவரை தமிழ்த்தாய் என்னை அவளின் தனது ஏறக்குறைய
5 லட்சமாவது வருடத்தில் ஈன்றாள் .நானும் அவளுடன் இனி எப்பொழுதும் பிரியாமல் பயணப்பட ஒட்டுமொத்த என் உழைப்பு முழுவதையும் செலவழித்துக்கொண்டு வருகின்றேன் .என் உடல் இன்னும் எந்தனை நாள் அவளுடன் பயணிக்கும் என்று தெரியாது .ஆனால் ,என் எழுத்தை அவளின் மேல் ஏற்றி நானும் அதன் முலம் பயணம் அவளுடன் அவள் வாழ்வு நெடுகிழும் .அவ்வளவே .

எத்தனையோ அரசுகளையும் ,போரரசுகளையும் ,பெரிய பெரிய மாபெரிய விழாக்களையும் ,இலக்கிய இலக்கணங்களையும் இன்னும் பிறவற்றையும் தமிழ்த்தாய் கண்டிருந்தாலும் .இன்று நம்முன் நிற்பவைகளைப்பார்க்கும் பொழுது மிகச்சொற்பத்தை மட்டுமே நாம் வைத்துள்ளோம் .அதற்கு காரணம் என்ன ? நம்மை நாமே பிரித்து பிரிந்து கொள்வது, பிரிந்து நிற்பது எதனால்? புரியாத இப்பயணத்தில் ஆதாயம் அடைந்தது அன்றிலிருந்து இன்று வரை அரசியல் வாதிகளே .ஒவ்வொரு முறையும் தமிழும் ,தமிழனும் அரசியல் காரணங்களுக்கா மொழியால்,மொழியின் பெயரால் கொல்லப்பட்டுள்ளான்.இதைத் தமிழ் தனது இலக்கண ,இலக்கியங்களில் மிகவும் தெளிவாகவும் ,ஆணித்தரமாகவும் பதித்துள்ளது .என்றாலும் அறிவு வளர்ச்சி பெறாமல் ,அதனை உணராமல் மனதில் கொள்ளாமல் .வெறுமனமே தமிழ் என்றும் ,என் தாய் மொழி என்றும்,தமிழன் என்றும் கூறித்திரிவது ஏதோ காட்டுமிராண்டித்தனமான கூச்சலாகவே தெரிகிறது எனக்கு .

இதற்குக்காரணம் ஒட்டுமொத்த தமிழனுக்கே அரசியல்அறிவு இல்லாமையே என்றுதான் நான் கூறுவேன் .அதற்குக் காரணம் .தமிழில் மற்ற மொழிகளில் உள்ளது போல் அரசியல் நூல் அரசியல் நூலாக இல்லாதபடி மறைக்கப்பட்டுள்ளது .அது தான் .

நான் ஆட்சியாளனா இருக்கேன் ,ஓட்டுப்போடறேன், கட்சியில இருக்கேன் ,அதப்படிச்சிருக்கேன் இதப்படிச்சிருக்கேன் .அதுதெரியும் இது தெரியும், அவரைத்தெரியும் இவரைத்தெரியும் ,இவனென்ன ஆட்சி செய்யரான் ,அவன் சரியில்லை என பேசுவது இவைகள் எல்லாம் அரசியலே இல்லை .இவைகள் எல்லாம் பிழைப்பாகவே இருக்கிறது இங்கு .பிழைப்பில் ஆதாயங்களைப்பெறமுடியும் ,அதனை பதியமுடியும் அவ்வளவே. அறிவை ? .

உங்களிடம் ஒன்றைக்கேட்கின்றேன் தமிழில் அரசியல் நூல் இருக்கிறதாக உணர்கின்றீர்களா ? அப்படி இருந்தாலோ அல்லது உணர்ந்தாலோ அது எதுவென்று கூற முடியுமா ? .

...........
தொடரும் .......................
செம்மொழி மாநாடும்
அழியும் தமிழனின் அடையாளமும் .
தமிழில் அரசியல் நூல் .4................


.
.

. Download As PDF

2 கருத்துகள் :

Unknown சொன்னது…

ஊதுற சங்க ஊதிவைப்போம் ...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

20 ஜூன், 2010 10:02 pm அன்று, வித்யாசாகர் எழுதியது:

//நான் ஆட்சியாளனா இருக்கேன் ,ஓட்டுப்போடறேன், கட்சியில இருக்கேன் ,அதப்படிச்சிருக்கேன் இதப்படிச்சிருக்கேன் .அதுதெரியும் இது தெரியும், அவரைத்தெரியும் இவரைத்தெரியும் ,இவனென்ன ஆட்சி செய்யரான் ,அவன் சரியில்லை என பேசுவது இவைகள் எல்லாம் அரசியலே இல்லை//

//இவைகள் எல்லாம் பிழைப்பாகவே இருக்கிறது இங்கு. பிழைப்பில் ஆதாயங்களைப்பெறமுடியும், அதனை பதியமுடியும் அவ்வளவே//

// அறிவை ??????//


அன்பு தோழருக்கு,

நியாயமான கேள்விகள். இதை தான் நானும் ஒரு ஏழு வருடத்திற்கு முன்பு கேட்டு "திறக்கப் பட்ட கதவு" என்றொரு புத்தகம் வெளியிட்டேன். புத்தகம் மீதமாய் கனத்ததே மிட்சம். ஐயா கிரி ராஜ் அவர்களை தொடர்பு (96000 00952) கொண்டு முடிந்தால் ''திறக்கப் பட்ட கதவு'' கதையை மட்டும் வாங்கிப் படித்துப் பாருங்கள்.

அரசியலை வெறுத்து ஒதுக்குகிறோம், குறை சொல்கிறோம் குற்றமென்கிறோம், எல்லாம் சரி, எத்தனை பேர் அரசியலை கையிலெடுத்து அதற்காக படித்தோம்? என்றால் மிகக் குறைவு. எல்லோருக்கும் படித்து பெரியாளானால், வேறு எதிலாவது ஆகணும், அல்லாது போனால் அரசியல் வாதியாக வரணும் பெரியாளாகி விடலாம்; என்பதாகவே எண்ணம் நிலவி வருகிறது.

கொட்டை போட்டு ஆண்டு வருபவர்கள் இத்தனை தவறு என்று சொல்லவாவது ஒரு எதிரணியாகவாவது நம் இளைய தலைமுறை இன்னும் அத்தனை வீரியத்தோடு புறப்பட வேண்டாமா? அனால் இல்லையே.....! மரங்களை எல்லாம் வெட்டி பலகையும் கட்டிலையும் செய்து மேலேறி அமர்ந்து கொண்டு ஐயோ மழை இல்லையே என வானம் பார்ப்பவர்களாக தானே, அடிப்படைகளை எடுத்துக் கொள்ளாமல் ஆதிக்கம் பற்றி மட்டுமே பேசுகிறோம் நாமெல்லோரும்?

பாதிப் பேர் சரி அனுபமுள்ள பெரியோர் வேண்டும் இருக்கட்டும், மீதி பேராவது இந்நேரம் வந்து நிறைந்திருக்க வேண்டாமா? ஒருவருக்கொருவர் தோள் தந்து தூக்கி நிறுத்தவேண்டிய ஜனநாயக தேசத்திலல்லவா இருக்கிறோம் நாம்??? பிறகு வெறும் குறை மட்டும் கூறினால் போதுமானத என்று சிந்திப்பதே வழமையானது இல்லையா..?

பிறகேன் அதை எல்லோரும் செய்ய மறுக்கிறோம், நாமொன்றும் நம் இளையவர்களுக்கு நம் தேவையை வலியுறுத்தவோ திணிக்கவோ வேண்டாம். சற்று அந்த அவசியத்தை புரிய வைக்கலாமே. மெல்ல நம் தேவையின் ஆர்வத்தை ஏற்படுத்த கூடிய எதையேனும் செய்யலாமே.., வேறென்ன செய்தல் வேண்டுமினி என்று சிந்திக்கும் நிலையை நம் படைப்புக்களால் ஏற்படுத்தலாமே?? என்பது என் ஆழ்ந்த கருத்தும்.

ஐயா கவிஞர் தணிகை அவர்களின் இட்ட ஒரு பதிவில், ஒரு தோழர் 'நாமெல்லாம் குறைக்கும் நாய்கள், குறைத்துக் கொண்டே இருப்போம்' என்று பதில் பதிவு இட்டிருந்தார். அதை படித்ததும், முதலில் வலித்தது தான், தீர யோசிக்கையில் அவர் கோபமும் புரிந்து, உள்ளுக்குள்ளேயே வலித்துக் கொண்டு வாய்மூடிப் போனேன். நாமெல்லாம் இனியாவது நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் தோழர்களே. நம் இனி அவரும் இளைஞர்களை , நம்மொடுள்ள இத் தலைமுறையினரை, குடும்பத்தாரை அரசியல் படிக்க அறிவுறுத்த வேண்டும். அதற்கு அது குறித்த படைப்புகளும், சீரிய அறிவும் பெற அதிக வாய்ப்புகள் ஏற்பட வேண்டும்.

உங்களின் இந்த முயற்சி மிக அவசியத்திற்குரியது தோழர். இன்னும் சற்று ஆழ்ந்து, வேறு சில தரமுள்ள பயனளிக்கக் கூடிய, தேவையான ஆதாரப் பூர்வப் புத்தகங்களையும் படித்து, பின்னாளில் நம் இளைய தலைமுறைக்கு பயன் படுமாறு ஒரு நல்ல படைப்பினை தருவீர்களென்ற நல் நம்பிக்கையோடும், பாராட்டுக்களோடும்.., மனம் நிறைந்த வாழ்த்துக்களோடும், விடைபெறும் முன்; தமிழன்னை தங்களுக்கு அதற்குரிய ஆற்றலையும், பேரறிவையும் மிக்க தந்து, தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு நல்ல படைப்பை பெற வேண்டி, உங்களின் பயணத்தின் வாசிப்பிற்கு காத்திருப்பவனாகவே.., தங்களின் எழுத்திற்கு இயன்றளவு அருகாமையிளிருக்கவே முயற்சிப்பவனாய்.., சமுதாயத்தில் நல்லதொரு மாற்றத்தை விரும்பும் சாமானியர்களிலும் ஒருவனாய்..

வித்யாசாகர்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "