சிங்கள ஆதிக்கம் அதிகரிப்பதையும்,அதனால் தமிழர்கள் இன்னலுறுவதையும் பொறுக்காத தனிநாயகம் அடிகள், சிங்கள அரசுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டார். அதனால் சிங்கள அரசு காவல், கண்காணிப்பு என்று பயமுறுத்த எத்தனித்தது. உடனே, தமிழகம் வந்துவிட்டார் .அவரது வாழ்க்கை தமிழ், தமிழ் மொழி என்பதாகவே இருந்தது. தனிநாயகம் அடிகளின் மனதில் மலர்ந்த விஷயம் தான் உலகத் தமிழ் மாநாடு .மொழிக்காக உலகளாவிய மாநாடு நடத்திய முயற்சிக்குச் சொந்தக்காரர் .அவரை இந்த வேளையில் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.
1981 ல் 5 ம்உலகத் தமிழ் மாநாட்டிற்கு எங்கப்பா என்னை மதுரைக்கு அழைத்துச்சென்றார் . நான் பார்த்த முதல் தமிழ் மாநாடு .மதுரையையும் அப்பத்தான் பாக்கரேன் .புத்தகத்தில் பாடித்த சங்கம் வளர்த்த அந்த மண்ணை. அப்பொழுது என்னுள் விழுந்தது தான் ''குமரிக்கண்டம் '' ''லெமூரியாக் கண்டம் ''. இன்று வரை அதை நோக்கிய சிந்தனைகள் சென்றுகொண்டேயுள்ளன என்னுள்.இந்த கருதுகொள் தமிழனை ஆதி முதல் மனிதன் என்ற கோட்பாட்டிற்கு இட்டுச்சென்றது .இது நிரூபிக்கப்பட்டால் தமிழன் தான் உலகத்தின் ஆதி என்று முடிவாகிவிடும் .ஆனால் ,இதனை யாரும் கருத்துரீதியாகக்கூட ஏற்றுக்கொள்ளவில்லை .ஏனெனில் தமிழன் தான் ஆதி என்பதை யாராலும் ஜிரணிக்கமுடியவில்லை .இருந்தாலும் அதற்கான முயற்சிகளில் தனி நபர்களின் பங்களிப்பே மிகவும் அதிகமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் .அவர்களின் உழைப்பும் எண்ணி போற்றப்படத்தக்க வகையில் இருந்தது .அதிக பொருட்செலவு ஆகும் இம்முயற்ச்சிக்கு அறுதியிட்டுச்சொல்லக்கூடிய ஆதாரங்கள் இல்லை என்று கிடப்பில் உள்ளது .வருத்தத்திற்குரிய செய்தி தமிழுக்கும் ,தமிழனுக்கும்,தமிழ் இனத்திற்கும்.
நமது தொன்மத்தில் உள்ளது நமது உயர்வு .
அதுவே நம்மை நன்றாக அடையாளப்படுத்தும் .
அவைகள் அழிந்தால் நமது இனமும் ,மொழியும் அழியும் .
அவைகள் கண்டறியப்பட்டால் அறிவியல் நம்மை மீட்கும் .
அதனால் அவைகளை நாம் கண்டறியவேண்டும் .
கண்டறிந்து போற்றவேண்டும் .
பாதுகாக்கவேண்டும் .
இது நமது இனம் மற்றும் மொழியின் உயர்விற்கும் ,நமது சந்ததியினரின் வாழ்விற்கும் செய்துவைக்கவேண்டிய கட்டாயமான முதன்மையான செயலாகும்.
தொடரும் .....
.
.
. Download As PDF
Tweet |
|
11 கருத்துகள் :
வழிமொழிகிறேன்!
அருமை தோழா
நானும் வழிமொழிகிறேன் .
waiting to know our history ., i m ashamed to learn it at this age , but better late than never .,
yes!
இடுகையில் இன்னும் சொல்லியிருக்கலாம்.முன்னுரை மாதிரி இருக்கிறது.
இன்னும் நிறைய எழுதுங்க.தெரிஞ்சுக்கணும்.
நன்று!
தமிழர்களின் தாயகம் பற்றி மணற்கேணி நூலில் சுருக்கமாக பதிவு செய்திருக்கிறேன்!
எங்களுக்காகவும் பேசும் உங்களுக்கு நன்றிகள் ....
கவிஞர் ராஜ சுந்தரராஜன் இது குறித்து தன் கட்டுரை ஒன்றில் எழுதியதும் நினைவு வருகிறது
உங்களின் இடுகைக்கு என் உடன்பாடுகள்
ஏற்றுக் கொள்கிறேன்
தொடருங்கள்
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "