திங்கள், 21 ஜூன், 2010

செம்மொழி மாநாடும் அழியும் தமிழனின் அடையாளமும்.சிந்து சமவெளியும் .





















இன்று வரை நம் மக்களிடையே பொதுவாக திருக்குறள் ஒரு அறநூல் என்றும் ,அதில் உள்ளவைகள் அனைத்தும் அறம்,பொருள்,இன்பம் இவற்றை அடித்தளமாகக்கொண்டே இயற்றப்பட்டன எனவும் ;பிற கருத்துக்கள் இருந்தாலும் அவற்றை விடுத்து அவையும் இவற்றிற்காகவே இயற்றப்பட்டது என்ற பார்வையிலேயே பார்த்தும் ; வேறு பார்வை பார்க்க முடியாத ,கூடாத அளவுவிற்கு, நிகழ்ந்து வந்த வரலாற்றுச் சண்டைகளினால் ,குறள் தனது கருத்தினை எடுப்பார் கைப்பிள்ளையாக ஆகி ,பலவாக உருமாறி நம்முன் கூனி நிற்கிறது .அவ்வாறு உருவாகியவைகளில் சிலப்பதிகாரம் தலையான ஒன்றாகும் . குறளுக்கு இலக்கியமாக அது மிகச்சிறப்பாக இளங்கோவால் வார்க்கப்பட்டுள்ளது என்றால் அதுவும் மிகையல்ல .

உண்மையில் திருக்குறளே உலகின் மிகச்சிறந்த அரசியல் நூல்.

முதல் அரசியல் நூலும் இதுவே .

'அரசியல் நூல் 'என்பதனின்று அழியும் இதன் அடையாளத்தை காக்கவேண்டியது நம் கடமையாகும் .



















நாம் ஒவ்வொருவரும் வெட்கப்படக்கூடிய விசயம் ஒன்று உண்டெனில் ,அது நாம் நமது நாகரிகத்தை நாமே ஒத்துக்கொள்ளாமலும் ,அதனைப்பற்றி எந்த அக்கறையும் நாமக்கே இல்லாமலும், அதனை நாமே நிராகரித்தும், வருவது தான் .

இன்று வரை சிந்து சமவெளி நாகரீகம் ,அனைத்து தமிழர்களுக்கும் ஒரு வரலாற்றுப் பாடம் என்றளவே இருப்பது தான் அதைவிட மிகவும் வேதனையளிக்கும் விசயமாக உள்ளது. அதனைக்கண்டு வெட்கித்தலைகுனிகின்றேன்.

'அ ' வை கண்டுபிடித்த எனது மூதாதை இவர் தான் என என்னால் அடையாளத்துடன் உலகின் முன் நிறுத்த முடியாவிட்டாலும் .என்னால் ஆற்றங்கரைகளில் அழிந்துபோன எமது அண்மை தொன்மையை காணமுடிந்தது. அது தான் சிந்து சமவெளி நாகரீகம் .அது நமது நாகரீகம் .அங்கு வாழ்ந்தவர்கள் நமக்கு இன்றைய ஜீன்களை கொடுத்தவர்கள் .அதனை அறியாமல் ,உணராமல் ,போற்றாமல் வாழ்தல் முறையா ?.









2003ம்வருடம் நண்பர் திருப்பூர்அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் நீண்டநேர திராவிட நாகரிகம் பற்றி வாக்குவாதம் நடந்தது .அவர் முடிவாக உங்களின் கருத்திற்கு காலம் தான் பதில் செல்லவேண்டும் எனக்கூற விவாதம் முடிவுற்றது .அதனை தனது 'திருப்பூர் குமரன் கொடியில் பூத்த சுதந்திர மலர்'... என்ற நூலில்
'தமிழ்த் தேசியம்,இந்திய தேசியம் என்றெல்லாம் பிரிக்காமல் ,இந்தியாவின் ஒட்டு மொத்த பூகோளப் பரப்பையும் தமிழ் இனவழிப்பரப்பாக ஆய்வு செய்யக்கூறி அறிவுரை வழங்கும் வழக்கறிஞர் ஈரோடு இராசசேகரன் ...'என்று நினைவுகூர்ந்ததையும் இத்தருணத்தில் எண்ணிப்பார்க்கின்றேன்.


கோவையில் நடக்கும் செம்மொழி மாநாடு

'சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் ' என்பதனை பல்வேறு தளத்தில் இருந்து நிருபிக்கவும் ,நிலைநிறுத்தவும் அடித்தளமா அமையும் என்பதனை எண்ணி பூரிப்படைகிறேன் .மேலும் திருக்குறளுக்கு 'அரசியல் நூல் ' என்னும் அங்கீகாரமும் உயர்வும் கிடைக்கும் என்றும் எண்ணி மகிழ்கின்றேன்.
அழியும் தமிழனின் இந்த அடையாளத்திற்கு முற்றுப்புள்ளிவைக்கும் முகமாக முதல் செம்மொழி மாநாடு அமைந்துள்ளதை எண்ணி பெருமைப்படுகின்றேன் .


அதனால் ,
திருக்குறளுக்கும் ,திராவிட நாகரிகத்திற்கும் உயர்வைச்சேர்க்கும் இம் மாநாட்டிற்கு பெரும்திரலாக தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றுதிரண்டு 'அழியும் நமது அடையாளங்களை காக்க 'உறுதிபூணுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் .


இதற்கான முயற்ச்சியெடுத்து கண்துஞ்சாது பாடுபடும்
தமிழக முதல்வர் அவர்களை நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றேன் .



'வாருங்கள் தோழர்களே கோவைக்கு'

'உயர்ந்த முதல்குடியாக உலகில் வாழ்வதற்கு'

என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன் .







.



.


. Download As PDF

5 கருத்துகள் :

தமிழ்போராளி சொன்னது…

அருமையான் கட்டுரை வாழ்த்துக்கள் தோழரே..

ரோகிணிசிவா சொன்னது…

//திருக்குறளுக்கும் ,திராவிட நாகரிகத்திற்கும் உயர்வைச்சேர்க்கும் இம் மாநாட்டிற்கு //if that was the sole purpose , then its fine

ஹேமா சொன்னது…

எங்கள் மொழி பற்றி அதன் பெருமை பற்றிச் சொல்கையில் மனம் அறியாத ஒரு புளகாங்கிதம்.மனதில் ஒரு நெகிழ்ச்சி.சந்தோஷம்.

//நாம் ஒவ்வொருவரும் வெட்கப்படக்கூடிய விசயம் ஒன்று உண்டெனில் ,அது நாம் நமது நாகரிகத்தை நாமே ஒத்துக்கொள்ளாமலும் ,அதனைப்பற்றி எந்த அக்கறையும் நாமக்கே இல்லாமலும், அதனை நாமே நிராகரித்தும், வருவது தான்.//

இதுவும்தான்.சில விதிவிலக்குகளும் கூடவே !

sathishsangkavi.blogspot.com சொன்னது…

அழகான கட்டுரை... நேற்றே மாநாடு களை கட்டிவிட்டதுங்க...

Nathanjagk சொன்னது…

அருமையான அழைப்பிதழ் கொடுத்திருக்கிறீர்கள்! விபரங்களும் அருமை!
மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "