செவ்வாய், 18 ஜனவரி, 2011

எனக்கு கிடைத்த பொங்கல் பரிசு .




 நொரண்டு :என்ன நண்டு பொங்கலுக்கு என்ன சிறப்புச்செய்திகள் .

நண்டு :மத்திய அரசு ஒட்டு மொத்த மக்களுக்கும் மிகச்சிறந்த பொங்கல் பரிசாக பொட்ரோல் விலை உயர்வை கொடுத்துள்ளது .மிகவும் நல்ல செய்தி .அவங்கனால முடிஞ்சது. எரியர விலைவாசில  பொட்ரோல ஊத்தராங்க .இனி எல்லாம் க(கா)ட்டுக்குல்ல வந்திரும் .

நொரண்டு :என்ன செய்ய ????? .

நண்டு : என்ன சொல்ல ,நேத்து மாட்டுப்பொங்கல் . ஈரோட்ல ஆட்டுக்கறி மாட்டுக்கறி எல்லாம்  நல்லா சேல்ஸ் ஆச்சு.ஜல்லிக்கட்டு வேணாமுனு கோர்ட்டுக்குப்போன விலங்கின ஆர்வளர்கள் விலங்கினங்களுக்கு கொடுத்த பொங்கல் பரிசு இது .

நொரண்டு : ஆமா,அவங்களுக்கு இதெல்லாம் டீவியில காட்டுனாத்தான் கேஸ் போடுவாங்க .

நண்டு : நேத்து இளைஞர்கள் மன்றத்தினர் பரிசளிப்பு விழா நடத்தினர் .அதப்பாக்கப்போனேன் .எம்பக்கத்தில நின்னுக்கிட்டிருந்த ரண்டு பேரு

1.ஏன் மாப்பிள ,இவங்க ஏதோதுக்கோ எதிர்ப்பு தெரிவிக்கராங்கல ,நம்ம ஈரோடு முழுதும்  வீட்டு வாடகைய உயர்த்தியிருக்காங்கலே வீட்டுக்காரங்க அதுக்கு ஒருத்தரும் மூச்சு விடமாட்டேங்கராங்க .

2.பாதாலச்சாக்கடை வரிதுல்ல அதனால வீட்டு வாடகைய உயர்துராங்க

1.என்னப்பா அதுக்காக ஒரோயடிய ரூபாய் 500 லிருந்து வீட்டுக்குத் தகுந்தமாதிரி 2500 வரை ஏத்திருக்காங்கலாமே .சாக்கடை வரதுக்குள்ள ஒவ்வொரு நடுத்தர மற்றும் அடித்தட்டு வாடகைக்கு குடியிருக்கும் மக்களிடம் தல ரூபாய் 25,000 முதல் ரூபாய் 1,20,000 வரை அநியாயமாக வீட்டு உரிமையாளர்களால் பிடுக்கப்பட்டுவிடுமாமே .பாதால சாக்கடையோ 2014 தானே வரப்போகுது .அதுக்கு இப்பவேவா வாடகைய ஏத்தரது .அதுவும்.ஆட்சி மாறுச்சுன்னா சாக்கடை வருதோ ? .இல்லையோ ?.

2.ஆட்சி வரக்கூடாதுனுங்கரத்துக்குத்தானோ என்னவோ வீட்டுக்காரர்களா  ஒன்று சேந்து சதி பண்றாங்களோ என்னவே .

1.இருக்கலாம் .

2.ஓட்டுக்கு 2,00,000 லட்சம் கொடுத்தாத்தான் கட்டுபடியாகும் போல .

1.போப்பா,ஜோக்கடிக்காத...ஆமா,அத யாரிட்ட சொல்லரதுனு சொல்லு  ?

2.மனு நீதி நாள்ல மனுவா கலெக்டர் கிட்ட கொடு .

1.அட போப்பா .நான் ஒரு மனுவ எஸ்.பி. கிட்ட கொடுத்தா வேலையாகாதுனு மனு நீதி நாள்ல மனுவா கலெக்டர் கிட்ட கொடுத்தா அது கிணத்தில போட்ட கல்லாவே இருக்கு .இங்க 2 பேரும் சரியில்லப்பா .

2.ஆமாப்பா என்ன செய்ய .

1.யாரிட்டப்பா சொல்ல .நான் வரும் போது 350 ருபா வீட்டு வாடகை .மாநாகராட்சி ஆக்குனாங்க ,500 ருபாயா வீட்டுவாடகை கூடுச்சு .வேற வழியில்லாம ,வீடும் கெடைக்காம பொறுத்துக்கிட்டு கொடுத்தோம் .இப்ப பாதாள சாக்கடையினு ஒரேயடியா 1000 ருபாய் கேக்கராங்க .வீட்ட காலி பண்ணிட்டு வேற வீட்டுக்குப்போகலாம்னா.ஈரோடு மாநாகராட்சி பூராம் இதே நிலை தான் .எங்க போறது .படாத விலைவாசி வாட்டி எடுக்குது .வீட்டு வாடகையோ கண்ணகட்டுது .எப்பத்தான் விடியுமோ,எப்படித்தான் விடியுமோ ? .... -னு  பேசிக்கிட்டாங்க .

நொரண்டு :என்னாங்க இது ,அநியாயத்திலும் அநியாயமா இருக்கு ?

நண்டு :விசாரித்த வகையில் உண்மைதாப்பா இது .அநியாயத்திக்கு  வீட்டு வாடகை உயர்ந்துவிட்டிருக்கின்றனர் வீட்டு உருமையாளர்கள் .இத மாவட்ட நிர்வாகம் கண்டுகொண்டதாக தெரியல .பாதாளச்சாக்கடை மற்றும் இதர விசயங்களில் கிடைக்கும் கமிஷன்களுக்காக கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையா இத கண்டுக்கிறதில்லைனு முடிவுல இருக்காங்கலாம் மக்களின் உண்மைத்தொண்டர்கள் .

நொரண்டு :ஓ...அதானே கேட்டேன்..

நண்டு : இது வீட்டுக்காரர்கள் கொடுத்துள்ள பொங்கல் பரிசு .


நொரண்டு :ஈரோடுல மட்டும் தானே?

நண்டு :இல்லப்பா மாநகரா அறிவிச்ச எல்லா இடத்திலையும் இப்படிப்பட்ட பல பிரச்சனைகப்பா .இது ஈரோட்டு மாநகராட்சியின் பொங்கல் பரிசு .

நொரண்டு :ம் ...

நண்டு : எங்க பால்காரம்மா பாலுக்கு லிட்டருக்கு 1 ருபா ஏத்தி தாங்கனு இனினு இன்னைக்கு சொல்லிட்டு போயிருக்கு .இது பால்காரம்மா  கொடுத்த பொங்கல் பரிசு .

நொரண்டு :ஓ...இதுவுமா .

நண்டு : எவ்வளவு தான் தாங்குவாங்க மக்களுனு அரசு டெஸ்ட் பண்ணுதுப்பா .

நொரண்டு :ஓ ...வாங்கும் சக்தி,வாங்கும் சக்தினு AMWAY- ல செல்லிட்டுருந்தாங்கள அது இது தானா ... ?

நண்டு : ஆமாம் ...

நொரண்டு :இப்படி இருந்தா எப்படியா மக்கள் நிம்மதியா வாழமுடியும் .இதுக்கு என்ன தான் முடிவு ?.

நண்டு :யார் அடுத்து ஆட்சி பிடிக்க  விரும்புகின்றனரோ அவர்கள் தான் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் .

நொரண்டு :வேறா ஏதாவது பொங்கல் பரிசு இருக்கா ?.

நண்டு :அட,சொல்ல மறந்துட்னேன் .நாம கூட கடந்த மே 28 ல ஒரு  பதிவப் போட்டதோடு ஆலோசனைகளை சொன்னமே .

நொரண்டு :ஆமா அந்தப்பதிவு கூட

அரசுக்கு எதிர்ப்பு மிகவும் நாகரிகமாக ஈரோட்டில் இன்று

இது தானே .

நண்டு :ஆமாம்பா...ஆமா ... பெரிய ___ .மாதிரி .நம்ம பேச்ச கேக்காம வேலைய ஆரம்பிச்சாங்க .

நொரண்டு :அதுக்கு இப்ப என்ன ? .உன் பேச்ச கேக்கனும்மு என்னப்பா இருக்கு அவங்களுக்கு ? .

நண்டு :இப்ப என்னாச்சுனு தெரியுமா ? .

நொரண்டு :என்னாச்சு ?.

நண்டு :நைட்டோட நைட்டா பெரிய பெரிய புல்டோசர வச்சு மூடிட்டாங்கப்பா .

நொரண்டு :ஓ ...அப்படியா .ஈரோட்டு மக்களுக்கு வெற்றிதாம்பா .ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு .

நண்டு : இதில் எனது முயற்சியும் களப்பணியாக  சிலது உண்டு .அதனால் ,இது தாம்பா எனக்கு கிடைத்த பொங்கல் பரிசு .


 







.நன்றி : You Tube Download As PDF

8 கருத்துகள் :

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

ரொம் பிடித்த பாடல்...
அருமை...

ஹேமா சொன்னது…

நம்பிக்கை தரும் நல்லதொரு பாடல்.

Chitra சொன்னது…

nice song.

.....

ஆனந்தி.. சொன்னது…

செமத்தியான பொங்கல் பரிசு தான் நண்டு சார்...:))) இன்னும் தீபாவளி பரிசு...இதை விட சூப்பர் ஆ இருக்கும்..:)) வெங்காயம் கிலோ 1000 ரூபா வாகி நமக்கு இன்னும் அழகான பொங்கல் பரிசாய் அமையலாம்...:)) நீங்க வேற .. இந்தியா ஒளிர்கிறது சார்..:))

அந்த பாட்டு இப்ப கேட்டால் காமடியா தான் இருக்கும் சார் நமக்கு...:)

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

அனைத்து பரிசும்?? அருமையா சொன்னீங்க..

முக்கியமா மக்கள் இணைந்து அடைப்பு நடத்தியமை பாராட்டுக்குறியது..

வாழ்த்துகள்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அடி தூள் மக்கா.................

Unknown சொன்னது…

பெட்ரோல் விலை உயர்வு, வீட்டு வாடகை உயர்வு ..
இனி வர காலகட்டங்களில் உயர்வு என்ற வார்த்தையே, விலைவாசிக்கு மட்டுமே பயன்படும் போல...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - அருமையான பொங்கல் பதிவு !!!!!!! - ம்ம்ம்ம்ம்ம் - என்ன செய்வது

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "