"மகர ஜோதி' என்பது ஒரு அதிசயம் அல்ல. அது மனிதரால் ஏற்றப்படும் தீபம். பொன்னம்பல மேட்டில் இப்படிப்பட்ட ஒரு தீபத்தை ஏற்றி மூட நம்பிக்கையை வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும். "மகர ஜோதி' விவகாரத்தில் நடக்கும் மோசடியை வெளிக்கொரண வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 14ம் தேதி சபரிமலை அருகே, புல்மேடுவில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 106 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சமீபத்தில் விசாரித்த கேரள ஐகோர்ட், "மகர ஜோதியை மனிதர் யாராவது ஏற்றுகின்றனரா? இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மகர ஜோதி தோன்றுவது குறித்து திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சனால் எடமருக்கு என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது : சபரிமலை பொன்னம்பல மேட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் மகர ஜோதி தெரிகிறது. இதை அதிசயமானது மற்றும் புனிதமானது என, பல மாநில மக்கள் கருதுகின்றனர். அதனால், இந்த ஜோதியைக் காண, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருகின்றனர். பொன்னம்பல மேட்டில் தெரியும் இந்த மகர ஜோதியானது, மூன்று முறை ஒளிந்து பின்னர் மறைந்து விடும்.
சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் தேவஸ்வம் போர்டும், இந்த மகர ஜோதியை அதிசயம் என்று கூறி வருவதால், இயற்கைக்கு முரணான இதைக் காண வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. மகர ஜோதி என்பது அதிசயம் அல்ல. கேரள மாநில மின்வாரியம் மற்றும் போலீசார், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுடன் இணைந்து நடத்தும் நாடகம். பெரிய பாத்திரத்தில் சூடத்தை ஏற்றி, பின்னர் அதை மூடி மறைத்து ஒளிருவது போல காட்டுகின்றனர். இது செயற்கையாக உருவாக்கப்படும் ஜோதியே. மனிதரால் உருவாக்கப்படும் இந்த மகர ஜோதியை ஒரு அதிசயம் எனக் கூறி, மக்களிடையே மூட நம்பிக்கையை பரப்பி வருகின்றனர். இது அரசியல் சட்டத்தின் 21 மற்றும் 25வது பிரிவுகளை மீறிய செயல்.
கடந்த 1999ம் ஆண்டில் மகர ஜோதியை காண வந்த பக்தர்கள் 53 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 106 பேர் பலியாகியுள்ளனர். எனவே, செயற்கையாக தீபத்தை ஏற்றி, அதை மகர ஜோதி எனக் கூறி மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்கு தடை விதிக்க வேண்டும். இந்த ஜோதி இயற்கையானது அல்ல என, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி, கேரளா, தமிழகம், ஆந்திர, கர்நாடக மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகர ஜோதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு
நன்றி : தினமலர்
Download As PDF

Tweet |
|
13 கருத்துகள் :
vadai
உண்மை என நிரூபிக்கப்பட்டுவிட்டதா....? இல்லை ஏதாவது ஆய்வுகள் நடக்கின்றனவா....?
மனிதர்களால் என்ற படுவது என்று தான் தோன்றுகிறது.
ஆன்மீக ரகசியங்கள் எல்லாம் என்றோ மண்ணோடு மண்ணாக போய்விட்டது.
எப்போதோ செய்திருக்க வேண்டும். இப்போதாவது செய்வார்களா என்று தெரியவில்லை. வெறும் கற்பித்த கொள்கைகளால், அர்த்தமற்ற சடங்கு சம்பிரதாயங்களால் ஆன்மிகம் ,இந்து தர்மம் என்றும் மக்களை சுரண்டி காசு பார்க்கும் கும்பல்களிடமிருந்து இன்னமும் விடுதலை கிடைக்க வில்லை. மகர தீபம்/ ஜோதி போன்ற கட்டுக்கதைகளை தடை செய்வதே உத்தமம்.
// உண்மை என நிரூபிக்கப்பட்டுவிட்டதா....? இல்லை ஏதாவது ஆய்வுகள் நடக்கின்றனவா....?//
லவ்டேல் மேடி said...
ஆய்வுகள் நடத்தும் அளவிற்கு இதில் ஒன்றும் இல்லை. முப்பது வருடங்களுக்கு முன்னரே அங்கு வழக்கமாக சென்று வருபவர்களால் சொல்லப்பட்ட செய்திதான் இது. மலை முகட்டில் மனிதர்கள் ஏற்றும் கற்பூர ஒளிதான் அது என்று. அதுதான் உண்மையும் கூட. கீழ்கண்ட இணைப்பில் சென்று அங்குள்ள வீடியோக்களை காணுங்கள்.
http://www.youtube.com/watch?v=urn4gOiPbCk&feature=related
/கடந்த 1999ம் ஆண்டில் மகர ஜோதியை காண வந்த பக்தர்கள் 53 பேர் இறந்துள்ளனர்///
கேரளா அரசு இதை எல்லாம் கண்டுக்குற மன நிலையில் இல்லை மக்கா....
சில அதீத நம்பிக்கை சார்ந்த விஷயங்களை பத்தி கருத்து சொல்ல விரும்ப வில்லை...ஆனால்..மக்களின் ஆன்மிக நம்பிக்கைகளை வியாபாரம் ஆக்கும் பைத்திய கார தனங்களும் சகித்து கொள்ள முடியவில்லை...
The dewosam earned money at the cost of religinal faith
அன்பின் நண்டு - செய்தி பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பகிர்வினிற்கு நன்றி
@லவ்டேல் மேடி
// உண்மை என நிரூபிக்கப்பட்டுவிட்டதா....? இல்லை ஏதாவது ஆய்வுகள் நடக்கின்றனவா....?// சில வருடங்களுக்கு முன்பு NDTV படப் பிடிப்புக் குழுவினர் மகர ஜோதி என்று சொல்லப்படும் நெருப்பை கர்ப்போரத்தால் கொழுத்தும் இடத்திற்கே காட்டுப் பாதையில் சென்று படம் பிடித்து செய்தியாகவும் வெளியிட்டு விட்டனர். நம்மழுங்கதான் ரஜிதானந்தா வீடியோ பார்த்தும் அவர் தப்பே செய்யவில்லை என்று நினைப்பவர்களாயிற்றே அதனால் விட்டுவிட்டார்கள். மேலும் இதைப் பெரிது படுத்தினால் அது இந்துக்களுக்கு எதிரான செயல் என்று எந்த அரசியல் கட்சியும் இது பற்றி மூச்சு விடுவதில்லை, கேரளா அரசும் வருமானம் போய் விடுமே என்று இந்த மூட நபிக்கைக்கு நெய் ஊற்றி வளர்த்து வருகிறது. இந்த ஜோதி மட்டுமல்ல ஐயப்பனும் கேரளாக் காரர்களால் அவிழ்த்து விடப் பட்ட சமீபத்திய கட்டுக் கதையே. எப்படி? புராணங்கள் என்றால் அது வியாசர் எழுதிய நான்கு வேதங்கள், 18 புராணங்கள், மகா பாரதம், 108 உபநிஷத்துக்கள், ஸ்ரீமத் பாகவதம் மற்றும் வாழ்மீகியின் இராமாயணத்தையும் அடங்கியதாகும். இந்த ஐயப்பன் கதை மேற்ச்சொன்ன எந்த வேத இலக்கியத்திலும் சொல்லப் படவே இல்லை. [மகாபாரதத்தில் சிவன், பிரம்மா, துர்கா, முருகன் வருகிறார்கள் இந்த ஐயப்பன் எந்த பள்ளிக்கு LKG படிக்கப் போனாரோ, ஆளையே காணோம்!]. எதையும் இவற்றின் மூலம் நிரூபித்தால் தான் அதை சனாதன தர்மமாக ஏற்றுக் கொள்ள முடியும், மற்றபடி வேறெதுவும் கல்கி, ரஞ்சிதானந்தா, விராலிமலைக் காரன் மாதிரி அது புருடாதான்.
@லவ்டேல் மேடி
// உண்மை என நிரூபிக்கப்பட்டுவிட்டதா....? இல்லை ஏதாவது ஆய்வுகள் நடக்கின்றனவா....?//
மனிதர்களால் ஏற்றப்படுவது என்று சம்பந்தப்பட்ட நபர்கள் ஒத்துக்கொண்ட பேட்டி இங்கே.
http://www.hindu.com/2011/01/22/stories/2011012263371300.htm
எப்பதான் இந்த பித்தல் ஆட்டம் எல்லாம் மறையுமோ
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "