திங்கள், 18 ஏப்ரல், 2011

புரட்சியை ஒத்திப்போடக்கூடாது


எல்லாரும் நல்லவர்களாக மாறும் வரையில் புரட்சியை ஒத்திப்போடக்கூடாது.புரட்சி வரும் வரையில் ஒழுக்கத்தையும் ஒத்திப்போடக்கூடாது .


அழுக்கை இடம் மாற்றி வைப்பது புரட்சியல்ல .அடிப்படை வேர்களையே மாற்றுவதுதான் புரட்சி .


ஒன்றுமே செய்யாமல் இருப்பதைவிட -ஏதாவது செய்வது மேல் .


கொள்கையை இழந்து அடிமையாக இருப்பதைவிட -கொள்கையை அமுலாக்குவதற்காக அடம்பிடித்து -கீழ்ப்படியாமல் இருப்பது மேல் .


கருத்து-மருந்து -இவையிரண்டும் எந்த நாட்டிற்குள் புகுவதாக இருந்தாலும் அதற்கு தடைகள் இருக்கக்கூடாது .


நீண்டகால அடிப்படையில் -வளராத அரசியல் மதமாகிவிடும் .

குறுகிய கால அடிப்படையில் -வளர்கின்ற மதம் அரசியலாகிவிடும் .


எப்பொழுதும் அதிகரித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கைத்தரம் ஒரு சிலருக்கு மட்டும் என்பது கூடாது .

தலைவன் -வழிகாட்ட வேண்டும்.வழிகாட்டப்படக் கூடாது (A Leader should Lead.He should not be Led )


தலைவன் -மக்களுக்கு வெறும் பிரதிநிதியாக மட்டும் இருக்கக்கூடாது,மக்களோடு மக்களாக ஐக்கியமாக வேண்டும் .

உலக நாடுகளின் பிரச்சனைகளை லட்சிய அடிப்படையில் அணுகவேண்டும் .ஆனால்,நமது நாட்டின் தேசிய பிரச்சனைகளை நடைமுறைக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் .


Download As PDF

10 கருத்துகள் :

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>தலைவன் -வழிகாட்ட வேண்டும்.வழிகாட்டப்படக் கூடாது (A Leader should Lead.He should not be Led )


செம

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...

முத வெட்டு
//

அட்லீஸ்ட் நல்ல பதிவுகளில் இது போன்ற கமெண்டுகளை தவிருங்கள்.. பதிவின் நோக்கத்தையே கெடுக்கிறது..

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

அழுக்கை இடம் மாற்றி வைப்பது புரட்சியல்ல .அடிப்படை வேர்களையே மாற்றுவதுதான் புரட்சி .//

சரியா சொன்னீங்க..

இப்பதான் இந்த கட்டுரை வாசித்து வருந்திக்கொண்டிருந்தேன்..
http://www.activistpost.com/2011/04/20-signs-that-horrific-global-food.html
20 Signs That A Horrific Global Food Crisis Is Coming

கூடி வாழ பழகணும் பழைய காலம் போல..

சிக்கனம் வேண்டும் ..

ஜப்பானில் பாதி இடம் வாழ தகுதியற்ற இடமாகிப்போகலாம்,..:(.

இன்னும் இது பற்றி எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல் வாழும் மக்கள் இருக்கிறார்கள்..கற்பனை உலகில் மிதந்துகொண்டு.., தன் வாழ்க்கை நல்லா இருந்தா போதுமென..

போரிலும் ஆயுதத்திலும் வீணாக செலவழித்துக்கொண்டிருக்கிறோம்.. ( செலவழிக்க வைக்கப்படுகிறோம் ஆயுத விற்பன்னர்களால்..)

நான் வளரும்போது தண்ணீர் பஞ்சம் என்ற கொடுமையை அனுபவித்துள்ளதால் இன்றும் தண்ணீரை வீணடிப்பதில்லை..சிக்கனமா உபயோகிக்கவே முடியுது.. ஆனால் இங்கே தண்ணீர் பஞ்சமே இல்லை நாடெங்கிலும்.. வீட்டை ஒட்டிய மிகப்பெரிய ஆறு வருடந்தோறும் செழிப்பாக ஓடும்.. குழந்தைகளுக்கு இன்னும் தண்ணீர் பஞ்சம் பற்றி ஏதும் தெரியவில்லை.:((( இப்படி எத்தனை பேர்?.


வேண்டாத பழக்கங்களான கோக் , பெப்சி குடிப்பதை முற்றிலுமாக தடுக்கணும்.


விழித்து புரட்சி செய்ய வேண்டிய நேரம் வந்தாச்சு.. நமக்கென்ன என இருக்க முடியாதுதான் ..

Paleo God சொன்னது…

புரட்சி வரும் வரையில் ஒழுக்கத்தையும் ஒத்திப்போடக்கூடாது ///

புரட்சி வந்தபின்னும்..

:))

பொன் மாலை பொழுது சொன்னது…

//நீண்டகால அடிப்படையில் - வளராத அரசியல் மதமாகிவிடும் .

குறுகிய கால அடிப்படையில் - வளர்கின்ற மதம் அரசியலாகிவிடும் //

நம்ம ஊரில் உள்ளநிலை.

கவி அழகன் சொன்னது…

நீண்டகால அடிப்படையில் -வளராத அரசியல் மதமாகிவிடும் .

குறுகிய கால அடிப்படையில் -வளர்கின்ற மதம் அரசியலாகிவிடும் .

அருமையான உணமையான கருத்து

ஹேமா சொன்னது…

எல்லாமே அருமையா இருக்கு !

சசிகுமார் சொன்னது…

ஆணித்தரமான கருத்துக்கள்.

cheena (சீனா) சொன்னது…

தலைவன் வழி காட்ட வேண்டும் - வழி காட்டப் படக் கூடாது - அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வருணன் சொன்னது…

நண்பா தனிமனிதப் பொறுப்புணர்வே உள்ளார்ந்த புரட்சியின் முதல் படிநிலை எனக் கருதுகிறேன். எல்லோரும் நியாயமாக நடந்து ஒன்று கூடி யோசிக்கையில் தீய சக்திகளை வேரறுக்கும் சாத்தியங்கள் அதிகமாகிறது...

அர்த்தமுள்ள பதிவு நண்பா. வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "