செவ்வாய், 13 டிசம்பர், 2011

உலகை புரட்டிப்போடும் புத்தகம் - ஒரு அறிமுகம்.2.நண்பனின் மதிப்புரைஇவன் எழுத்தின் மீது எனக்கு கொஞ்சமும் மரியாதை கிடையாது.இவன் எழுதுவது இலக்கியமே அல்ல.இவன் மற்றவர் பார்க்காத,படிக்காத  விசயங்களை ,மற்ற இலக்கிய நூற்களிலிருந்து திடுடி நயமாக தமிழில் கோர்த்து தனது எழுத்தாக,இலக்கியமாக ,உலகத்தரம் வாய்ந்ததாக காட்டிக்கொள்ளும் ஒரு மோசடிக்காரன்.இவன் மட்டுமல்ல இவனுக்கு இணையாகவும் சிலர் உள்ளனர்.

பாரதி பாடலை யார் பாடினாலும்,எழுதினாலும் இது பாரதியுடையது என்று சொல்லிவிட முடியும்.யாரேனும் உரிமை கொண்டாடினால் இது பாரதியினுடையது நீ போலி என அடித்துக்கூற முடியும்.ஆனால் ,மீலோ தீவில் பராகி மொழியில் கவிதை எழுதிய கோம்டபுரஜ் -ன்  கவிதையின் சூரிஸ் மொழிபெயர்ப்பின் ஆங்கில தழுவலை தமிழில் தனது என்றும்,கௌசிக பட்டரின் திதி சூக்தத்தை கொஞ்சம் பூசிமொழுகி மெழுகிட்டு தனது என்றும் வெளியிட்டால் யாருக்கு தெரியும் எங்கிருந்து திருடியது என்று.அதனால் தான் பாரதி பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க சொன்னான் போலும்.இத்தகைய இலக்கிய திடுட்டை தடுக்க.மொழிபெயர்க்க சொன்னா இங்க பெயரை பெயர்கிறானுக.

இத்தகைய இலக்கிய திருடர்கள் ,இவன்களுக்குள்ளே வேண்டுமென்றே,இந்த இலக்கிய திருட்டை மற்றவர்களிடமிருந்தும் தனது வாசகர்களிடமிருந்தும்  மறைக்க ஒரு போலிச்சண்டையை தங்களுக்குள் அறிவுலக யுத்தம் என்று கூறி தொடர்ந்து செய்துவருவதுடன்.தங்களுக்குள் நண்பர்களாகவும் ,வெளிப்பார்வைக்கு அறிவுலக வைரிகளாகவும் நடித்துவருவது தான் எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

இன்றைய  தமிழ் இலக்கியம் இந்தகைய கயவர்களால் தான் சிரழிந்துவருகிறது.இவன் அதில் முதல் ரகம் அதனால் இவனை வாசிப்பது கிடையாது..... என புத்தகத்தை திறந்ததும் , நண்பனின் மதிப்புரை என்று தன்னைப்பற்றியும் தனது புத்தகத்தைப்பற்றியும் தனது நண்பன் எழுதியதை அப்படியே வெளியிட்ட எழுத்தாளனின் நாகரிகத்தையும் தைரியத்தையும் பார்த்து வியந்ததில்  தூக்கம் தொலைய,இயல்பின் போக்கில் வாசிக்க ஆரம்பித்து கடந்த மூன்று நாட்களாக புத்தகத்திலேயே
ஆழ்ந்துவிட்டிருந்துள்ளேன் என்பதனை ரவி உசிப்பியபொழுது தான்  இன்று மதியம் உணர்ந்தேன்.

எந்த புத்தகத்தையும் வாசித்தாலும் முழுமையாக வாசிப்பேன்,இல்லையேல் வாசிக்கவேமாட்டேன்.மற்றவர்போல் நாணல்தீண்டல் வாசிப்பு என்பது கிடையவேகிடையாது.ரவியும் அத்தகைய வகைதான்.தூக்கும் முன் முதன்முறையாக நாணல்தீண்டல் செய்யலாம் என்று தான் புத்தகத்தை எடுத்தேன்.ஆனால்,இதனை படிக்கப்படிக்க இதன் ஒவ்வொரு வரிகளும் என்னை புதுப்பித்துக்கொண்டே சென்றது.

என்னுள் இருந்த ஆயிரமாயிரம் கேள்விக்கு யாரும் கொடுக்காத மிகச்சிறந்த விளக்கத்தை என்னுள் விதைத்து  என்னை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச்சென்றது இப்புத்தகம்.

அவன் சிந்தித்துள்ளான்,எழுதியுள்ளான்  என்பதை விட அவன் என்னை சிந்திக்க வைத்தான் என்பதால் அவன் மீதான பார்வையும் விசாலமானது.நான் இப்பொழுது ஒரு புதிய உந்துசக்தியை பெற்றிருக்கிறேன்.இவ்வளவு சிறந்த புத்தகத்தை படைக்க அவன் எத்தகைய உன்னதமான அனுபவங்களை தனது வாழ்வில் பெற்றிருக்கவேண்டும் என வியப்பு மேலிட்டாலும் ,அதையும் தாண்டிய விழிப்புணர்வை இப்புத்தகம் அளிப்பதை உணர்கிறேன்.

உலகின் உண்மையை கடந்த தினங்களில்  உணர்வுப்பூர்வமாக இப்புத்தகத்தால் நான் அறிந்துகொண்டேன்.
இதையும் பார்க்க .
 தொடரும் ....
Download As PDF

28 கருத்துகள் :

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//இவ்வளவு சிறந்த புத்தகத்தை படைக்க அவன் எத்தகைய உன்னதமான அனுபவங்களை தனது வாழ்வில் பெற்றிருக்கவேண்டும் என வியப்பு மேலிட்டாலும் ,அதையும் தாண்டிய விழிப்புணர்வை இப்புத்தகம் அளிப்பதை உணர்கிறேன்.//

அப்படி என்ன புத்தகம் அது?ஆர்வத்தை அதிகமாக்குகிரீர்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

என்ன? சாருவின் பதிவுகளை ஒழுங்காகப் படிக்கிறீர்களா?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சீக்கிரமாக போடுங்கைய்யா ஆர்வமா இருக்கு...!!!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்ன? சாருவின் பதிவுகளை ஒழுங்காகப் படிக்கிறீர்களா? //
தவறான புரிதல் சகோ .

M.R சொன்னது…

அது என்ன புத்தகம் என ஆவல் தூண்டுகிறது ,மறு பக்கத்தை வாசிக்க வருகிறேன் நண்பரே

கோகுல் சொன்னது…

படிக்கப்படிக்க இதன் ஒவ்வொரு வரிகளும் என்னை புதுப்பித்துக்கொண்டே சென்றது.
//

எங்களையும் புதுப்பிக்க விரைவில் அடையாளம் காட்டுங்கள்!

Jeyamaran சொன்னது…

appadi enna puthagam anna athu............

சின்னப்பயல் சொன்னது…

அது என்ன புதினம்-னு கொஞ்சம் சீக்கிரம் சொல்லிடுங்க தல...:-)

சம்பத்குமார் சொன்னது…

வணக்கம் சார்..

புத்தகத்தை உடனே படிக்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகரிக்கிறது.கண்டிப்பாக சிந்திக்கதூண்டும் புத்தகமாக இருக்கப்போவது நிஜம்.

நானும் தொடர்கிறேன்

ராஜி சொன்னது…

எனக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளது. என் ஆர்வத்தை தூண்டுகிறது இப்புத்தக அறிமுகம்.

ADMIN சொன்னது…

இப்படியொரு உந்துதலையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கிய புத்தகம் என்னவென்று அறிந்துகொள்ள நானும் ஆவலாக உள்ளேன்.. !

மகேந்திரன் சொன்னது…

யப்பா...
இப்பவே கண்ணைக் கட்டுது..

இந்த அளவுக்கு அற்புதமான புத்தகம் எது என்று
அறிந்துகொள்ள மிக ஆர்வமாக இருக்கிறது நண்பரே.

சீக்கிரம் சொல்லுங்கள்.

MyKitchen Flavors-BonAppetit!. சொன்னது…

Have to wait for one more post to get to know the book.Neenga pesama detective stories ezhuthalam. Antha azhavu suspense vaithuleerkal. Excellent.

ஹேமா சொன்னது…

ஒரு எழுத்தாளனைப்பற்றி அறிமுகப்படுத்தி இப்படி ஆவலைத் தூண்டுகிறீர்கள் !

ceekee சொன்னது…

Racy style. Taut and thrilling suspense.
Well done ... Keep it up ...
We are all eagerly waiting for more ...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - சாருவின் படைப்போ என நினைத்தேன் - இல்லை எனத் தெரிகிறது - ஈரோட்டில் வெளியிடப்பட்ட புத்த்கமா ? கண்டு பிடித்து விடுகிறேன். அறிமுகம் இரு பகுதிகளுமே ஆர்வத்தினைத் தூண்டுகிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Admin சொன்னது…

இலக்கியத் திருட்டையும் அற்புதமாக சுட்டிக்காட்டினீர்கள்..ஆர்வம் அதிகரிக்கிறது..

சசிகுமார் சொன்னது…

சார் உங்க போன் நம்பர் கொடுங்க... என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியல...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எதிர்பார்க்கிறேன்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!

பால கணேஷ் சொன்னது…

ஹலோ... உங்க வீட்டு அட்ரஸ் என்ன? நேர்லயே வந்து கேட்டுறலாம் போல கொலவெறி வருது- படிக்கப் பிடிக்கிற எனக்கு. சீக்கிரம் சொல்லுங்கப்பா...

Unknown சொன்னது…

ஆவலைத் தூண்டிவிட்டிர்!
விரைவில் விடை வேண்டும்

புலவர் சா இராமாநுசம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

உங்களுக்கு வாசிப்பு அனுபவமும் அதிகம் போல

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

த ம ஓட்டு விழலை, என்னை பிரச்சனை?

shanmugavel சொன்னது…

//எந்த புத்தகத்தையும் வாசித்தாலும் முழுமையாக வாசிப்பேன்,இல்லையேல் வாசிக்கவேமாட்டேன்.மற்றவர்போல் நாணல்தீண்டல் வாசிப்பு என்பது கிடையவேகிடையாது//

நானும் இப்படித்தான்.தொடருங்கள்

பொன் மாலை பொழுது சொன்னது…

ரொம்ப நீட்டிக்காதீங்க, எல்லாரும் ஆர்வமுடன் இருக்கிறோம்.

சுதா SJ சொன்னது…

ஆஹா.... என்ன புத்தகம் பாஸ் அது??? அறிய ரெம்ப ஆவலாய் இருக்கு.... அதை அறிய உங்கள் பின்னால் வாறன்... ஹா ஹா

Radhakrishnan சொன்னது…

எந்த ஒரு புத்தகமும் உலகை புரட்டி போட முடியாது என்றாலும் உங்களது எழுத்துக்காகவே அந்த புத்தகம் உலகை புரட்டி போடும் மாயையை தரத்தான் செய்யும்.

விஷாஹ் மானஸ்வி சொன்னது…

பாஸ்.. என்ன புத்தகம்ன்னு சொல்லுங்க.. நாங்களும் அதைப் படிக்கிறோம்..

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "