வியாழன், 30 ஆகஸ்ட், 2012

முதல் முதலாய்... என்னை காமெடியன் ஆக்கிய ...சென்னை பதிவர் சந்திப்பு ...


அதிக வேலைப்பளுவினால் கடந்த மூன்று  நாட்களாக இணையத்திற்கு வரமுடியவில்லை.அதனால் உடனே சென்னை பதிவர் சந்திப்பு பற்றி பதிவிடவும் முடியவில்லை.

சென்னை பதிவர் சந்திப்பால் தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட  சில மறக்கமுடியாத அனுபவங்களை இங்கு  பகிர்கிறேன்.

சில நிகழ்வுகள் இந்த பதிவர் சந்திப்பால்  தான் எனக்கு  முதல் முதலாய் ... என் வாழ்வில் ஏற்பட்டது .அவைகள்,

சென்னை ரயில் நிலையத்தில் இறங்கியதும்,நாங்கள் எங்களுக்கு நிகழ்ச்சியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த அறைக்கு  ஆட்டோவிலோ அல்லது பஸ்ஸிலோ தான் செல்வோம் என நினைத்திருந்தேன்.ஆனால்,சிபி எலக்ரிக் ட்ரெயினில் போகனும்னு சென்னதும்,எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.ஏன் எனில் நான் எலக்ரிக் ட்ரெயினில்  பயணம் செய்யதே கிடையாது. இப்பத்தான் முதல் முதலாய் எலக்ரிக் ட்ரெயினில்  பயணம்.

அறையில் முதல்முதலாய்  சந்தித்தது  திண்டுக்கல் தனபாலன் அவர்களை.
சந்திப்பு மிகவும் தித்திப்பாக இருந்தது.

பிறகு ,

மதுமதி ,வீடு திரும்பல் மோகன் குமார்,ஆரூர் மூனா செந்தில்,பட்டிகாட்டான் பட்டணத்தில்-ஜெய் , ஷர்புதீன்,மேட்ராஸ் பவன் சிவா, பாலகணேஷ் , செல்வின்,சீனு ,பிலாசபி பிரபாகரன்,கேபில்,நாய் நக்ஸ்,கோகுல் ,வலைச்சரம் சீனா,தமிழ்வாசி  பிரகாஷ் ,புலவர் சா இராமாநுசம் ,கவிதை வீதி-சௌந்தர்,தீதும் நன்றும் பிறர் தர வாரா-ரமணி , வேடந்தாங்கல் - கருண் , தென்றல் - சசிகலா, சேட்டைக்காரன், சுரேகா,வேடியப்பன்,நடன சபாபதி,பலாபட்டறை ஷங்கர், மக்கள் சந்தை - சீனிவாசன்,வாக்க பிளாக்கலாம் அனந்து,ஆயிரத்தில் ஒருவன் மணி , சிராஜுதீன்,ரஹீம் கஸாலி,ஆஷிக் முகமது,வசந்த மண்டபம்-மகேந்திரன், சென்னைப்பித்தன்,ரோஸ்விக்,மணிஜி,ஜாக்கிசேகர், உண்மைத்தமிழன், பாட்டர்பிளை சூர்யா, பாகீரதி எல்.கே - என  பலரை நேரில் கண்டு கருத்துக்களை பரிமாறிக்கொண்டேன்.

இவர்களில்  வலைச்சரம் சீனா,கேபில்ஜி,மணிஜி,ஜாக்கி சேகர் ஆகியோரை தவிர்த்து மற்றவர்களை முதல்முதலாய் இங்குதான் சந்திக்கிறேன்.


முதல் முதலாய் நண்பர் கும்மாச்சி அவர்கள் தான்
மூத்த பதிவர்களை ஏன்  பாராட்டவேண்டும் என நான் பேசியதை
நேரலையில் கண்டு உடனே தனது வாழ்த்தினை தெரிவித்தது எனக்கு மிக்க மகிழ்வை அளித்தது.

கும்மாச்சி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக்க மகிழ்ச்சி,மிக்க நன்றி கும்மாச்சி அவர்களே.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, இந்த பதிவர் சந்திப்பில்  நண்டு@நொரண்டு வாகிய என்னை காமெடியன் ஆக்கிய நிகழ்ச்சியினை ... கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
நான் விழா நடக்கும் மண்டபத்திற்கு வெளியில் மக்கள் தொலைக்காட்சி உரையாடலுக்காக நின்றுகொண்டிருந்தேன்.அப்பொழுது நீங்க தான் நண்டு@நொரண்டா  ஹா...ஹா...ஹா...என சிரித்தபடி நான் -காணாமல் போன கனவுகள் -ராஜி என்றார்.அட ,நீங்க என்ற ஆரம்பத்துடன் எங்களின் பேச்சு தொடர்ந்தது.அங்கு இருந்த ராஜியின் மகன் எனது கழுத்து பட்டைய பார்த்து , நண்டு@நொரண்டு ...ம் ...எனக்கும் இது மாதிரி ஒரு காமெடியான பேரு சொல்லுங்க,நானும் ஒரு ப்ளாக்ஆரம்பிக்கிறேன்...என்றாதும்,
நான்கேட்டேன், ஏப்பா  இந்த பெயர் உனக்கு காமெடியாவா தெரியுதா என்றேன், அதுக்கு,விளையாடாதீங்க , நல்லா யோசிச்சு கட்டாயம் இது மாதிரி ஒரு  நல்ல காமெடியான பேரா சொல்லுங்க ... புரியுதா... என்றதும்,நானும் சொல்ரேனு சொல்னேன்.ஆனா,என்னால இது மாதிரி காமெடியான பேர யோசிக்க முடியல.அதனால,யாராவது இது மாதிரியான, காமெடியான பேரு தெரிஞ்சா சொல்லுங்கப்பா.சின்ன பையன் பொக்குன்னு போயிருவான்.


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


சென்னை பதிவர்  சந்திப்பு  ... 

முதலில் சென்னை தமிழ்வலைப்பதிவர்கள் திருவாழாவின்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எனது முதற்கண் வந்தனங்கள் .
மிகவும் சிறப்பாக  தமிழ் வலைப்பதிவர்கள் திருவாழாவை நடத்தினீர்கள்  தமிழ் வலைப்பதிவர்கள் குழும -சென்னை பதிவர்களே.

உங்கள் அனைவரின் உழைப்பிற்கும்,அர்ப்பணிப்பிற்கும் பணிவான என் வணக்கம் கலந்த மரியாதைகள் உரித்தாகுக.

தமிழ்வலைப்பதிவர்கள் திருவாழா  மிகவும் மனநிறைவான
ஒரு நிகழ்வாகவே அமைந்தது என்றால்அது மிகையன்று.
மிகமிக சிறப்பாக அனைத்து நிகழ்வுகளும் நடந்தது.
அதனை நேரலையாக வெளியிட்டது பாராட்டும்படியான ஒன்றாகும்.

தமிழ் வலைப்பதிவர்கள் குழும -சென்னை பதிவர்களின் உபசரிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது .அதற்கும் எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் வலைப்பதிவர்கள் குழும-சென்னை பதிவர்களே  தொடரட்டும் உங்களின் இந்த சீரிய பணி.வாழ்த்துக்கள்.

வணக்கங்கள் பல - தமிழ் வலைப்பதிவர்கள் குழும-சென்னை பதிவர்களே, வணக்கங்கள் பல .
Download As PDF

25 கருத்துகள் :

சின்னப்பயல் சொன்னது…

/சின்ன பையன் பொக்குன்னு போயிருவான்./ இது நல்லாருக்கு :-)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி சார்...

முதல் முதலாய் கருத்து சொல்வதும் மகிழ்ச்சி...திண்டுக்கல் வந்தால் போன் செய்யவும்... நன்றி... (TM 2)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அப்போ இத்தனை நாளா வில்லனா இருந்தீங்களா?

ஆட்டோல போனா 100 ரூபா ரயில்ல போனா 5 ரூபா ;-0Thozhirkalam Channel சொன்னது…

தங்க்ளை விழாவில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நன்பரே!!

தங்களின் அறிமுக புகைப்படம் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறோம்,, தொடர்புகொள்ளுங்கள் தோழா..

தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி

Yaathoramani.blogspot.com சொன்னது…

தங்களுடன் யாரும் சிறிது நேரம் பேசினாலும்
நிச்சய்ம பல நாள் ப்ழகிய மன உணர்வினை
பெறுவார்கள்.நானும் உணர்ந்தேன்
நிகழ்வுகளை மிக மிக அருமையாக பதிவு
செய்துள்ளீர்கள்.பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

சென்னியாரோடு போகிறேன் என நீங்கள் சொலும் போதே நிறைய... எதிர்பார்த்தேன்!

Unknown சொன்னது…

ஹாஹா...காமடியனுடன் சென்று விட்டு பின்னே ஹீரோ சான்சா தருவாய்ங்க...அ.வ்வ்

Paleo God சொன்னது…

எம் ஜி ஆர் மாதிரி சும்மா தக தகன்னு இருக்கீங்க பாஸ் :))

CS. Mohan Kumar சொன்னது…

Arumai vaazhthugal ! Santhiththa Nanbargal peyar anaithum kurippittathu miga nandru.

ராஜி சொன்னது…

கடைசி வரை நண்டு@நொரண்டு க்கு அர்த்தம் சொல்லவே இல்லியே சகோ.

MARI The Great சொன்னது…

நான் நிகழ்ச்சியின் பெரும்பாலான பகுதியை நேரலையில் பார்த்தேன் நண்பரே! பலரின் முகத்தை முதல் முதலாக பார்த்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது! :)

கும்மாச்சி சொன்னது…

எஸ். ரா. உங்களது பதிவை எதிர்பார்த்து காத்திருந்தேன். மிக்க மகிழ்ச்சி. உங்களுடன் பேசியதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி, ஏதோ நானே நேரிலே கலந்துகொண்டது போல் இருந்தது.

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் சொன்னது…

ஒற்றுமையை பறைசாற்றும் இந்த நிகழ்வு குறித்து எனக்கும் நல்லதொரு அபிப்ராயம் இருந்தது. என்றாலும் வர இயலாமைப் பற்றி வருந்த வேண்டாத தங்களின் விழா பற்றிய விரிவுரைக்கு நன்றியும் வணக்கமும்..

வித்யாசாகர்

Unknown சொன்னது…


தங்களைக் கண்டதும் உரையாடியதும் மிக்க மகிழ்ச்சி!

துரைடேனியல் சொன்னது…

அழகான தொகுப்பு.

சக்தி கல்வி மையம் சொன்னது…

ரைட்டு..

Jeyamaran சொன்னது…

ஹா ஹா அண்ணா நான் என்ன என்னமோ எதிர் பார்த்தேன் நீங்க விவேக் மாதிரி காமெடி லாம் பண்ணின்கலோனு கடைசில உங்க ப்ளாக் ல காமெடி நடந்துருக்கு :-)

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்லது தலைவரே...

settaikkaran சொன்னது…

உங்களைச் சந்தித்து அளவளாவியது எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியளித்தது! கச்சிதமான பதிவு! :-)

VOICE OF INDIAN சொன்னது…

நான் பாலசுப்ரமணியன்

சென்னை திருவொற்றியூர் தெற்கு அரிமா சங்கத்தின் நிறுவனர் தலைவராக 2008 -09

குருப்ரசாத் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர்

மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம் தலைவர்

இந்தியன் குரல் அமைப்பின் நிறுவன உறுப்பினர் மாநில செயலாளர்

நான் எனது தொழிலில் நேர்மையாகவும் நியாயமாகவும் உண்மையாகவும் செயல்பட்டு வருகிறேன் ஆகவே எனது தொழில் நிறுவனத்தில் எனக்கு போதுமான வருவாய் கிடைக்கின்றது எனக்கு திலகா என்று மனைவியும் குருபிரசாத் கேந்திரபிரசாத் என்று இரண்டு மகன்களும் உள்ளனர்

மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம் வட சென்னை திருவொற்றியூரில் இருக்கும் சமூக அமைப்பு
இதன் மூலம் புத்தக வங்கி நடத்திவருகிறோம்
2009 இல் ஆரம்பித்து இதுவரை 555 கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக ரூ 12,50,000 மதிப்புள்ள பாட புத்தகம் பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம் இந்த 2012 -13 150 கல்லூரி மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம்
பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது பயிலும் மாணவர்களுக்கு என்னால் முடியும் எனும் தலைப்பில் ஆண்டுதோறும் தன்னம்பிக்கை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றோம்
கல்லூரி மாணவர்களுக்கு ias பயிற்சி வழிகாட்டுதல் மற்றும் சுய தொழில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வருகின்றோம்
இந்தியன் குரல் அமைப்பின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும் சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் லஞ்சம் கொடுக்காமல் இடை தரகர்களை நம்பி ஏமாறாமல் அவர்களது உரிமையைப் பெற்றுக்கொள்ள தகவல் பெறும் உரிமைச் சட்டம் எவ்வாறு பயன் படுகின்றது என்று வழிகாட்டுகிறோம்
தமிழகம் முழுவதும் தகவகள் பெறும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தும் நண்பர்களுக்கு உதவிட இலவச உதவிமையங்கள் நடத்திவருகிறோம் போன் மூலம் உதவிபெற காலை 10 -12 மற்றும் மாலை 4 - 6 மணிக்கும் தொடர்புகொள்ள 9443489976 மற்றும் 9444305581 இந்த எங்களில் தொடர்பு கொள்ளலாம்
தகவல் உரிமைச் சட்டத்தை பாமரனும் அறிந்து பயன்பெற இது தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்ற புத்தகம் வெளியிட்டு இருக்கின்றோம்
எங்களது உதவி மையங்கள் சென்னை காஞ்சீபுரம் வேலூர் ஆம்பூர் திருப்பத்தூர் சேலம் கோவை பொள்ளாச்சி தேனீ மதுரை திருச்சி சிவகாசி விருதுநகர் நெல்லை கன்னியாகுமரி தூத்துக்குடி நகரங்களில் நடைபெற்று வருகிறது
மதன் தோறும் சனி மற்றும் ஞாயிறுகளில் தமிழகம் முழுவதும் பயிற்சி வகுப்புக்குள் நடைபெறும் இடங்கள் பதிவிற்கு மற்றும் தொடர்பிற்கு 9444305581 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 ஐ அனைவருக்கும் அறியச் செய்வது பயன்படுத்த உதவுவது சட்டங்களுக்கு எல்லாம் சட்டமான இந்த சட்டத்தை காப்பது அதற்காக போராடுவது இது இந்தியன் குரல் அமைப்பின் கொள்கை இந்த சேவைகளுக்கு நாங்கள் எந்தப் பெயரிலும் கட்டணம் வாங்குவது இல்லை யாரிடமும் நன்கொடை வாங்குவது இல்லை எங்கள் அமைப்பில் உறுப்பினர் கட்டணம் வாங்குவதும் இல்லை எங்களது போக்குவரத்து உள்ளிட்ட அமைப்பின் செயல் பாட்டிற்கு நிறுவன உறுப்பினர்களான எங்கள் உழைப்பின் பணம் செலவிடப்படுகின்றது.
தமிழக தகவல் உரிமைச் சட்ட உபயோகிப்பாளர்கள் பெரும்பான்மையானோர் எங்களிடம் நேரடியாக அல்லது எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் மூலமாக முறையாக கற்றுக்கொண்டவர்கள் என்பதில் இந்தியன் குரல் பெருமை கொள்கிறது

--
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar,
Sembiyam,
Perambur,
Chennai 600019

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நல்லதொரு பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி....


பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். மேலும் விவரங்களுக்கு:

கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview

ஹேமா சொன்னது…

இவ்ளோ பெரிய பதிவர்,வழக்கறிஞர் ஒரு சின்னப்பெடியன் கிட்ட மாட்டினீங்களா...சிரிக்க வச்சிட்டீங்க எங்களையும் !

சசிகலா சொன்னது…

அடடா இப்படியா சிக்குனீங்க அந்த குடும்பத்துக்கே இதே பொழப்பு போலங்க.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - அருமையான பதிவு - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "