வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

வஞ்சனை படுகொலைகளும் மகாபாரதமும்.

இயல்பாக பிறந்த உயிரினங்கள் அனைத்தும்
இயல்பாகவே மரணிக்கவேண்டும் .


இயற்கை 
தனது  மாற்றத்தால் 
மரணத்தை தருவதை  கூட 
நான் ஏற்றுக்கொள்வதில்லை.
அதற்கு அந்தகைய  உரிமையும் இல்லவேயில்லை .


இயல்பான மரணத்தைத் தவிர 
மற்றவகையான மரணங்கள் அனைத்தும் கண்டனத்திற்குரியதே. 
அதற்கு எத்தகைய காரணங்கள் கூறப்பட்டாலும்- இது  எனது கருத்து .  
 தமிழ்நாட்டில் நடக்கும் சில வஞ்சனை படுகொலைகளைப்பற்றி படிக்கும் பொழுது உண்மையில் நாம் எந்தவகையான சமூகத்தில் இருக்கிறோம்  என எண்ணத்தோன்றுகிறது.

இந்த நிலை மாறவேண்டும்.

மகாபாரதத்தில் சாந்தி பர்வம் என ஒரு பர்வம் இருக்கிறது.

அதில் கூடாத குணங்கள் எட்டு

1.இல்லாத குற்றத்தை சுமத்துவது,
2.குற்றமற்றவனை தண்டிப்பது,
3.வஞ்சனையாக கொலை செய்வது ,
4.பிறர் பெருமையில் பொறாமை கொள்வது,
5.அடுத்தவர் குணங்களை குற்றமாக கூறுவது,
6.உரிமையற்ற பொருளை கவர்வது,
7.கடுஞ்சொற்களை  பேசுவது,
8.கொடுந்தண்டனை அளிப்பது என வகைப்படுத்துகிறது.இது போன்ற குணமுடையவர்களை அடையாளம் கண்டு சீர்திருத்த வேண்டும். 
படங்கள நன்றி  . Wikipedia
Download As PDF

10 கருத்துகள் :

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அப்ப உலகத்தில இருக்கிற மொத்தபேரையும் சீர்திருத்தனுன்னு நினைக்கிறேன்....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

படுகொலைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல... ஆனாலும் அதுதான் தினமும் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது...

கார்த்திக் சரவணன் சொன்னது…

மேலே சொல்லப்பட்ட எட்டில் பெரும்பாலானவை எல்லாரும் செய்வதுதான் என்பது வேதனைக்குரிய விஷயம்... கலிகாலம்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சாந்தி பர்வம் - சாந்தி...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இயல்பான மரணத்தைத் தவிர
மற்றவகையான மரணங்கள் அனைத்தும் கண்டனத்திற்குரியதே.
என் கருத்தும் இதேதான்

சக்தி கல்வி மையம் சொன்னது…

கண்டிப்பாக சீர்திருத்தவேண்டும்..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - கூடாத குணங்கள் எட்டு -ஆனாலும் அவை நீக்கமற நிறைந்திருக்கின்றனவே - எப்பொழுது எப்படி அவர்களைத் திருத்துவது ? இயலாத செயல் - இப்படியே வாழ்க்கை செல்ல வேண்டியது தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ப.கந்தசாமி சொன்னது…

உன்னதமான கருத்துகள்.

பெயரில்லா சொன்னது…

உயிரை எடுக்க உயிருக்கு மட்டுமே உரிமையுண்டு, புறக் காரணிகள், அகக் காரணிகள் இயல் மரணத்தைக் கெடுக்கும் எனில், இடைக் காலத்தில் உயிரை எடுக்கும் எனில் அதனை நானும் வெறுக்கின்றேன். வஞ்சித்துக் கொள்ளும் மானிடக் கூட்டம் நவீன உலகிலும் தொடர்ந்து செயல்பட்டு வருவதையும், வஞ்சித்து உயிர் வாங்குவதையும் தடுப்போமாக. வாழு வாழ விடு என்ற கொள்கையை நிலைப்படுத்துவோமாக.

G.M Balasubramaniam சொன்னது…

மஹாபாரதத்தில் குறிப்பிட்டுள்ள செயல்கள் நடந்திருக்கிறது. சொல்லப் போனால் மஹாபாரதமே இச்செயல்களால் நிறைந்திருக்கிறது. நேரம் இருந்தால் என் பதிவு சாந்தனுவின் சந்ததிகள் படித்துப் பாருங்கள்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "