சனி, 19 ஜூன், 2010

செம்மொழி மாநாடும் அழியும் தமிழனின் அடையாளமும் .எங்கே லெமூரியாக் கண்டம் ? .3










ஆயிரக்கனக்கான தமிழர்கள் வதைபட்டுக்கொண்டு இருக்கின்றனர் சுதந்திரமின்றி கேம்புகளில் அகதிகளாக . எங்கு அவர்கள் அகதிகளாக சிறைவைக்கப்பட்டுள்ளனரே அது லெமூரியாக்கண்டத்தின் இருதயப்பகுதியில் அமைந்துள்ளது .தனது மண்ணிலே அடிமைகள் போல் வந்தேறிகளால் சித்தரவதைப்படுத்தப்படுகின்றனர் .
கொடுமை .

எங்கே லெமூரியாக் கண்டம் ?ஏன் கிடப்பில் போடப்பட்டது ?
லெமூரியாக் கண்டம் பற்றி பல கோணங்கள் இருந்தாலும்.மாற்றுப்பார்வை இருந்தாலும் .அன்று அதனை ஏற்று .அதுவே தனது உயிர் மூச்சாக விவாகத்துடன்,வீரத்துடன் எழுந்த,எழுதிய அறிஞர் கூட்டங்கள்
எங்கு சென்றனர் ?.என்ன ஆனது அவர்களின் ஆய்வுகள்? என்பது போன்ற ஐயத்திற்கான தேடலில் 'மிகப்பெரிய அரசியல் சூது புகுந்துவிட்டது 'என்ற முடிவுக்கு வரமுடிந்தது .

வரலாற்றை நோக்க ,இலங்கையில் ஈழப்பிரச்சனை சூடு பிடித்து போர் ஆரம்பமாகும் வரை லெமூரியாக் கண்டம் ஆய்வுகள் அனல் பறத்து கொண்டிருந்தன என சொல்லலாம். போர் உக்கிரம் ஆகஆக லெமூரியா என்பது கட்டுரையாகி, புனைவாகி ,கற்பனையாகி பின் மறக்கும் படி மறைக்கப்பட்டுவிட்டது .

இதற்கு காரணம் என்ன ?
லெமூரியாக் கண்டம் நிருபிக்கப்பட்டால் ? என்ற கேள்விக்கு பதிலாக இருக்கிறது
அது .
லெமூரியாக் கண்டம் நிருபிக்கப்பட்டால் ,
லெமூரியா உண்மை என்றால் தமிழன் ஆதி முதல் மனிதன்.
லெமூரியா உண்மை என்றால் ஈழத்தமிழன் அந்த மண்ணின் மைந்தன் .
சிங்களவரோ வந்தேறிகள் .
இலங்கை முழுவதும் ஆளும் அதிகாரம் மண்ணின் மைந்தர்களுக்கே .
அதோடு மட்டுமல்லாமல் தமிழன் எழுச்சிபெற்றுவிடுவான் .
அந்த எழுச்சியில் அசைக்கமுடியாத ஒரு சக்தியாக தமிழன் உருவாகி விடுவான் .
அவன் எதையும் உருவாக்கக்கூடிய அளவிற்று வலிமைபெற்றுவிட்டுவான்.
தமிழனுக்கு நாடு உருவாகிவிடும் .

அப்படியிருந்தும் ஏன் மறைக்கப்பட்டது ? ?
யாரால் ,எப்படி என அறுதியிட்டு கூறமுடியவில்லை என்றாலும் ஈழபோரைத்தொடர்ந்து அது ஈழமக்களின் பிரச்சனை என்று மற்றவர்கள் ஒதுங்கிக்கொண்டது போன்றே தோன்றுகிறது . தமிழகத்தைப்பொறுத்தவரை எல்லா நிலைப்பாடும் ,நிலையும் அப்படியே .இதில் கட்சி வேறுபாடின்றி எல்லா கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் தான் இயங்குகின்றன.ஓட்டுக்கு .அதனை மீறி ஆய்வுகள் செய்ய யாரும் விரும்புவது இல்லை.ஏனெனில் இங்குள்ள தமிழனுக்கு எங்கிருத்தாலும் பெயரும் புகழும் கட்டாயம் வேண்டும் .எனவே சுயநலக்காரர்களாக தங்களை வடிவமைத்துக்கொண்டுவிட்டனர். சிந்திக்கத்தெரியாத பகுத்தறிவுவாதிகளாக மானுடம் பேசும் முகமூடிகள் .

அதோடு மட்டுமல்லாமல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநாடு நடத்தப்படாமலிருந்ததும் முக்கியகாரணங்களில் ஒன்று எனக்கூறலாம் .
தொடர்ந்து மாநாடுகள் அமைந்திருந்தால் இவ்வளவு பின்னடைவு ஏற்பட்டிருக்காது .
இது 23 வது மாநாடாக இருந்திருக்கும் .
இதற்கும் முழுக்க முழுக்க அரசியல் தான் காரணம் .

இந்த விசயத்தில் சிங்களர்கள் விழித்துக்கொண்டனர் .





.....

.

செம்மொழி மாநாடும் அழியும் தமிழனின் அடையாளமும் . 3 ......
(இக்கட்டுரை சுருக்கிய வடிவில் தரப்பட்டுள்ளது )
தொடரும் ....

.

.
.


.

. Download As PDF

7 கருத்துகள் :

ரோகிணிசிவா சொன்னது…

i have no words to share wat i felt when read urs post , waiting to hear more from you ,
thanks for sharing

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நன்று, தொடருங்கள்!

தமிழ்மண ஓட்டு பதிவு செய்தேன்!

+1
.
.
.

க ரா சொன்னது…

எப்பவோ யாரோ சொல்லி கேட்டது. தமிழுக்கு பன்றேன் பன்றேனு சொல்றீங்களே. மொதல்ல தமிழ் பேசற மனுசனுக்கு எதுனாச்சும் பன்னுங்கப்பா. தமிழ பேசுற மனுசன் நல்லா இருந்தாலே அவன் பேசுற தமிழ் மொழி நல்லா இருக்கும். அத விட்டுட்டு தமிழ் வளர்க தமிழ் வள்ர்கன்னு கோசம் போட்டுத்தான் இருக்கானுங்க இன்னும். மனுசன மட்டும் சாவடிச்சுட்டானுங்க.

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
vasu balaji சொன்னது…

ம்ம். தொடருங்கள்

ஹேமா சொன்னது…

பெருமூச்சின் பதிவு மட்டுமே.
தொடருங்கள்.

ஜோதிஜி சொன்னது…

தொடர வேண்டும்............

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "