நொரண்டு : வணக்கம் ,நண்டு.
நண்டு : வாங்க நொரண்டு.
நொரண்டு : இன்னைக்கு தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்க எங்க வீட்டுக்கு வந்தாங்க .உங்க வீட்டுக்கு .
நண்டு :ஒவ்வெரு வீட்டுக்குந்தான் வருவாங்க .ஒன்ற மாசம் இருக்குல .
நொரண்டு : அரைமணிநேரம் ,அத்தனை கேள்விக ..
நண்டு :இது முக்கியமானது .சரியான பதில் கூறுவது மிகவும் அவசியம் .
நொரண்டு : அப்படியா ?
நண்டு :ஆமாம் ,அப்பத்தான் எத்தனை நபர்கள் நாட்டில் இருக்கோங்கரதும்,எப்படி வசிக்கறோம் என்பது பற்றியும் முழுவிவரம் அரசு தெரிச்சு அதன்படி மக்களுக்கு என்ன செய்யலாமுனு யோசிக்க ஏதுவாயிருக்கும் .
நொரண்டு : அப்படினா ...பிச்சக்காரங்க ,நாடோடியா ,பராரியா திரியரவங்க ,வீடில்லாமல் வீதியில இருக்கரவங்க ,சாமியாருங்க ,மனநலமில்லாது ,தனித்து வீதியில விடப்பட்டவர்கள் ...இவங்களை எப்படி .?
நண்டு :விடுப்பா அவங்களை .
நொரண்டு : சரி .
நண்டு :இவை இரகசியமா வைக்கப்படும் .தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற கேட்க முடியாது .
நொரண்டு : அப்ப நான் என்ன விவரங்களை அளித்தேன் என எனக்கே சொல்லமாட்டாங்களா?.நானே தெரிஞ்சுக்க முடியாதா ? .ம் ....பாரத்தில தவறான தகவல்களை அளிப்பது குடியுரிமை விதிகள் 2003 ன் படி தண்டனைக்குரியது என பார்த்தேன் .
நண்டு :தவறான தகவல்களை ஏன் தர்ர .அச்சமின்றி அனைத்து சரியான தகவல்களையும் தரலாங்கறதுக்காகத்தான் இந்த ஏற்பாடு .
நொரண்டு : ஓ ..சரிதான் .நல்ல ஏற்பாடு.
நண்டு :ம்...
நொரண்டு : கணக்கெடுத்தவங்க நான் என்ன மொழி பேசறேனு கேட்கலேயே .
நண்டு :இந்த இந்த மொழி பேசும் மக்கள் இத்தனை பேர்னு தெரிஞ்சு என்ன செய்யப்போற ?.
நொரண்டு : அது முக்கியமில்லையா ?
நண்டு :இருக்கற நிலையில இதுக்கே கண்ணாமுழி பிதுங்கிபோயிரும் நீ என்னடானா?அது இல்ல ,இது இல்லனு கேட்டுட்டு .இதே எங்க வீட்டுக்கு கணக்கு எடுக்கும் அதிகாரி வந்துட்டாங்க ,நல்ல குடிமகனா ,அவங்களுக்கு வணக்கம் சொல்லி வரவேற்று அவங்க கேக்கிற கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலச்சொல்லி நான் என் ஜனநாயகக்கடமைய செய்யப்போறேன் ,வரட்டா ....
========
நொரண்டு : ஏய் உம்பிள்ளை ஸ்கூலுக்கு போய்டுச்சா ?
நண்டு :ம்...இன்னைக்குத்தான் ...பொதி சுமக்காம ...
நொரண்டு : ம்..இன்னையிலிருந்து சமச்சீர் கல்வி ஆரம்பம் .
நண்டு :ஆமாம்பா .நொம்ப நல்ல விசயம்பா .
நொரண்டு : அதேடு கல்விஉரிமைய இந்த ஆண்டிருந்து பெற்றுள்ளனர் .
நண்டு :மிக மிக நல்லவிசயம் இது .
நொரண்டு : அது என்னான்னா ,எனக்கு நிறைய குழப்பம் இருக்கு .
நண்டு :எத்ல ?
நொரண்டு : கல்வி உரிமைனா ஏன் ஸ்கூல பீஸ் வாங்கராங்க? .
நண்டு :உனக்கு தெரியலைனா விடு .இங்கிருக்கரவங்க எல்லாத்தையும் என்ன முட்டாளுனு நெனச்சுக்கிட்டயா .
நொரண்டு : ஏப்பா கோவிச்சுக்கற அரசு மாதிரி .
நண்டு :அடுத்து என்ன சந்தேகம் .
நொரண்டு : சரி ,பெற்றேர்களிடம் விழிப்புணர்வு இல்லாமல் எப்படி இது சாத்தியம் ? பெற்றேர்களின் பிடியின்று குழந்தைகளை எப்படி மீட்டு கல்வியளிக்க என்னென்ன சிறப்பு நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது ? பெற்றேர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கின்றனர் ?மேலும் ..
நண்டு :இதையெல்லாம் அரசு பாத்துக்கும் .
நொரண்டு : நல்லது .
நண்டு :சரி.
நொரண்டு : வந்துப்பா ...கல்வி உரிமைனா ஆசிரியர்களின் பணி பள்ளிக்கூடத்தில் அவர்கள் பாடம் நடத்துவதோடு இருக்கும் .
நண்டு :ஆம் .மேலும் நல்ல படித்த குடிமக்களை உருவாக்க ஆசிரியர்கள் அவர்களின் பணியில் மட்டுமே முழுமையாக இருக்கும்படி அரசு பார்த்துக்கொள்ளவேண்டும் .அது தவிர்த்து பிற பணிகளை அவர்கள் மீது சுமத்தக்கூடாது .
நொரண்டு : அதுக்கு என்ன செய்யவேண்டும் ?
நண்டு :ஆசிரியர்கள் என்றால் அவர்கள் பள்ளிக்கு செல்வார்கள் ,பாடம் நடத்துவார்கள்.அது மட்டுமே. அவ்வளவே .
நொரண்டு : ஓ...அப்படியா ..
நண்டு :ம் ..
நொரண்டு : சரி இதையல்லாம் ஏன் சொல்லற ?
நண்டு :மேலும் சிறப்பாக செயல்பட சில யோசனை தான் அவ்வளவே .
. Download As PDF
Tweet |
|
4 கருத்துகள் :
//பெற்றேர்களிடம் விழிப்புணர்வு இல்லாமல் எப்படி இது
சாத்தியம்//
s its much inevitable, but when wil we know wats our right and wen wil we raise our standards ???
//.மேலும் நல்ல படித்த குடிமக்களை உருவாக்க ஆசிரியர்கள் அவர்களின் பணியில் மட்டுமே முழுமையாக இருக்கும்படி அரசு பார்த்துக்கொள்ளவேண்டும் .அது தவிர்த்து பிற பணிகளை அவர்கள் மீது சுமத்தக்கூடாது .
நொரண்டு : அதுக்கு என்ன செய்யவேண்டும் ?
நண்டு :ஆசிரியர்கள் என்றால் அவர்கள் பள்ளிக்கு செல்வார்கள் ,பாடம் நடத்துவார்கள்.அது மட்டுமே. அவ்வளவே .
நொரண்டு : ஓ...அப்படியா ..//
மிகவும் சரியானது. கணக்கெடுத்தல் போன்ற பிற பணிகளுக்கு படித்து வேலையற்ற இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்துப் பயன்படுத்தலாம்.
மிக்க மகிழ்ச்சி
ரோகிணிசிவா அவர்களே
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
PRINCENRSAMA அவர்களே
மிக்க நன்றி
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "