வியாழன், 17 ஜூன், 2010

செம்மொழி மாநாடும் அழியும் தமிழனின் அடையாளமும்

நேற்று , நீதிமன்றத்தில் ,ஆங்கிலத்தில் 'செம்மொழி மாநாட்டு நாட்களில் தன்னால் ஆஜராக முடியாது அதனால் தான் ஆஜராகும் வழக்கை அதற்கு தோதாக வேறு ஒரு நாட்களில் மாற்றி அளித்திட மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன் ' னு நீதிபதிகளிடம் அந்த நீதிமன்றத்திக்கு அரசால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் கேட்க அதற்கு நீதிபதி அவர்கள் ஓ,ஆகட்டும்,சென்றுவாருங்கள் என்று தமிழில் இனிமையாகக் கூறினார் .
அரசின் கொள்கை ,கோட்பாடுகளை இவரின் முலம்தான் அரசு நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி நிலைநாட்டும் .அதற்காகவே அரசுகள் மாறும்பொழுதெல்லாம் ஆளும் கட்சியானவர்கள் தங்களின் கட்சியைச்சேர்ந்த வழக்கறிஞர்களை தங்களின் கு்ரலை நீதிமன்றத்தில் ஒலிக்க நியமிக்கும் முறை இங்கிளிஷ்ஸ்காரங்க காலத்திலிருந்து .
மாநாட்டு வேலைகள் .பிசி .உங்க கேஸ் அப்ப இருக்கா ? வாய்தா வாங்கிக்கங்க .நான் அப்ப இல்ல .நீங்க வரீங்களா ? னு என்னிடம் வினாவினார் .
நான் அவரிடம் கேட்டேன் ,எதுக்காக இந்த மாநாடு?னு .
உடனே அவர் என்னிடம் என்னங்க இது கொடுமையா இருக்கு .நீங்க எதுவும் படிக்கிறதில்ல போலருக்கு ,இது கூட தெரியாம .என்ன போங்க .நீங்கள்ளாம் .அதுவும் வக்கிலா இருந்திட்டுனு இங்கிளீசும் தமிழும் கலந்து பேசினார் .
நான் சிரித்துக்கொண்டே மீண்டும் கேட்டேன் .எதுக்காக இந்த மாநாடு?னு .
என்ன கிண்டல் பண்ரீங்களா பிரதர் னார் .
இல்லைங்க உண்மையாலுமே கேட்கிறேன்னு சொன்னேன் .
அதுக்கு அவர் தமிழ் வளர்ச்சிக்கு னார் .
நான் புரியலே விளக்கமா சொல்லுங்க னு சொன்னேன் .
என்னை ஒரு மாதிரி பாத்திட்டு திரும்பிக்கொண்டார் .
உண்மையில் இவருக்கு தெரியுமா தெரியாதா னு எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது .தமிழ் வளர்ச்சிக்கு மாநாடா தோவை ? .
சரி மத்தவங்க என்ன நினைக்கராங்கனு பாக்கலாம்னு எனது சக வழக்கறிஞர்களிடம் இதே கேள்வியைக்கேட்டேன் .ஒருவர் சொன்னார் நடத்தரவங்களுக்கே தெரியாத ஒன்ன ஏங்கிட்ட கேட்ட எனக்கெப்படி தெரியும்னார் .பொதுவாக சென்ன பதில்கள் ஒரு சாரார் தமிழ வளத்துறோம்னும்,மற்றவர்கள் தமிழ வளத்துறோம்னு சொல்லிக்கிட்டு தன்னையும் தன் குடும்பத்தையும் வளப்படுத்தறத்துக்கும்னும் .

............

செம்மொழி மாநாடும் அழியும் தமிழனின் அடையாளமும் .1.

தொடரும் ..............


..

. Download As PDF

10 கருத்துகள் :

தமிழ்போராளி சொன்னது…

அருமையான கட்டுரை. தன்னை வளர்த்துக்கொள்ளவே இந்த மாநாட்டை கலைஞர் நடத்துகிறார். இது போலவே பலவிருதுகள் அவர்களுக்குள்ளே கொடுத்துக்கொள்வார்கள். எது வளருதோ இல்லையோ தன் குடும்பம் வளரனும் என்று கலைஞரின் ஆசை. அதை அனைத்தையும் சாகுறத்துகுள்ளவே நிறைவேற்றிட முடிவு செய்துவிட்டார். தமிழக நீதி மன்றங்களில் தமிழில் வாதாட உண்ணாவிரதம் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு ஒரு பதிலும் சொல்லாதவர் சொம்மொழி மாநாடு எதுக்கு நடத்தனும். இது யாருக்காக நடத்துகிறார்.இதனால் யாருக்கு என்ன பயன்???
தொடருங்கள் தோழரே வாழ்த்துகிறேன்..

பெயரில்லா சொன்னது…

உண்மைதான் தல!

goma சொன்னது…

அழுத்தமாக ஆணித்தரமாக சொல்லியிருக்கிறீர்கள்..

virutcham சொன்னது…

dubbing குரலில் உறுமும் பெண் சிங்கம் போல வளரும் மற்றும் நாளைய தலைமுறைக்கு தமிழ் செம்மொழி அல்ல, அந்நிய மொழி என்பதோடு எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தர முடியாத வெத்து மொழி.
இந்தக் கருத்தை முன்வைக்கும் விருட்சம் பதிவு http://www.virutcham.com/?p=2371

சிநேகிதன் அக்பர் சொன்னது…

என்னத்த சொல்ல...

jillthanni சொன்னது…

//தமிழ வளத்துறோம்னு சொல்லிக்கிட்டு தன்னையும் தன் குடும்பத்தையும் வளப்படுத்தறத்துக்கும்னும் .//

என்ன செய்ய நாம வேடிக்கை பார்த்து கொண்டு தானே இருக்கிறோம்

செம்மொழி மாநாட்டுக்கு செய்த செலவை உருப்படியா ஏதாவது செய்திருக்கலாம்( இலவசங்கள் !!!)

வழக்கறிஞரின் வாதத்தை கேட்க ரெடி
சீக்கிரம் தொடருங்கள்

Unknown சொன்னது…

செம்மொழி மாநாட்டுக்கு செய்த செலவை உருப்படியா ஏதாவது செய்திருக்கலாம்( இலவசங்கள் !!!)

இலவசங்கள் உருப்படியானதா? மாநாட்டால் கோவை பொலிவு பெறட்டும்! (நல்ல காலம்! நிரந்தர வரவேற்பு வளைவுகள் கட்டப் படவில்லை)

ரோகிணிசிவா சொன்னது…

asthareenga boss., irukum ella tamilanaiyum kondruvitu irangappa padavae im maanadu oru vellotam .,

ஹேமா சொன்னது…

//தமிழ் வளர்ச்சிக்கு மாநாடா தோவை ? //

தொடருங்க.

Er.L.C.NATHAN சொன்னது…

mika nalla seithi.karuppu kannadikul irunthu manjal tholai rasikkum karunaanithiyin kaathil ivai earaathu!!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "