திங்கள், 30 ஆகஸ்ட், 2010

தேங்காய் .


















மதுரையில் படித்துக்கொண்டிருந்த காலத்தே ,
எங்கள் கல்லூரி முதல்வர் ஐயா தமிழ்குடிமகன் அவர்கள்
தனது அந்தமான் அனுபவங்களைப் பகிர்ந்தார் .
மிகவும் சுவாரசியமான தகவல்களை அவர் கூறினாலும்
என்னை கவர்ந்தது அந்தமானைப்பாருங்களில்
மரம் ஏறி தேங்காய் போடும் நண்டுகள் பற்றிய செய்தி .

தேங்காய் நமது உணவில் ஒரு அங்கம் .

தேங்காயில்
நார்ச்சத்து இதில் அதிகம் இருக்கிறது .
இதை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .
இதன் இளநீர் மிகவும் சுத்தமானது .அதனை இரத்த பிளாஸ்மாவிற்கு மாற்றாக அப்படியே உடலில் செலுத்தலாம் . . .

தென்னை , தேங்காய் மற்றும் இதன் பயன் பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ,இதன் விவசாயத்தை மேம்படுத்தவும் மற்றும் இதற்கான உலகலாவிய அமைப்பை ஏற்படுத்தவும் என உண்டான
''ASIAN AND PACIFIC COCONUT COMMUNITY '' உருவான செப்டம்பர் 2ம் தேதியை
''உலக தேங்காய் தினம்''-ஆக கொண்டாடப்பட்டு வருகிறது .

நம்ம ஊருல தான் இது பற்றி அதிக விழிப்புணர்வு வேண்டியிருக்குங்க .
இன்னைக்கு ஒரு தேங்க என்ன விலை ? .
தேங்கா எண்ணை என்ன விலை ? .
இதப்பத்தி யோசிக்கும் நாம் .
தேங்காய்களை செவ்வா, வெள்ளி மற்றும் விசேச நாட்கள் மற்றும் விசேசம் என வீணா தெருவில ,வாசலில ஒடைச்சு நாசம் செய்யரோம் .ரோட்டில அப்படியே அதன் சில்லுகளை விடுவதன் மூலம் எத்தனை பாதிப்பு .இவ்வாறு வீணாக்கும் தேங்காய்களை மதிப்பிட்டால் பல கோடி ருபாய் மதிப்பு பெறும் ஆண்டிற்கு.
இது பெருளாதாரம் சார்ந்த விசயம் என்பதால் நம்பிக்கைகள் தாண்டி சிந்திக்கவேண்டும் .

அதனால்
நாமும் இத்தகைய செயலை இனி செய்யாமலும்,
நமக்கு தெரிந்தவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ,அவர்களும் இவ்வாறு செய்யவேண்டாதபடி செய்தும்.
தேங்காயை நல்லபயனுள்ள பொருளாதாரமாகவும்
இந்த இனிய நாளிலிருந்தாவது மாற்றுவோம் .

2 நாளைக்கு முன்னே சொன்னாத்தான் நல்லாயிருக்குமுனூ சொல்ரேன் அவ்வளவே .

இதனால் ஒரு தேங்காவாவது தெருவில் வீணாவது தடுக்கப்பட்டுமானால் மகிழ்வேன் .

உங்களின் ஒத்துழைப்பை வேண்டுகிறேன் .





. Download As PDF

11 கருத்துகள் :

vinthaimanithan சொன்னது…

அப்படியே பனைய பத்தியும் எழுதுங்க... தமிழ்நாட்டோட அரசுமரம்!

Chitra சொன்னது…

தேங்காய் நமது உணவில் ஒரு அங்கம் .

தேங்காயில்
நார்ச்சத்து இதில் அதிகம் இருக்கிறது .
இதை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .
இதன் இளநீர் மிகவும் சுத்தமானது .அதனை இரத்த பிளாஸ்மாவிற்கு மாற்றாக அப்படியே உடலில் செலுத்தலாம் . . .


......உண்மைங்க... நான் என்ன சொன்னாலும், சில தோழிகள் தேங்காய் and its products சாப்பிட்டா cholesterol என்று சொல்லி முற்றிலும் ஒதுக்கி விடுகின்றனர். :-(

ஹேமா சொன்னது…

தேங்காயில் கொழுப்பு அதிகமென்று சொல்கிறார்களே !

ப.கந்தசாமி சொன்னது…

//இன்னைக்கு ஒரு தேங்க என்ன விலை ? .
தேங்கா எண்ணை என்ன விலை ? .
இதப்பத்தி யோசிக்கும் நாம் .
தேங்காய்களை செவ்வா, வெள்ளி மற்றும் விசேச நாட்கள் மற்றும் விசேசம் என வீணா தெருவில ,வாசலில ஒடைச்சு நாசம் செய்யரோம் .ரோட்டில அப்படியே அதன் சில்லுகளை விடுவதன் மூலம் எத்தனை பாதிப்பு .இவ்வாறு வீணாக்கும் தேங்காய்களை மதிப்பிட்டால் பல கோடி ருபாய் மதிப்பு பெறும் ஆண்டிற்கு.
இது பெருளாதாரம் சார்ந்த விசயம் என்பதால் நம்பிக்கைகள் தாண்டி சிந்திக்கவேண்டும் .//

ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் ரோட்டில் போகும்போது கடைக்காரர்கள் அவர்கள் கடை வாசலில் இந்தத் தேங்காய்களை சிதறு காயாக உடைத்துப்போட்டிருப்பார்கள். எனக்கு வயிறு எரியும். நமது நாடோ ஏழை நாடு. அதில் இந்த மாதிரி உணவை வீண் செய்கிறார்களே என்று மனது அலையும். சில வருடங்களுக்கு முன்பு வரை தெருவில் குப்பை பொறுக்குகிறவர்கள் இந்த தேங்காய்களைப் பொறுக்கிக்கொண்டு இருந்தார்கள். இப்பொழுது அவைகளை யாரும் தொடுவதில்லை. அதில் கடைக்காரரின் பாவங்கள் ஒட்டிக்கொண்டு இருப்பதாக நினைக்கிறார்களோ என்னமோ? மொத்தத்தில் இது நாட்டுக்கு ஒரு நஷ்டமே.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

மதுரையிலே யாதவா கல்லூரிலே படிச்சீங்களா - ஆகா ஆகா - ம்ம்ம்ம்ம்

தேங்காயின் பயன்பாடுகளில் ஒன்று - கோவில்களில் உடைப்பது. அது நம்பிக்கை சார்ந்த செயல் - அதனைத்தாண்டி சிந்திப்பது கடினமான செயல். தேங்காய்ப் பற்றாக்குறை இல்லாத வரை இச்செயலும் நடந்து விட்டுப் போகட்டும். தவறில்லை.

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

சசிகுமார் சொன்னது…

//உங்களின் ஒத்துழைப்பை வேண்டுகிறேன் .//

கண்டிப்பாக நண்பா

VELU.G சொன்னது…

உபயோகமான பதிவு நண்பரே

அருண் பிரசாத் சொன்னது…

நல்ல பதிவு நண்பரே

ஜோதிஜி சொன்னது…

ஆகா தமிழ்குடிமகன் மாணவரா?

அரசியலுக்கு வராமல் அவர் ஆசிரியராகவே இருந்து இருக்கலாம்.

தேங்காயை பச்சையாக தின்றால் நல்ல நார்ச்சத்து. சட்னியாக தின்னால் நல்ல கொழுப்பு சத்தாம். மூடநம்பிக்கைகள் குறித்து நீங்க என்ன சொன்னாலும் நம் மக்கள் அப்படியே எதிர்வினையாகத் தான் எடுத்துக் கொள்வார்கள்.

அது தமிழர் பண்பாடு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

ஈழத்தில் சமையலில் தேங்காய் அதிகம் சேர்ப்போம்.
தேங்காய்க் கொழுப்பு உடலாரோக்கியத்துக்கு ஒவ்வாதெனப் பலர் சொன்னதால் ,மிகக் குறைத்து விட்டேன்.
உங்கள் செய்தி மகிழ்வைத் தருகிறது.
பிட்டும் தேங்காய் சம்பலும் என்ன,சுவை.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க நன்றி

விந்தைமனிதன் @

Chitra @

ஹேமா @

DrPKandaswamyPhD @

cheena (சீனா) @

சசிகுமார் @

VELU.G @

அருண் பிரசாத் @

ஜோதிஜி @

Tamilulagam @

யோகன் பாரிஸ்(Johan-Paris)

அவர்களே
மிக்க மகிழ்ச்சி .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "