புதன், 1 செப்டம்பர், 2010

கவலை அழிக்கும் காஷ்மீர்







எனக்குத்தெரிந்து நடந்த நிகழ்விது .
விவசாயிகள் சங்கம் மிகவும் வலுப்பெற்று தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக மாறிவந்துகொண்டிருந்த சமயம் அது .உண்மையில் அந்த காலகட்டத்தில் அவர்கள் சரியான அறிவுத்தலின் கீழ் இயங்கியிருப்பார்கள் எனில் திராவிட கட்சிகள் அனைத்தும் அப்போதே வீட்டிற்கு சென்றிருக்கும் .ஆனால் ,அப்படி நடக்காமல் போனதிற்கு காரணம் பலவாக இருந்தாலும் ,துரதிருஷ்டமான நிகழ்வாகவே அதன் தோய்வு அமைந்து விட்டதோடு ,திராவிடக்கட்சிகளால் திட்டமிட்டு அதற்குப்பின்னிட்டு அதிக ஊங்கமும் ,ஆதரவும் தந்ததால் சாதியக்கட்சிகள் பல தோன்றின.
சரி,விசயத்திற்கு வருவோம் .
அப்ப விவாசாயிகள் மாநாடு ,ஆர்ப்பாட்டம் என அறிவித்து இருந்தனர் .
அப்ப எம்.ஜி.ஆர் ஆட்சி .கட்டுப்படுத்த முடியாதபடியாலும் ,மேலும் உள்ளூர் போலிச நம்பாத படியாலும் எம்.ஜி.ஆர் கேரளா போலிஸ பாதுகாப்பிற்காக அழைத்து நிப்பாட்டிட்டார்.அதோட நின்றிருந்தால் பரவாயில்ல ,விவாசாயிகள் சங்கத்தினர் பச்சைத்துண்ட கட்டிருப்பாங்க .அதனால் கேரளா போலிஸிடம்"பச்சைத்துண்ட கண்டா பட்டை எடுக்கும்" என ஆணையும் போட்டுவிட்டார் .அப்பொழுது பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் திரள்திரளாக வேண்டுதலின் நிமித்தும் பழனி நோக்கி சென்றுகொண்டிருந்தனர் ,அவர்களில் அனேகர் பச்சை ஆடை உடுத்தி யாத்திரை மேற்கொண்டிருந்தனர் .பாதுகாப்புக்கு நின்றிருந்த போலிஸே கேரளத்துக்காரர்கள் தமிழ் தெரியாது ,நம்மாலுகளுக்கே மலையாளம் தெரியாது . கேரளா போலிஸ்சுக்கு '' பச்சை துண்ட கண்ட பட்டை எடுக்க''ஆணை . அதனால் புடுச்சாங்க பாரு கோயிலுக்கு போன பச்சை தரித்த பக்தர்களை .மரண புடி .எங்க அப்பிச்சியும் அதில மாட்டி அடிவாங்கி ஆஸ்பத்திரிக்கு நடந்தார்...நடந்தார் ...அவர் சொன்னார் நாங்க கோயிலுக்கு போரோம்னு சொன்னாலும் பாஷை புரியாம எதித்து பேசரதா நினைச்சி பின்னீட்டாங்க என .அப்ப இருந்து சாகும் வரை அவர் மத்திய கம்பனியோ ,மற்ற மாநிலத்தவர்களோ தேர்தல் நேரப்பாதுகாப்பிற்கு வந்தால் கூட ஒரு அன்னியப்பார்வையே பார்ப்பார் .மேலும், உள் மனதில் பாதிப்பால் அவர்களை அவருக்கு பிடிக்காது போனதை நேரடியாகவே அவர்களிடம் வெளிப்படுத்துவார் . தவறு என சொன்னாலும்,இவன்களுக்கு இங்கு என்ன வேளை ,இவன்க இல்லாமல் ஒன்னும் ஒழுங்கா நடக்காதா என்ன ? என கேட்பார்.நியாயமான கேள்வியாகவே படும் .

கவலை அளிக்கும்படியாக உள்ளது காஷ்மீரில் அனுதினம் நடந்துவரும் நிகழ்வுகள் .

தற்போதைய நிகழ்வுகள் அங்குள்ள மக்களின் மனநிலையை நன்றாக வெளிச்சம்போட்டு காட்டுகிறது .காஷ்மீரில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஊன்றிப்பார்த்தால் எனக்கு என்னவோ அதிக காலமாக அங்கே நிருத்தப்பட்டுள்ள மத்தியப்படைகளை அங்குள்ள மக்களுக்கு பிடிக்காமல் போனது தான் காரணம் என்றே தோன்றுகிறது . அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு மக்கள் தெருவில் வந்து போராடுகின்றனர் என்றே நினைக்கின்றேன் .இப்ப அமைதியாக இருந்தவர்களை தூண்டிவிட்டு ,அதோடு இருந்தாலும் பரவாயில்லை ,அதில் தேவையில்லாமல் தீவிரவாத சாயம் பூசப்பட்டதால் ,தீவிரவாதிகளுக்கு அதுவே சாதாகமாகி.இப்ப ஒரு மாநிலத்தில் நடந்த ஒரு எளிய தீர்க்கப்பட்டிருக்கவேண்டிய சிறுபிரச்சனையை மிகப்பெரிய தேசிய பிரச்சனையாக ஆக்கி குளிர்காய்ந்து கொண்டுள்ளனர் அரசியல்வாதிகள் .
காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழ அரசியல் சார்பில்லாத மனிதாபிமான நடவடிக்கைகளை மோற்கொள்ளவேண்டியது அந்த மாநில அரசின் கடமையாகும்.அதை விடுத்து அது இதனை தேசிய பிரச்சனையாக்குவது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல.
ஒரு சிறுபிரச்சனையை எவ்வாறு தேசிய பிரச்சனையாக மாற்றமுடியும் என்பதற்கு இதைவிட சான்று ஒன்றை யாராலும் இனிவரும் காலத்தில் காட்டமுடியாது .
மக்களின் மனேநிலையை புரிந்து நடந்துகொள்ளவேண்டும் அரசுகள் .
ஆந்திராவில் உஸ்மானிய மாணவர்கள் ஆசிரியர்களைத்தாக்கிய சம்பவத்தை நினைத்துப்பாருங்கள்.மக்கள் எவ்வாறேல்லாம் சிந்திப்பார்கள் என .
காஷ்மீர் நம் நாட்டின் தலை ,அதை தேவையில்லாமல் மேலும் தலைவலியாக மற்றிவிடாதீர்கள் .
கவலை அளிக்கும் இவ்விசயத்தில் மனிதநேய நடவடிக்கையே
காஷ்மீரின் கவலையை அழிக்கும் என நம்புகின்றேன் .

என்னைக்கேட்டால்
உண்மையில் காஷ்மீரில் பிரச்சனை அங்குள்ள மக்கள் அல்ல,அரசியல்.

அரசியலை விடுத்து மக்களை அணுகுங்கள் .

காஷ்மீர் ரோஜாவை முகர்வீர்கள் .








. Download As PDF

7 கருத்துகள் :

velusamymohan சொன்னது…

Nalla oppeedu Nandu Sir.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ரொம்பவே கவலையளிக்கக்கூடிய விஷயம் இந்த காஷ்மீர் பிரச்சினை..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

உண்மை உண்மை - நிலை இதுதான் - கை மீறிப்போகுமுன்னர் அரசு ஏதேனும் செய்ய வேண்டும்

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

சிவாஜி சங்கர் சொன்னது…

தெள்ளிய பார்வை நண்டு சார்...

Jey சொன்னது…

நல்ல பார்வை...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க நன்றி

velusamymohan @

அமைதிச்சாரல் @

cheena (சீனா) @

Sivaji Sankar @

Jey

அவர்களே
மிக்க மகிழ்ச்சி .

dheva சொன்னது…

பச்சை துண்டு கட்டி அடி வாங்கியதில் சிரிப்பும் வேதனையும் கலந்து வந்தது....பாஸ்... நல்லா இருந்துச்சு...

காஷ்மீர் பிரச்சினை அரசியல் - மறுக்க முடியாத உண்மை!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "