திங்கள், 24 ஜனவரி, 2011

ஹிட்லரிடமிருந்து நாம் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டியவை


இன்றைக்கு கொடுமை செய்யும் நபரைக்கண்டால் நமக்கு ஓடிவரும் ஒப்பீடு உருவம் ஹிட்லர் .வரலாற்றில் இவரிடம் மிகவும் தனியானது .எது எப்படியிருப்பினும் ஹிட்லரிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட விசயங்களை விட இனியும் கற்றுக்கொள்ளவேண்டியவைகள் இன்னும் உண்டு .அதிலும் நாம் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டியவைகளும் உண்டு .

வரலாற்றை நாம் ஒன்றுக்கும் ஆகாத ஒன்றாகவே பார்த்தும்,படித்தும் வருகின்றோம் .வரலாற்றை வரலாறாகவே வரலாற்று அறிஞர்களும்  பார்த்தும்,மற்றவர்களுடன் மாறுபடும் தன்மையில் சிறப்பினை பெறுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தியும் நீர்த்துவிடுகின்றனர்.

வரலாற்று நாவல்கள் கூட தங்களின் பணிகளை சிறப்பாக செய்வதில்லை .ரசனையான விசயமாகவே ஆக்கப்பட்டு  படிக்கும் படிமமாகிவிடுகின்றன.

வரலாற்றின் உயர்வு,அது கூறும் செய்திகளை மக்கள் உணர்ந்து நகர்வதைப்பொறுத்து அமைகிறது .இந்த வகையில் ஹிட்லரின் வரலாற்றிலிருந்து நாம் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டியவைகள் நிறைய இருந்தாலும் நாம் நாம் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டியவைகள் சிலது உள்ளது .எது என என்னைக்கேட்டால் ...

உலகே நடுங்கும்படியான மிகப்பெரிய படை .மிகச்சிறந்த செரிவான பேச்சு .யாருக்கும் அஞ்சாத நெஞ்சுரம் .எதிரியாக யாரும் இருக்க பயப்படும்படியான ஒரு தன்மையை வளர்த்துக்கொண்ட ஆளுமை .உயிருடன் இருக்கும் வரை தனக்கு நிகர் தானாகவே இருந்து மறைந்த ஒரு ஆட்சியாளர் .இப்படிப்பட்ட இவர் எதற்காக போராடினார்,போரிட்டார் ,எப்படி தோற்றார் தெரியுமா ? .

இங்கு நாம் ஆரியர்கள் பற்றியும் .ஆரியர்கள், திராவிடர்களுக்கிடையேயுமான மோதல்கள் மற்றும் பிணக்குகள் பற்றியும்  பேசுகின்றோமே .இதை இவர் ஜெர்மனியில் பேசினார்.உலகிலே தலைசிறந்தவர்கள் நாங்கள் தான் .ஆளப்பிறந்தவர்களும் நாங்கள் தான் .மற்றவர்கள் எங்களுக்கு சேவகம் செய்யவே படைக்கப்பட்டவர்கள் எனக்கூறியதோடு நில்லாமல் ,செயல்பட்டவும் ஆரம்பித்து உலகு அடிபணிந்த்து ,அவ்வளவு தான் என்று அவரின் கருத்தின் உச்சத்தைத் தொட்டுவிட்டாதாக நினைத்து உலகை மனிதக்கொலைகளால் நிறைத்துக்கொண்டு வந்து அதன் மீது நின்று கொக்கரிக்க ஆரம்பித்தும் விட்டார் .இவரின் கூவலுக்கு அடிபணிந்து சேவகம் செய்ய சென்னையில் இவர் வந்தால் வரவேற்ற ஜெர்மனிய மொழி கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டதினின்று இவரின் உச்சத்தையும் ,இவருக்கு இவரை ஆதரித்தவர்கள் கொடுத்த மரியாதையையும் தெரிந்துகொள்ளலாம் .அந்தளவிற்கு மக்கள் தலைவனாகிவிட்டாருந்தார் .இப்படிப்பட்டவர் ஏன் தோற்றார் ?.


வாழ்க்கை நகர்வில் ,அதிகாரமும் பதவியும் கைவரப்பொற்றவர்கள் ,தாங்கள் தான் வரலாறு என்ற மிதப்பில் செய்யும் சில வரலாற்றுப்பிழைகள் தான் ,அவர்களை  ஓரம் கட்டுகிறது.

ஹிட்லர் செய்த வரலாற்றுப்பிழையில் முதன்மையானது எதுவெனில் ,ஆயுதங்களினால் மட்டுமே ஒரு அரசை அமைத்துவிடமுடியும் என்பதும் ,அதன் மூலம் மட்டமே ஒரு இனவாத அரசை நிர்மாணித்து நிலைநிறுத்தி விட முடியும் என்பதுவே .ஆள் பலத்தாலோ,படை பலத்தாலோ ஒரு அரசை நிறுவிட முடியாது .அப்படி ஆள் பலத்திலும்,படை பலத்திலும்  அரசை நிறுவிக்கொண்டுவந்ததினால் தான் வரலாறு நெடுகிலும் போர்,போர்,போர், ...






தொடரும் ...
Download As PDF

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

மகர ஜோதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு

"மகர ஜோதி' என்பது ஒரு அதிசயம் அல்ல. அது மனிதரால் ஏற்றப்படும் தீபம். பொன்னம்பல மேட்டில் இப்படிப்பட்ட ஒரு தீபத்தை ஏற்றி மூட நம்பிக்கையை வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும். "மகர ஜோதி' விவகாரத்தில் நடக்கும் மோசடியை வெளிக்கொரண வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 14ம் தேதி சபரிமலை அருகே, புல்மேடுவில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 106 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சமீபத்தில் விசாரித்த கேரள ஐகோர்ட், "மகர ஜோதியை மனிதர் யாராவது ஏற்றுகின்றனரா? இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மகர ஜோதி தோன்றுவது குறித்து திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சனால் எடமருக்கு என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது : சபரிமலை பொன்னம்பல மேட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் மகர ஜோதி தெரிகிறது. இதை அதிசயமானது மற்றும் புனிதமானது என, பல மாநில மக்கள் கருதுகின்றனர். அதனால், இந்த ஜோதியைக் காண, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருகின்றனர். பொன்னம்பல மேட்டில் தெரியும் இந்த மகர ஜோதியானது, மூன்று முறை ஒளிந்து பின்னர் மறைந்து விடும்.

சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் தேவஸ்வம் போர்டும், இந்த மகர ஜோதியை அதிசயம் என்று கூறி வருவதால், இயற்கைக்கு முரணான இதைக் காண வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. மகர ஜோதி என்பது அதிசயம் அல்ல. கேரள மாநில மின்வாரியம் மற்றும் போலீசார், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுடன் இணைந்து நடத்தும் நாடகம். பெரிய பாத்திரத்தில் சூடத்தை ஏற்றி, பின்னர் அதை மூடி மறைத்து ஒளிருவது போல காட்டுகின்றனர். இது செயற்கையாக உருவாக்கப்படும் ஜோதியே. மனிதரால் உருவாக்கப்படும் இந்த மகர ஜோதியை ஒரு அதிசயம் எனக் கூறி, மக்களிடையே மூட நம்பிக்கையை பரப்பி வருகின்றனர். இது அரசியல் சட்டத்தின் 21 மற்றும் 25வது பிரிவுகளை மீறிய செயல்.

கடந்த 1999ம் ஆண்டில் மகர ஜோதியை காண வந்த பக்தர்கள் 53 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 106 பேர் பலியாகியுள்ளனர். எனவே, செயற்கையாக தீபத்தை ஏற்றி, அதை மகர ஜோதி எனக் கூறி மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்கு தடை விதிக்க வேண்டும். இந்த ஜோதி இயற்கையானது அல்ல என, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி, கேரளா, தமிழகம், ஆந்திர, கர்நாடக மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகர ஜோதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு
நன்றி : தினமலர்
Download As PDF

புதன், 19 ஜனவரி, 2011

ஈழத்தமிழருக்கு உதவுங்கள் Ensure justice - Save Human Rights

In the year 1993, a youth named SellapillaiMahendran was arrested and detained in jail on the suspicion that he belongs to the  armed group  For the past 18 years he continues to languish and suffer in Mattakalappu prison. He is now aged 34 years. Till date, he has not been charged with any offense specifically nor charge sheeted as having committed  any crime though he has been produced in Court several times. This has been reported by a human rights activist there and reported in Meenakam.

We, human rights activists here in Tamil Nadu, request you to look into the matter
and ensure that justice be done.  


18 வருடங்களாக இலங்கை அரசாங்கத்திடம் சிக்கி தவிக்கும் போராளி

January 13th, 2011 சிறீலங்கா
20100716165144former-ltte-members-camp-20
1993ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட  போராளி ஒருவர் கடந்த 18 வருடங்களாக எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற இந்தச் சந்தேக நபர் 1993 ஆம் ஆண்டு பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டதுடன் அன்று முதல் இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார் .தற்போது    மகேந்திரனுக்கு தற்போது 34 வயதாகிறது.
கடந்த 18 வருடங்களாக இவர்  பல தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதும், பாதுகாப்பு தரப்பினரால் எந்த குற்றச்சாட்டுகளையும் சுமத்த முடியாது போனது.
அதிகாரிகளும் இந்த சந்தேக நபர் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி கடந்த 18 வருடங்களாக  இலங்கை அரசாங்கத்திடம் சிக்கி  வருடங்களாக துயரத்தை அனுபவித்து வருவதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .


**********

மேற்கண்ட பதிவை COPY செய்து newslett@amnesty.org என்ற முகவரிக்கு அனுப்புங்கள் .
குறைந்தது 100 நபர்களாவது அனுப்பினால் பயனுள்ளதாக இருக்கும் .
இச்செய்தி அதிக நபர்களுக்கு கொண்டுசெல்லுமாறு கோட்டுக்கொள்கிறேன் .
நம்மாலான உதவியாக இது இருக்க
இவ்வுதவியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்
நண்டு@நொரண்டு .


(நன்றி : கி.சிதம்பரன் .வழக்கறிஞர்,ஈரோடு)

. Download As PDF

செவ்வாய், 18 ஜனவரி, 2011

எனக்கு கிடைத்த பொங்கல் பரிசு .




 நொரண்டு :என்ன நண்டு பொங்கலுக்கு என்ன சிறப்புச்செய்திகள் .

நண்டு :மத்திய அரசு ஒட்டு மொத்த மக்களுக்கும் மிகச்சிறந்த பொங்கல் பரிசாக பொட்ரோல் விலை உயர்வை கொடுத்துள்ளது .மிகவும் நல்ல செய்தி .அவங்கனால முடிஞ்சது. எரியர விலைவாசில  பொட்ரோல ஊத்தராங்க .இனி எல்லாம் க(கா)ட்டுக்குல்ல வந்திரும் .

நொரண்டு :என்ன செய்ய ????? .

நண்டு : என்ன சொல்ல ,நேத்து மாட்டுப்பொங்கல் . ஈரோட்ல ஆட்டுக்கறி மாட்டுக்கறி எல்லாம்  நல்லா சேல்ஸ் ஆச்சு.ஜல்லிக்கட்டு வேணாமுனு கோர்ட்டுக்குப்போன விலங்கின ஆர்வளர்கள் விலங்கினங்களுக்கு கொடுத்த பொங்கல் பரிசு இது .

நொரண்டு : ஆமா,அவங்களுக்கு இதெல்லாம் டீவியில காட்டுனாத்தான் கேஸ் போடுவாங்க .

நண்டு : நேத்து இளைஞர்கள் மன்றத்தினர் பரிசளிப்பு விழா நடத்தினர் .அதப்பாக்கப்போனேன் .எம்பக்கத்தில நின்னுக்கிட்டிருந்த ரண்டு பேரு

1.ஏன் மாப்பிள ,இவங்க ஏதோதுக்கோ எதிர்ப்பு தெரிவிக்கராங்கல ,நம்ம ஈரோடு முழுதும்  வீட்டு வாடகைய உயர்த்தியிருக்காங்கலே வீட்டுக்காரங்க அதுக்கு ஒருத்தரும் மூச்சு விடமாட்டேங்கராங்க .

2.பாதாலச்சாக்கடை வரிதுல்ல அதனால வீட்டு வாடகைய உயர்துராங்க

1.என்னப்பா அதுக்காக ஒரோயடிய ரூபாய் 500 லிருந்து வீட்டுக்குத் தகுந்தமாதிரி 2500 வரை ஏத்திருக்காங்கலாமே .சாக்கடை வரதுக்குள்ள ஒவ்வொரு நடுத்தர மற்றும் அடித்தட்டு வாடகைக்கு குடியிருக்கும் மக்களிடம் தல ரூபாய் 25,000 முதல் ரூபாய் 1,20,000 வரை அநியாயமாக வீட்டு உரிமையாளர்களால் பிடுக்கப்பட்டுவிடுமாமே .பாதால சாக்கடையோ 2014 தானே வரப்போகுது .அதுக்கு இப்பவேவா வாடகைய ஏத்தரது .அதுவும்.ஆட்சி மாறுச்சுன்னா சாக்கடை வருதோ ? .இல்லையோ ?.

2.ஆட்சி வரக்கூடாதுனுங்கரத்துக்குத்தானோ என்னவோ வீட்டுக்காரர்களா  ஒன்று சேந்து சதி பண்றாங்களோ என்னவே .

1.இருக்கலாம் .

2.ஓட்டுக்கு 2,00,000 லட்சம் கொடுத்தாத்தான் கட்டுபடியாகும் போல .

1.போப்பா,ஜோக்கடிக்காத...ஆமா,அத யாரிட்ட சொல்லரதுனு சொல்லு  ?

2.மனு நீதி நாள்ல மனுவா கலெக்டர் கிட்ட கொடு .

1.அட போப்பா .நான் ஒரு மனுவ எஸ்.பி. கிட்ட கொடுத்தா வேலையாகாதுனு மனு நீதி நாள்ல மனுவா கலெக்டர் கிட்ட கொடுத்தா அது கிணத்தில போட்ட கல்லாவே இருக்கு .இங்க 2 பேரும் சரியில்லப்பா .

2.ஆமாப்பா என்ன செய்ய .

1.யாரிட்டப்பா சொல்ல .நான் வரும் போது 350 ருபா வீட்டு வாடகை .மாநாகராட்சி ஆக்குனாங்க ,500 ருபாயா வீட்டுவாடகை கூடுச்சு .வேற வழியில்லாம ,வீடும் கெடைக்காம பொறுத்துக்கிட்டு கொடுத்தோம் .இப்ப பாதாள சாக்கடையினு ஒரேயடியா 1000 ருபாய் கேக்கராங்க .வீட்ட காலி பண்ணிட்டு வேற வீட்டுக்குப்போகலாம்னா.ஈரோடு மாநாகராட்சி பூராம் இதே நிலை தான் .எங்க போறது .படாத விலைவாசி வாட்டி எடுக்குது .வீட்டு வாடகையோ கண்ணகட்டுது .எப்பத்தான் விடியுமோ,எப்படித்தான் விடியுமோ ? .... -னு  பேசிக்கிட்டாங்க .

நொரண்டு :என்னாங்க இது ,அநியாயத்திலும் அநியாயமா இருக்கு ?

நண்டு :விசாரித்த வகையில் உண்மைதாப்பா இது .அநியாயத்திக்கு  வீட்டு வாடகை உயர்ந்துவிட்டிருக்கின்றனர் வீட்டு உருமையாளர்கள் .இத மாவட்ட நிர்வாகம் கண்டுகொண்டதாக தெரியல .பாதாளச்சாக்கடை மற்றும் இதர விசயங்களில் கிடைக்கும் கமிஷன்களுக்காக கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையா இத கண்டுக்கிறதில்லைனு முடிவுல இருக்காங்கலாம் மக்களின் உண்மைத்தொண்டர்கள் .

நொரண்டு :ஓ...அதானே கேட்டேன்..

நண்டு : இது வீட்டுக்காரர்கள் கொடுத்துள்ள பொங்கல் பரிசு .


நொரண்டு :ஈரோடுல மட்டும் தானே?

நண்டு :இல்லப்பா மாநகரா அறிவிச்ச எல்லா இடத்திலையும் இப்படிப்பட்ட பல பிரச்சனைகப்பா .இது ஈரோட்டு மாநகராட்சியின் பொங்கல் பரிசு .

நொரண்டு :ம் ...

நண்டு : எங்க பால்காரம்மா பாலுக்கு லிட்டருக்கு 1 ருபா ஏத்தி தாங்கனு இனினு இன்னைக்கு சொல்லிட்டு போயிருக்கு .இது பால்காரம்மா  கொடுத்த பொங்கல் பரிசு .

நொரண்டு :ஓ...இதுவுமா .

நண்டு : எவ்வளவு தான் தாங்குவாங்க மக்களுனு அரசு டெஸ்ட் பண்ணுதுப்பா .

நொரண்டு :ஓ ...வாங்கும் சக்தி,வாங்கும் சக்தினு AMWAY- ல செல்லிட்டுருந்தாங்கள அது இது தானா ... ?

நண்டு : ஆமாம் ...

நொரண்டு :இப்படி இருந்தா எப்படியா மக்கள் நிம்மதியா வாழமுடியும் .இதுக்கு என்ன தான் முடிவு ?.

நண்டு :யார் அடுத்து ஆட்சி பிடிக்க  விரும்புகின்றனரோ அவர்கள் தான் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் .

நொரண்டு :வேறா ஏதாவது பொங்கல் பரிசு இருக்கா ?.

நண்டு :அட,சொல்ல மறந்துட்னேன் .நாம கூட கடந்த மே 28 ல ஒரு  பதிவப் போட்டதோடு ஆலோசனைகளை சொன்னமே .

நொரண்டு :ஆமா அந்தப்பதிவு கூட

அரசுக்கு எதிர்ப்பு மிகவும் நாகரிகமாக ஈரோட்டில் இன்று

இது தானே .

நண்டு :ஆமாம்பா...ஆமா ... பெரிய ___ .மாதிரி .நம்ம பேச்ச கேக்காம வேலைய ஆரம்பிச்சாங்க .

நொரண்டு :அதுக்கு இப்ப என்ன ? .உன் பேச்ச கேக்கனும்மு என்னப்பா இருக்கு அவங்களுக்கு ? .

நண்டு :இப்ப என்னாச்சுனு தெரியுமா ? .

நொரண்டு :என்னாச்சு ?.

நண்டு :நைட்டோட நைட்டா பெரிய பெரிய புல்டோசர வச்சு மூடிட்டாங்கப்பா .

நொரண்டு :ஓ ...அப்படியா .ஈரோட்டு மக்களுக்கு வெற்றிதாம்பா .ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு .

நண்டு : இதில் எனது முயற்சியும் களப்பணியாக  சிலது உண்டு .அதனால் ,இது தாம்பா எனக்கு கிடைத்த பொங்கல் பரிசு .


 







.நன்றி : You Tube Download As PDF

திங்கள், 17 ஜனவரி, 2011

ஜல்லிக்கட்டு எதன் அடையாளம் ஆதிக்கசாதியா பாரம்பரியமா





நொரண்டு :அலங்கா நல்லூருல ஜல்லிக்கட்டுப்பா

நண்டு :கோ.புதூருல  இருந்தவரை போயிக்கிட்டிருந்தேன் .ஒரு குத்து கூட வாங்கிருக்கேன் .

நொரண்டு :ஏய் ,என்ன சொல்ர ! .அதான் இப்ப எவ்வளவு கண்டிசன்  தெரியுதா ?.

நண்டு : இது தமிழர்களின் மான விளையாட்டுப்பா .உயிரப்பத்தி கவலைப்படரவுங்க மானத்தப்பத்தியும் கவலைப்படவேண்டும் தானே ?.

நொரண்டு :என்ன நீ என்னவோ பேசிக்கிட்டு போர ?

நண்டு :நான் ஏறுதழுவுதல் என்னும் மஞ்சி விரட்டு,சல்லி கட்டு,மாடுபிடினு இப்ப நடக்குற நமது இன உரிமை பத்தித்தாம்பா சொல்ரேன் .

நொரண்டு :இத ஆரியர்களின் அஸ்வமேத யாகத்திற்கு எதிரான  ஒரு நிகழ்வாக கொள்ளலாமா ?

நண்டு :ம் .இது பற்றி இன்னும் சற்று சிந்திக்கவேண்டியிருப்பதால் அது பற்றி யோசித்து சொல்கிறேன்.

நொரண்டு :அவர்கள் குதிரையை முன்னிருத்த தமிழர்கள் காளையை முன்னிருத்தியுள்ளனர் .சரியா .

நண்டு :சற்றேறக்குறைய சரி .

நொரண்டு :இது ஆதிக்கசாதிகளின் அடையாளமா ? 

நண்டு :இது தமிழ் இன அடையாளம் .அப்படியிருக்க எப்படி ஆதிக்க சக்திகளின் அடையாளம் என முட்டாள்தனமாக கூறுகின்றாய்.

நொரண்டு :வந்து ...

நண்டு :என்ன வந்து .உன் அறிவுக்கு தமிழனின் அடையாளம் எது ,எதுவென இனங்கான முடியவில்லையெனில் பேசாமல் இரு .புரியுதா .சும்மா உதார் விட்டுக்கிட்டு தமிழின காவலன் ஆகாத .

நொரண்டு :இல்ல ...

நண்டு :இது நமது  பாரம்பரியம் .ஒவ்வொரு தமிழனின் இரத்தத்திலும் கலந்தது.இதில் போய்  ஆதிக்கசாதியா அப்படி இப்படினு ஏப்பா தமிழினத்தை ஜாதியாக பிரிக்க பாக்கர .இப்படி பிரிப்பதால் உனக்கு ஆதாரம் ஏதாவது ... 

நொரண்டு :இல்லப்பா ...

நண்டு :தமிழனா ஒன்னுசேருவோமையா .இப்படியோ பிரிச்சு பேசி,பிரிச்சு பேசியே ,ஏயா இனத்தை செதக்கிறீங்க உங்க சுயநலத்துக்காக.கண்டத சொல்லி .ஏற்கனவே ஒரு பகுதியில தமிழன் ...

நொரண்டு :அப்படியில்ல ...

நண்டு :அது எப்படியில்லையோ பரவாயில்லை .இனி பாரம்பரியமான விசயங்கள காப்பாத்த பாருங்க .இனத்த சாதியால் பிரிச்சு பிரிச்சு பிச்சராதிங்க உங்க ஈன பொழப்புக்கு ரக்குரக்கா தமிழனின் அடையாளங்கள .

நொரண்டு :முடிவா என்ன சொல்லவர்ர .

நண்டு :இது நமது தொன்மை .இதனை தமிழர்களாக நாம் ஒற்றுமையா அடுத்த நமது சந்ததியினரிடம் பத்திரமாக சேர்க்கவேண்டும் .இது ஒவ்வொரு தமிழரின் கடமையும் ஆகும் என்பதை நினைவில் வையுங்கள். 



. Download As PDF

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

தமிழ் வள்ளுவரின் மழையில் .

.




நொரண்டு :  இன்னைக்கு குழுச்சாச்சா ?

நண்டு : ம் ...

நொரண்டு : குட்டிப்பசங்க கும்மாலமெல்லாம் எப்படி ?

நண்டு :அட ஏன் கேக்கர ,ஒரே ஆட்டம் தான் . அவங்களோட சேந்து . குளிக்க வைக்கரதுக்குள்ள அட அட ..பிறகு சாப்பிடர செய்யரது ..ஏன் கேக்கிற மிகவும் இனிமையான ஒன்று .

நொரண்டு : ம் ...

நண்டு :அவங்க எல்லாம் இயற்கையாகவே இருக்க விரும்புகின்றனர் . அதனால்தான் தங்களின் இயற்கை விருப்பத்திற்கு மாறாக, தங்களின்
அறிவினை வளர்த்திக்கொள்ள விரும்பாத காரணத்தினால் , தங்களின் அனைத்தையும் அதற்கேற்றார்போல் அமைத்துக்கொண்டன .

நொரண்டு : நாம அப்படியில்லையே ...

நண்டு :ஆனால் ஒன்று ,அவர்களிடம் பழகிப்பார்த்ததில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன .

நொரண்டு : அதனால்தான் அரிஸ்டாடில் தனது கலாசாலைக்கு உலகொங்குமிருந்து உயிரினங்களை வரவழைத்து ஆய்வு செய்தனர் போலும் .

நண்டு : உண்மையில் அவைகள் கற்றுத்தரும் ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளவைகளாகவே உள்ளன .

நொரண்டு :  ஆமாம் ,

நண்டு :நமது தமிழ் மொழிக்கும் அவர்களின் மொழிக்கும் எவ்வளவு ஒத்துவருகின்றது என்பதை அவர்களுடன் உரையாடிப்பார்த்த பொழுது மிகவும் ஆச்சரியப்படவைக்கும் பல விசயங்கள் ...

நொரண்டு : என்ன ?

நண்டு :தமிழ் எவ்வளவு தொன்மையானது ,அதோடு மட்டுமல்ல எவ்வளவு இயற்கை இயல்புடன் இன்றுவரை இருந்து வருகின்றது என்பதற்கு தமிழ் மொழியையும் மற்ற பிற மொழியையும் விலங்கு மற்றும் பிற உயிரினங்களின் மொழியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரிகிறது .தமிழ்
அனைவருக்குமான அதாகப்பட்டது அனைத்து உயிரினங்களுக்குமான மொழியமைவுடன் இருக்கிறது என்பது .

நொரண்டு : ஓ ,அப்படியா ...

நண்டு :ஆனால் இன்று நாம் அதன் விரியும் தன்மையை மலுங்கடித்துக்கொண்டு வருகின்றோம் .

நொரண்டு : இப்பொது இருக்குற பொழப்போ ....நீ வேற ...

நண்டு : ஒங்கிட்ட சொல்லி ஒரு பயனும் இல்லைதான் .இருந்தாலும் ஒங்கிட்டயும் உண்மையை கொண்டு செல்வது என் கடமை .

நொரண்டு : யார் கொக்கரது ...சரி ,சரி ,அருக்காத ...ஊருக்குப் போன கதையச்சொல்லு ...

நண்டு :குட்டிப்பசங்களை யெல்லாம் குஷிப்படுத்திட்டு நானும் குஷியாயிட்டு வந்துட்டேன் .

நொரண்டு : ஏன் உடனே வந்துட்டே ?

நண்டு :மழை வர்ர மாதிரி மேகம் கருத்ததா அதான் ...

நொரண்டு : இப்ப எந்த காலத்துல வந்திருக்கு .எனக்குத்தெரிஞ்சு ஞாபகமில்ல . ம்.... எனக்கு ஒரு சந்தேகம் ...

நண்டு :என்ன?

நொரண்டு :  பெங்கல் பண்டிகைல மழையப்போற்றது தானே முக்கியம் .

இளங்கோ கூட

''மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்.'' -னு ....
அப்படி பெங்கல இல்லையே ....

நண்டு :ம் ....

நொரண்டு : என்ன ...ம் ....

நண்டு :வள்ளுவரும்

''வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் தமிழ் தம் என்றுணரற் பாற்று.''

என்ற குறளில் ...

நொரண்டு : இதுக்கு மு.வ : மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால்,
மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும் . என்றும் ....

நண்டு :பொதுவான கட்டொரும்பு உரை .

நொரண்டு : அப்படினா .

நண்டு :உரை எழுதனும் ஆனால் மூளைய பயன்படுத்தாம , முன்னெரும்பு பேன பாதையிலே ஆனால் கொஞ்சம் நடைமாத்தி .

நொரண்டு :  சரி உன் உரை கூறு .

நண்டு : மழை வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தமிழாக உணரும் பான்மையை உடைத்து .

நொரண்டு : இன்னும் ...

நண்டு :உலகத்து வாழும் உயிர்களுக்கு தமிழ் மழை போன்றது .

தமிழ்  என்பதை இக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியதை காண்க .
இக்குறளின் சிறப்பே இது தான் .



....


.
வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் .....
தொடரும் .....மீள்வு ...


. Download As PDF

சனி, 15 ஜனவரி, 2011

தமிழச்சி கண்ணீர்



தமிழச்சி வடித்த கண்ணீர்

தமிழச்சி வடிக்கும் கண்ணீர்

அன்றும்

இன்றும்

மண்ணில்

புதைக்கப்பட்டே

மறைக்கப்பட்டு

வரலாறாக .

இமைப்பொழுதும்

இனியும் அனுமதியோம்.

எங்கே வீழ்ந்தோமென

இனம் கண்டு

இனி

எங்கும் வீழா

உயர்தோராவோம்

என

இன்றைய நாளில்

உறுதியேற்போம் .


ஓங்கீயுயர்ந்த மாந்தனாய்

ஒல்காப்புகழ் தமிழனாய்.









.
Download As PDF

வெள்ளி, 14 ஜனவரி, 2011

முக்கிய அறிவிப்பு - 2G BLOGGER AWARDS 2010






எம்மால் அறிவிக்கப்பட்ட 2 ம் தலைமுறை வலைப்பதிவர் விருதுகள் 2010 - 2G BLOGGER AWARDS 2010   -க்கு


சொற்ப பதிவர்களே பதிவுகளை அனுப்பியிருந்தபடியால்
விருதுகள் கொடுக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது .

ஆதாலால் நாளை நடக்கவிருந்த விருது வழங்கும் விழாவும் அதையொட்டி நடக்கவிருந்த நிகழ்வுகளும் நடைபெறாது என்பதனை இதன் மூலம் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் .

விருதுக்கு படைப்புகளை அனுப்பியிருந்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எமது அமைப்பின் சார்பில் நன்றி கலந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன் .


என
அன்புடன்
நண்டு @ நொரண்டு.





. Download As PDF

போகி

Download As PDF

செவ்வாய், 11 ஜனவரி, 2011

வீரவசனம்பேசி தமிழர்களைசாகடிக்கும் பேச்சுத்தமிழர்களே கேளுங்கள் !!!


ஈரோட்டில் நடக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் மொழி ,இன ,நலம் விருப்பிகள் நடத்தும்  ஒவ்வொரு பொதுக்கூட்டத்திற்கும் ,மாநாட்டிற்கும் நான் சாதாரண பார்வையாளனாய் சென்று பார்ப்பது வழக்கம்.ஒவ்வொரு உணர்வாளர்கள் என்பவர்களும்  தாங்கள்  தமிழுக்காகவோ, அதன் உயர்வுக்காகவோ இல்லை என்பதனை பேச ஆரம்பித்த அடுத்த நிமிடத்திலே வெளிப்படுத்தி விடுவதுடன்  தமிழின் பெயரால் தவறாமல் தமிழர்களை மடையர்களாக்குவதோடு தாங்களை மட்டும் உன்னதமானவர்களாக காட்டிக்கொண்டு புரட்சியாளர் வரிசையில் அமரத்துடித்து ,வீர வசனம் பேசி நடித்துச்செல்வதை கண்டு ஒவ்வொரு தடவையும் நான் மிகவும் ஏமாற்றப்பட்டே திரும்பியுள்ளேன்.அப்பொழுது நான் நினைத்துப்பார்க்கும்  நாடு அமெரிக்கா .

(இதில் வேடிக்கை என்னவெனில் இன்றுள்ள பல வீர வசன தமிழ் தலைவர்களுக்கு நாடு, அரசு,மக்களாட்சி,கட்சி,இயக்கம் என்றால் என்னவென்றே  தெரியாத ஒன்றாக இருப்பதுவும் ,இருந்தாலும் இவர்கள் தலைவர்களாக உள்ளதும் தான் .ஆனால்,அவர்களுக்கு கற்பிதம் என்ற வார்த்தை மட்டும் நன்றாக உச்சரிக்கத்தெரியும் ,இது  தவிர்த்து வேறு எதுவும் இல்லை என்பது உள்ளங்கை நெல்லி .)

வீர வசனம் பேசி தமிழர்களை சாகடிக்கும் பேச்சுத்தமிழர்களே கேளுங்கள்  ...

நான் உலக அரசியல் அமைப்புச்சட்டங்களை ஆழ்ந்து படித்துவந்த பொழுது என்னை மிகவும் வசீகரித்தது அமேரிக்காவின் அரசியல் அமைப்புச்சட்டம் .
மிகவும் எழுமையான ஆனால் மிகமிக அழுத்தமான சரத்துக்களை தன்னுள் கொண்டுள்ளதை படித்து தெளிந்த பொழுது மிகவும் வியந்தேன் .ஏனெனில், அதை மிகவும் ஊன்றிப்படித்த பொழுது தான் தெரிந்து கொண்டேன் .தாங்களின் தலைவனை தனது மக்கள் எப்படிப்பட்டவராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதனை உள்ளீடாக கொண்டிருக்கும் பல விசயங்களை.அதில் ஒன்று  மக்களாட்சிதலைவன் என்பவன் மயக்கிப்பேசும் தன்மையுடையவனாக ,மேடையில் முழங்கும் அட்டக்கத்தி வீரனாக இருக்கக்கூடாது என்பது.(இங்கு மக்களாட்சி என்ற பதம் நோக்கத்தக்கது.) மேடையில் வீர வசனம் பேசும் வீணர்களுக்கு இங்கு இடமில்லை ,மக்களுக்கு நல்லது செய்பவன் வீர வசனம் பேச மாட்டான் .அப்படி பேசுகிறவன் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கமாட்டான் என்பதை மக்களின் எண்ணத்தில் அது விதைத்துள்ளதை  அறிந்ததால் மிகவும் மதித்தேன் .அதனால் தான் அமெரிக்கா நல்லரசாக தனது மக்களுக்கு உள்ளதை நினைத்து பூரித்தேன் .அதனால் தான் அடிக்கடி நான் அமேரிக்காவை நினைத்துப்பார்க்கின்றேன் .

இனிய தமிழ் நெஞ்சங்களே,
இனி
வீர வசனங்களை  தியோட்டர்கள் மட்டுமே  கேட்கட்டும்.
நாம் நாட்டைப்பார்ப்போம் .







. Download As PDF

திங்கள், 10 ஜனவரி, 2011

கோழை மனிதர்களே



நாங்கள்
விதைக்கப்பட்டுள்ளோம்
என்றெண்ணி
அறுவடைக்கு
காத்திருக்கும்
கோழை மனிதர்களே
நினைவில் கொள்ளுங்கள்
நாங்கள்
பிரதிபலிக்கப்பட்டுள்ளோம்
இனி
விடியல்
உங்களுக்கில்லை










. Download As PDF

சனி, 8 ஜனவரி, 2011

தற்கொலையும் தெய்வங்களும்



நொரண்டு : வணக்கம் நண்டு .

நண்டு : சொல்லுங்க நொரண்டு

நொரண்டு : எங்க ஆளையே காணம் .ரொம்ப பிசியா ???

நண்டு : இல்லப்பா.

நொரண்டு : அப்புறம் எங்க போனா ?

நண்டு : ஊர்சுத்தினேன் ,உடம்புக்கும் சரியில்ல அதனால் தான் .வேற ஒன்னும் இல்ல. 

நொரண்டு : நான் கூட பரிசுப்போட்டி அறிவித்திருந்தையா அதுக்கு வந்தவைகளை படிக்கறதுக்கு உக்காந்துட்டையோனு பாத்தேன் .

நண்டு : ஓ...

நொரண்டு :என்னாச்சு ?.

நண்டு :மிகச் சொற்ப பதிவர்கள் தான் அனுப்பியுள்ளனர். அதுவும் மிக சொற்ப பதிவுகள் தான் .

நொரண்டு : ஓ ...அதனால் ...

நண்டு : அது பற்றி பிறகு செல்ரேன்.

நொரண்டு : என்ன திடீர்னு ஊர் சுத்தல் .

நண்டு : சும்மா தான்  தெய்வ வழிபாடுகள் பற்றி அறிந்துகொள்ள .

நொரண்டு : ஓ...என்ன தெரிஞ்சுக்கிட்ட .

நண்டு : நாம்மவர்கள்  பொதுவா பெண்களை தெய்வங்களாக முதன்மைப்படுத்தி வணங்குகின்றனர் என்ன காரணம் தெரியுமா ? .

நொரண்டு : ஆணாதிக்க சமூகம் அதனால் .

நண்டு :அப்படியில்லை .

நொரண்டு : என்ன சொல்ர .

நண்டு :நாமக்கு இதுவரை கற்பித்து வந்த இது பற்றியவைகள் வேறு .உண்மை வேறு . 

நொரண்டு :ம் ...

நண்டு :சாதாரணமாக நாம் வழிபடுவதை காண் .
உங்க வூட்ல எதைஎதை கும்பிடராங்க .

நொரண்டு :வீட்ல குல தெய்வம் ,சிவன்,முருகன்,வெங்கடாசலபதி,லட்சுமி,சரஸ்வதி,சக்தி,விநாயகர் அப்புறம் சத்திரத்து மாரியம்மன்,ஈரோட்டு மாரியம்மன்,சிவன் ,பெருமாள்,அப்புறம் பழனி முருகன்...இப்படி

நண்டு : அதாகப்பட்டது 1.குல தெய்வம் 2.ஊர்த்தெய்வம் 3.விருப்பத்தெய்வம் 4.இன தெய்வம் 5.நகர தெய்வம் இப்படி கும்பிடுரீங்க .

நொரண்டு : அதனால தான் பாதுகாப்பா பேய்,பிசாசு,மோகினி,முனி ,காட்டேறி கிட்டருந்து காப்பாத்தப்படுவதோடு நிம்மதியா வாழ முடியுது தெரியுமா ?.உனக்கு தெரியுமா 'உரல் உலக்கை சத்தம்' கேட்காத நேரத்தில இதுக போடும் ஆட்டம் .இப்பொல்லாம் குறஞ்சிருச்சு .ஏன்னா வீதிக்கு வீதி இப்ப கோயில் வந்ததால தான் .

நண்டு :ஓ ...

நொரண்டு : அதுவும் நாண்டுகிட்டு சாகரவங்க ஆவி இருக்கே .

நண்டு :என்ன செய்யும் .

நொரண்டு :மட்ட மதியானம் ,நடு ராத்திரியில முச்சந்தியில ,ஊர் ஓரமா ,ஓதுக்குப்புறத்தில இதுக பொம்பளைகளைக்கண்டா விடாது .ஒட்டிக்கும் .

நண்டு :செத்தவங்க ஆணாயிருந்தாலும்,பெண்ணாயிருந்தாலும் .

நொரண்டு : ஆமா .விடவே விடாது .

நண்டு :பெண்கள் பலகீனமானவர்கள் அதனால் பெண்களை தாக்குகிறது அப்படித்தானே .

நொரண்டு : ஆமா .

நண்டு :இந்த பேய்,பிசாசு,மட்ட மதியானம் ,நடு ராத்திரி, முச்சந்தி,ஊர் ஓரம் என்ற பதம் நாண்டுகிட்டு என்ற பதம் தோன்றுவதற்கு முன்பே வந்துவிட்டனவே .

நொரண்டு :அதவிடு .

நண்டு :ஏன் அவர்களின் கும்பிடும் தெய்வங்கள் காப்பாத்தாதா ?

நொரண்டு : இதா பொம்பளைங்க தனியா எங்கு போகக்கூடாது ,ஆணின் துணையில்லாமல் .அப்படி போனா பேய்,பிசாசு,மோகினி,முனி ,காட்டேறி கிட்டருந்து காப்பாத்த எந்த தெய்வமும் வராது .

நண்டு :ஓ ...

நொரண்டு : பெண்கள் எப்பொழுதும் கண்காணிப்பில் இருக்க இந்த ஏற்பாடுனு நினைக்கிறேன் .

நண்டு :ஓ...

நொரண்டு :இப்படியிருக்க  பெண்கள் பல ஆண்களை தேர்ந்தெடுத்து வந்தனர் என்று சிலர் கூறுவது தான் எனக்கு புரியல . 

நண்டு :அது முற்றிலும் பொய் என்பதோடு தவறும் ஆகும் .அது ஆழ்ந்த அறிவோ,பார்வையோ அல்லது படிப்போ இல்லாத ஒரு வறட்டு வாதம் .

நொரண்டு :ஓ ...

நண்டு :உலகைப்பற்றி,மனிதனைப்பற்றி  அறிவியல் பார்வையில்லாத , பெண்களை இழிவாக சித்தரிப்பதில் சுகம் காணும்
ஒரு தரப்பினரின் வறண்ட கோசம் அது .
  









தொடரும் ...




. Download As PDF